Monday, July 9, 2012

இஸ்லாமிய குற்றவியலை கேவலப்படுத்தும் தமுமுக வும், ஜவாஹிருல்லாஹ்வும்


கடந்த 02ம் தேதி சென்னை சாந்தோம் மேல் நிலைப்பள்ளியில் மரண தண்டனை எதிர்ப்பு மாநாடுஎன்ற ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரசியல்வாதிகள் உற்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நமது மானசீக தலைவர் (?) ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லாஹ்வும் கலந்து கொண்டார்.
மரண தண்டனையை எதிர்த்து நடத்தப்பட்ட இந்தமாநாட்டில் பேராசிரியரும் கலந்து கொண்டு மரண தண்டனையைத் தடுக்கப் பாடுபடுகின்றார். ஒரு பக்கம் ஜெயலதிதாவுக்கு ஜால்ரா. மறுபக்கம் சமுதாயத்திற்கு துரோகம்இதைத் தாண்டி சாமியார்களிடம் ஆசி வாங்குதல்ஜெப சீடி க்களை வெளியிடுதல். நடிகன் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி அழகு பார்த்தல்,மவ்லிது கூட்டங்களுக்கு போஸ்டர் அடித்து கலந்து கொள்ளுதல்நடிகர் ரசிகர் மன்றங்களுடன் ஜால்ரா என்று இது வரைக்கும் இவர்கள் செய்யாதஅயோக்கியத்தனங்கள் இல்லை.
இப்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் செயல்பாடு மார்க்கத்தின் சட்ட மூலத்தையே கேள்விக் குறியாக்கி,கேவலப்படுத்திஉலகமே போற்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியல் தண்டணையைகேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தீவிரவாதிகளான விடுதலைப் புலிகள் அமைப்பினால் இந்திய நாட்டின் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை செய்யப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மரண தண்டனை நிறைவேற்றும் நிலை இருந்துவருகின்றது.
தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களை காப்பாற்றஅதிலும் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற வைக்கோ போன்றவர்கள் எடுத்துக் கொண்ட முக மூடிதான் மரண தண்டனை எதிர்ப்புக் கோஷம்.
ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு எதிராக பேசுவதாகவும்,பிரச்சாரம் செய்வதாகவும் நடித்துக் கொண்டிருக்கும்ஜவாஹிருல்லாஹ்வைக்கோ போன்ற சைக்கோக்கள் கொலைகொள்ளைகுண்டு வைப்புதீவிரவாதம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மறுபக்கம் வெற்றுக் கூச்சல் போடுகின்றார்கள்.
பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியவர்கள் கருணை மனு என்ற பெயரில் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள். வைக்கோவின் உடன் பிறப்புகள் அல்லது சொந்தக் காரர்கள் அல்லது ஜவாஹிருல்லாஹ்வின் சொந்தங்கள் யாராவது கொலை செய்யப்பட்டால் அல்லது குண்டு வெடிப்புக்களில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவர்களை இவர்கள் மண்ணிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டம் போடுவார்களாமாநாடுகள் நடத்துவார்களா?மேடைகளில் முழங்குவார்களா?
மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு இதழில் எழுதப்பட்ட தலையங்கத்தை சில மாற்றங்களுடன் இங்கு வெளியிடுகின்றோம்.
தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் (?) ஜவாஹிருல்லாஹ் போன்ற ஜால்ரா வாதிகள் போராடிவரும் வேளையில்,தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்றுஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.
தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளில் எத்தனையோ அப்பாவிகள் உயிரிழந்து இருக்கின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு இந்தத் தீவிரவாதிகளால் உயிர் கொடுக்க முடியுமாகொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டு தண்டனை பெறப்போகும் ஒரு நபரைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கும் நிலை உள்ளது” என்று கூறி தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் மனித உரிமை அமைப்புகளுக்கு விடையளிக்க முடியாத வினாவை எழுப்பியுள்ளார் லகோதி.
ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?”என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும்நபரைப் பார்த்து கேட்க வேண்டும் என்றார் லகோதி. தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆதரவாக கருணை மனுபோடும் கண்ணியவான்கள் இந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஒருவன் பத்துப்பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர்மாமனோ மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்குஅளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையை சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறதுஒருவன்மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால்,அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியைமன்னித்து விட்டால் குற்றாவளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளிதண்டிக்கப்பட மாட்டார்.
அது போலவே கொல்லவப்பட்டவரின் வாரிசுகளில்யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.
கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும்சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின்உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்கொலையாளியைஇந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியகாரணமாக உள்ளது எனலாம்.
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி சிலர் வேண்டியுள்ளனர். அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல் புரிந்து மாட்டிக் கொண்ட ஒரு இந்தியரைத் தூக்கில் போட வேண்டாம் என்று இந்திய அரசே கருணை மனு போட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி தலைவர் அத்வானி போன்றவர்கள் இதற்காகபடுபிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள்.
பாராளுமன்றத் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக பேராசிரியர் ஜீலானி கைது செய்யப்பட்டவுடன்,அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கர்ஜித்த இந்தப் புண்ணியவான்கள்(!) பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்ட ராஜேந்தர் சிங்குக்கு தூக்கு கூடாது என்கிறார்கள்.
இவ்வாறு நாட்டுக்கு நாடு ஒரு நீதி. இனத்துக்கு ஒரு நியாயம் பேசும் அத்வானி வகையறா – லகோதியின் கருத்தைக் கேட்டாவது திருந்த வேண்டும்.
தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த கன்றுக்காக தனது மகனையே பலி கொடுத்த மன்னனை மனுநீதிச் சோழன் என்று போற்றுகிறார்கள். ஆனால்இறந்து போன பசுவின் தோலை உரித்தெடுத்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்று குவித்த சண்டாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்றுசொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும்அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும். கொலையாளியைக் கொல்வதின் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம். இந்தக் கருத்தை தனது பாணியில் உரக்கச் சொன்ன லகோதி உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள்இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ – இதைக் கவனத்தில் கொள்கிறது.
அறிவுடையோரேபழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில்உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால்கொலை செய்வதிலிருந்துவிலகிக் கொள்வீராக! (அல்குர்ஆன் 2:179)
மார்க்கத்திற்கு விரோதமாக நடப்பதுடன் மார்க்க செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்கி இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலப்படுத்தும் தமுமுக மற்றும் ஜவாஹிருல்லாஹ் வகையராக்களை சமுதாய சொந்தங்கள் அடையாளம் கண்டு கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

மீண்டும் சமுதாய பணியில் தமுமுக...(?)தனது சகோதர இயக்கமான பாஜகவுடன் கைகோர்த்த வாத்தி

 அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா? – வெளிவராத உண்மைகள்!!

மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.

பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

இப்படி ஒரு சட்டம் இருப்பது நமக்கு உடன்பாடானது அல்ல. பழைய கட்டடங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மக்களின் கோடான கோடி ரூபாய்கள் பாழாக்கப்படு கின்றன. பழைய கட்டடங்களை இடிப்பது அல்லது அதுவாக விழும் வரை விட்டுவிடுவதுதான் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு நல்லது. இதுதான் அறிவுப்பூர்வமானது.

ஆனால் இந்தச் சட்டம் இருக்கும் வரை அதற்கேற்ப நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும்.
இந்து பக்தர்கள் போராடுவதாக இருந்தால் அந்த சட்டத்தை நீக்கக் கோரி போராட்டம் நடத்துவதை விட்டு விட்டு சட்டப்படி ஒரு கோயிலை புராதனச் சின்னமாக அறிவிப்பதை எதிர்ப்பது பயனற்றதாகும். ஆனாலும் அவர்கள் பக்தியின் பெயரால் இப்படி செய்வதில் நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை.

ஆனால் வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை தொல்பொருள் துறை எடுத்துக் கொண்டுள்ளது. அது போல் அதே கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.

ஆனால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப் படுகிறது. ஆனால் பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. இதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியுள்ளன. தமுமுகவும் போராட்டம் நடத்தியது. அப்போது இந்துத்துவா இயக்கங்கள் பள்ளிவாசலை வழிபாட்டுக்கு திறந்து விடக் கூடாது என்று எதிர்ப்போராட்டம் நடத்தின.

அப்படி இருக்கும் போது அதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் மானம் சூடு சொரணை அனைத்தையும் வந்த விலைக்கு விற்ற ம.ம.கட்சி ஜால்ரா மன்னன் செய்த வேலை ம.ம.கட்சியினருக்கே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அடிக்கும் ஜால்ரா பற்றி மாபெரும் மக்கள் வெள்ளத்தில் தோலுரித்துக் காட்டப்பட்ட பின்னர் சூடு சொரணை இல்லாதவனை அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பிறகும் ஜால்ரா தலைவருக்கு ரோஷம் வந்து கொஞ்சம் சமுதாய உணர்வோடு நடப்பார் என்று ம.ம.கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

சங்பரிவாரத்துடன் இணைந்து கொண்டு ஜால்ரா மன்னன் ஜவாஹிருல்லாவும் களத்தில் குதித்து தான் ஒரு மானம் கெட்ட ஜென்மம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.

மேலே உள்ள புகைப்படத்தில் பிஜேபியின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கையோடு கைகோர்த்து போஸ் கொடுப்பது யார் என்று தெரிகின்றதா?

அட! நம்ம ம.ம.கட்சியின் வாத்தியார்தாங்க. இப்போது பிஜேபியுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளார்கள் போலும்.
கடந்த 28.06.12 அன்று தலசயன பெருமாள் கோயிலை தொல்லியல்துறை கையகப்படுத்தக்கூடாது என்று கூறி அதைக் கண்டித்து நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில்தான் இந்த கேவலமான இழிசெயலை இவர் செய்துள்ளார். இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுடன் அவர்களது கொள்கை நிலைபெற வேண்டும் என்பதற்காக கூட்டுச் சேர்ந்து கைகோர்த்து இவர்கள் போஸ் கொடுக்கின்றார்கள் என்றால் இந்த சமுதாய துரோகிகளை என்ன செய்வது?

நரேந்திர மோடி வந்து இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் அவனுடனும் இந்த சமுதாய துரோகி கைகோர்த்து இருப்பார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அந்த அளவிற்கு இவர்களுக்கு பதவி சுகம் தேவைப்படுகின்றது.




வாத்தியார் பா.ஜ.க வின் பினாமியா?:


பா.ஜ.க விடுக்கும் கோரிக்கையை நமது மானம்கெட்ட வாத்தியார் ஏன் வழிமொழிய வேண்டும். அவர் என்ன பா.ஜ.க வின் பினாமியா?. அநேகமாக வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேசிய நீரோடையில் கலக்க திட்டம் தீட்டியுள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.


அம்மாவை குளிர்விக்க எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயார் :


ஒருவேளை அம்மாவுக்கு ஜால்ரா தட்டும் இந்த ஜால்ரா மன்னன், பா.ஜ,கவுடன் நாம் நெருங்கினால்தான் அம்மா அவர்கள் மனம் குளிரும். அதனால் பா.ஜ.கவுடன் நாம் நெருக்கமாகிவிடலாம் என்று களத்தில் குதித்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

இப்படிக் கேவலப்படும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான்.

இவர்களது இந்த செய்கையின் வாயிலாக எந்த அளவிற்கு கேவலாமான வேலையையும் தாங்கள் செய்யத் தயார் என்பதைத்தான் இந்த சமுதாய துரோகிகள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கொள்கைதான் இல்லை. மற்றவர்கள் திட்டுகின்றார்களே என்ற வெட்க உணர்விலாவது இது போன்ற கேடுகெட்ட செயல்களை செய்யாமல் தவிர்க்கலாமல்லவா? அந்த வெட்க உணர்வையும் இவர் உதிர்த்து விட்டார் என்றால் இனிமேல் இவரை எதைச் சொல்லி, என்ன சொல்லி திட்டுவது? எருமை மாட்டின் மேல் மழை பெய்தது என்ற பழமொழிதான் இங்கு ஞாபகம் வருகின்றது.

இந்த ஜனாஸாவின் அட்டகாசமும், அட்டூழியமும் தாங்க முடியவில்லை. இப்போதுதான் ஓராண்டு முடிந்துள்ளது. இன்னும் 4ஆண்டுகள் பாக்கி உள்ளன. அதற்குள் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகின்றதோ இந்த ஜனாஸா? இந்த ஜனாஸாவிடத்திலிருந்து இந்த சமுதாயத்தை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பது இது முதல் முறை அல்ல பாஜகவின் ஏஜெண்டாக இவர்கள் செயல்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஓரிரு சம்பவங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம். 

• பாபர் மசூதி விஷயத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அற்புதமான தீர்ப்பு என்று கூறி வரவேற்று அறிக்கை வெளியிட்டது

• இடஒதுக்கீட்டில் இழைக்கப்படும் துரோகத்தை ஆதரித்து அதற்கு முட்டுக் கொடுத்து ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டி, முஸ்லிம்களை கருவறுக்கும் வேலையை கையில் எடுத்திருப்பது

• இராமேஸ்வரத்தை புனித நகரமாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது
இது போன்ற சம்பவங்களுடன் தற்போது இல.கணேசனுடன் உற்சாகத்தோடு கைகோர்த்து போஸ் கொடுத்திருப்பதையும் இணைத்தால் இவர்தான் தமிழகத்தின் ஏஜெண்டாக இருப்பாரோ! என்ற
சந்தேகம் வலுப்பெறுகின்றதா? இல்லையா?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons