Tuesday, June 28, 2011

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.

உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி 28/06/2011 அன்று சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



Saturday, June 25, 2011

சோதனையின்றி சொர்க்கமில்லை!


தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம்பள்ளிவாசல் தடைஅடக்கத்தலம்மறுப்புதிருமணப் பதிவேடு மறுப்புபொதுக்கூட்டத்திற்கு தடைபொதுக்குழாய்களில் குடிநீர்பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீத்வாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 
காட்டாற்று வெள்ளம் போல் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் காட்டுத் தர்பார்களை எதிர்த்துக் களம்கண்டது தான் இந்த ஜமாஅத்அப்போதெல்லாம் தவ்ஹீத் அழைப்பாளர்களின் சொற்பொழிவுகளில்ஆதிக்கம் செலுத்தியதும்ஆக்கிரமித்து நின்றதும் இந்தக் குர்ஆன் வசனம் தான்.
 
"உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில்நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களாஅவர்களுக்கு வறுமையும்துன்பமும்ஏற்பட்டன. 'அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கைகொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர்கவனத்தில் கொள்கஅல்லாஹ்வின் உதவிஅருகிலேயே உள்ளது." [அல் குர்ஆன் - 2 : 214]

அந்த அளவுக்கு தவ்ஹீத்வாதிகள் பாதிக்கப்பட்டார்கள்; சோதிக்கப்பட்டார்கள். இந்த வசனம், உதிரம் சிந்திய அவர்களின் காயத்திற்கு ஒட்ற்றடமானது. உடைந்து போன அவர்களது உள்ளத்திற்கு ஆறுதலானது. ஒவ்வொரு தவ்ஹீத்வாதிக்கும் வேதனையே வாழ்க்கையானது.
 
தவ்ஹீத்வாதிகளுக்கு எதிர்ப்பலைகள், எரிமலைகள் புதிதல்ல! அல்லாஹ்வின் அருளால் அவர்கள் எந்த எதிர்ப்பலையிலும் எரிமலையிலும் எதிர் நீச்சல் போடுவதற்குக் தெம்பும் தைரியமும் கொண்டிருக்கிறார்கள்.
 
இதை இங்கு சொல்வதற்குக் காரணம், ஏகத்துவவாதிகளின் வியர்வையிலும் உழைப்பிலும் வளர்ந்த துரோகி ஜவாஹிருல்லாஹ். "அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருவிடைச்சேரி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தலுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் கொக்கரித்திருப்பது தான்.


தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திருவிடைச்சேரி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் இருக்கின்றது. ஆனால் இவர் இதை தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கருவருப்பதற்கு இந்தத் தேர்தல் களத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தான்.
 
திருவிடைச்சேரி சம்பவத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று திமிராக எக்காளமிடுகின்றனர்.
 
ஏதோ இவருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி கிடைத்தது போன்று பேசுகிறார். இவருக்குக் கிடைத்திருப்பது ஒரு எம்.எல்.ஏ பதவி தான். அதுவும் அதிமுக போட்ட பிச்சை தான். இதற்கே இந்த ஆட்டம் போடுகிறார். கொஞ்சம் கூட சகிக்க முடியவில்லை.
 
இருப்பினும் அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்து, தவ்ஹீத் ஜமாஅத்தை அடக்க நினைத்தால் இவருக்கு நாம் சொல்லிக் கொள்வது, தன்னைக் கடவுள் என்று வாதிட்ட பிர்அவ்னிடம் வீர முழக்கமிட்ட மந்திரவாதிகளின் அக்னி வரிகளைத் தான்.

"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்கு சூனியத்தை கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்" என்று (பிர்அவ்ன்) கூறினான்.

“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்த வனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்' என்று அவர்கள் கூறினார்கள்.” [அல் குர்ஆன் - 20 : 71,72]

தலையங்கம் ஏகத்துவம் ஜூன் 2011

இதுதான் இவர்களின் தவ்ஹீத்


அப்துல் வதூத் ஜிப்ரியின் பல வேஷத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
M.I.Sc



M.I.Sc

நாங்கள் மூத்த உலமாக்கள், தவ்ஹீத் கொள்கையை அந்தக் காலத்தில் இருந்தே பரப்புபவர்கள், தவ்ஹீத் எங்கள் மூச்சு என்றெல்லாம் அடிக்கு ஆயிரம் தடவை சொல்லிக் கொள்ளும் பல தவ்ஹீத் வாதிகளை இலங்கை தஃவாக் களம் நாளும் நாளும் கண்டு வருகிறது.

தங்களை மூத்த உலமாக்கள், மூத்த கொள்கை வாதிகள் என்று சொல்லிக் கொள்வதில் அலாதியான ஆர்வம் கொண்ட இவர்களில் பலரின் நிலை இன்று அந்தோ பரிதாபம் என்றாகிவிட்டது.

ஆரம்பத்தில் கொள்கையை உடைத்து சொல்ல வேண்டும் தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் செயல்பட்ட மூத்த உலமாக்களில் (?) பலரின் நிலை இன்று தலைகீழாய் போயுள்ளதை கண்கூடாகக் காண முடியும்.

அதில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தில் இருந்தவர் தான் மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரி ஆரம்ப காலத்தில் இவரின் கொள்கை பிடிப்பு காரணமாக பல இடங்களில் தாக்கப்பட்டவர், மிரட்டப்பட்டவர், என்பதில் எல்லாம் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அவரின் தற்போதைய நிலையைத் தான் நாம் கவணிக்க வேண்டும்.

ஆரம்ப கால கட்டத்தில் தவ்ஹீதுக்காக அடிபட்டார் என்பதற்காக இப்போதும் அவர் செய்யும் செயல்களை ஆதரிக்க முடியுமா என்ன?

பேருவலைப் படுகொலையும், அப்துல் வதூத் ஜிப்ரியின் பச்சோந்தித் தனமும்.

கடந்த 23.07.2009 அன்று பேருவலை மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாயலில் சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸி (ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா ஒருங்கிணைப்பாளர் ) அவர்கள் தர்கா வழிபாடு மற்றும் கந்தூரிக்கு எதிராக ஜும்மா உரை நிகழ்த்தினார் அந்த உரையின் மூலம் எடுத்துச் சொல்லப்பட்ட சத்தியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த ஊரைச் சேர்ந்த புகாரி தைக்காவைச் சேர்ந்த கப்ரு வணங்கிகள் இரவோடு இரவாக மஸ்ஜிதுர் ரஹ்மானைத் தாக்கினார்கள் அந்த களோபரத்தில் 2 கொள்கைச் சகோதரர்கள் ஷஹீதாக்கப்பட்டு பலர் படுகாயமடைந்தார்கள்.

இலங்கை தவ்ஹீத் பிரச்சார வரலாற்றில் பதிந்த இந்த நிகழ்வு என்றும் மறவாத வடுவாக ஏகத்தவவாதிகளின் மனதில் இடம்பிடித்தது.

இந்தக் கொடூரம் தொடர்பாக பல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேலை ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையான “எங்கள் தேசம்” பத்திரிக்கை அப்துல் வதூத் அவர்களை இது தொடர்பாக ஒரு பேட்டி கண்டது.

அந்தப் பேட்டியில் ஜும்மா உரையில் பேசப்பட்ட செய்தி தொடர்பாக கருத்துச் சொன்ன அப்துல் வதூத் அவர்கள் “ இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்யக் கூடாது” இது பிரச்சாரத்திற்கான வழி முறை அல்ல என்று குறிப்பிட்டார்.

அவருடைய இந்தக் கருத்து அன்றைய நாட்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே இருந்தாலும் இன்றும் சிலர் அவரை நம்புவதாலும் அவருக்கு சிகப்புக் கம்பலம் விரிப்பதினாலும் இந்தத் தகவலை இங்கு பதிவு செய்கிறோம்.

கப்ரு வணக்கம் கூடாது, புகாரி கந்தூரி கூடாது, குா்ஆனும், சுன்னாவும் மாத்திரம் தான் நம் வழி அது தவிரவுள்ளவைகள் எதனையும் நாம் பின்பற்றக் கூடாது. பித்அத்துகள் செய்யக்கூடாது மூட நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது பிரச்சாரத்தின் முறை கிடையாது என்கிறார் இந்தக் கொள்கை (?) கோபுரம்.

இவர் இப்பயெல்லாம் கூறியும் கொள்கையை உடைத்துச் சொல்லக் கூடாது என்று எந்த இயக்கம் சமரசம் பேசுகிறதோ அந்த ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையிலேயே இதை இவர் சொன்னார்.

ஆனால் அன்று அவரின் கருத்தை விமர்சித்தவர்கள் இன்று அவரை ஏற்றுக் கொண்டு அவருடன் மேடையேறுவதும் அவருக்கும் தவ்ஹீத் பிரச்சாரகர் என்ற பெயர் வழங்கப்பட்டு பிரச்சாரத்திற்காக இடங்கள் ஒதுக்கப்படுவதும் என்ன நியாயம்?

இவர் என்றோ தவ்ஹீதை விட்டும் தடம் புரண்டு விட்டார் என்பது தெரிந்தாலும் ஆறிய கஞ்சி பலங்கஞ்சி என்ற பழமொழியைப் போல் தவ்ஹீ்த் பிரச்சாரக் களமும் அரசியலாக்கப்பட்டு மேடை பங்கு போடப்படுகிறது.

உள்நாட்டில் கொள்கைவாதி, வெளிநாட்டில் கொள்கை வியாபாரி.

இலங்கை மக்கள் மத்தியில் தன்னை ஒரு தவ்ஹீத் வாதியாக காட்டிக் கொள்ளும் இவர் வெளிநாடுகளில் போடும் வேஷங்கள் பல சகோதரர்களுக்கும் தெரியாமல் இருக்கிறது.

பச்சோந்தியைப் போல் இடத்திற்கு ஏற்ற வேஷம் போடும் இவர் வெளிநாடுகளில் கொள்கை வியாபாரம் செய்பவர் என்பது அந்த நாடுகளில் வாழும் இலங்கை சகோதரர்களினாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.   `

ஆம் கீழே நாம் கொடுத்துள்ள வீடியோவின் லிங்கைக் கிளிக் செய்து பாருங்கள் இவர் ஆஸ்த்திரேலியா சென்ற நேரத்தில் அங்கு யாரோடு சேர்ந்து நிகழ்சி செய்கிறார் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது.


ஜமாத்தே இஸ்லாமியினர் இலங்கை தஃவாக்களத்தில் ஏகத்துவத்திற்கு எதிராக எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்கிறார்கள் என்பது தெரிந்தும் இப்படிப்பட்டவர்களுடன் இவர் கூட்டனி சேர்கிறார் என்றால் இவரை தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

ஏகத்துவத்தைப் பேசுபவர்களை கொள்கையை உடைத்துப் பேசுவது தஃவாவின் அனுகு முறை இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமியின் பத்திரிக்கையில் பேட்டி கொடுக்கிறார்.

வெளிநாடுகளில் ஜமாத்தே இஸ்லாமியுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துகிறார். இப்போதாவது புரிகிறதா இவரின் கொள்கை வியாபாரம்?

இவர் எந்தளவுக்கு இரட்டை வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்றால் ஜமாத்தே இஸ்லாமியுடன் மட்டுமல்ல லண்டனில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் இவர் கலந்து கொண்டார் இவருடன் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பதை கீழே உள்ள படத்தைப் பார்ப்பவர்கள் தெளிவாக அறிய முடியும்.


அப்துல் வதூத் ஜிப்ரியுடன் கலந்து கொண்டவர்கள் யாரென்று பாருங்கள்.

ஹஜ்ஜுல் அக்பர் (ஜமாத்தே இஸ்லாமியின்)

அப்துல்லாஹ் பெரியார் தாசன் (அனைத்துக் கொள்கைக் காரர்களோடும் கை கோர்ப்பவர்)

ரிஸ்வி முப்தி (தப்லீக் ஜமாத்தின் முக்கியஸ்தர், இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர்.)

அகார் முஹம்மத் (ஜமாத்தே இஸ்லாமி)

அப்துல் வதூத் அவர்கள் கலந்து கொண்ட லண்டன் நிகழ்ச்சியின் நிலையைப் பாருங்கள்.

இலங்கை தஃவாக் களத்தில் தவ்ஹீதுக்கு எதிராக ஷீயா ஊடுருவலை தெளிவாக ஆதரிக்கும் ஜமாத்தே இஸ்லாமியைச் சேர்ந்தவர்கள், தவ்ஹீத் வாதிகளையும் அவர்களின் பள்ளிகளை இல்லாமலாக்கத் துடிக்கும் தப்லீக் வாதிகள், சுன்னத் ஜமாத் காரர்கள் என்று அனைவரும் கலந்து கொள்கிறார்கள் அதில் இவரும் கலந்து கொள்கிறார்.

இதுதான் கொள்கை உறுதியோ ? 

இதுதான் ஏகத்துவப் பிரச்சாரமோ ?

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீரலிலும் ஒருவருக்கொருவா் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-2)


உண்மை வந்து வட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது. (அல்குா்ஆன் 17-81)




JAZAK ALLAH
http://rasminmisc.blogspot.com
                                     

Friday, June 24, 2011

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?......... (நவீன காரிஜியாக்களின் வாதம்)





இந்தியா, இலங்கை  உள்ளிட்டஉலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.

பெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதா என்றால் ஒருக்காலும் எதிரானதல்ல!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று அடையாளம் காட்டி முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்ர் தான் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.

ஆனால் சிலர், இஸ்லாத்தில் ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை என்றும், தேர்தலில் வாக்களிப்பது இறை மறுப்பு என்றும் கூறி வருகின்றனர்.

எந்த ஒரு இயக்கமானாலும் தேசமானாலும் அதன் தலைவரை அதிகப்படியான உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். தலைவர் யார் என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வராது.

மார்க்கத்தில் நுனிப்புல் மேயும் சிலர், சில காலத்திற்கு முன் ஜனநாயகம் நவீன ஷிர்க் என்று வாதிட்டு, விபரமறியாத இளைஞர்களை மதி மயக்கினார்கள். ஆனால் அந்த மயக்கம் இவ்வாறு வாதிட்டவர்களுக்கே நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைக்கு அவர்கள் இன்று அலைவதே இதற்கு உதாரணம்.

ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்று கட்டுரை எழுதி மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்தவர்கள் இன்று தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்க்கிறோம்.

ஜனநாயகம் ஷிர்க் என்று வாதிப்பவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை ஆதரிப்பதுடன் நின்றால் பரவாயில்லை. அதன் பின்னர் அதள பாதாளத்தில் விழுந்து, ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

ஜனநாயகம் இணை வைத்தல் என்று கூறி கூட்டம் சேர்ப்பதும் போதுமான கூட்டம் சேர்ந்தவுடன் அவர்களைப் பயன்படுத்தி அதே இணை வைத்தலில் விழுவதும் தொடர் கதையாக இந்தச் சமுதாயத்தில் நடந்து வருகிறது.

ஜனநாயகம் ஷிர்க் எனக் கூறுவோர் குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஏறுக்கு மாறாகத் திசை திருப்பி மக்களை ஏமாற்றுகின்றனர்.

  • ஜனநாயகம் நவீன இணை வைத்தல் என்ற வாதத்தை எடுத்து வைப்பவர்கள் எவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.
திருக்குர்ஆன் 12:40

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?
திருக்குர்ஆன் 5:49, 50

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.
திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67

ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இந்த வசனங்களில் கூறப்படுகிறது. ஆனால் ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கு உள்ளது என்று இந்தியாவில் உள்ள ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் குர்ஆனுக்கு எதிரானது. அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களிடம் கொடுப்பதால் இது நவீன இணைவைப்பு என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்ல. காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர் இதே வசனங்களை எடுத்துக் காட்டி, இவர்கள் வாதிட்டது போலவே வாதிட்டார்கள். குர்ஆன் கூறாத கருத்தை குர்ஆனில் திணித்த இவர்கள் அலீ (ரலி) அவர்களாலும் முஆவியா (ரலி) அவர்களாலும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.

அந்த வரலாற்றை ஓரளவு அறிந்து கொண்டால் இந்த நவீன கால காரிஜிய்யாக்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

காரிஜிய்யாக்கள் எப்படி மனிதர்களின் தீர்ப்பை ஏற்பது இறை மறுப்பு என்று வாதிட்டார்களோ அது போலவே நவீன காரிஜிய்யாக்களான இவர்கள் நவீன இணை வைப்பு எனக் கூறுகின்றனர். அவர்கள் எந்த வசனங்களைத் தவறான இடத்தில் பயன்படுத்தினார்களோ அதே வசனங்களை அதே இடத்தில் இவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் வாதமும் இவர்களின் முன்னோடிகளான காரிஜிய்யாக்களின் வாதமும் சரியா என்பதை ஆராய்வோம்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.

எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.

மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர்.

இவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:35

தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:58

அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 5:42

மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒரு போதும் முரண் கிடையாது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.
திருக்குர்ஆன் 5:95

உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர்! நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக! என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 38:21, 22

ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம். 
 திருக்குர்ஆன் 21:78

தாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். 
திருக்குர்ஆன் 49:9

மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றது.

இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்கவேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.

ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர். உண்மையில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதே அவனது பகுத்தறிவால் தான். அவனது அறிவைப் பயன்படுத்தி பல நல்ல விஷயங்களைக் கண்டு கொள்ள முடியும்.

மேலும் பல வசனங்கள் சிந்திக்குமாறு நமக்குக் கட்டளை இடுகின்றன. சிந்தனையின் மூலம் நல்லது கெட்டதை மனிதன் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தான் இறைவன் அவ்வாறு கூறுகிறான். ஒரு மனிதன் சிந்தித்து எடுக்கும் நல்ல முடிவுகளை மற்றவர்கள் ஏற்கலாம் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது.

மறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் ஆகிய சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பற்றியே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். இதைத் தவிர உள்ள அதிகாரங்கள் மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆன் மேற்கண்ட வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.

மறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்ட அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த ஞானமும் அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே எனக் கூறினார்கள். மதீனாவாசிகள் இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். ஆனால் இதனால் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நபித் தோழர்கள் நினைவு படுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.
நூல் முஸ்லிம் 4358

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நன் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல் முஸ்லிம் 4357 , 4356

எது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம்? எது மனிதனுக்கு உள்ள அதிகாரம்? என்பது இந்த நபி மொழியில் மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

உலகின் ஜன நாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவு செய்வதில்லை. எப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம் பயன்படுகிறது.

சில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி விடுவார்கள். அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, காரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழி கெடுப்பதற்காகத் திசை திருப்புகின்றனர்.

இந்த இடத்தில் இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, தவறான கருத்தைக் குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரமே மனிதர்களுக்கு இல்லை என்று வாதிடும் இவர்கள் எந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளதோ அந்த அதிகாரத்தை மனிதர்களுக்கு வழங்குகின்றனர்.

மறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவாக அறிவித்திருக்க இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்; பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் என்ன? வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானே?அல்லாஹ்வுக்கு இல்லை என்பது தானே?

இவர்கள் மத்ஹப் அடிப்படையில் தான் தொழுவார்கள். மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப் கூறும் முறையில் தான் செய்வார்கள்.

உலக விஷயங்களிலேயே மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது ஷிர்க் என்ற இவர்களின் கொள்கைப்படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது கொடிய ஷிர்க் ஆக வேண்டுமல்லவா?

மீலாது விழா உள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் செய்யாதவற்றைச் செய்வது தானே பித்அத். அதாவது மனிதர்கள் உண்டாக்குபவையும் வணக்கமாகும் என்பது தானே இதன் பொருள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம் இப்போது ஏன் மறந்து போனது?

இதிலிருந்து தெரிய வருவது என்ன? எந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள்.

எந்த விஷயத்தில் அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்கின்றனர். இதிலிருந்து இவர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வருகின்றது.

  • இந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப் படுத்துவதை நாம் காணலாம்.

இவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.

ஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும்.

இந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாதத்தைச் செய்யும் ஒரே ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்களோ அந்த அதிகாரத்துக்கு இவர்களே கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.

இது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ, அல்லது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.

கட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.

இப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன் என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை அப்படியே பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.

இவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.

மனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை அப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.

அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்து கொண்டிருந்த வாதம் இப்போது என்னவானது?

குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

யாரும் சொல்லாத தத்துவத்தைச் சொன்னால் கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.

தேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.
தமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.

மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.

மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.

அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.

ஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.

முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை!

வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும். 

மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே! அது எப்படி?

தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வர வேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே! இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.

அது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம்.

நமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக் கைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.

மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு.

நம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.

யூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான்.

யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள்.

இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:55

மேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார்.
அல்குர்ஆன் 12:76

இவ்வசனங்களில் (12:74-76) முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது.

யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமது நாட்டில் உள்ள சட்டப்படி தமது சகோதரரை அவர்கள் கைப்பற்ற இயலவில்லை.

எனவே தான் தமது சகோதரர்களிடம் உங்கள் நாட்டில் திருடர்களுக்குரிய தண்டனை என்ன என்று கேட்கிறார்கள். அவரைப் பிடித்துக் கொள்வதே அதன் தண்டனை என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தம் சகோதரரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

மன்னரின் சட்டப்படி சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது என்ற வாசகம் ஒரு மன்னரின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கலாம் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.

மேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத் தான் யஃகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.

எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.

அல்லாஹ்வின் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியவையாகும். எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
 
ஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர்.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்றுஎச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.

அடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் உள்ளிட்ட மறுமை வெற்றிக்கான வழிமுறைகளில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்பது தான் இதன் பொருள். கொள்கையில் முரண்பட்டவர்களுக்கு கொள்கையை விளக்கும் போது தான் பெரும்பானமையைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறப்படுகிறது. உலக நடை முறையில் அல்ல.

பெரும்பாலான மக்கள் கோதுமை உணவு உட்கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை. பெரும்பாலான மக்கள் நோய் வரும் போது சிகிச்சை செய்து கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை.

பெரும்பாலோர் ஆடை அணிந்ததால் அவர்களுக்கு எதிராக நிர்வாணத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் போதிக்கவில்லை.

இன்றும் கூட பெரும்பான்மையோர் செய்யும் காரியங்களை நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் எந்த ஜனநாயக நாட்டிலும் இரண்டு ரக்அத் தொழுவதா? நான்கு ரக்அத் தொழுவதா என்று வாக்கெடுப்பு நடத்துவதில்லை. மார்க்கம் தொடர்பு இல்லாத விஷயங்களில் பெரும்பாலோர் நடப்பது போல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்துள்ளதால் நாமும் நடக்கலாம்.

ஆனால் இவர்கள் மார்க்க விஷயங்களில் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக மக்கள் செய்யும் பித்அத்களை ஆதரிப்பதைக் காண்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தாக இருந்தாலும், வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் தான் அதன் தலைவர் தேர்வு செய்யப்பட முடியும். தப்லீக் தரீக்கா போன்ற இயக்கங்களில் மக்கள் தேர்வு செய்யாவிட்டாலும் நியமனத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் தான் தலைமை உருவாகிறது.

அதன் உறுப்பினர்களின் அதிகமானோர் ஏற்க மறுத்தால் தலைவராக முடியாது.உங்கள் இயக்கத்துக்குன் நீங்கள் எப்படி தலைவரானீர்கள் அல்லாஹ் வஹீ மூலம் நியமித்து தலைவரானீரா? அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா? இக்கேள்விக்கு அவர்கள் அளிக்கும் விடையில் இருந்தே ஜனநாயகம் இணை வைத்தல் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons