Tuesday, June 21, 2011

என்னை யாரும் நீக்க முடியாது - தென்காசியில் செங்கிஸ்கான் சூளுரை

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பாளரும் மாநில செயலாளருமான செங்கிஸ்கான் அவர்களின் ஆதரவாளர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று (17-06-2011) அன்று தென்காசியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 20ஏழைக்குழந்தைகளுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பாளரும்மாநில செயலாளருமான செங்கிஸ்கான் நோட்ப்புத்தகங்களை வழங்கினார்.




நிகழ்ச்சியின் இறுதியில் எழுச்சியுரையாற்றினார் சகோதரர் செங்கிஸ்கான். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து என்னை நீக்க முயற்சி எடுப்பதாக சில பொய்யர்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்தியை பரப்பி வருகிறார்கள். ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது என்னுடைய இயக்கம் என்பதை நான் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறேன். அண்ணனின் அல்லக்கைகள் சிலர் என் மீது வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் என் நான் உம்ராவுக்குச் சென்றிருந்த போது என்னை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்கி விட்டதாக புரளி கிளப்பினர். ஆனால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னுடைய இயக்கம். நான் அகில  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயக்கம் பதிவு செய்து வைத்திருப்பதாக சில விசமிகள் என் மீது களங்கம் சுமத்துகிறார்கள். நான் எழுதிய கடிதத்தை வேண்டுமென்றே வெளிப்படுத்தி என்னை அவமானப்படுத்தி விட்டனர். ஆனால் என்னை எக்காரணம் கொண்டும் என் இயக்கமாகிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்க முடியாது. என்னுடைய வெப்சைட்டை அபகரித்து வைத்து விட்டால் மட்டும்என் பணிகளை முடக்கி விடலாம் என சில மூடர்கள் என் இயக்கத்தின் பாஸ்வேர்டை முடக்கி வைத்திருக்கிறார்கள். 

என்னை அலுவலகத்திற்கு வரக்கூடாது என சொல்கின்றனர். இதை பரப்புபவர்கள் முழுக்க முழுக்க நாங்கள் பிரிந்து வந்த இயக்கத்தின் அண்ணனின் அடிவருடிகள் தான் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்துக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும். ஆனால் அதை மூன்றாம் நபர்கள் ஊதிப் பெரிதாக்குவது கீழ்த்தரமான செயல். இது போன்ற செயல்களை செய்பவர்கள் யார் என எனக்கே தெரியும். என் முதல் நோக்கம் என்னுடைய வெப்சைட்டை மீட்பது. அதன்பின்னர் என்னுடைய இயக்கத்தை கயவர்களின் பிடியில் இருந்து மீட்பதாகும்.
இவ்வாறு சகோதரர் செங்கிஸ்கான் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான செங்கிஸ்கான் ஆதரவாளர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலந்து கொண்டார்கள்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons