
அன்புச் சகோதரர்களே! மீண்டும் உங்கள் சகோதரன் செங்கிஸ்கான் எழுதுகிறேன். என்னுடைய இணைய தளத்தை மோசடியாக திருடி வைத்திருக்கும் சில துரோகிகள் என்னுடைய உண்மையான அங்கீகரிக்கப்பட்ட தளமான செங்கிஸ்ஆன்லைன்.பிளாக்ஸ்பாட்.காம் என்ற இந்த தளத்தைப் போலி என்று சொல்கிறார்கள் முட்டாள்கள்.
இங்கே நாம் இரண்டு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று ஒரு வெப்சைட் வடிவமைக்கும் போது அதைப்போலவே ஒரு வெப்சைட் வடிவமைக்க அந்த நபரால் அன்றி வேறு யாராலும் முடியாது. ஒன்று அந்த டீமில் வேலை செய்தவராக இருக்க வேண்டும். அல்லது அதைப் பயன்படுத்தியவர் சேமித்து வைத்திருக்க வேண்டும்.
ரூ 12 ஆயிரம் மதிப்பில் திருச்சி ஈஸா என்ற மிகச்சிறந்த சாப்ட்வேர் என்ஜினியரால் வடிவமைக்கப்பட்ட என்னுடைய இணையத் தளம் வேறு யாராலும் திருடி வடிவமைத்து விட முடியாத அளவிற்கு அவ்வளவு துல்லியமான நுனுக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட என் இணைய தளத்தை அப்படியே துல்லியமாக எப்படி இன்னொரு நபரால் வடிவமைக்க முடியும்?
இண்டெர்நெட்டில் இலவசமாகக் கிடைக்கும் எத்தனையோ ஆயிரம் இலவச டெம்ப்ளேட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் அதையெல்லாம் எடுத்து என் இணைய தளத்தில் வைத்து இருந்தால் நான் எதற்காக வடிவமைத்தவர் திருச்சி ஈஸா என போடப்போகிறேன். அப்படிப் போட்டால் நான் பெரிய அயோக்கிய பொய்யனாகி விட மாட்டேனா?
என் தளத்தின் பாஸ்வேர்ட் முடக்கப்பட்டவுடன், அந்த பேக் அப்பை எடுத்துக் கொண்டு திருச்சி ஈஸாவிடம் கொடுத்து புதிய சைட் செய்து தருமாறு கேட்டேன். ஆனால் அவர் அதை மறுத்து விட்டார். அதன்பின்னர் தான் அவரது சகோதரரும் அந்த சாப்ட்வேர் டீமில் இருந்தவருமான திருச்சி மூஸாவிடம் கொடுத்து இந்த தளத்தை நாம் வடிவமைத்து விட்டேன். திருச்சி மூஸா தான் இப்போது என் இணையதளத்தின் வடிவமைப்பாளர் மற்றும் பப்ளிசர் ஆகி விட்டார்.
அடுத்து, அந்த அயோக்கியர்கள் இட்டுக் கட்டும் ஒரு செய்தி. நான் சகோ. ஸைபுல்லாஹ் அவர்களைச் சந்தித்த விசயத்தைப் பற்றியதாகும். நான் என்னுடைய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு தென்காசி சென்று இருந்தேன். அந்த வழியில் மஸ்ஜிதுர் முபாரக் சென்றேன்., அங்கு சகோ.ஸைபுல்லா அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன்.என்னுடைய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணையும் படி அவரைக் கேட்டுக் கொண்டேன்.
நடந்த சம்பவம் இப்படி இருக்கையில் இந்த அயோக்கியர்கள் இந்த செய்தியை சிலரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஏதோ நான் அவர்கள் சார்பில் சகோ.ஸைபுல்லாஹ் அவர்களைச் சந்தித்தது போன்ற ஒரு மாயையையும், அத்தோடு நான் இன்னமும் அவர்களுடன் இணைந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்த முயல்கிறார்கள். நான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பது உண்மையாகும்.
ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னுடைய இயக்கமாகும். மிக விரைவில் இந்த செய்திகள் வெளியாகி பொய்யர்களின் முகத்திரை கிழியும். என்னுடைய தளமும் என் கையில் வரும்.
0 comments:
Post a Comment