Thursday, June 9, 2011

தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி ஜாக் வசூல் மோசடி அம்பலம்


இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் என்ற ஊரில் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லி பரிசுத்தவான்களான ஜாக் அமைப்பினர் தங்களை தவ்ஹீத் ஜமாஅத் என காட்டிக்கொண்டு மீட்டர் போட முயன்றதாகவும் , அவர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்டத்தலைவர் ராமச்சந்திர ராமவன்னி அவர்கள், கிளையில் ஒப்படைப்பதை விட மாவட்டத் தலைமையிடம் ஒப்படைப்பதே சிறந்தது என நினைத்து இராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் சைபுல்லாவைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நாங்களோ, எங்கள் கிளையில் உள்ள யாருமோ இங்கல்ல , தமிழகம் முழுவதும் எங்கேயும் யாரிடமும்மானங்கெட்டு காசு கேட்க மாட்டோம் என சொல்லியிருக்கிறார்.
உடனே அவர், உங்கள் பாம்பன் கிளையில் கட்டிக்கொண்டு இருக்கும் பள்ளிவாசலுக்குத் தான் காசு கேட்டார்கள் எனச் சொல்ல சூடு பிடித்து சாயம் வெளுத்து டர்ராகியது ஜாக்கின் முகமூடி..
ஜாக் பாம்பன் கிளைக்கு ஓட்டுக் கேட்கப் போன காங்கிரஸ்காரர்களிடம் “தவ்ஹீத் பள்ளிக்கு” கட்டிடத்துக்கு காசு தாருங்கள் என கேட்டிருக்கிறார்கள். தவ்ஹீத் என்றதும் சரி இது தவ்ஹீத் ஜமாத் பள்ளி என நினைத்த ராமவன்னி சரி நான் கொண்டு வந்து தருகிறேன் என சொல்லிய பிறகு தான் மேற்கண்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. காசு கேட்ட விசயத்தில்“ஹபிபுல்லா” என்பவர் தான் கதாநாயகன் என்று தெரிய வந்தது. ஆனால் இந்த செய்தியைப் பிரசுரம் செய்த உணர்வு பத்திரிகை, ஹபிபுல்லாவின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என முடிவு செய்து பொதுவாக செய்தி வெளியிட்டது. இதனால் கொதித்தெழுந்த ஜாக்கினர் கோயமுத்தூரிலும், திருச்சியிலும் வெளியிட்ட நோட்டீஸில் இதை நிருபிக்க முடியுமா எனக் கேட்க, அதன் பிறகு தான் ஹபிபுல்லாவின் பெயர் சீனுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் அதன் பிறகும் அசராத இந்த அயோக்கியர்கள், தாங்கள் செய்த தவறை மறைக்க நாங்கள் காசே கேட்கவில்லை. யாரிடமும் காசு கேட்கும் ஈன புத்தியும் எங்களுக்கு இல்லை. நாங்கள் பரிசுத்தவான்கள் என ஊருக்கு ஊர் நோட்டீஸ் விட்டனர் ஜாக்கினர். அதுமட்டுமின்றி ராமவன்னியைச் சந்தித்த ஒரு குழு அவரிடம் ஹபிபுல்லா என்பவரோ, ஜாக் அமைப்போ காசு கேட்கவில்லை என எழுதி வாங்கி வந்து விட்டனர்.
இந்தச் செய்தியை மறுத்து ஜாக்கினர் உலகம் முழுவதும் நாங்கள் தான் யோக்கியன் என்று நோட்டீஸ் அடித்து பரப்பியது.
ஆனால் டிஎன்டிஜேவினர், தங்களிடம ஆதாரங்கள் இருந்தும் ஜாக் சம்பந்தமாகஎந்தவித பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தனர். நாமும் அமைதியாக இருந்து விட்டோம். இந்த நிலையில் தான் கீழ்க்கண்ட நோட்டீஸ்கள் உலகம் முழுவதும் அச்சிட்டு பரப்பப்படுவது நம் கவனத்துக்கு வந்தது.
இனி டிஎன்டிஜேவினரை நம்பி பிரயோஜனம் இல்லை. நாமே இவர்களுக்கு பதில் கொடுத்தால் தான் இவர்களின் விசப்பல்லைப் பிடுங்க முடியும் என இதோ நாம் சேகரித்த ஆதாரங்களை உங்களிடம் அள்ளிப் போடுகிறோம்.
ராமவன்னியிடம் அவர்கள் வாங்கிய கடித்ததில் சில முரண்பாடுகள் இருப்பது நமக்குத் தெரியவந்தது. அதாவது என்னிடம் ஹபிபுல்லா என்பவரோ, ஜாக் அமைப்பினரோ யாருமோ காசு கேட்கவில்லை என துவங்கும் கடிதம் கடைசியாக, நான் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொண்டேன் என வந்து முடியும்.
அந்தக் கடிதம் இதோ:

யாருமே காசு கேட்கவில்லை, பிறகு ஏன் இவர் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆக இதற்குள் ஏதோ சதி இருக்கிறது என்பதை உணர்ந்து இதை சரியான முறையில் விசாரிக்க முடிவு செய்த நம் செய்தியாளர்கள் குழு பல வகையில் இதை அலசி ஆராய்ந்து பலவிதமான ஆதாரங்களைத் திரட்டியது.
முதலில் ராமவன்னியைப் பொருத்தவரை அவர் பாம்பனில் சேர்மனாக (சேர்மனோ அல்லது கவுன்சிலரோ தெரியவில்லை) இருக்கிறார். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலை எதிர் நோக்கி இருக்கிறார். எனவே அவர் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது மிகத் தெளிவாகியது ( ராமவன்னியுடன் பேசியஆடியோவைக் கேட்கவும்)
அடுத்து சில நபர்கள் தன்னை பாம்பன் ஜாக் தலைவர் கலிபுல்லா தலைமையில் சந்தித்து கடிதம் கேட்டதாக சொல்லியிருக்கிறார் ராமவன்னி. அதற்கு மறுமுனையில் பேசியவர் உங்களுக்கு ஹபிபுல்லா என்பவரைத் தெரியுமா எனக் கேட்கிறார். இவர் எனக்கு ஹபிபுல்லா என்பவரைத் தெரியாது. ஆனால் அங்கு வந்தவர்கள் ஒரு நபரைக் காட்டி இவர் தான் ஹபிபுல்லா, எனவே இவர் காசு கேட்கவில்லை என எழுதித்தாருங்கள் என கேட்க அதேபோல இவரும் எழுதித் தந்து இருக்கிறார்.(ராமவன்னியுடன் பேசிய ஆடியோ கேட்கவும்)
காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்டத்தலைவர் ராமவன்னியுடன் பேசிய ஆடியோ:

அதாவது இன்னும் உதாரணமாக சொல்ல வேண்டுமானால்,
பிஜே ஒருவரிடம் காசு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காசு கேட்டவருக்கு பிஜேவையும் யார் என்று தெரியாது, பிஜேவின் பெயரும் தெரியாது. ஆனால் அங்கிருந்தவர்கள் விசாரிக்கும் போது பிஜே தான் காசு கேட்டார் என்று சொல்கிறார்கள். இதனால் கொதித்தெழுந்த சிலர் ஒரு அடையாளம் தெரியாத நபரை, இவர் தான் பிஜே எனக் காட்டுவதற்காக அவரிடம் அழைத்துக் கொண்டு சென்று, நல்லா பாருங்க! இவர் தான் பிஜே, இவரா உங்ககிட்ட காசு கேட்டார் என கேட்கிறார்கள். அதற்கு முன் இவரை யார் என்றே தெரியாத அந்த நபர், ஓ! இவர் தான் பிஜேயா, இவரை நான் பார்த்ததும் இல்லை, இவர் என்னிடம் காசு கேட்கவும் இல்லை என சொல்கிறார். இதை அப்படியே எழுதித்தாருங்கள் எனக் கேட்க, அதுபோலவே அவருக்கு எழுதிக் கொடுக்கிறார்கள். இப்படித்தான் நடந்தது ஹபிபுல்லா என்பவர் காசு கேட்கவில்லை என ராமவன்னி எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற செய்தியின் சாராம்சம்.
அதெல்லாம் சரி! தவ்ஹீத் என்ற வார்த்தையை நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்று அவர்களின் கடிதத்தில் வந்த கருத்துப் பிழையின் உள் அர்த்தம் ஆயிரம் கதை சொல்கிறது. அதாவது இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றால் பிறகு ஏன் அவர் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும்?
அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ராமவன்னி எழுதியிருக்கும் கடிதத்தில் யாருமே காசு கேட்கவில்லை. ஆனால் பள்ளிவாசல் கட்ட காசு கேட்டது உண்மை என்று சொல்கிறார்.இதுவும் ஒன்றுக்கொண்று முரண். அப்படியானால் காசு கேட்ட்து யார்? வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா வாராது என்ற கதை தான்.
தவ்ஹீத் ஜமாத்துக்கு ராமவன்னி எழுதிய கடிதம்:
ஆக இதிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு தான் ராமவன்னி முழுமையாக வாய் திறக்க மறுக்கிறார் என்பதை.
சரி! இனி அவர்களே மாட்டிக்கொண்ட விவகாரங்களுக்கு வரலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி நாங்கள் காசு கேட்கவில்லை, அந்த அவசியமும் இல்லை. நாங்கள் காசு கேட்டது எங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தான். அதாவது நாங்களும் தவ்ஹீத் ஜமாத்தான் என்று சொல்லாமல் சொல்லி , உணர்வு அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில்“தவ்ஹீத் ஜமாத் ஜாக்” என்று இதற்காகவே புது லட்டர்பேடு அடித்து உணர்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அந்தக் கடிதம் இதோ:
ஆக இதுவும் அவர்கள் தப்பித்துக் கொள்ளும் ஒரு வழிதான். உணர்வு செய்தியாளரிடம் தொலைபேசியில் பேசிய கலிபுல்லா, “ஏன் நீங்கள் மட்டும் தான் தவ்ஹீத் ஜமாத்தா? நாங்களும் தவ்ஹீத் ஜமாத் தான் என்ற பாணியில் பேசியிருக்கிறார். ஆக இவர்கள் மீட்டர் போட்ட செய்தியை மறைக்க ஆயிரம் கதையை அவிழ்த்து விட வேண்டியாதாய் இருக்கிறது ஜாக் அமைப்பினருக்கு.
இதைவிடக்கொடுமை தவ்ஹீத் ஜமாத் பெயரைச் சொல்லி வசூல் மோசடி செய்து விட்டு, பாருங்கள் நாங்கள் யோக்கியர்கள், அவர்கள் தான் அயோக்கியர்கள் என்ற பாணியில் ஊரெல்லாம் நோட்டீஸ் பரப்பி வரும் இந்த யோக்கிய சிகாமனிகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுகிறார், பாம்பன் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர். அவர் தான் அசன் அலியை ஓட்டுக்கேட்க அழைத்துச் சென்றவர். வெறும் 2 லட்ச ரூபாய் கொடுத்தால் எங்கள் பகுதி ஓட்டுக்களை அப்படியே வாரித்தருகிறேன் என்று சொன்னதை ஆடியோவில் கேட்கலாம்.
உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் என்ன நடந்தது என்பதை விளக்குகிறார்கள்:

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons