Thursday, April 28, 2011

டிஎன்டிஜே பெயரைச் சொல்லி வசூல்!! மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்!!!


ஜாக் இயக்கத்தினர் தங்களின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி தாங்களே நற்சான்று அளிக்கும் வகையில் அடிக்கடி எழுதி வருகின்றனர்.
'நம்முடைய பேச்சுஉயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சுஅது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம்தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத்மே-2006 பக்கம் 20

தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத்மே 2006, பக்கம் 48
நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50
ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி
சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51

மேற்கண்ட வசனங்களையெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிய ஜாக் அமைப்பினர் மேலப்பாளையத்தில் பசுலுல் இலாஹியை வேட்பாளராக அறிவிக்க கோரி ஆர்பாட்டம் நடத்தியதெல்லாம் பழைய கதை. ஆனால் இப்போது அதையெல்லாம் மிஞ்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ன நிலைபாடு எடுக்கிறதோ அதற்கு எதிர்ப்பதமாக முடிவெடுப்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளது ஜாக்.
அந்த வகையில் இம்முறை இலங்கையில் இஸ்லாமிய மக்களைக் கொத்துக்கொத்தாக கொன்று குவித்து இனஅழிப்பு செய்த விடுதலைப்புலிகளின் தமிழக பிரதிநிதி சீமான் அதிமுகவை ஆதரித்ததால் நம் சமுதாய நலனுக்காக வேண்டி அதிமுகவை எதிர்த்து வாக்களிப்பது என்ற முடிவை தேர்தல் அறிவித்த நாட்களில் ஜாக் எடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் என்றைக்கு ததஜ தன் திமுக ஆதரவு நிலையை அறிவித்ததோ, அடுத்த நிமிடமே தன் ஆதரவு ஜவாஹிருல்லாவுக்கு என மாற்றிக்கொண்டது ஜாக். என்னங்க! இது விடுதலைப்புலிகளின் துரோகத்துக்கு நாம் மாற்றி வாக்களிக்க வேண்டும் என்று சொன்னீர்கள் ஆனால் இன்றைக்கு கேவலம் ஓட்டுக்காக சமுதாய துரோகங்களை மறந்து விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஜவாஹிருல்லாஹ்வை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என சில சகோதரர்கள் ஜாக்கின் தலைமையில் கேட்டபோது, அவர் சொன்ன பதில் பிஜே திமுகவை ஆதரிக்கிறார்ல, அதனால நாம மாத்தி தான் ஆதரிக்கனும் என்று தங்களின் கீழ்த்தரமான நிலைபாட்டை அறிவித்தது ஜாக் தலைமை.

அதெல்லாம் மிஞ்சி இப்போது வெளியாகி இருக்கும் தகவல் தான் ஜாக்கின் போலி முகமூடியை கிழிக்கும் ஒரு கேவலமான விசயமாகும். அதாவது தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி இராமநாதபுரம் ததஜவின் மாவட்டத்தலைவரை போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். என்ன விசயம் என இவர் கேட்க, நீங்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு கேட்ட பணம் இப்போது ரெடியாக இருக்கிறது. அதை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள் என கேட்டிருக்கிறார் ராமவன்னி. இந்தச் செய்தியால் அதிர்ந்த ததஜ மாவட்டத்தலைவர், நாங்கள் அப்படி எதுவும் கேட்கவில்லையே! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று சொன்னார்களா அல்லது வேறு ஏதும் பெயர் சொன்னார்களா எனக் கேட்க, உடனடியாக வேட்பாளர் அசன் அலியைத் தொடர்பு கொண்ட ராமவன்னி அவரிடம் விவரம் கேட்க அவரும் காசு கேட்டது தவ்ஹீத் ஜமாஅத் தான் என அடித்துச் சொல்ல, மறுபடியும் தொடர்பு கொண்ட ராமவன்னி, நீங்கள் தான் காசு கேட்டீர்கள் என உறுதியாய் சொல்லியிருக்கிறார். எங்கிருந்து போன் வந்ததது என சொல்லுங்கள் என கேட்க, அது பாம்பன் கிளை என உறுதி செய்யப்பட்டது. உடனடியாக பாம்பன் கிளையைத் தொடர்பு கொண்டு கேட்க அவர்களும் இதை மறுத்தனர். கடைசியாக விசயம் வேறுபாதையில் பயணிப்பதை உணர்ந்த ததஜ நிர்வாகிகள் உசார் ஆகி வலைவிரிக்க, கடைசியில் வலையில் வசமாக சிக்கியது ஜாக் வகையறாக்கள்.
அதாவது அசன் அலியை கடுமையாக எதிர்த்து வேலை பார்ப்போம் என கங்கனம் கட்டி அவர்களின் பள்ளிவாசலில் தமுமுகவை ஆதரித்து படு பயங்கரமாகப் பிரச்சாரம் செய்த ஜாக்கின் யோக்கியசீலர்கள், அசன்அலியிடம் பணம் கறக்க பள்ளிவாசல் கட்டப்போகிறோம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் வசூல் செய்யச்சொன்னது என்ற பச்சை பொய்யையும் சொல்லி அவரிடம் காசு கறக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் சரியாக விசாரிக்கப் போக வசமாக மாட்டிக்கொண்டது ஜாக்.
அவர்களுக்குத் தான் ஏற்கனவே பள்ளிவாசல் இருக்கிறதே! அப்பறம் எதற்கு பள்ளிவாசல் கட்ட நிதி கேட்டீர்கள் என சில சகோதரர்கள் அவர்களிடம் விசாரித்த போது, காசு கேட்டது பள்ளிவாசல் கட்ட இல்லை, சாலை ஓரத்தில் ஒரு இடம் வருகிறது. அதை வாங்கி அங்கே கடை கட்டி அதிலிருந்து வரும் வருமானத்தை பள்ளிவாசல் செலவு பயன்பாட்டிற்கு விடலாம் என இருந்தோம். ஆனால் அதை ததஜவினர் கெடுத்து விட்டார்கள் என என ரொம்பவே சாதாரணமாக சொல்லியிருக்கிறார் ஜாக் சகோதரர்.
தவ்ஹீத் ஜமாஅத்காரர்கள் கெடுத்தது இருக்கட்டும். நீங்கள் தான் ஜவாஹிருல்லாவை ஆதரிக்கிறீர்களே! அவரிடம் கேட்காமல் ஏன் நீங்கள் எதிர்க்கும் வேட்பாளரிடம் காசு கேட்டீர்கள் என்று கேட்டதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் ததஜ காரன் பள்ளிவாசலுக்கு வர இருந்த நிதியைக் கெடுத்து விட்டான் என செய்திகளை தொடர்ந்து அவர்கள் செய்திகள் பரப்புகிறார்களாம்.
பள்ளிவாசல் கட்டுவதாக இருந்தாலும் அதை உங்கள் சொந்த நிலத்தில் தான் கட்ட வேண்டும். அடுத்தவன் இடத்தை அநியாயமாக ஆக்கிரமித்து கட்டினால் அது பள்ளிவாசலாக ஆகிவிடாது. அதைப்போலத் தான் ஜாக்கின் பெயரை பயன்படுத்தி காசு வசூல் செய்திருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கட்ட காசு கேட்டாலும் கழிவறை கட்ட காசு கேட்டாலும் அது தவறுதான். ஜாக்கின் தொடர் தில்லுமுள்ளு வேலைகளையும், அதிரடி அந்தர்பல்டிகளையும் மக்கள் தொடந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து முத்துப்பேட்டையில் ஜாக் சார்பில் தங்களின் பரிசுத்த முகமூடியை மாட்டிக் கொண்டு அறிப்பு எடுத்த உணர்வு (சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்) என நோட்டீஸ் விட்டுள்ளனர். அவர்களின் அரிப்பை சொறிந்து விடுவதற்கு ஆதாரங்களுடன் அடுத்த செய்தி தயாராக இருக்கிறது.

எங்கே செல்லும் இத்த பாதை ..நரகத்தை நோக்கியா????????



அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மமகவை ஆதரித்து நாம் நிறைய ஆக்கங்கள் வரைந்தோம். அரசியலில் ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்து வேறுபட்டு இவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் வாக்கு பதிவு முடிந்த மாத்திரமே பக்கா அரசியல்வா...தியாக மாறிவிட்டார் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ். இன்று மரணத்தை தழுவிய கடவுள்[?] சாய்பாபாவின் மரணத்தையொட்டி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் பேராசிரியர்.அதை கீழே படியுங்கள்; 

சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம் 


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை 
இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது. 

இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீக வாதியாக மட்டுமல்லாது நாடறிந்த சமூக சேவகருமாக சாய்பாபா திகழ்ந்தார். ,அவரது நிறுவனங்கள் வாயிலாக கல்வியையும், மருத்துவ உதவியையும் எண்ணற்றோருக்கு வழங்கி பெரும் சேவையாற்றினார். 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை நீக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூர குழாய்கள் அமைத்து 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்ததோடு அதற்காக நிதியுதவி வழங்க முன்வந்த மத்திய அரசின் நிதியுதவியையும் ஏற்க மறுத்தார். 

கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள் மூலம் ஏராளமான மக்களுக்கு தொண்டாற்றிய சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். 
மேற்கண்டவாறு அறிக்கையில் கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ். 

ஒரு முஸ்லிம் மரணித்தால் அவனுக்காக துஆ செய்வதும், கணவன் நீங்கலாக யாருக்காவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பதும் இஸ்லாம் நமக்கு கட்டிய வழிமுறையாகும். அதே நேரத்தில் ஒரு இணைவைப்பாளர் மரணித்து விட்டால் அவருக்காக நாம் பிரார்த்திக்கவோ, வேறு காரியங்களை ஆற்றுவதற்கோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால் சாய்பாபா தன்னை கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் காட்டிக் கொண்டவர். சில அற்புதங்களை[?] செய்து காட்டி தன்னை வழிபடும் கூட்டத்தை உருவாக்கியவர். சாய்பாபாவின் பக்தர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதன் மூலம் சாய்பாபாவை கடவுள் என நம்பும் அவரது பக்தர்களின் சித்தாந்தத்தை அங்கீகரிக்கிறது மமக. மேலும் சாய்பாபா சமூக சேவகர் என்று புகழாரம் சூட்டுகிறது மமக. அப்படியே இருக்கட்டும் சாய்பாபாவின் சமூக சேவை மறுமையில் அவருக்கு பயனளிக்கும் என்கிறதா மமக? இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்; 

ذَلِكَ هُدَى اللّهِ يَهْدِي بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُواْ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُواْ يَعْمَلُونَ 

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.[6:88 ] 

இறைமறை இவ்வாறு கூற, அதற்கு நேர் மாற்றமாக புகழ்மாலை சூட்ட மமகவுக்கு ரொம்பவே துணிச்சல். முஸ்லிம் கட்சி, சமுதாய முன்னேற்றம் என்ற பெயரில் மக்களை தவறான வழிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று மமகவுக்கு குறிப்பாக இந்த அறிக்கை வெளியிட்ட ஜவாஹிருல்லாஹ்விற்கு அறிவுறுத்துகிறோம்.

                                                                                              Muhamed Haneef 

வருத்தம் தெரிவிக்கும் ம.ம,க வை கண்டு வருந்துகிறோம்...

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.4:88




இதையும் நம் சமுதாய நண்பர்கள் சாதாரணமான விசயமாக நினைத்தால், அது நம் ஈமானின் பலவீனத்தையே காட்டும், சாய்பாபா வை பற்றியும் அவரின் கொள்கைகள் பற்றியும் நன்கறிந்தவர்கள் அவர் இறப்பால் வருத்தப்படவே முடியாது, ரோடு போட்டார், தண்ணீர்  குழாய் அமைத்தார் என்பதற்காக ஒருவரை சமூக சேவகர் என்று போற்றவேண்டும் என்றால், வாஜ்பாயும் மோடியையும் கூட சமூக சேவகர்கள் ஆகிவிடுவார்கள், 
"ஒரு வாதத்திற்காக சாய்பாபா சில சமூக சேவைகளை செய்தார் என்றே வைத்துக்கொள்வோம், அதற்காக தான் இந்த அறிக்கைகளும் போஸ்டர்களும் என்றால் அவர் செய்த நன்மைகளை விட பித்தலாட்டங்களும் தீமைகளின் பட்டியலும் அதிகமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கின்றதே அதையே ஏன் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவில்லை?",  அதிகமான மக்களை வழி கெடுத்ததால் ஒருவனை அறிவாளி என்று போற்ற முடியாது மாறாக அவனே பெரிய சைத்தான் என்பதுதான் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக  இருக்கவேண்டும், தன்னை கடவுள் என்றும் அவதாரம் என்றும் கூறிக்கொண்டவர் தன் மகிமையால் மற்றவர்களின்  நோய்களை குணமாக்குகின்றேன் என்று சொன்னவர் தன்னை தானே குணப்படுத்திக்கொள்ள முடியாமல் மாண்டுபோகின்றார், அதுவும் நான் 96 வயதுவரை வாழ்வேன் என்று  முன்னறிவிப்பு  செய்து பத்து வருடங்களுக்கு முன்பாகவே மரணித்திருக்கிறார் , இந்த தருணத்தில் அவர் மரணத்தின் மூலம் பொய்த்துப்போன அவர் தத்துவங்களையும், முன்னறிவிப்புகளையும்  அவரின் பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எடுத்து சொல்லி, இறைவன் என்பவன், பிறப்பு,  இறப்பு , அசதி, மறதி, சோம்பல், பசி, உறக்கம், உணவு, தேவை, நோய், முதுமை, இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன், கவுள் என்பவன் நித்திய ஜீவன், எந்த மனிதரும் கடவுளாக முடியாது என்ற சிந்தனையை ஊட்டி சத்திய மார்க்கத்தின் பக்கம் அவர்களை அழைப்பது தான் ஒரு முஸ்லிமிற்கு உள்ள கடமையாகும், அதை செய்ய இயலாதவர்கள் குறித்த பட்சம் வாய்மூடி மௌனமாகவாவது இருக்கலாம், மாறாக அவர் (சாஹிபாபா) சமூக சேவகர் என்றும் ஆன்மீக வாதி என்றும் நற்சான்று கொடுத்து அவர் மரணம் வருதமளிக்கின்றது என்று அறிக்கைவிடுவதும், போஸ்டர் அடிப்பதும், அவரை நம்பி ஏமாந்த பக்தர்களை ஊக்குவிப்பதாகவே அமையும், முஸ்லிம் லீக் மட்டும் அல்ல தி.மு,க, ஆ,தி,மு,க கூட இப்படி போஸ்டர் அடித்து ஒட்டி இருக்க வாய்ப்பில்லை, மாற்று அரசியல், என்று சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்டவர்கள், குறித்த பட்சம் இதுபோன்ற போஸ்டர்களை அடித்து மூன்றாம்தர அரசியல் செய்து சமுதாய மானத்தை கப்பலேற்றமல் இருந்தாலே போதும் என்பதுதான் சமுதாய மக்களின் வேண்டுகோள்.


" யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு." 3.177
-abujasra 

Wednesday, April 27, 2011

யார் மாமா? அனல் பறக்கும் விவாதம்


அம்புலிமாமா, நேரு மாமாவுக்கு பிறகு இப்போது யார் மாமா என்ற விவாதம் பரவலாக நடந்து வருகிறது..
அந்த வகையில் பொய்யன் சமாத்தே டிரஸ்டியினர் தாங்கள் மாமா இல்லை என்பதை நிருபிக்க அதை பிறர் மீது சுமத்தும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஓட்டுக்கு காசு வாங்கிக் கொடுப்பது மாமா வேலை இல்லையா என கேட்கிறார்கள்.
நாமே சொல்கிறோம். ஓட்டுக்கு காசு வாங்கிக் கொடுப்பது மாமா வேலை தான். ஆனால் அந்த வேலையைப் பார்க்க இது பொய்யன் சமாத் டிரஸ்ட் கிடையாது. அங்கு தான் எல்லா “வேலைகளும், லீலைகளும்” நடக்கும். பூத் சிலிப்புக்கு ததஜகாரன் காசு தர்றேன்னு சொன்னத ஆதரத்தோடு நிருபிக்க வேண்டும் என சொல்லியும் அதப்பத்தி பேச்சையே கானோம், அப்பறம் என்ன மாமா வேலையப் பத்தி நீங்க பேசுறது?

இவர்கள் எந்த இடத்திலும் 1000 ரூபாய் கொடுத்ததாக கூறவில்லை.அப்படி இருக்கும் போது இவர்கள் 1000 ரூபாய் கொடுத்ததாக நீங்கள் சொல்லுவதால் கொடுத்தவர்களுக்குத் தானே தெரியும்? என ஒரு அதிசயத்தைக் கண்டுபிடித்தது போல வழக்கம் போல தங்களின் அதிபுத்திசாலி (?), அதிமேதாவி(?)த் தனத்தைநிருபித்துள்ளார் செங்கி.
உணர்வு வார இதழில் வெளிவந்த செய்தியைத் தான் நாம போட்டிருக்கிறோம். அந்த செய்தி இது தான்
அதாவதுமமக போட்டியிடும் தொகுதிகளில் ததஜ வாக்காளர்களுக்கு1000ரூபாய் கொடுத்து மமகவுக்கு வாக்களிக்காதே என பிரச்சாரம்செய்கிறது.இந்த பிழைப்புக்கு அவர்கள் கற்பை விற்றுப்பிழைக்கலாம் என்ற குறுஞ்செய்திஅனைவரது மொபைல்போன்களிலும் இடம்பிடித்தது.
இதிலே பொய்யன் சமாத் டிரஸ்ட் தான் இதை வெளியிட்டதாக இல்லையேப்பா? அது மட்டுமில்லாம 1000 ரூபாய் கொடுத்ததாகவும் தெளிவான செய்தி எஸ்.எம்.எஸ் வழியாக பரவியிருக்கிறதுன்னு இருக்கேப்பா.
அப்ப என்ன ஒன்னு புரியுதுன்னா இந்த கேவலமான எஸ்.எம்.எஸ் உங்களிடமிருந்து தான் புறப்பட்டு இருக்கிறது என்பது உண்மையாகிறது.

அடுத்து காரைக்குடி விவகாரம். காரைக்குடி விவகாரத்தில் பணம் வாங்கித்தருவது மாமா வேலை என்று நாம் சொன்னோமாம்.
காரைக்குடி பொய்யன் டிரஸ்டு நிர்வாகி பணம் மட்டுமா வாங்கித்தர்ரேன்னு சொன்னார்?
ஆளும் புடிச்சித் தரவா என்றும் அல்லவா கேட்டார். இன்று வரை காரைக்குடி விசயத்தைப் போட்டு கிழிகிழின்னு கிழிக்கிறோம், அதுக்கு பதில் சொல்ல துப்பு இல்ல.
காரைக்குடியில அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, பார்த்தீர்களா இவர்களின் யோக்கியதையை? பிஜே வார்த்தை விபச்சாரம் செய்கிறார் என எழுதிவிட்டு நாம் அதை ஆதாரப்பூர்வமாக நிருபித்ததும், ஆஃப் ஆகிப்போய் கிடந்த இவர்கள், அந்தப் பெண்ணிற்கு பொய்யன் சமாத் டிரஸ்ட் தலைமையின்(?) மூலமாகவே போன் போட்டு தவ்ஹீத் ஜமாத்காரன் என்னை மிரட்டி தான் வாக்குமூலம் வாங்கினான் என சொல் இல்லாவிட்டால் உன்னை விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன், நீ இந்த ஊரிலேயே இருக்க முடியாது என மிரட்டினார்கள். மற்றதைப் பற்றி பக்கம் பக்கமாக கேள்வி கேட்ட இவர்கள் இந்த காரைக்குடி மாமா வேலை விசயத்தில் மட்டும் தொடர்ந்து மவுனம் சாதித்து தான் வருகிறார்கள். இப்போது மாமா வேலை பார்ப்பது யார் என்று நம்மிடம் கேட்கிறார்கள்., கண்ணாடியைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி.
திமுகவினரிடம் பணம் பெற்றுத்தருகிறேன் என சம்பந்தப் பட்டவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தர தயரா என கேட்கிறார்கள்.
நீங்க ஒன்னும் தப்பா நெனச்சிக்காதீங்க. கொஞ்சம் முத்திப்போச்சி. வெயில் காலமில்லே! அப்படித்தான் அப்பப்ப கொஞ்சம் கூடும் குறையும்.
ரோட்டுல போற ஒருத்தன பட்டுன்னு நிப்பாட்டி “டேய் நீ கொலை பண்ணலைன்னு சத்தியம் செய்து தர தயாரா? “ எனக்கேட்டால், அவன் என்ன நெனைப்பான். யார்ரா இவன், முழு பைத்தியம் கூட இப்படி பேச மாட்டானே! இவன் அதை மிஞ்சியதா இருக்கானே! அப்டின்னு நினைப்பானா நினைக்க மாட்டானே!
அது மாதிரி இருக்கு நீங்க கேக்குற ஒவ்வொரு சத்தியம் விவகாரமும். முதல்ல நிருபிங்கப்பா! அப்பறம் சத்தியம் செய்ய சவால் விடலாம். அடடடா... உங்களோட பெரிய இம்சையா போச்சப்பா! முதல்ல எல்லாரும் போயி ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்ந்து படிச்சிட்டு வாங்க.. அதிலயும் ஆம்பிலைங்க மட்டும் உள்ள ஸ்கூலா பாத்து சேருங்க....ஹிஹிஹி.
பெல்ட் தொடர்ந்து சுழலும் ….

Monday, April 25, 2011

வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்…


புரட்சி நடிகர் எம்ஜிஆருக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் வாத்தியார்என அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா .தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அவரும் விரும்புகிறார்அதன்காரணமாகத்தான் இந்த தேர்தலுக்கு அம்மா!! அம்மா!! என தலைப்பிட்டு அடித்தஅத்தனை நோட்டீஸ்களிலும் எம்ஜிஆருக்குப் பக்கத்தில் தன் படத்தைஇடம்பெறச் செய்தார் இந்த வாத்தியார்

தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பலதலைப்புகளில் பல கட்டுரைகள்எழுதியிருக்கும் இந்த பேராசிரியரின் மனதில் புகுந்த பதவி ஆசை அவர்அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தைக் கூட தூக்கி குப்பையில் வீசியெறியும்அளவிற்கு கொண்டு வந்து விட்டதுசரி மார்க்கத்தைத் தான் தூக்கி எறிந்துவிட்டார்கள்ஜனநாயகக் கடமையாவது சரிவர ஆற்றினார்களா என்றால் அதுவும்கிடையாது.
தமுமுக அதிகாரபூர்வ இதழில் சென்ற வாரம் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது.அதிலே ஓட்டுப் போடத பிரதமர்ஊருக்கு மட்டும் தான் உபதேசமாஎன முதல்பக்கத்தில் ஒரு செய்தியைப் போட்டு இருந்தார்கள்அசாம் சட்டபேரவைத்தேர்தலில் பிரதமர் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யவில்லைஜனநாயகக்கடமையை ஆற்றவில்லைஊருக்கு மட்டும் தான் உபதேசமா என ஒரு சூடானசெய்தியைப் போட்டு பிரதமர் வாக்களிக்காத விசயத்தை வரிந்து கட்டிக் கொண்டுதங்களின் பத்திரிக்கை சுதந்திரத்தை நிலை நாட்டியுள்ளனர்பாராட்ட வேண்டியவிசயம் தான்.
ஆனால் பிரதமர் வாக்களிக்காத விசயத்தை இப்படி போட்டு அலசும் இந்தகழகத்தினர் தங்களின் தலைவர் வாத்தியார் ஏன் வாக்களிக்கவில்லை என்பதையாரிடம் சென்று கேட்கலாம் என்பது தெரியாமல் இப்போது விழிபிதுங்கிமுழித்துக்கொண்டு இருக்கின்றனர்வாத்தியார் அவர்களின் சொந்த ஊர்தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஆகும்பிறகு வாணியம்பாடி கல்லூரியில்பேராசிரியராக வேலை செய்த வாத்தியார் அவர்கள்தமுமுகவின் நிரந்தரத்தலைவர் ஆன பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தார்பல வருடங்களாக சென்னை சூளைமேட்டில் குடியிருக்கும் பேராசியர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்வாக்காளாராக இருக்கிறார்.
ஆனால் ஊருக்கு உபதேசம் செய்யும் அவர்களின் பத்திரிகை செய்தியைப் படித்தபிறகும் கூட வாத்தியாருக்கு வாக்களிக்க மனம் வரவில்லைஅவர் தேர்தல்நாளன்று முழுக்க முழுக்க இராமநாதபுரம் தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவாக்குச்சாவடியாக வலம் வந்தாரே தவிர தன் வாக்கைச் செலுத்தி தன்னுடையஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியளவும்இல்லைஅவருக்கு இருப்பதெல்லாம் நாம் எப்படியாவது வெற்றியட்டைந்து விடமாட்டோமாநமக்கு தெளிவாக ஓட்டு விழுகிறதா என்பது மட்டுமே ஆகும்.
இந்திய ஜனநாயகம் கடந்து வந்த பாதையில் ஒரு ஓட்டு கூட வெற்றி தோல்வியைதீர்மாணித்திருக்கிறது. 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில் .தி.முகபா..,.தி.மு. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது.வெறும் 13 மாதங்கள் நீடித்த இந்த அரசு.தி.மு. தனது ஆதரவை வாபஸ் பெற்றகாரணத்தால் அதன் மெஜாரிட்டியை நிருபிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.கடைசியில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
ஆக ஒரு ஓட்டு என்பது சாதாரண விசயமல்லஅதுமட்டுமின்றி ஒரே ஒருஓட்டினால் வாஜ்பாய் அரசையே கவிழ்த்த அம்மா அவர்களின் கூட்டணியில்இருந்து கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அம்மாஅம்மா என அழைத்து,சின்னச்சின்ன பிட் நோட்டீஸ்களில் கூட அம்மா தாயே என புகழ்ந்து தள்ளிவாக்குகேட்ட இந்த வாத்தியார் தன்னுடைய வாக்கை செலுத்தவில்லை எனபதுவேடிக்கை என்றாலும்இவரே வாக்களிக்காத போது பிரதமர் வாக்களிக்கவில்லை,ஊருக்குத் தான் உபதேசமாஎன தங்களின் அதிகாரபூர்வ வார இதழில்கேள்விகேட்டு எழுதுவதும் கொடுமையிலும் கொடுமை.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரான முஹம்மது அலி ஜின்னாவை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர்வளர்மதி அவர்களுக்கு தன்னுடைய வாக்கினை வாத்தியார் அவர்கள்செலுத்தவில்லை.
ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வளர்மதி அவரைஎதிர்த்துப் போட்டியிடும் முஹம்மது அலி ஜின்னாவை விட ஒரே ஒரு ஓட்டுவித்தியாசத்தில் தோற்றுவிட்டார் என வைத்துக்கொள்வோம்அதற்கு காரணம்யார்எல்லாம் தெரிந்த சிறந்த ஜனநாயகவாதியான வாத்தியார் அவர்கள் தான்.அதைப்போன்று வளர்மதி தோல்வியடைந்து திமுக 118 இடங்களையும்அதிமுக117 இடங்களையும் பிடித்து அதிமுக ஆட்சியமைக்க முடியாமல் போனால் அதற்குகாரணம் யார்அதற்கும் காரணம் பேராசிரியர் தான்இதெல்லாம் வளர்மதி காதுக்கு எட்டினால் வாத்தியாரின் கதி என்னவாகும் என்பது அவர்களின் தொண்டர்களிடையே பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. காரணம் வளர்மதியைப் பற்றி அதிமுககாரர்களுக்கு மட்ட்டுமின்றி பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும். வளர்மதியை சித்தரித்து சில சினிமாக்களும் கூட வந்துள்ளன. இயக்கத்தின் தலைவரே வாக்களிக்காத போது அவர்களின் தொண்டர்கள் பலரும் நாமும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று இருந்து விட்டதாகவும் மக்கள் மத்தியில் செய்திகள் உலா வருகின்றன.
அம்மா செல்லும் ஒவ்வொரு இடங்களுக்கும் முன்கூட்டியே திட்டமிட்டு 3 அல்லது 4பேர்களை நியமித்து அவர்கள் கையில் மமகவின் பிரம்மாண்ட கொடிகளைக்கொடுத்து அம்மா இந்தப்பக்கம் பார்க்கும் போது நல்ல வேகமாக ஆட்டுங்கள் என்றுஉத்தரவு பிரப்பித்தால் மட்டும் போதாதுஜனநாயகத்துக்கு ஆற்றும் கடமை,கூட்டணி கட்சிக்கு ஆற்றும் கடமை என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்கவும்வந்திருக்க வேண்டும்ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் மமகவின்வேட்பாளர் நின்றிருந்தால் அவருக்கு வாக்களிக்க வராமல் ராமநாதபுரம்தொகுதியிலேயே சுற்றிக்கொண்டிந்திருப்பாரா ஜவாஹிருல்லாநிற்பது கூட்டணிவேட்பாளர் தானே! அதுவும் வளர்மதி தானேஅவர் ஜெயித்தால் என்ன?தோற்றால் என்னஎன் வேலை மட்டும் நடந்தால் போதும் என தான் போட்டியிட்டதொகுதியில் மட்டுமே முழுகவனம் செலுத்திய வாத்தியாரை யார் கேள்விகேட்பது?
கருணாநிதிஜெயலலிதாமுக.ஸ்டாலின்விஜயகாந்த் போன்ற அனைத்து பிரபலவேட்பாளர்களும் தாங்கள் போட்டியிட்ட தொகுதியை விட்டு விட்டு வந்து தங்களின்சொந்த தொகுதியிலே வாக்களித்தனர்காரணம் அவர்கள் ஆற்ற வேண்டியஜனநாயக கடமை மற்றும் தங்களின் கூட்டணிக்கு செய்ய வேண்டிய பொறுப்பு எனதங்களின் கடமையை ஆற்றவாத்தியார் மட்டும் தன் சொந்த வேலை நடந்தால்போதும் என அவர் போட்டியிடும் தொகுதியிலேயே கூடாரம் அடித்து தங்கிவிட்டுபிரதமர் வாக்களிக்கவில்லைஜனாதிபதி வாக்களிக்கவில்லை என விதவிதமாகதங்களின் பத்திரிகையில் கட்டம் கட்டி எழுதுகிறார்கள்இவர்களை நினைத்தால்ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு ஊரில் ஒரு பெரிய ஹசரத் இருந்தாராம்ஒரு நாள் வெள்ளிக்கிழமை ஜூம்மாபயானுக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டு கோழிஅவர் வீட்டு பின்பக்கம் மேய்வதைக் கண்டு அதை அப்படியே கூடை போட்டு கவுத்திதன் மனைவியிடம் இதை இன்னிக்கு சால்னா வைத்து விடு என சொல்லிவிட்டுபயானுக்குச் சென்றுவிட்டாராம்கோழிக்கறிக்கு மசாலா வாங்குவதற்காககடைக்குச் சென்ற ஹசரத்தின் மனைவிக்கு ஹசரத் பயான் செய்வது தெளிவாகக்கேட்டதாம். “அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே என மிக காரசாரமாகமுழங்கினாராம் ஹசரத்ஹசரத்தின் பயானைக் கேட்டு நேராக வீட்டுக்கு வந்தமனைவிமூடிக்கிடந்த கோழியை வேகமாக திறந்து விட்டுவிட்டாராம்.ஜூம்மாவுக்கு பிறகு கோழிச்சால்னா சாப்பிட ஆசை ஆசையாக வீட்டுக்கு வந்தஹசரத் தன் மனைவியிடம் சாப்பாடு வை என கேட்கநடந்தவிசயங்களையெல்லாம் மனைவி சொல்லஅதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஹசரத்அழாத குறையாக சொன்னாராம்., அடிப்பாவி அத உனக்காடி சொன்னேன்?ஊருக்குலடி சொன்னேன்” . இதைப் போலத்தான் தன் தலைவர் வாக்களிக்காதவிசயத்தைக் கண்டுகொள்ளாமல்பிரதமர் வாக்களிக்களிக்கைவில்லைஊருக்குத்தான் உபதேசமாஎன கேட்பவர்களின் நிலையும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons