Friday, April 1, 2011

வால் பிடிப்பவர்களிடம் சில கேள்விகள்..

இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வால் பிடிப்பவர்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அவர்கள் சொல்லியுள்ள பதிலை குறித்து சில விளக்கங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.


1 . ஜெயலலிதா இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறையில் இருக்கும் அப்துந்நாசர் மதானி உயிரோடு இருப்பாரா?
இருக்கமாட்டாரா?

இருப்பார் என்றால் அவ்வாறு நீங்கள் சொல்வதற்கு ஏதுவாக ஜெயலலிதா தந்துள்ள வாக்குறுதி என்ன?
இருக்க மாட்டார் என்றால், ஜெயலலிதாவின் வாலை இன்று நீங்கள் பிடித்தது சமுதாய துரோகம் இல்லையா? மதானி செத்தாலும் பரவாயில்லை, ஜெயலலிதாவின் வால் தான் முக்கியம் என்பதை தவிர வேறென்ன காரணம்?

2 . ஜெயலலிதா இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முனீர் ஹோதாவை போல இன்னும் பல முஸ்லிம்கள் தேச துரோக பட்டத்தை பெறுவார்களா பெற மாட்டார்களா?

பெற மாட்டார்கள் என்றால், அவ்வாறு ஜெயலலிதா எங்கே வாக்குறுதி தந்துள்ளார்? எதனடிப்படையில் இவ்வாறு உங்கள் கொள்கையை மாற்றினீர்கள் என்பதை சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
பெறுவார்கள் என்றால், அத்தகைய நிலையில் கூட அம்மாவுக்கு ஜால்ரா அடித்து சீட்டு பெறுவதில் மட்டும் நோக்கமாக நீங்கள் இருப்பது சமுதாய துரோகமில்லையா? முஸ்லிம் அதிகாரிகள் தேச துரோகிகளாக சித்தரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, எங்களுக்கு சீட்டும் நோட்டும் தான் முக்கியம் என்ற ஒற்றை காரணத்தை தவிர வேறென்ன காரணம்?

3 . ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பங்களும் பதற்றங்களும் பெருகியிருக்குமா? குறைந்திருக்குமா?

குறைந்திருக்கும் என்றால், அவ்வாறு ஜெயலலிதா எங்கே வாக்குறுதி தந்துள்ளார்?
பெருகும் என்றால், அத்தகைய நிலையில் கூட அம்மாவின் தாஜா தான் முக்கியம், சமுதாயம் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கு பரவாயில்லை என்று சொல்கிறீர்களா? குழப்பங்கள் பெருகும் என்ற போதிலும் கூட, அம்மாவின் ஆட்சியை மலர செய்வோம் என்று நீங்கள் கூறுவது ஏன்?

4 . நல்ல வேளையாக தமுமுக அன்றைக்கு ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பியதை போல இன்றைக்கு அவரை வீட்டுக்கு அனுப்புவது முஸ்லிம் சமுதாயத்தின் கடமையில்லையா?

இல்லை என்றால், அதற்குரிய காரணங்கள் என்ன?
ஆம் என்றால், அதை செய்யாமல் அம்மாவின் வாலை விட மாட்டோம் என்று இன்றைக்கு பற்றிப்பிடிப்பது ஏன்?அன்று, "நல்ல வேளையாக" வீட்டுக்கு போனவர், இன்று நிச்சயம் ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்ற அளவிற்கு நீங்கள் மாறுதல் அடைவதற்கு அல்லது அவரிடம் கண்ட மாறுதல்களாக நீங்கள் சொல்லும் காரணங்கள் என்னென்ன?


5 . ஜெயலலிதாவிடம் கமிஷன் பெற்று, அவரை ஆதரித்த அனைவரும் அன்றைக்கே அவர்கள் தவறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய நீங்களே இன்றைக்கு அதே தவறை செய்தால், உங்களுக்கு அறிவுரை சொல்வது யார்? கமிஷன், அன்றைக்கு கை மாறி இருக்கும் என்றால் இன்றைக்கு கை மாறாதா?

கை மாறாது என்றால், அவ்வாறு அன்றைக்கு இதே ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் மட்டும் கமிஷன் வாங்கினார்கள் என்று நீங்கள் கூறியது ஏன்?
கை மாறும் என்றால், அது சமுதாய துரோகம் இல்லையா? கமிஷன் வாங்கி நக்கிப் பிழைக்கும் தொழிலை நீங்கள் செய்து வருவது சமுதாயத்தை வஞ்சிப்பதாகாதா?


இவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் சமுதாயம் இவர்களுக்கு வாக்களிக்கும் என்று நம்பினால், இவர்களை விடவும் சமுதாயத்தை ஏமாற்றும் நயவஞ்சகர்கள் யார்?

Posted by Nashid Ahmed 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons