Thursday, April 28, 2011

வருத்தம் தெரிவிக்கும் ம.ம,க வை கண்டு வருந்துகிறோம்...

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.4:88




இதையும் நம் சமுதாய நண்பர்கள் சாதாரணமான விசயமாக நினைத்தால், அது நம் ஈமானின் பலவீனத்தையே காட்டும், சாய்பாபா வை பற்றியும் அவரின் கொள்கைகள் பற்றியும் நன்கறிந்தவர்கள் அவர் இறப்பால் வருத்தப்படவே முடியாது, ரோடு போட்டார், தண்ணீர்  குழாய் அமைத்தார் என்பதற்காக ஒருவரை சமூக சேவகர் என்று போற்றவேண்டும் என்றால், வாஜ்பாயும் மோடியையும் கூட சமூக சேவகர்கள் ஆகிவிடுவார்கள், 
"ஒரு வாதத்திற்காக சாய்பாபா சில சமூக சேவைகளை செய்தார் என்றே வைத்துக்கொள்வோம், அதற்காக தான் இந்த அறிக்கைகளும் போஸ்டர்களும் என்றால் அவர் செய்த நன்மைகளை விட பித்தலாட்டங்களும் தீமைகளின் பட்டியலும் அதிகமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கின்றதே அதையே ஏன் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவில்லை?",  அதிகமான மக்களை வழி கெடுத்ததால் ஒருவனை அறிவாளி என்று போற்ற முடியாது மாறாக அவனே பெரிய சைத்தான் என்பதுதான் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக  இருக்கவேண்டும், தன்னை கடவுள் என்றும் அவதாரம் என்றும் கூறிக்கொண்டவர் தன் மகிமையால் மற்றவர்களின்  நோய்களை குணமாக்குகின்றேன் என்று சொன்னவர் தன்னை தானே குணப்படுத்திக்கொள்ள முடியாமல் மாண்டுபோகின்றார், அதுவும் நான் 96 வயதுவரை வாழ்வேன் என்று  முன்னறிவிப்பு  செய்து பத்து வருடங்களுக்கு முன்பாகவே மரணித்திருக்கிறார் , இந்த தருணத்தில் அவர் மரணத்தின் மூலம் பொய்த்துப்போன அவர் தத்துவங்களையும், முன்னறிவிப்புகளையும்  அவரின் பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எடுத்து சொல்லி, இறைவன் என்பவன், பிறப்பு,  இறப்பு , அசதி, மறதி, சோம்பல், பசி, உறக்கம், உணவு, தேவை, நோய், முதுமை, இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன், கவுள் என்பவன் நித்திய ஜீவன், எந்த மனிதரும் கடவுளாக முடியாது என்ற சிந்தனையை ஊட்டி சத்திய மார்க்கத்தின் பக்கம் அவர்களை அழைப்பது தான் ஒரு முஸ்லிமிற்கு உள்ள கடமையாகும், அதை செய்ய இயலாதவர்கள் குறித்த பட்சம் வாய்மூடி மௌனமாகவாவது இருக்கலாம், மாறாக அவர் (சாஹிபாபா) சமூக சேவகர் என்றும் ஆன்மீக வாதி என்றும் நற்சான்று கொடுத்து அவர் மரணம் வருதமளிக்கின்றது என்று அறிக்கைவிடுவதும், போஸ்டர் அடிப்பதும், அவரை நம்பி ஏமாந்த பக்தர்களை ஊக்குவிப்பதாகவே அமையும், முஸ்லிம் லீக் மட்டும் அல்ல தி.மு,க, ஆ,தி,மு,க கூட இப்படி போஸ்டர் அடித்து ஒட்டி இருக்க வாய்ப்பில்லை, மாற்று அரசியல், என்று சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்டவர்கள், குறித்த பட்சம் இதுபோன்ற போஸ்டர்களை அடித்து மூன்றாம்தர அரசியல் செய்து சமுதாய மானத்தை கப்பலேற்றமல் இருந்தாலே போதும் என்பதுதான் சமுதாய மக்களின் வேண்டுகோள்.


" யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு." 3.177
-abujasra 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons