Monday, October 31, 2011

முத்துபேட்டை தோல்விக்கு காரணம் யார் ? முஸ்லீம்களின் அரசியல் கட்சிகள் பற்றிய சிறப்பு பார்வை-














தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிடக்கூடாது என்பதைக் கொள்கையாக வைத்துள்ள இந்த ஜமாஅத்தை பல வகையில் எதிர்த்தவர்கள் 
இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். நாம் ஒற்றுமையைக் குலைப்பதாக குற்றம் 
சாட்டியவர்களின் சாயம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.
உலக ஆதாயத்திற்காகவே TNTJ எதிர்த்தார்கள் என்பதை இந்த்த் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் என்றால் 
ஏன் அனைவரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவில்லை? ஒரு வார்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஒற்றுமையின் அடையாளமா? 
தங்களின் சுய லாபத்திற்காகவே தவ்ஹீத் ஜமாஅத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை 
மக்கள் இந்த்த் தேர்தல் மூலம் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.


 உதாரணமாக முத்து பேட்டை என்ற முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும்  ஊரை நமது ஆய்வுக்கு 
எடுத்து கொள்வோம்  -


முஸ்லீம் அரசியல் அமைப்புகளின் கொள்கையற்ற ஒற்றுமையினால் முத்து பேட்டை 
பேரூராட்ச்சி தலைவர் பதவிக்கு எளிமையான முறையில் ADMK கட்சியின் வேட்பாளர் திரு.கோ.அருணாச்சலம் மொத்த வாக்கு:2328 பெற்று வெற்றிபெற்றார்  .


முத்து பேட்டை திரு.கோ.அருணாச்சலம் இவரின் வெற்றிக்கு காரணமான கொள்ளையற்ற 
முஸ்லீம் இயக்கங்களை பார்ப்போம்.


 1.SDPI கட்சியின் வேட்பாளர் ஜனாப்.அபூபக்கர் சித்திக் - வாக்கு -1926

2.VC கட்சியின் வேட்பாளர் ஜனாப்.அப்துல் சலீம்            -வாக்கு - 216

3. சுயேச்சை கட்சி வேட்பாளர் ஜனாப்.சஹாப்தீன்    -வாக்கு - 251

 4.DMK கட்சியின் வேட்பாளர் ஜனாப்.தமீம் - வாக்கு - 1491

5.IUML கட்சியின் வேட்பாளர் ஜனாப்.முஹைதீன் அடுமை - வாக்கு -192

6.MMK கட்சியின் வேட்பாளர் ஜனாப்.முஹம்மது மாலிக் - வாக்கு- 395

7.சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.லெப்பை தம்பி - வாக்கு -173

8. சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.ஹாரூன் - வாக்கு- 163

9. சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.ஹாஜா மைதீன் -வாக்கு-102

இது போன்ற கொள்ளையற்றவர்களினால் கோட்டையவிட்ட முத்து பேட்டை பேரூராட்சி
 தலைவர் பதவியே முஸ்லீம்களிடம் இருந்து தோல்வியே சந்திக்க காரணமாகயிருந்த 
 இவர்களை சமுதாயம் இனம்கண்டு புரிந்து நடக்க தாழ்மையுடன் சமுதாயத்தை வேண்டிகொள்கிறோம் .


முஸ்லீம் அரசியல் அமைப்புகள் அனைத்து ஒன்றினைந்து ஒரு முஸ்லீம்  வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இன்று நிலைமை முஸ்லீம் வேட்பாளர் ஒருவர் முத்து பேட்டை 
தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பார்.


பிரதான அரசியல் கட்சியான திமுக முஸ்லீம் வேட்பாளரான தமீம் என்பவரை 
நிறுத்தியிருந்தும் அவருடைய வெற்றிக்கு பிரகாசிக்கசெய்யாமல் ஒட்டு சீட்டை  சிதரவிட்ட சமுதாயமே ! சிந்திப்பீர்களா! 


இவர்களா ?சமுதாயத்தை காப்பார்கள்  இல்லை சமுதாயத்தை நாசபடுத்தவே 
பதவிவெறிக்காகவே அரசியலில் நிற்க்கிறார்கள் இனியாவது திருந்துவார்களா! 
அல்லது சமுதாய மக்கள் இவர்களின் சூழ்ச்சிவலையில் சிக்காமல் இனி நடக்கும் தேர்தலில் 
பிரதான கட்சிகளான அரசியல் கட்சிகள் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தினால்
 அனைத்து  மக்களும்  ஒரு முஸ்லீம் வேட்பாளரை மட்டும் ஆதரித்து முஸ்லீம் வேட்பாளரின் வெற்றியே பிரகாசிக்க செய்யுங்கள் .


ஒரு வேளை பிரதான அரசியல் கட்சிகள் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் .
அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் ஏகமனதோட ஒரு முஸ்லீம் வேட்பாளரை 
நிறுத்தி இவருடைய வெற்றிக்கு பாடுபடுங்கள் இனிவரும் காலங்களில்முஸ்லீம் 
அரசியல் கட்சிகள் ஓர் அணியில் நின்று  பக்குவமாக செயல்பட்டு சமுதாயத்தின் 
மானத்தை தலை நிமிரசெய்யுமாறு நமது ஆன்லைன் மூலம் அனைத்து இயக்கங்களுக்கும் கேட்டுகொள்கிறோம் 



ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன் .காம்














Friday, October 28, 2011

தமுமுக தலைவர்களுக்கு சிறைவாசம் ஏன்





கேள்வி: தமுமுக நிர்வாகிகளான ஹைதர் அலிஜவாஹிருல்லா ஆகியோருக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர்களின் மோசடி பற்றி மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தாமல் இருக்கிறீர்கள்?
அபூ சுல்தானா, புதுக்கோட்டை
பதில்: தமுமுகவினர் சுனாமி நிதியிலும் பித்ரா நிதியிலும் மோசடி செய்தார்கள் என்பது தெரிய வந்த போது நாம் அதை தாட்சண்யமில்லாமல் விமர்சனம் செய்தோம். ஆனால் இந்த விஷயத்தை நாம் விமர்சனம் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் உள்ளது.
கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமுமுக சார்பில் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியைக் கையாடல் செய்ததாக வழக்கு இருந்தால் நாம் கட்டாயம் விமர்சனம் செய்திருப்போம். ஆனால் இந்த வழக்கு அத்தகையது அல்ல. இது வேறுவிதமான வழக்காகும். தமுமுக திரட்டிய நிவாரண நிதிக்காக வெளிநாடுகளில் வாழும் இந்திய சகோதரர்களும் நிதி அனுப்பினார்கள். அது தான் வழக்கு. அதாவது வெளிநாட்டில் நிதி பெறுவதற்கு மத்திய அரசில் அனுமதி பெறவில்லை என்ற காரணத்துக்காகத் தான் இந்த வழக்கு. அதற்காகத் தான் இந்தத் தண்டனை.
நமது நாட்டுச் சட்டப்படி இது குற்றம் என்றாலும் இப்படி சட்டத்தை மீறிய அனைவரின் மீதும் இது போல் வழக்கு தொடரப்படவில்லை. சாய்பாபா ஆசிரமத்துக்கும் சங்கர மடத்துக்கும் இது போல் பன்மடங்கு நிதி வந்துள்ளது. அது பற்றி சிபிஐ வழக்கு பதிவு செய்யாது. அந்தக் குற்றம் தெரிந்தே செய்தவை. ஆனால் குறிப்பிட்ட பாதிப்புக்காக மக்கள் அவர்களாக அனுப்பும் போது அதை தமுமுகவினர் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் யாருக்கும் வளையாது என்றால் நாம் இந்தத் தீர்ப்பை குறை கூற மாட்டோம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்துக்கு மட்டும் தான் இது போன்ற வழக்குகள் பதியப்படுகின்றன எனும் போது தமுமுகவை இந்த விஷயத்தில் நாம் விமர்சிக்க மாட்டோம்.
அனைவருக்கும் சமநீதி வேண்டும். அநீதி இழைக்கப்பட்டாலும் அனைவருக்கும் அது போலவே செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்த சிபிஐ யை நாம் கண்டிக்கிறோம்.
உணர்வு 16:07

Thursday, October 27, 2011

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன்?


குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை விட்டு விடலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள நீங்கள், குரானில் வலியுறுத்தப்பட்ட ஒற்றுமைக்கு  (3:103 ) இடையூறாக உள்ள ஒரு சில நபிவழிகளை நடைமுறைபடுத்துவதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்குறீர்கள் என்று நம்மை பார்த்து கேட்கும் சகோதரர்களுக்கு மார்க்கம் சொல்லக் கூடிய ஒற்றுமை தான் என்ன? விளக்கவும்.

- அபு ரியீபா, துபாய்

பதில் : திருக்குர்ஆனில் நீங்கள் குறிப்பட்ட வசனத்திலோ வேறு வசனங்களிலோ ஒற்றுமை பற்றி வலியுறுத்தப்படவில்லை. 
நீங்கள் சுட்டிக் காட்டும் வசனம் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறது. இது குறித்து நம்முடைய தமிழாக்கம் விளக்க குறிப்பில் நாம் இதை தெளிவு படுத்தியுள்ளோம்.
ஒற்றுமை எனும் கயிறு
தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் (3:103) மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்...என்று திருக்குஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்திற்கு இவ்வசனத்தில் எள்ளளவும்  இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால் வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்க உரையான நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபி வழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
குர்ஆன் ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால், ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்" என்று இவர்கள் நேர்மாறன விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டுவிடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
ஒற்றுமை வாதம்தான் மனித குலத்தை நாசப்படுத்தும் நச்சுக் கிருமியாகும். அயோக்கியர்களையும் நல்லவர்களையும் சமநிலையில் நிறுத்தும் இந்த வாதம்தான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது.
அல்லாஹ்வை வணங்கு எனக் கூறினால் அதனால் ஒற்றுமை கெடாது. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது எனக் கூறினால் உடனே ஒற்றுமை கெடும். ஆனால் இஸ்லாம் ஒற்றுமைக்கு எதிரான இந்த நெகடிவ்-எதிர்மறை அடிப்படையில் தான் தனது ஏகத்துவக் கொள்கையை அமைத்துள்ளது. சிலை வணங்குபவனிடம் போய் இதை வணங்காதே எனக் கூறினாலும் தர்கா வணங்கியிடம் தர்காவை வணங்காதே எனக் கூறினாலும் மனிதனை வணங்குபவனிடம் இவனை வணங்காதே எனக் கூறினாலும் உடனே ஒற்றுமைக்குப் பங்கம் வந்து விடும். ஆனாலும் அதைத்தான் இஸ்லாம் மனித குலத்துக்கு போதிக்கிறது.
தீமையை தடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. நிச்சயம் இது ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கவே செய்யும்.
தீமைக்கு உதவாதீர்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதுவும் ஒற்றுமைக்கு உலை வைக்கவே செய்யும்.
சொந்த பந்தங்களை விட கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவும் குர்ஆன் கூறுகிறது, இதுவும் ஒற்றுமைக்கு எதிரானது தான்.
அனைவரும் சேர்ந்து குடிப்பதை விட அனைவரும் சேந்து ஒற்றுமையாக வரதட்சணை வாங்குவதை விட அனைவரும் சேர்ந்து அயோக்கியத்தனங்கள் செய்வதை விட அவர்களில் இருந்து நல்லவர்களைப் பிரித்து நல்லவர்களும் கெட்டவர்களும் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று பிரகடனப்படுத்தவே இஸ்லாம் வழங்கப்பட்டது.
தீமையை எதிர்க்கத் துணிவற்றவர்களும் வளைந்து கொடுப்பவர்களும் கண்டுபிடித்த பொய்யான தத்துவமே ஒற்றுமை வாதம்
ஒற்றுமை வாதம் என்னும் இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கிருமியை ஒழித்தால் தான் சமுதாயம் உருப்படும்

ஜமாஅத் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக ?


நீங்கள் பதவியில் இருக்கும் போதும்,  இல்லாத போதும்பொதுக்குழு கூடி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கும் போதுநடவடிக்கை எடுக்கப்பட்ட அனைவரும் தனிப்பட்ட உங்கள் மீது மட்டும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்களே ஏன்?
(இதைப் பற்றி ஒருவரிடம் நான் விவாதித்த போதுபீஜே வாதத் திறமை உள்ளவர், பீஜே எதைச் சொன்னாலும் சரி தவறு என்று பார்க்காமல்தலையாட்டி பொம்மைகள்  ஒரு கூட்டம் இருக்கிறது; அந்த பொம்மைகளின்  ரிமோட்டாக பீஜே இருப்பதால் அவரை  விமர்சனம் செய்கிறார்கள் என்று அவர் கூறினார்) இதற்கு உங்கள் பதில் என்ன?
ஆரிப் ராஜா மங்கலம்பேட்டைதுபாய்
பதில்:
விமர்சனம் செய்யும் ஒவ்வொருவரும் தமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விமர்சனம் செய்வார்கள்.  தமிழகத்தில் எத்தனை அமைப்புகள் இருந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற கட்டுக் கோப்பான அமைப்பு எதுவும் இல்லை. அதிகமான கிளைகளைக் கொண்டதும் அதிகமான செயல்பாடுகளைக் கொண்டதும் தவ்ஹீத் ஜமாஅத் தான்.

இந்த ஜமாஅத்தைப் பொருத்த வரை இதன் கொள்கை கோட்பாடுகளில் அதிருப்தி கொண்டு இதுவரை யாரும் வெளியேறியதில்லை. துர்நடத்தை காரணமாக நீக்கப்பட்ட சிலர் பின்னர் தமது செயல்பாடுகளுக்கு கொள்கைச் சாயம் பூசினாலும் அது உண்மையல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஹாமித் பக்ரியோ
, பாக்கரோ, சைபுல்லாவோ நீக்கப்பட்ட முன்னாள் மாநில நிர்வாகிகளோ தாங்களாக இதில் இருந்து வெளியேறவில்லை. அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கா விட்டால் அவர்கள் இந்த இயக்கத்தில் தான் இருந்திருப்பார்கள்.

வேறு கொள்கையில் இருந்தவர்கள் தமது தவறான கொள்கையில் இருந்து விலகி தவ்ஹீத் ஜமாஅத்தில் தம்மை இணைத்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் கொள்கையைக் காரணம் காட்டி இந்த ஜமாஅத்தில் இருந்து ஒருவரும் விலகியதில்லை. இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பது தான் நம்மை விமர்சனம் செய்பவர்களின் ஒரே நோக்கம். இதற்கு இவர்கள் கண்டு பிடித்த ஒரே வழிதான் என்னைத் தாக்குவது.

ஒரு தனி மனிதனைத் தாக்கி அவனது பெயரைக் கெடுத்து விட்டால் அவனுடன் இருந்தவர்கள் விலகி விடுவார்கள்
; அந்த இயக்கம் பலவீனப்படும் என்று இவர்கள் கருதுகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பலவீனப்படுத்த இவர்கள் எடுத்துக் கொண்ட இந்த வழிமுறை மற்ற இயக்கங்களுக்குச் சரிப்பட்டு வரலாம். தவ்ஹீத் ஜமாஅத்துக்கு சரிப்பட்டு வராது. எனெனில் இந்த ஜமாஅத்தில் இருப்பவர்கள் இதன் கொள்கைக்காகத் தான் இதில் இருக்கிறார்கள். தனி நபருக்காக இல்லை.

மனிதன் என்ற முறையில் என்னிடம் தவறுகள் இருந்தால் அது ஜமாஅத்தைப் பாதிக்கும் வகையிலான தவறு என்றால் என்னை நீக்கி விட்டு அவர்கள் தமது பணியைத் தொடர்வார்கள். ஜமாஅத்தைப் பாதிக்காத தவறு என்றால் சகோதரத்துவத்துடன் சுட்டிக்காட்டி விட்டு ஜமாஅத்தில் நீடிப்பார்கள். இதற்கேற்றவாறு இந்த ஜமாஅத் தனது அடித்தளத்தை அமைத்துள்ளது. எனவே இவர்களின் விமர்சனத்தால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.

இந்த ஜமாஅத்தைப் பலவீனப்படுத்த நினைத்தால் அதற்கு ஒரு வழி உண்டு. அந்த வழியை அவர்களால் தேர்வு செய்ய முடியாது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை விட எல்லா வகையிலும் தங்கள் இயக்கத்தை மேம்படுத்திக் கொள்வது தான் அந்த ஒரே வழி. ஒழுக்கம் நாணயம் சுயநலமில்லா அர்ப்பணிப்பு தடம் புரளாத கொள்கை உறுதி ஆகியவற்றில் தவ்ஹீத் ஜமாஅத்தை இவர்கள் மிஞ்சினால் நானே தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விலகி அதை விட சிறந்த இயக்கத்தில் சேரத் தயங்க மாட்டேன்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகலாம் என்பதில் தான் இவர்கள் போட்டி போடுகிறார்கள். என்னுடைய வாதத் திறமை மூலம் எதையும் இந்த ஜமாஅத்தில் திணிக்க முடியாது. பாக்கர் நீக்கப்பட்ட போது நடந்த சேலம் செயற்குழுவில் பாக்கருக்கு நான் அதிக சலுகை காட்டியதாக குற்றச்சாட்டைத் தான் சந்தித்தேன். நான் நினைத்ததை எல்லாம் இந்த ஜமாஅத்தில் செயல்படுத்த முடியாது என்பதே உண்மை.

உணர்வு 16:03

விமர்சனங்களும்! சோதனைகளும்!!





இறைத்தூதர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது சொல்லெனாத் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாக்கப் பட்டனர். திருக்குர்ஆனில் அந்த இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் புரட்டும் போது அவர்களைப் பல்வேறு விதமான சோதனைகள் சூழ்ந்து கொண்டிருந்ததை நாம் காண முடிகின்றது. அந்தச் சோதனைகள் நபிமார்களை மட்டுமல்லாது அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கையாளர் களையும் சூழ்ந்து கொண்டிருந்தன. அந்தச் சோதனைகளில் மிக முக்கியமானது எதிரிகள் செய்யும் விமர்சனங்களாகும்.

விமர்சனங்களைப் பற்றி இங்கே நாம் குறிப்பிடும் போது, விமர்சனங்கள் எப்படிச் சோதனைகளாகும்? இவையெல்லாம் சோதனை என்ற வட்டத்திற்குள் வருமா? என்ற சந்தேகம் கூட எழலாம்.  இந்தக் கேள்விக்கு அல்லாஹ்வின் வசனத்திலிருந்தே விடையைக் காணலாம்.
”இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே! அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன். (அல்குர்ஆன் 11:12)
அல்லாஹ் அருளிய செய்தியை மக்களிடம் சொல்லாமல் விட்டு விடுவது ஒரு இறைத்தூதரைப் பொறுத்த மட்டில் சாதாரண குற்றமல்ல!  ஆனால் அத்தகைய பெரும் பாவத்தைச் செய்யத் தூண்டுமளவுக்கு அம்மக்களின் விமர்சனங்கள் அமைந்திருந்தன என்பதை இவ்வசனம் உணர்த்துகின்றது.  

”அவர்கள் கூறுவதால்” என்ற வாசகம் மக்களின் விமர்சனத்தையே இங்கு குறிப்பிடுகின்றது.  நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை விமர்சனங்கள் எந்த அளவுக்குப் பாதித்திருந்தன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
எனவே விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வதும் பிரச்சாரப் பணியின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது.  அந்த அடிப்படையில் இறைத் தூதர்களுக்கு முன்னோடியாகத் திகழும் நூஹ் (அலை) அவர்களை நோக்கி வந்த விமர்சனங்களை இப்போது பார்ப்போம்.
”இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம்  கொடுங்கள்!” (என்றனர்) (அல்குர்ஆன் 23:25)
நூஹ் (அலை) அவர்களை அம்மக்கள் பைத்தியக்காரர் என்று கூறியதை இவ்வசனம் கூறுகின்றது. இத்துடன் நின்று விடவில்லை. அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதாகவும் கூறினார்கள்.
இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக இல்லை (என்றனர்) (அல்குர்ஆன் 23:28)
அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் ”இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை” என்றனர். (அல்குர்ஆன் 23:28) 
மக்களிடத்தில் சிறப்பு அந்தஸ்து, தகுதிகளைப் பெறுவதற்காக நபித்துவம் என்ற நடிப்புப் பாத்திரத்தை ஏற்றிருக்கின்றார் என்ற அவதூறைச் சுமத்தினார்கள்.
”இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்” என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன் 23:33)
இந்த இடத்தில் நீங்கள் உண்ணும் உணவை விட மட்டரகமான உணவையே இவர் உண்ணுகின்றார் என்றும் பொருள் கூறலாம்.  அதாவது இந்தப் பணக்காரப் பிரமுகர்கள் நூஹ் (அலை) அவர்களின் உணவையும் மட்டம் தட்டி, தங்கள் மனக்குமுறலைத் தீர்த்துக் கொண்டனர்.
இப்படிப் பட்ட விமர்சனங்கள் ஓர் இறைத்தூதரை நோக்கி வரும் போது அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள். தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் தொடர் பிரச்சாரம் செய்கின்றனர். எதிரிகளும் இவர்களை நோக்கி விஷமத்தனமாக விமர்சனப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இத்தனை விமர்சனங்களுக்கும், விஷமப் பிரச்சாரங்களுக்கும் இடையில் ஒரு கூட்டம் நூஹ் (அலை) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை ஏற்று இறை நம்பிக்கை கொள்கின்றது. அந்தக் கூட்டம் ஏழைகள்! இதை அடிப்படையாகக் கொண்டும் அந்தச் சமுதாயப் பிரமுகர்கள் பரிகசிக்கவும், பழிக்கவும் தவறவில்லை.
‘எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன் 11:27)
”என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று (நூஹ்) கேட்டார்.
”என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூ­ அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்”
”என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க மாட்டீர்களா?”
”என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங் களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்” (எனவும் கூறினார்) (அல்குர்ஆன் 11:28,31)

நூஹ் (அலை) அவர்களின் இந்தப் பொறுமையான, அதே நேரத்தில் ஆணித்தரமான பதிலுக்குப் பிறகும் அவர்கள் திருந்தவில்லை.
இது போன்ற விமர்சனங்களைச் செய்வோரிடம், நாம் தக்க ஆதாரங்களுடன் வாதங்களை எடுத்து வைத்தால் அதை அவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை. சத்தியவாதிகள் எடுத்து வைக்கும் வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல், எதற்கெடுத்தாலும் விவாதம் தானா? என்று கேட்பதைப் பார்க்கிறோம். இந்த நிலையை நூஹ் (அலை) அவர்களும் சந்தித்தனர்.

”நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 11:28,31) 
இதற்குப் பிறகும் நூஹ் (அலை) அவர்களால் பொறுக்க முடியவில்லை.  ஆம்! அந்த எதிரிகள் விமர்சித்தது போல் அவர் ஒன்றும் மலக்கல்ல! மனிதர் தான்! எனவே இறைவனிடம் கையேந்துகின்றார்கள். அதுவும் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான்.

”நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!” என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 54:10) 
இந்தப் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் நூஹ் நபியைக் ஒரு கப்பல் கட்டுமாறு கட்டளையிடுகின்றான்.

(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப் படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன் 11:36,37) 
கப்பல் கட்டும் பணியின் போதும் எதிரணியினர் நூஹ் நபியைக் கிண்டல் செய்யத் தவறவில்லை. அழியப் போகும் அந்தக் கூட்டத்தை நோக்கி நூஹ் (அலை) தெரிவித்த அடக்கமான பதிலைப் பாருங்கள்.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கே­லி செய்தனர். ”நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கே­லி செய்தது போல் உங்களை நாங்களும் கே­லி செய்வோம். இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்!” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 11:38,39) 
இதன் பிறகு அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடைந்தது.  இதை அல்லாஹ் கமர் என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.

அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம்.  பூமியில் ஊற்றுக்களைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்ட படி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப் பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி (அல்குர்ஆன் 54:11,14) 
இது தான் அகில உலகத்தின் ஆரம்ப இறைத்தூதர் சந்தித்த சோதனை மற்றும் சோகப் படலமும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட பொறுமையும் ஆகும்.  நூஹ் (அலை) அவர்கள் மீது எறியப்பட்ட இந்த விஷம் தோய்ந்த அம்புகளை என்னவென்று கூறுவது? இவை எல்லாமே அவர்களது உள்ளத்தைக் கீறிக் காயப்படுத்திய, கூரிய சொல்லம்புகள் தான்.

விஷம் தோய்ந்த இந்த விமர்சன அம்புகள் வார்த்தை வடிவத்திலும் வரலாம். முகவரியுடனோ அல்லது மொட்டையாகவோ எழுத்து வடிவத்திலும் வரலாம்.  ஆனால் இவை எல்லாமே சொல்லம்புகள் தான்.  முதல் முன்னோடி நூஹ் (அலை) அவர்களி­ருந்து இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரை அந்த வேதனைப் படலம் தொடர்ந்திருக்கின்றது. இந்த விமர்சனங்களைத் தாங்கி, பிரச்சாரப் பணியைத் தொடரும் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குத் தந்தருள்வானாக!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons