, கேள்வி: தமுமுக நிர்வாகிகளான ஹைதர் அலிஜவாஹிருல்லா ஆகியோருக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர்களின் மோசடி பற்றி மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தாமல் இருக்கிறீர்கள்?
அபூ சுல்தானா, புதுக்கோட்டை
பதில்: தமுமுகவினர் சுனாமி நிதியிலும் பித்ரா நிதியிலும் மோசடி செய்தார்கள் என்பது தெரிய வந்த போது நாம் அதை தாட்சண்யமில்லாமல் விமர்சனம் செய்தோம். ஆனால் இந்த விஷயத்தை நாம் விமர்சனம் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் உள்ளது.
கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமுமுக சார்பில் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியைக் கையாடல் செய்ததாக வழக்கு இருந்தால் நாம் கட்டாயம் விமர்சனம் செய்திருப்போம். ஆனால் இந்த வழக்கு அத்தகையது அல்ல. இது வேறுவிதமான வழக்காகும். தமுமுக திரட்டிய நிவாரண நிதிக்காக வெளிநாடுகளில் வாழும் இந்திய சகோதரர்களும் நிதி அனுப்பினார்கள். அது தான் வழக்கு. அதாவது வெளிநாட்டில் நிதி பெறுவதற்கு மத்திய அரசில் அனுமதி பெறவில்லை என்ற காரணத்துக்காகத் தான் இந்த வழக்கு. அதற்காகத் தான் இந்தத் தண்டனை.
நமது நாட்டுச் சட்டப்படி இது குற்றம் என்றாலும் இப்படி சட்டத்தை மீறிய அனைவரின் மீதும் இது போல் வழக்கு தொடரப்படவில்லை. சாய்பாபா ஆசிரமத்துக்கும் சங்கர மடத்துக்கும் இது போல் பன்மடங்கு நிதி வந்துள்ளது. அது பற்றி சிபிஐ வழக்கு பதிவு செய்யாது. அந்தக் குற்றம் தெரிந்தே செய்தவை. ஆனால் குறிப்பிட்ட பாதிப்புக்காக மக்கள் அவர்களாக அனுப்பும் போது அதை தமுமுகவினர் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் யாருக்கும் வளையாது என்றால் நாம் இந்தத் தீர்ப்பை குறை கூற மாட்டோம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்துக்கு மட்டும் தான் இது போன்ற வழக்குகள் பதியப்படுகின்றன எனும் போது தமுமுகவை இந்த விஷயத்தில் நாம் விமர்சிக்க மாட்டோம்.
அனைவருக்கும் சமநீதி வேண்டும். அநீதி இழைக்கப்பட்டாலும் அனைவருக்கும் அது போலவே செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்த சிபிஐ யை நாம் கண்டிக்கிறோம்.உணர்வு 16:07
0 comments:
Post a Comment