Thursday, April 21, 2011

கற்பை விற்றுப் பிழைக்கலாம்..ஈமான் விற்றவர்களின் எஸ்.எம்.எஸ்


தேர்தலுக்கு முன்தினம் மமக போட்டியிடும் சேப்பாக்கம்திருவல்லிக்கேணிஇராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதியில் சிலவிசமிகளால் பரவலாக ஒரு குறுந்தகவல் அனுப்பப்பட்டதுஅதாவதுமமக போட்டியிடும் தொகுதிகளில் ததஜ வாக்காளர்களுக்கு 1000ரூபாய் கொடுத்து மமகவுக்கு வாக்களிக்காதே என பிரச்சாரம்செய்கிறதுஇந்த பிழைப்புக்கு அவர்கள் கற்பை விற்றுப்பிழைக்கலாம்” என்ற குறுஞ்செய்தி அனைவரது மொபைல்போன்களிலும் இடம்பிடித்ததுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப்பொருத்தவரை சமுதாய நலன் கருதி மட்டுமே ஒருவரை ஆதரிப்பதுஎன்ற நிலைப்பாட்டை காலம் காலமாய் கடைப்பிடிக்கிறதுதமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் யாரை ஆதரித்தாலும் அவர்கள் முந்தையகாலங்களில் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களை மறைப்பதும்இல்லை. குறைப்பதும் இல்லைஅவர்கள் செய்த துரோகங்களைஅவர்களிடமே சுட்டிக் காட்டுவது தான் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தின் தனிச் சிறப்புஅதற்கு மிகச் சிறந்த உதாரணம்,சேப்பாக்கத்தில் வேட்பாளர் ஜெ.அன்பழகனை வைத்துக் கொண்டுதிமுக முன்னாள் அமைச்சர் .ராசா செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலைச்சுட்டிக் காட்டியது தான்.

அது மட்டுமின்றி யாரையாவது எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டையும்சமுதாய நலன் கருதி மட்டுமே எடுக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்அவர்களுடன் கூடிய சொந்தப் பகையை கருதாமல்அவர்களால் ஏற்படும் சமுதாய துரோகங்களின் அடிப்படையில்மட்டுமே முடிவெடுக்கப்படுகிறதுஅந்த வகையில் தான் சென்றதேர்தலில் மமகவினர் இஸ்லாமிய சமூகத்திற்குச் செய்ததுரோகங்களைச் சொல்லி சொல்லி வாக்குக் கேட்டது தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத்அதுவே போதுமான பிரச்சாரம் ஆகும்.அதைவிடுத்து வாக்களார்களுக்கு காசு கொடுத்து ஓட்டுக் கேட்டால்,மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தும் மற்றவர்களைப் போல பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற தரங்கெட்ட அமைப்பு தான் எனமக்கள் முத்திரை குத்தி விடுவார்கள்இதற்கு பயந்து கூட இந்தவேலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றைக்குமே செய்யாது.செய்யவும் இல்லை.
ஆனால் ஒரு காலத்தில் கருணாநிதி தான் நம் சமுதாயக் காவலர்அவர் தான் நமக்கு இடஒதுக்கீடு தந்தார் எனவும்ஜெயலலிதாமோடியின் தோழிபாஜகவின் ஊதுகுழல் என்றும் சொன்னவர்கள்சர்க்கஸில் போடும் அந்தர் பல்டியைப் போல அப்படியே மாறி அம்மாஅம்மா என பெற்ற தாயை அழைப்பது போல அழைத்துக் கொண்டும்எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள்பொது மேடைகளிலும்,நோட்டீஸ்களிலும் ஜெயலலிதா என்று சொல்லக் கூடதிராணியற்றவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி பேச பரப்பஎன்ன தகுதி இருக்கிறது?
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடுகுறித்து எதுவும் சொல்லவில்லை என செய்தி பரவிய உடன் பலநடுநிலையாளர்கள் மமக வேட்பாளர்களுக்கு போன் செய்து நீங்கள்கூட்டணியை விட்டு வெளியேறிவிடுங்கள் என அழைப்புவிட்டபோதும் கூட அதையெல்லாம் நாங்கள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டோம்சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கிடைத்தால்என்ன கிடைக்கா விட்டால் என்னஎங்களுக்கு இடஒதுக்கீட்டைஅம்மா தந்து விட்டார்அம்மாஅம்மாஅம்மாஎன அடம்பிடிக்கும்பிள்ளைகள் போல அல்லாஹ்வை மறந்து அம்மாவுக்கு பாராட்டுபாமாலை பாடிய இவர்களும்பாலியல் மற்றும் பொருளாதாரகுற்றச்சாட்டு காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்துவெளியேற்றப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்துகொண்டுதமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத்தினர் பணம் கொடுத்ததாக பரப்பியகுறுந்தகவல்களை அவர்களின் தொண்டர்களே நம்பவில்லை என்பதுதான் உண்மை.
சீட்டுக் கலாச்சாரத்தை மீட்டெடுக்க புறப்பட்டு கடைசியில் அரைசீட்டுக்கு ஒப்புக் கொண்டு சமுதாய மானத்தை விற்றவர்கள்,எக்காரணம் கொண்டும் எங்களின் சொந்தப் பணத்தை தேர்தலுக்குசெலவு செய்ய மாட்டோம் என மக்களின் காசுகளை வசூல் செய்துஅந்தக் காசை வைத்து ஏசி கார்களில் பவனி வந்துஏசிஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கிதன் தொண்டர்கள் தங்கள் மீதுவைத்திருக்கும் நம்பிக்கையை விற்றவர்கள்அம்மா இடஒதுக்கீட்டை அறிவிக்காத போதும் கூட அதிமுக கூட்டணியில் தான்நீடிப்போம் எனக் கூறி சமுதாய முன்னேற்றத்தை விற்றவர்கள்பதவிசுகத்திற்காக மட்டுமே சமுதாய நலனை விற்றவர்கள்தன்தலைவியின் முன்னால் இன்ஷா அல்லாஹ் சொல்ல மனம் வராமல்அதை மென்று முழுங்கி ஈமானை விற்றவர்கள் சொல்கிறார்களாம்கற்பை விற்றுப் பிழைக்கலாம் என்றுமக்களுக்கே தெரியும் கற்பைவிற்றுப் பிழைப்பதை விட கேவலமான செயல்படுபவர்கள் யார்என்று?
நன்றி: உணர்வு வார இதழ்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons