Friday, April 8, 2011

நாங்க ரெடி! நீங்க ரெடியா? ஒரு சமுதாய சவால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இஸ்லாமிய வேட்பாளார்களை ஆதரிக்காமல் அவர்களுக்கு மாற்றாக போட்டியிடும் மாற்றுமத வேட்பாளர்களை ஆதரிக்கிறார்கள். இவர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட மாட்டார்கள் பாருங்கள்! நாங்களெல்லாம் எப்படி முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு தருகிறோம் என தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டுமே சுற்றி சுற்றி பழிக்கும் இயக்கங்களும் அவர்கள் சார்ந்த மக்களும் ஒவ்வொரு தேர்தலுக்கும் விடுக்கும் அறிக்கைதான் இது.

அது போலத்தான் இந்தத் தேர்தலிலும் பரவலாக இது போன்றதொரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவிர மற்ற இயக்கங்கள் ஒற்றுமையுடன் ஒரணியில் திரண்டு தங்கள் பலத்தை நிரூபித்து எல்லாரும் ஒரே இயக்கத்திற்கு அல்லது முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவது போலவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும்தான் முஸ்லிம் வேட்பாளர்களை புறக்கணிப்பதாகவும் மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்தை இந்த விசமிகள் பரப்பி வருகிறார்கள்.

ஆனால் இih சொல்பவர்கள் இந்த கருத்திலே அவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? என்றால் சுத்தமாக இல்லை. காரணம் முஸ்லிம் வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என முழங்கும் தலைவர்கள் வேறு ஏதாவது ஒரு முஸ்லிம் வேட்பாளரைத்தான் எதிர்த்து நிற்கிறார்கள்.

ஊதாரணமாக நம் சமுதாய மானம் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு பெற்று கேவலப்பட்டு நிற்பதை அறிந்து கொதித்தெழுந்த மமகட்சியினர் இப்போது ஒரு சீட்டை விட குறைவான சதவிகிதத்தில் சீட்டுகள் வாங்கி கேவலப்பட்டு நிற்கிறார்கள்.

நேற்றைக்கு கருனாநிதிதான் நம் சமுதாயத்தின் பாதுகாவலர் என பல்லைகாட்டி அவருக்கு நன்றி அறிவிப்ப மாநாடு நடத்தி,அதற்கு அவர்களின் அப்பாவித் தொண்டர்கள் தங்கள் சொந்தக் காசகளில் ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து வந்த கூத்துக்கள் எல்லாம் நடந்தன.

ஆனால் கலைஞர் இழைத்த சமுதாய துரோகத்தின் காரணமாக, அதாவது அவர்களில் இரண்டு பேர் போட்டியிட வேண்டும் என தூர நோக்கு சிந்தனையோடு கலைஞர் தந்த ஒரு தொகுதியை மறுத்தது அவர்களின் கழகம்.

ஆனால் புத்திசாலியான ஜெயலலிதாவிடம் ஒரு நாடாளுமன்ற விகிதத்தில் ஒரு தொகுதி அளவு கூட பெற முடியாமல் இன்றைக்கு அரை சதவிகித அளவிற்கு மூன்று சீட்டுக்களைப் பெற்று கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு கருனாநிதியை வசைபாடுகிறது இந்தக் கழகம். ஆக அவர்களுக்கு அதிலே இருக்கும் ஒருவர் எப்படியாவது வெற்றியடைந்து விட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதனால்தான் ஜெயலலிதா சமுதாயத்திற்கு செய்த கடுமையான துரோகங்களை எல்லாம் மறந்து விட்டு இன்றைக்கு புரட்சித்தலைவி அன்புச் சகோதரி ஜெயலலிதா என வாய் கூசாமல் லாவனி பாடுகிறார் பேராசிரியர்.

பாபர் மசூதியின் இடம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல என தீர்ப்பு வெளியானதும், சமுதாய நலனையெல்லாம் தூக்கி குப்பையில் வீசிவிட்டு தன் அன்புச் சகோதரி மட்டும் மகிழ்சியடைந்து தனக்கு ஒரு சீட்டு மட்டும் தந்தால் கூட போதும் என்று கருதிதான் பாபார் மசூதி தீர்ப்பு அற்புதமான தீர்ப்பு என்றும், அதை மனமாற ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார் இந்த பேராசிரியர்.

ஆக சமுதாய நலன் கொஞ்சமும் இல்லாமல் இவர்களின் சுயநலத்திற்காக எப்படியாவது ஏதாவது ஒரு பதவியை அடைந்துவிட மாட்டோமா என்ற லட்சியத்தில் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெளியிலே சொல்லிக் கொள்வது நம் சமுதாயத்திற்கு ஆதரவு தாருங்கள் என்று.

யார் வேண்டுமானாலும் எல்லாப் பகையையும் மறந்து ஆதரிப்பர்கள். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் எப்போதுமே சமுதாய வேட்பாளர்களுக்கு எதிராகத்தான் செயல்படும் என இந்த மமகவினர் பரப்புவார்கள். பரப்பி வருகிறார்கள்.

தமுமுகவின் இந்த கோரிக்கை நியாயமான கோரிக்கை என்பதை பரிசீலித்து சமுதாய வேட்பாளர்களை ஆதரிப்பதும் ஒரு நல்ல திட்டம் தானே என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் இம்முறை தேர்தலில் போட்டியிடும் மமக உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களையும் ஆதரிக்கலாம் என்ற முடிவை இரண்டொரு நாட்களில் அறிவிக்க இருக்கிறது.

ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான். அது என்னவென்றால் சமுதாய வேட்பாளர்களை ஆதரிக்காமல் துரோகம் செய்கிறார்கள் என முழங்கும் தமுமுகவினரும் எங்களோடு இணைந்து கீழ்க்கண்ட தொகுதிகளில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க களமிறங்க வேண்டும்.

அத்தோடு அவர்கள் போட்டியிடும் கூட்டணி மட்டுமல்லாது திமுக கூட்டணியுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள்,எஸ்டிபிஐ நிறுத்தியுள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் மற்றும் இதர கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிப்போம் எனவும், அது தவிர மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணியை மமக ஆதரிக்கும் எனவும் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டால் அடுத்த விநாடியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக, திமுக, மமக, எஸ்டிபிஐ மற்றும் இதர கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்கும் என்ற அறிக்கை பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அனைத்து தொலைகாட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அத்தோடு அதிமுக திமுக முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் மமக, எஸ்டிபிஐ வேட்பாளர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் சளைக்காமல பாடுபட்டு அவர்களை வெற்றிப்பெறச் செய்வார்கள்.

ஆனால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நீங்க மட்டும் ஆதரிப்பது தான் சமுதாயத்துக்கு செய்யும் நன்மை என மமகவினர் சொல்வது அவர்களை புத்திசாலிகளாக நினைத்து மக்களை முட்டாளாக்கும் செயலாகும். ஆக முடிவு மமகவின் கையில் மட்டுமே உள்ளது. மமகவினர் எங்களுக்கு நேரமே இல்லை. தேர்தல் வேலை இருக்கிறது என்று சொல்வார்கள்.

எனவே அவர்களின் வேலையை சுலபப்படுத்த வேண்டி நாமே அவர்களை ஆதரித்து வெளியிட வேண்டிய அறிக்கைக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் தொகுதிகளையும் இங்கே பட்டியலிடுகிறோம்.

ஆவடி  : அப்துல் ரகீம் (அதிமுக)

ராணிப்பேட்டை : அ. முகமத் (அதிமுக)

திருச்சி மேற்கு : என். மரியம் பிச்சை (அதிமுக)

ஆயிரம் விளக்கு : அசன் முஹம்மது ஜின்னா (திமுக)

தஞ்சாவூர்     : உபயதுல்லா (திமுக)

மதுரை மத்தி  : கவஸ் பாஷா (திமுக)

பாளையங்கோட்டை: மைதீன்கான் (திமுக)

கிருஷ்னகிரி    : சையது ஜியாவுல் ஹக் (காங்கிரஸ்)

துறைமுகம் : அல்தாப் ஹூசைன் (முஸ்லீம் லீக்)

வானியம்பாடி   : எச். அப்துல் பாசித் (முஸ்லிம் லீக்)

நாகப்பட்டினம்: எம். முஹம்மது சேக் தாவூது (முஸ்லீம் லீக்)

கடையநல்லூர்: நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ)

தொண்டமுத்தூர் : உமர் (எஸ்டிபிஐ)

பூம்புகார்      : முஹம்;மது தாhரிக் (எஸ்டிபிஐ)

நிரவி திருப்பட்டினம்: பத்ருதீன் (எஸ்டிபிஐ)

ஆம்பூர் : அஸ்லம் பாட்சா (மமக)

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி: தமிமுல் அன்சாரி (மமக)

இராமநாதபுரம்: ஜவாஹிருல்லாஹ் (மமக) அசன்அலி (காங்கிரஸ்) குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

திருவாடானை: முஜ்பூர் ரஹ்மான் (தேமுதிக)

உளுந்துர்பேட்டை: முகமது யூசுப் (விடுதலை சிறுத்தை)

மேற்கண்ட தொகுதிகளில் இஸ்லாமியர்கள் போட்டியிடுகின்றார்கள். ஆனால் மமகவினர் மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் எங்களை மூன்று தொகுதிகளில் ஆதரிக்காமல் துரோகம் செய்கின்றனர் என மக்கள் மத்தியில் செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் தங்களை சமுதாயக் காவலர்களாக சொல்லிக் கொள்ளும் கழகக் கண்மணிகள் கீழ்கண்ட தொகுதிகளில் யாரை ஆதரிக்கிறார்கள் என்ற பட்டியலை பாருங்கள்:

தொகுதிகள் வேட்பாளர்கள்                                        மமகஆதரிப்பது

  • ஆயிரம் விளக்கு அசன் முஹம்மது ஜின்னா    வளர்மதி(அதிமுக)


  • தஞ்சாவூர்     உபயதுல்லா   ஹ்       எம்.ரெங்கசாமி (அதிமுக)


  • மதுரைமத்தி   கவுஸ்பாஷா         ஆர். சுந்தர்ராஜன்(அதிமுக


  • பாளையங்கோட்டை மைதீன் கான்     வி.பழனி (மா. கம்யு)


  • துறைமுகம் அல்தாப் ஹூசைன்    பழ. கருப்பையா (அதிமுக)


  • வாணியம்பாடி  அப்துல் பாசித்    கோ.வி.சம்பத்குமார்(அதிமுக)


  • நாகப்பட்டினம்  ஷேக் தாவூது     கே.ஏ. ஜெயபால் (அதிமுக)


  • கடையநல்லூர் நெல்லைமுபாரக்    செந்தூர்பாண்டியன்(அதிமுக)


  • தொண்டாமுத்தூர் உமர்            எஸ்.பி.வேலுமணி (அதிமுக)


  • பூம்புகார்   முஹம்மது தாரிக்     எஸ்.மலைராஜ் (அதிமுக)


  • நிரவிதிருப்பட்டினம் பத்ருதீன் எம்.செல்வராஜ் (அதிமுக)


  • உளுந்தூர்பேட்டை முகம்மது யூசுப் ரா.     குமரகுரு (அதிமுக)


ஆக சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட அன்புச் சகோதரர்களே!

இதோ முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரிக்க இஸ்லாமிய சமூகத்தின் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகி விட்டது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இஸ்லாமிய சமூக காவலர்களை உமனடியாக தொடர்பு கொண்டு மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களையும் நம் சமுதாய நலன் கருதி அந்த தொகுதிகளில் மட்டும் ஆதரிக்கச் சொல்லுங்கள். அடுத்த விநாடியே அவர்களை ஆதரிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் தயார்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons