Thursday, April 28, 2011

டிஎன்டிஜே பெயரைச் சொல்லி வசூல்!! மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்!!!


ஜாக் இயக்கத்தினர் தங்களின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி தாங்களே நற்சான்று அளிக்கும் வகையில் அடிக்கடி எழுதி வருகின்றனர்.
'நம்முடைய பேச்சுஉயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சுஅது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம்தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத்மே-2006 பக்கம் 20

தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத்மே 2006, பக்கம் 48
நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50
ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி
சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51

மேற்கண்ட வசனங்களையெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிய ஜாக் அமைப்பினர் மேலப்பாளையத்தில் பசுலுல் இலாஹியை வேட்பாளராக அறிவிக்க கோரி ஆர்பாட்டம் நடத்தியதெல்லாம் பழைய கதை. ஆனால் இப்போது அதையெல்லாம் மிஞ்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ன நிலைபாடு எடுக்கிறதோ அதற்கு எதிர்ப்பதமாக முடிவெடுப்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளது ஜாக்.
அந்த வகையில் இம்முறை இலங்கையில் இஸ்லாமிய மக்களைக் கொத்துக்கொத்தாக கொன்று குவித்து இனஅழிப்பு செய்த விடுதலைப்புலிகளின் தமிழக பிரதிநிதி சீமான் அதிமுகவை ஆதரித்ததால் நம் சமுதாய நலனுக்காக வேண்டி அதிமுகவை எதிர்த்து வாக்களிப்பது என்ற முடிவை தேர்தல் அறிவித்த நாட்களில் ஜாக் எடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் என்றைக்கு ததஜ தன் திமுக ஆதரவு நிலையை அறிவித்ததோ, அடுத்த நிமிடமே தன் ஆதரவு ஜவாஹிருல்லாவுக்கு என மாற்றிக்கொண்டது ஜாக். என்னங்க! இது விடுதலைப்புலிகளின் துரோகத்துக்கு நாம் மாற்றி வாக்களிக்க வேண்டும் என்று சொன்னீர்கள் ஆனால் இன்றைக்கு கேவலம் ஓட்டுக்காக சமுதாய துரோகங்களை மறந்து விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஜவாஹிருல்லாஹ்வை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என சில சகோதரர்கள் ஜாக்கின் தலைமையில் கேட்டபோது, அவர் சொன்ன பதில் பிஜே திமுகவை ஆதரிக்கிறார்ல, அதனால நாம மாத்தி தான் ஆதரிக்கனும் என்று தங்களின் கீழ்த்தரமான நிலைபாட்டை அறிவித்தது ஜாக் தலைமை.

அதெல்லாம் மிஞ்சி இப்போது வெளியாகி இருக்கும் தகவல் தான் ஜாக்கின் போலி முகமூடியை கிழிக்கும் ஒரு கேவலமான விசயமாகும். அதாவது தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி இராமநாதபுரம் ததஜவின் மாவட்டத்தலைவரை போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். என்ன விசயம் என இவர் கேட்க, நீங்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு கேட்ட பணம் இப்போது ரெடியாக இருக்கிறது. அதை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள் என கேட்டிருக்கிறார் ராமவன்னி. இந்தச் செய்தியால் அதிர்ந்த ததஜ மாவட்டத்தலைவர், நாங்கள் அப்படி எதுவும் கேட்கவில்லையே! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று சொன்னார்களா அல்லது வேறு ஏதும் பெயர் சொன்னார்களா எனக் கேட்க, உடனடியாக வேட்பாளர் அசன் அலியைத் தொடர்பு கொண்ட ராமவன்னி அவரிடம் விவரம் கேட்க அவரும் காசு கேட்டது தவ்ஹீத் ஜமாஅத் தான் என அடித்துச் சொல்ல, மறுபடியும் தொடர்பு கொண்ட ராமவன்னி, நீங்கள் தான் காசு கேட்டீர்கள் என உறுதியாய் சொல்லியிருக்கிறார். எங்கிருந்து போன் வந்ததது என சொல்லுங்கள் என கேட்க, அது பாம்பன் கிளை என உறுதி செய்யப்பட்டது. உடனடியாக பாம்பன் கிளையைத் தொடர்பு கொண்டு கேட்க அவர்களும் இதை மறுத்தனர். கடைசியாக விசயம் வேறுபாதையில் பயணிப்பதை உணர்ந்த ததஜ நிர்வாகிகள் உசார் ஆகி வலைவிரிக்க, கடைசியில் வலையில் வசமாக சிக்கியது ஜாக் வகையறாக்கள்.
அதாவது அசன் அலியை கடுமையாக எதிர்த்து வேலை பார்ப்போம் என கங்கனம் கட்டி அவர்களின் பள்ளிவாசலில் தமுமுகவை ஆதரித்து படு பயங்கரமாகப் பிரச்சாரம் செய்த ஜாக்கின் யோக்கியசீலர்கள், அசன்அலியிடம் பணம் கறக்க பள்ளிவாசல் கட்டப்போகிறோம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் வசூல் செய்யச்சொன்னது என்ற பச்சை பொய்யையும் சொல்லி அவரிடம் காசு கறக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் சரியாக விசாரிக்கப் போக வசமாக மாட்டிக்கொண்டது ஜாக்.
அவர்களுக்குத் தான் ஏற்கனவே பள்ளிவாசல் இருக்கிறதே! அப்பறம் எதற்கு பள்ளிவாசல் கட்ட நிதி கேட்டீர்கள் என சில சகோதரர்கள் அவர்களிடம் விசாரித்த போது, காசு கேட்டது பள்ளிவாசல் கட்ட இல்லை, சாலை ஓரத்தில் ஒரு இடம் வருகிறது. அதை வாங்கி அங்கே கடை கட்டி அதிலிருந்து வரும் வருமானத்தை பள்ளிவாசல் செலவு பயன்பாட்டிற்கு விடலாம் என இருந்தோம். ஆனால் அதை ததஜவினர் கெடுத்து விட்டார்கள் என என ரொம்பவே சாதாரணமாக சொல்லியிருக்கிறார் ஜாக் சகோதரர்.
தவ்ஹீத் ஜமாஅத்காரர்கள் கெடுத்தது இருக்கட்டும். நீங்கள் தான் ஜவாஹிருல்லாவை ஆதரிக்கிறீர்களே! அவரிடம் கேட்காமல் ஏன் நீங்கள் எதிர்க்கும் வேட்பாளரிடம் காசு கேட்டீர்கள் என்று கேட்டதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் ததஜ காரன் பள்ளிவாசலுக்கு வர இருந்த நிதியைக் கெடுத்து விட்டான் என செய்திகளை தொடர்ந்து அவர்கள் செய்திகள் பரப்புகிறார்களாம்.
பள்ளிவாசல் கட்டுவதாக இருந்தாலும் அதை உங்கள் சொந்த நிலத்தில் தான் கட்ட வேண்டும். அடுத்தவன் இடத்தை அநியாயமாக ஆக்கிரமித்து கட்டினால் அது பள்ளிவாசலாக ஆகிவிடாது. அதைப்போலத் தான் ஜாக்கின் பெயரை பயன்படுத்தி காசு வசூல் செய்திருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கட்ட காசு கேட்டாலும் கழிவறை கட்ட காசு கேட்டாலும் அது தவறுதான். ஜாக்கின் தொடர் தில்லுமுள்ளு வேலைகளையும், அதிரடி அந்தர்பல்டிகளையும் மக்கள் தொடந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து முத்துப்பேட்டையில் ஜாக் சார்பில் தங்களின் பரிசுத்த முகமூடியை மாட்டிக் கொண்டு அறிப்பு எடுத்த உணர்வு (சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்) என நோட்டீஸ் விட்டுள்ளனர். அவர்களின் அரிப்பை சொறிந்து விடுவதற்கு ஆதாரங்களுடன் அடுத்த செய்தி தயாராக இருக்கிறது.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons