
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சார்ந்த ஹயாத் முகம்மது ஈஸா (வயது 19) என்பவர் தினக்கூலி அடிப்படையில் பிளம்பிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 03.08.2012 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகில் உள்ள ஹோண்டா மோட்டார் வாகன புதிய கட்டிடத்தின் மாடியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் கயிறு கட்டி வேலை செய்து கொண்டிருந்த போது ஆர்க் கன்சல்டிங் பில்டர்ஸ் நிறுவனத்தின் கட்டிட பொறியாளர் குமார் மற்றும் மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரின் கவனக்குறைவால் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனடியாக அவரது உடல் அருகில் உள்ள பெல் தனியார்...