Sunday, September 4, 2011

எது உண்மையான ஒற்றுமை?





நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும்சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3 : 104)
உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக!இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 15 : 94)
மேற்கண்ட வசனங்களில் ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆவதற்குரியவழிமுறைகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்மக்களுக்கு நல்ல விஷயங்களைஎடுத்துக் கூறவேண்டும்மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும்நம்முடைய சக்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களைஅழைக்க வேண்டும்இத்தகையோர்தான் வெற்றி பெற்றவர்கள் என்று அல்லாஹ்குறிப்பிடுகின்றன்.
மேலும் இறைக்கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எவ்வித தயவுதாட்சண்யமும் காட்டக்கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்அதாவதுசமுதாயத்தில் நிலவும் சில பாவமான காரியங்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும்போது ஒட்டு மொத்த சமுதாயமே எதிர்த்து நின்றாலும் எத்தகைய துன்ப துயரங்கள்ஏற்பட்டாலும் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும்என்பதுதான் சத்தியவாதிகளுக்கு இறைவன் இடும் கட்டளை.
இத்தகைய சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமுதாயத்தில் எத்தனை எதிர்ப்புகள்தோன்றினாலும் பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளைநிலைநாட்டப்படவேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்
நம்முடைய இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கைதான்ஆனால் இந்தஓரிறைக் கொள்கையை குழிதோண்டிப் புதைக்கக்கூடிய தர்ஹா வழிபாடுகள்தாயத்துதகடுகள்மத்ஹபு பிரிவினைகள்மௌலித் என்ற வரம்பு மீறிய புகழ்மாலைகள்,மீலாது விழாஸலாத்துன் நாரியா போன்ற பல்வேறு விதமான இணைவைப்புக்காரியங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் வீழ்ந்து கிடந்தது.
வரதட்சணைக் கொடுமைவட்டிபெண்களுக்கு சொத்துரிமை மறுப்புஇத்தா என்றபெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பதுபெண்கள் தொழுகைப்பள்ளிக்கு வருவதற்குத் தடைபோன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளும்இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்பட்டன.
இந்நிலையில்தான் தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் பிரச்சாரம் இலட்சக்கணக்கானமக்களுக்கு அசத்தியங்களிலிருந்து சத்தியத்திற்கு வழிகாட்டியதுஷாஃபிஹனபிஎன்றும் இராவுத்தர்மரைக்காயர்லெப்பை என்றும் காதிரியாஷாதுலிய்யா,ஜிஸ்திய்யாநக்ஷபந்தியா என்றும் கொள்கையின் பெயரால் பிரிந்து கிடந்தசமுதாயம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையின் பால் ஒன்று திரண்டுவருகிறார்கள்.
அசத்தியத்திற்கு எதிரான இந்த சத்தியத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர்இந்த தவ்ஹீத் வாதிகள்தான் சமுதாய ஒற்றுமையைப் பிரித்து விட்டார்கள்,அண்ணன் தம்பிகளாய் பழகிய மக்களை எதிரிகளாக்கிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
அசத்தியத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சிலபிளவுகள் ஏற்படத்தான் செய்யும்.
ஒற்றுமையாக வட்டி வாங்கும் ஊரிலே வட்டி கூடாது என்று பிரச்சாரம் செய்தால்அவர்களுக்கு மத்தியிலே இரு பிரிவுகள் ஏற்படத்தான் செய்யும்எனவேஒற்றுமையை குலைப்பது கூடாது என்று கூறி அனைவரும் ஒற்றுமையாக வட்டிவாங்குவதுதான் இஸ்லாமிய நெறிமுறையா?
ஒற்றுமையாக வரதட்சணை வாங்கும் ஊரிலே மஹர் கொடுத்து திருமணம்செய்யுங்கள் என்றால் வரதட்சணை வாங்குபவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்.ஒற்றுமை குலையத்தான் செய்யும்எனவே ஒற்றுமை என்ற பெயரிலேவரதட்சணைக் கொடுமையை அங்கீகரிப்பதுதான் இஸ்லாமிய வழிமுறையா?
தவ்ஹீத் பிரச்சாரத்தை சமுதாயப் பிரிவினை என்றுரைப்போர் இதற்கு பதில் கூறக்கடமைப்பட்டுள்ளனர்.
ஒற்றுமையாக ஓரினச் சேர்க்கையிலே ஈடுபட்டு வந்த சமுதாயத்திலே லூத் (அலை)அவர்கள் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததினால் ஊர்மக்களுக்கும் லூத் நபிக்கும்பிரச்சினை ஏற்பட்டதுஎனவே லூத் நபியவர்கள் பிரிவினை வாதியா?
ஒற்றுமையாக இணைவைப்புக் காரியங்களிலே ஈடுபட்டு வட்ட ஸமூதுசமுதாயத்தவர்களுக்கு ஸாலிஹ் நபி சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால்இரு பிரிவினரானார்கள்எனவே ஸாலிஹ் நபி பிரிவினைவாதியா?
அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதிலும்அளவு நிறுவைகளில் மோசடி செய்வதிலும்ஒற்றுமையாக இருந்த மத்யன் நகரவாசிகளிடம் சுஐப் (அலைஅவர்கள் சத்தியத்தைஎடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவினர்களானார்கள்எனவே சுஐப் நபிபிரிவினைவாதியா?
இணைவைப்புக் காரியங்களில் மூழ்கிக் கிடந்த தன்னுடைய சமுதாயத்தை நோக்கிஉங்களை விட்டும் நாங்கள் பிரிந்து விட்டோம் உங்களுக்கும் எங்களுக்கும்என்றென்றும் பகமைதான் என்றுரைத்தார்களே அந்த இபுறாஹிம் (அலை)பிரிவினைவாதியா?
''உங்களை விட்டும் அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதைவிட்டும் நாங்கள் விலகியவர்கள்உங்களை மறுக்கிறோம்அல்லாஹ்வைமட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்றுகூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும்உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது''உங்களுக்காக பாவ மன்னிப்புத்தேடு வேன்அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான்அதிகாரம் பெற்றி ருக்கவில்லை'' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம்கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லைஎங்கள் இறைவா!உன்னையே சார்ந்திருக்கிறோம்உன்னிடமே திரும்பினோம்மீளுதல்உன்னிடமே உள்ளது''எங்கள் இறைவா! (உன்னைமறுப்போருக்குச்சோதனையாக எங்களை ஆக்கி விடாதேஎங்களை மன்னிப்பாயாகஎங்கள்இறைவாநீயே மிகைத்தவன்ஞானமிக்கவன்'' (என்றும் பிரார்த்தித்தார்.) அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகியமுன்மாதிரி இருக்கிறதுயார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்;புகழுக்குரியவன். (அல்குர்ஆன் 60 : 4, 5, 6)
இபுறாஹிம் நபி ஓரிறைக் கொள்கைக்காக தன்னுடைய சமுதாயத்தை பகைத்துக்கொண்டு சென்றதைப் போன்றுதான் நாம் இருக்க வேண்டும் என்றுகட்டளையிடுகின்ற இறைவன் பிரிவினைவாதியாதிருக்குர்ஆன் பிரிவினையைத்தூண்டுகிறதா?
அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா இணைவைப்பாளர்களுக்கு மத்தியிலேநபியவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த போது மக்கா காஃபிர்கள் நபிகள் நாயகத்தைநோக்கு என்ன சொன்னார்கள் தெரியுமா?
இந்த முஹம்மத் நம்முடைய சிந்தனைகளை மழுங்கடித்து விட்டார்.நம்முடைய முன்னோர்களைத் திட்டுகிறார்நம்முடைய வழிமுறைகளைக்குறைகூறுகிறார்நம்முடைய ஜமாஅத்துகைளப் பிரித்துவிட்டார்நம்முடையகடவுள்களைத் ஏசுகிறார் (அஹ்மத் 6739) என்று கூறினார்கள்.
அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா காஃபிர்களின் ஜமாஅத்துகளைப் பிரித்தமுஹம்மது நபியவர்கள் பிரிவினை வாதியா?
லூத் (அலை)ஸாலிஹ் (அலை)சுஐப் (அலை)இபுறாஹிம் (அலை)முஹம்மது(ஸல்ஆகியோர் பிரிவினைவாதிகள் என்றால் அவர்களின் வழியில் செல்வதில்எவ்விதக் குற்றமுமில்லை.
போலி ஒற்றுமை பேசுவோர் இவற்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
பாவமான காரியங்களை சகித்துக் கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுஇஸ்லாம் எங்கும் குறிப்பிடவே இல்லைஅசத்தியத்தை எதிர்ப்பதினால் பிரிவினைஏற்படும் என்றால் அந்தப் பிரிவினை அவசியம் என்பதைத்தான் இஸ்லாம்வலியுறுத்துகிறது
திருமறைக் குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றுகூறவே கிடையாது.
மாறாக இறைவனுடைய கட்டளைகளை  பின்பற்றுவதில் பிரிந்து விடக்கூடாதுஎன்பதையே திருமறைக் குர்ஆன் வலியுறுத்துகிறது.
நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம்மூஸாமற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், ''மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்!அதில் பிரிந்து விடாதீர்கள்!'' என்பதேநீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அதுஇணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளதுஅல்லாஹ்தான் நாடியோரைத்தனக்காகத் தேர்வு செய்கிறான்திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான் (அல்குர்ஆன் 42 ; 13)
மேற்கண்ட வசனத்தில் மார்க்கத்தில் பிரிந்து விடக்கூடாது என்றே அல்லாஹ்கூறுகிறான்மாறாக பாவமான காரியங்களைச் செய்யும் போது ஒற்றுமை என்றபெயரில் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை அல்ல.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!பிரிந்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 3 : 103)
தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம்  மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றதுசில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்திவருகின்றனர்''ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்''என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால்ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லைஓர் ஊரில்அனைவரும் சினிமா பார்த்தால்வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்துஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானாஎன்று கூடஇவர்கள் சிந்திக்கவில்லை.
''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்'' என்று தான்இவ்வசனம் கூறுகிறதுஅல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன்விளக்கவுரையான நபி மொழிகளும்தான்அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன்நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
குர்ஆன்ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது;எனவே அதைச் சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத்தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன்வராவிட்டால் பிடியை நாம் விட்டு விடக்கூடாதுஅவர்களையும் பிடிக்குமாறுஅழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
எனவே பல கொள்கைகளாகப் பிரிந்து கிடந்துபாவமான காரியங்களில் மூழ்கிக்கிடந்து பெயரளவில் ஏற்படுவது ஒற்றுமை அல்லமாறாக யார் எதிர்த்தாலும்அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே உண்மையானஒற்றுமையாகும்அத்தகைய உண்மையான ஒற்றுமைக்கு நாம் பாடுபடுவோமாக.


                                                                                                 http://abdunnasirmisc.blogspot.com 

Saturday, September 3, 2011

அன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா?



ஜன் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை வெள்ளையர்களை விரட்ட மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு ஒப்பானதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

தற்போது இந்தியாவின் தாத்தாவாக, காந்தியின் அவதாரமாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அன்னா ஹசாரேவின் தலைமையில் நடக்கும் போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போராட்டமாக மீடியா பிரபலப்படுத்தி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் அன்றைய சுதந்திரப் போரை விட மிக பிரபலமான ஒன்றாக தேச எல்லைகளை தாண்டி சர்வதேச ஊடகங்களின் கதாநாயகனாக மாறியிருக்கிறார் இந்த தாத்தா.

இன்று பத்திரிகைகள், முக நூல்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹசாரேவின் போராட்டத்துக்கு எதிராக பேசுபவர்கள் சமூக விரோதிகளாக, தேச துரோகிகளாக சித்தரிக்கபடும் காட்சியை பார்த்துகொண்டிருக்கின்றோம். புக்கர் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சொன்னதைப் போல் இன்று அன்னாவின் குழுவால் முன்வைக்கப்படும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறினால் என்ன கிடைக்கும் என யோசித்தால் பின்வருபவை கிடைக்கலாம்.

a. வந்தே மாதரம்

b. பாரத் மாதா கி ஜெய்

c. இந்தியா தான் அன்னா, அன்னா தான் இந்தியா

d. ஜெய் ஹிந்த்

நன்றாகப் படித்து மேல்தட்டு ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களே அன்னாவின் போராட்டத்தில் பெரும்பான்மையாகக் கலந்து கொண்டுள்ளனர். மின்விசிறிகள் தரும் சுகமான காற்று வீச, தில்லி மாநகராட்சியின் 250 ஊழியர்கள் இரவு பகலாக பணி புரிந்து சமன்படுத்திய இடத்தில், பன்னாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர்ஷிப்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தின் மூலம் அன்னாவின் எடை சில கிலோக்கள் குறைந்தது தவிர, சாமானியனுக்கு வேறொன்றும் நடக்கப் போவதாகத் தெரியவில்லை.

"ஏற்கனவே இருக்கும் பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் மறைந்து விடும் அளவுக்கு ஊழல் எளிதானதல்ல" என்று இன்போஸிஸின் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகினி சொல்வதை கவனிக்க வேண்டியுள்ளது.

உண்மையிலேயே ஊழலை ஒழிப்பது தான் அன்னாவின் பணி என்றால் இவரின் அணியின் உள்ள சந்தோஷ் ஹெக்டேவை தலைவராக கொண்ட லோக் ஆயுக்தா மூலம் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களை உள்ளடக்கிய பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்காமல் காங்கிரஸை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் புரியவில்லை. தலைவரே சூட்கேஸில் பணம் வாங்குவதில் தொடங்கி சவப்பெட்டி வரை ஊழல் நடத்திய பரிசுத்த பா.ஜ.கவும் இவரின் போராட்டத்தை வெற்றி பெற வைக்க மெனக்கெடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இவரின் போராட்டம் ஊழல் எதிர்ப்பா அல்லது வெறும் காங்கிரஸ் எதிர்ப்பா என்று?

அன்னாவை ஆதரிப்பதாக சொல்லும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட அவரின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் சந்தோஷ் ஹெக்டே அறிக்கையால் ஊழல் புரிந்ததாக குற்றம் சுமத்தப் பட்டு பதவி பறிக்கப் பட்ட எடியூரப்பா அமைச்சரவையில் பதவி வகித்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீ ராமுலு ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி கேட்டு பாஜக வை மிரட்டி வரும் நிலையில் வேறு யாருக்கும் அவர்கள் முன்னர் வகித்து வந்த இலாகாவை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜக மறு பக்கம் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் வேண்டும் என அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலே.

மேலும் நல்லாட்சி நடத்துகிறோம் என முழங்கும் மோடியின் குஜராத்தில் கூட இன்னும் லோக் ஆயுக்தா அமைப்பு தோற்றுவிக்கப் பட வில்லை என்பதை விட வேறென்ன வேண்டும் இவர்களின் நேர்மைக்கு.

உடல்தகுதி அடிப்படையில் தகுதி பெறாமல், அவசர தேவையிருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த அன்னா ஹசாரே தன் கிராமத்தை சீர்படுத்தியது குறித்து இந்திய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. ஆனால் அவரின் கிராமத்தில் இன்னும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வது குறித்தும் தலித்துகள் ஜாதி பெயர் கொண்டே அழைக்கபடுவது குறித்தும் ஊடகங்கள் மறைப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. இன்னும் அந்த கிராமத்தில் உள்ள பள்ளிகூடங்களில் விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி போன்றவர்களே சுதந்திர வீரர்களாக கற்பிக்கப்படுதலையும் அங்குள்ள சினிமா தியேட்டரில் கூட இந்து கடவுள்களின் மேன்மைகளை சொல்லும் படங்கள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படுவதையும் வசதியாய் மறைத்து விடுகின்றன.

தன்னை காந்தியவாதியாக காட்டி கொள்ளும் அன்னா ஹசாரே காந்திய கோட்பாடுகளுக்கு எதிராக ஊழல் செய்பவர்களுக்கு உடனே மரண தண்டனை, மக்கள் தொகையை குறைக்க கட்டாய குடும்ப கட்டுப்பாடு என சர்வதிகார தோரணையில் செயல்படுதலை பார்க்க முடிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் இருக்கும் போது வீதியில் போராட்டம் நடத்துவதன் மூலம் தான் விரும்பும் சட்டத்தை கொண்டு வருவது அதே எதேச்சதிகார மனப்பான்மையை காட்டுகிறது. அதனால் தான் எமர்ஜென்ஸியின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த பரூவாவால் முன் வைக்கப்பட்ட “இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” எனும் முழக்கத்தை போன்று முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடி “அன்னா தான் இந்தியா, இந்தியாதான் அன்னா” என்று முழங்கியது கவனிக்கப்பட வேண்டியதாகும்.டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஷா அன்னா ஹசாராவின் போராட்ட நடைமுறைகள் எமர்ஜென்ஸியை நினைவுபடுத்துவதாகவும் என்னை பின்பற்றியே ஆகவேண்டும் என்ற சர்வதிகார தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

தனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் அதை நிறைவேற்ற அழுதாவது காரியம் சாதிக்கும் குழந்தையைப் போல் உண்ணாவிரதத்தை ஒரு பிளாக்மெயில் ஆயுதமாகவே அன்னா பயன்படுத்துவதாக தெரிகிறது. இப்போது மக்கள் ஆதரவு இருப்பதால் சிறையை விட்டு வர மறுத்த அன்னா, ஏப்ரல் 1998ஆம் ஆண்டில் மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்ட போது 5000 ரூபாய் ஜாமீன் கட்டி வெளி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கோரிக்கையின் பேரில் 2003ல் அமைக்கப்பட்ட பி.பி. சாவந்த் கமிஷன் அன்னாவின் டிரஸ்டுகளை பற்றியும் புகார்களை கூறியது. அன்னா ஹசாரேவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவரின் டிரஸ்டான ஹிந்து சுவராஜ் டிரஸ்ட் 2,20,000 ரூபாய் செலவு செய்தது சட்டத்துக்கு புறம்பானது என்றும் ஜில்லாபரிஷத்துக்கு தன் டிரஸ்ட் சார்பாக 11 ஏக்கர் நிலம் ஒதுக்கியது விதிமுறைகளுக்கு மாற்றமானது என்றும் பிரஷ்டிச்சர் விரோதி ஜனன்தோலன் டிரஸ்டின் கணக்குகள் ஒழுங்காகப் பராமரிக்கப்படவில்லை என்றும் மதச்சார்பற்ற கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொண்டு சாந்த் யதவ்பாபா ஷிக்ஷன் பிராசரக் மண்டல் டிரஸ்டின் மூலம் கோவிலை புதுப்பித்ததுபோன்றவை தவறென்றும் அவ்வறிக்கையில் புகார் கூறப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிப்பது ஒரு ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தும் என்று பல்வேறு மனித உரிமை குழுக்கள் குறை கூறியுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், அப்சல் குரு போன்றவர்களை தூக்கிலிடக் கூடாது என்று கூக்குரல் வலுக்கும் இந்நேரத்தில் தூக்கிலிடுவதை வலியுறுத்தும் அன்னா ஹசாரேவின் போராட்டம் சர்ச்சைகளை வலுப்படுத்துகிறது.

பாபா ராம்தேவின் போராட்டத்தை மத்திய அரசு அடக்க முயன்ற போது போராட்டக்காரர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை ஜனநாயகத்தை நசுக்குவதாகும் என்றும் மனித குலத்தின் மீதான வடு என்று ஆவேசப்பட்ட அன்னா நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றவாளியாக்குவதாக குறிப்பிட்டார். மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதோ அல்லது சிவசேனை கும்பல்களால் பிற மாநிலத்தவர்கள் அடித்து விரட்டப்பட்ட போதோ இதே ஆவேசத்தை அன்னா ஏன் காட்டவில்லை. குஜராத்தின் முதல்வர் மோடியை புகழ்ந்தவர் 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது ஏன் ஆவேசப்படவில்லை, மோடியை குற்றவாளியாக்கவில்லை என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அன்னாவின் போரட்டத்தை பிரபலப்படுத்துவதில் மேல்தட்டு ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகும். மணிப்பூரில் இந்திய ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் பத்து ஆண்டுகளாகப் போராடும் ஷர்மிளாவின் போராட்டமோ, கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு எதிராக போராடும் கிராம மக்களின் போராட்டமோ தங்கள் சொந்த இடங்களில் இருந்து தாரளமயமாக்கல் பெயரால் வெளியேற்றப்படுவதற்கு எதிராக ஒரிஸாவில் போஸ்காவுக்கு எதிராக போராடும் போராட்டங்களோ, போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் போராட்டங்களோ ஊடகங்களின் கண்களில் படுவதில்லை.

மத்திய அமைச்சரவையில் இவர் தான் அமைச்சராக வர வேண்டும் என முடிவு செய்யும் அளவுக்கு சர்வ வல்லமை பெற்ற ஊடகங்களும் உண்டு என்பதை இந்தியாவிற்கு வெளிப் படுத்தியவர் நீரா ராடியா. இந்தியாவில் லாரிகள் வேலை நிறுத்தம் என எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அன்னா ஹசாரேவின் உண்ணா விரதத்தை மட்டும் நேரடி ஒளிபரப்பு என மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களின் நேர்மையும் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது. 2G ஊழல் வழக்கில் பல்வேறு டாடா, அம்பானி போன்ற பெரிய கார்பரேட் கம்பெனிகளும் கோடி கோடியாக முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கும் அவர்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை எழுதி இருக்குமா இந்த ஊடகங்கள். இன்று ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாம்.

இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக அன்னா முன்னிலைப் படுத்தப் படுகிறார். இன்னும் தெளிவாகச்சொல்ல வேண்டுமென்றால் அன்னாவின் போராட்டங்களுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம், போராட்ட ஒழுங்குமுறைகள், வெறியேற்றப்பட்ட தேசபக்தி போன்றவை இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம், உலகக் கோப்பை வெற்றி ஊர்வலம், அணு சக்தி வெற்றி கொண்டாட்டம் போன்றவைக்கு ஒத்திருப்பதை தெளிவாக கண்டு கொள்ள முடியும்.

அன்னாவின் கனவு கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 25 வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, காந்தி கனவு கண்டது போன்று அவரவர் ஜாதிக்கு ஏற்ப ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வெட்டியான், துப்புரவு தொழிலாளி, ஒரு நாவிதன் என்று தன்னிறைவு கொண்ட கிராமமாக அன்னாவின் கனவு கிராமம் இருப்பது, சமநிலையை நோக்கிய இளைஞர்கள் எனும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தோடு அன்னாவின் தளபதிகள் இணைந்திருப்பது, கோகா கோலா, லெஹ்மன் பிரதர்ஸ் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களில் நிதியுதவி பெறும் அன்னாவின் தளபதிகளின் என்.ஜி.ஓக்கள் போன்றவை அன்னாவின் போராட்டத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் கொள்ள வைக்கின்றன. போர்ட் பவுண்டேசனிடம் இருந்து கடந்த 3 வருடமாக கபீர் என்ற அமைப்புக்காக அதனை நடத்தி வரும் அர்விந்த் கேஜ்ரிவால் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்று இருக்கும் நிலையில் நாளை போர்ட் பவுண்டேசன் மீது முறைகேடு புகார் வரும் நிலையில் இவர்களின் நடவடிக்கை எவ்வாறு நேர்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?

பிரதமரும் நீதித் துறையும் தங்களின் ஜன் லோக்பாலுக்குள் வர வேண்டும் என அடம் பிடிக்கும் அன்னா ஹசாரே குழுவினர் தாங்கள் பொறுப்பு வகிக்கும் தொண்டு அமைப்புகள் மட்டும் ஜன் லோக்பால் வரம்புக்குள் வரக் கூடாது என்று சொல்வதில் என்ன நேர்மை இருக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்து அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். இவர்கள் என்ன ஊழலே புரிய மாட்டார்கள் என இறைவனிடம் வரம் வாங்கி வந்தவர்களா?

அம்பேத்கர் குறிப்பிட்டதை போன்று இந்திய ஜனநாயகம் தனிமனித வழிபாடால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்று சொன்னதை போல் சாதாரண யோகா வாத்தியாரால் சில ஆண்டுகளில் தன் மாணவர்களை சீடர்களாக்கி அவர்களை தொண்டர்களாக்கி பின் அரசுக்கே சவால் விடும் அளவுக்கு உயர முடிகிறது. அப்படி அன்னாவை பின்பற்றும் ஓர் ஆட்டு மந்தை சமூகத்தைச் சமைக்கும் முயற்சியில் இந்திய ஊடகங்கள் தீவிரமாக குதித்திருக்கின்றன. தலித் சமூக ஆர்வலர் காஞ்சா இலய்யா குறிப்பிட்டதை போல் “அன்னாவின் போராட்டம் சமூக நீதிக்கெதிரான மனு தர்ம இயக்கம். பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினருக்கு இதில் எவ்வித பங்குமில்லை” என்று குறிப்பிட்டதை போல் ஒரு சாராரின் விருப்பத்தை பொது புத்தியில் புகுத்தும் முயற்சியாகவே அன்னாவின் போராட்டம் தெரிகிறது.

அன்னாவின் போராட்டத்தை கண்மூடித்தனமாய் ஆதரிப்போர், அதையே தேச பக்திக்கான இலக்கணமாய் சொல்வோர் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும். ஆயுதப் புரட்சியின் மூலம் கடைநிலை மக்களை ஒன்று திரட்டி போராடும் மாவாயிஸ்டுகளின் நோக்கம் இந்திய ஜனநாயகத்தை தூக்கி எறிவது எனில் மேல் தட்டு மக்களை, அறிவு ஜீவிகளை, ஊடகங்களை வைத்துநடத்தப்படும் அன்னாவின் இயக்கம் வெற்றி பெற்றால் அதே விளைவு தான் ஏற்படும். ஆம் எனவே இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது மாத்திரமல்ல சட்டத்தை தன் கையில் தனிநபர்கள் எடுப்பதும் அனுமதிக்கப்பட கூடிய ஒன்றல்ல.

நன்றி  www.inneram.com

Friday, September 2, 2011

கழக கண்மணிகளா? காவிகளின் கைகூலிகளா??


இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு (2:114)


என் தாய் தந்தையர்கள் முஸ்லிம் அதனால் நானும் முஸ்லிம், தொப்பி போட்டுக்குவேன், ஐவேளை தொழுவேன், அதுவும் இல்லை என்றால் வாரம் வாரம் ஜும்மா விர்காவாவது போய்விடுவேன், இதுதான் எனக்கு தெரிந்த இஸ்லாம், இதோடு என் கடமை முடிந்து விட்டது இதை தவிர என் அன்றாட நிகழ்வுகழலில், சொந்த விருப்பு வெறுப்புகளில் கொடுக்கல் வாங்கல்களில், வியாபாரங்களில் எல்லாம் இஸ்லாம் மூக்கை நுழைக்க கூடாது, இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் வரை தமிழக மக்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய பார்வையாக இருந்தது, இதில் நமதூரும் விதிவிலக்கில்லை, உலகிற்கே வழிகாட்ட வந்த தூய மார்க்கத்தில் இருந்துகொண்டு ஒரு வட்டத்திற்குள் நாம்  கட்டப்பட்டிருந்தோம், கஷ்ட காலம் என்றால் பூரியான் பாதியா ஓதவேண்டும், துக்ககாலம் என்றால் குரான் ஓத வேண்டும், அதுவும் ஆலிம்களை வைத்து ஓதவேண்டும், மகிழ்சியான நாள் என்றால் மௌலீது ஓத வேண்டும், கோழி அறுக்க ஹஜிரத் வேண்டும், விருந்து வைத்தாலும் ஹஜிரத் வேண்டும், திருமணத்திலும் ஹஜிரத் வேண்டும், பிள்ளைக்கு பெயர் வைக்க ஹஜிரத் வேண்டும், இப்படி மார்க்கம் என்பது ஓதி படித்தவர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைதிறந்த காலம் மாறி, இன்று ஏகத்துவம் என்ற ஒளியின் கீழ் பாமரனுக்கும் பகுத்தறிவு மார்க்கம் சென்றடைந்துள்ளது (அல்ஹம்துலில்லாஹ்), இதனால் பாதிக்கப்பட்ட, வருமானம் இழந்த புரோகிதர்களும், முரீது சீமாட்டிகளும், நம்மீது அவதூறு சேற்றை அள்ளிவீச, அதருக்கு  அரசியல் சாக்கடைகளை தங்களுக்கு துனையாக்கிக்கொண்டார்கள், ஆக இரு சாரார்க்கும் ஒரே நோக்கம் மக்கள் சத்தியத்தின் பால் சென்றுவிட்டால் நம்மக்கு சத்திய சோதனை வந்து விடும் என்பதே ஆகும், அதனுடைய பிரதிபலிப்புதான் ஆயங்குடியில் பெருநாள் அன்று நடந்தேறிய கயமைத்தனம் ஆகும், பெருநாள் அன்று திடலில் தொழுவது தான் சிறப்பானதாகும், இத்தனையாண்டு காலமாக இந்த சுன்னத்தை செயல்படுத்த நமதூர் ஜமாஅத் முயன்றதே இல்லை, காரணம் அது சுன்னத் என்று அவர்களுக்கு இதுநாள் வரை தெரியவும் இல்லை, ஊருக்கு மையப்புறத்தில் திடல் இருந்தும் அவர்கள் அங்கு சென்று தொழுபவர்களாகவும்  இல்லை, தொழ வருபவர்களையும்  அல்லக்கைகளை வைத்து கல்லெறிந்து தடுக்கிறார்கள், சமுதாய காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கோழைகள் பெண்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் தொழவந்தவர்களை கல்லெறிந்து தாக்குகிறார்களே, நடுநிலையாளர்களே! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது சரிதானா?, அப்படி என்ன தவறு செய்து விட்டோம் நாங்கள், மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புகுதினோமா? அல்லது நமதூர் ஜமாத்தால் மௌத்தாக்கப்பட்ட ஒரு சுன்னத்தை ஹயாதாக்கிநோமா? பெருநாள் தினத்தன்று எழைககுளும் அந்த நாளை மகிழ்சியோடு கொண்டுவதர்காக வழங்கப்படும் பித்ரா எனும் தர்மத்தை அவர்கள் வீடு வீடாக சென்று வாங்கிவந்த வழமையை மாற்றி, அவர்கள் இடத்திற்கு வீடு வீடாக சென்று வியோகித்து மகத்தான மாற்றத்திற்கு வழிவகுத்தது தவ்ஹீத் ஜமாஅத், இதுபோன்ற பணிகளை ஊர் ஜமாஅத் கையிலெடுக்காமல், தொழ வருபர்கள் மேல் கல்லெறியும் கலாச்சாரத்தை கையிலெடுப்பது, காவிகள் கூட செய்யத்துணியாத செயகாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது திட்டில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றியும் பதிப்பாடல்களை நிறுத்தியும் முஸ்லிம்கள் தொழுகைக்கு வழிவிட்ட ஹிந்து சகோதரர்களுக்கு இருக்கும் மனோபக்குவம் கூட தங்களை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இல்லாமல் போனது வெக்கப்பட வேண்டிய விசயமாகும், ஊரு பொது இடம் என்பது ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமான இடம் இல்லை அதில் எல்லோருக்கும் உரிமையுள்ளது, நாம் யாருக்கும் இடையூறோ அல்லது, கேளிக்கை கூத்தாட்டம் நடத்தவோ பொது இடத்தை பயன்படுத்தவில்லை, மாறாக அமைதியான முறையில் தொழுகை நடத்தியது பொறுத்துக்கொள்ள முறியாமல் கலகம் செய்தவர்களை பொதுமக்கள் புறக்கணிக்கவேண்டும், நன்மையான காரியங்கள் யார் செய்தலும் அதை ஊர் பொதுமக்கள் வரவேற்க வேண்டும், அராஜக காரர்களை ஓரம் கட்டவேண்டும், இதுதான் ஊரு நலத்திற்கும், மார்கதிற்கும் நலன் பெயர்க்கும், வல்ல இறைவன் நம் அனைவரது உள்ளங்களையும் விசாலமாக்கி நல்லதின் பக்கம் கொண்டுசேர்ப்பானாக.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள்(நிராகரிப்போர் ) வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(61:8)

                                                                                                                               அபூ ஜஸ்ரா 

                                                                        http://ayanguditntj.blogspot.com/2011/09/blog-post.html

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons