இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு (2:114)
என் தாய் தந்தையர்கள் முஸ்லிம் அதனால் நானும் முஸ்லிம், தொப்பி போட்டுக்குவேன், ஐவேளை தொழுவேன், அதுவும் இல்லை என்றால் வாரம் வாரம் ஜும்மா விர்காவாவது போய்விடுவேன், இதுதான் எனக்கு தெரிந்த இஸ்லாம், இதோடு என் கடமை முடிந்து விட்டது இதை தவிர என் அன்றாட நிகழ்வுகழலில், சொந்த விருப்பு வெறுப்புகளில் கொடுக்கல் வாங்கல்களில், வியாபாரங்களில் எல்லாம் இஸ்லாம் மூக்கை நுழைக்க கூடாது, இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் வரை தமிழக மக்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய பார்வையாக இருந்தது, இதில் நமதூரும் விதிவிலக்கில்லை, உலகிற்கே வழிகாட்ட வந்த தூய மார்க்கத்தில் இருந்துகொண்டு ஒரு வட்டத்திற்குள் நாம் கட்டப்பட்டிருந்தோம், கஷ்ட காலம் என்றால் பூரியான் பாதியா ஓதவேண்டும், துக்ககாலம் என்றால் குரான் ஓத வேண்டும், அதுவும் ஆலிம்களை வைத்து ஓதவேண்டும், மகிழ்சியான நாள் என்றால் மௌலீது ஓத வேண்டும், கோழி அறுக்க ஹஜிரத் வேண்டும், விருந்து வைத்தாலும் ஹஜிரத் வேண்டும், திருமணத்திலும் ஹஜிரத் வேண்டும், பிள்ளைக்கு பெயர் வைக்க ஹஜிரத் வேண்டும், இப்படி மார்க்கம் என்பது ஓதி படித்தவர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைதிறந்த காலம் மாறி, இன்று ஏகத்துவம் என்ற ஒளியின் கீழ் பாமரனுக்கும் பகுத்தறிவு மார்க்கம் சென்றடைந்துள்ளது (அல்ஹம்துலில்லாஹ்), இதனால் பாதிக்கப்பட்ட, வருமானம் இழந்த புரோகிதர்களும், முரீது சீமாட்டிகளும், நம்மீது அவதூறு சேற்றை அள்ளிவீச, அதருக்கு அரசியல் சாக்கடைகளை தங்களுக்கு துனையாக்கிக்கொண்டார்கள், ஆக இரு சாரார்க்கும் ஒரே நோக்கம் மக்கள் சத்தியத்தின் பால் சென்றுவிட்டால் நம்மக்கு சத்திய சோதனை வந்து விடும் என்பதே ஆகும், அதனுடைய பிரதிபலிப்புதான் ஆயங்குடியில் பெருநாள் அன்று நடந்தேறிய கயமைத்தனம் ஆகும், பெருநாள் அன்று திடலில் தொழுவது தான் சிறப்பானதாகும், இத்தனையாண்டு காலமாக இந்த சுன்னத்தை செயல்படுத்த நமதூர் ஜமாஅத் முயன்றதே இல்லை, காரணம் அது சுன்னத் என்று அவர்களுக்கு இதுநாள் வரை தெரியவும் இல்லை, ஊருக்கு மையப்புறத்தில் திடல் இருந்தும் அவர்கள் அங்கு சென்று தொழுபவர்களாகவும் இல்லை, தொழ வருபவர்களையும் அல்லக்கைகளை வைத்து கல்லெறிந்து தடுக்கிறார்கள், சமுதாய காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கோழைகள் பெண்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் தொழவந்தவர்களை கல்லெறிந்து தாக்குகிறார்களே, நடுநிலையாளர்களே! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது சரிதானா?, அப்படி என்ன தவறு செய்து விட்டோம் நாங்கள், மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புகுதினோமா? அல்லது நமதூர் ஜமாத்தால் மௌத்தாக்கப்பட்ட ஒரு சுன்னத்தை ஹயாதாக்கிநோமா? பெருநாள் தினத்தன்று எழைககுளும் அந்த நாளை மகிழ்சியோடு கொண்டுவதர்காக வழங்கப்படும் பித்ரா எனும் தர்மத்தை அவர்கள் வீடு வீடாக சென்று வாங்கிவந்த வழமையை மாற்றி, அவர்கள் இடத்திற்கு வீடு வீடாக சென்று வியோகித்து மகத்தான மாற்றத்திற்கு வழிவகுத்தது தவ்ஹீத் ஜமாஅத், இதுபோன்ற பணிகளை ஊர் ஜமாஅத் கையிலெடுக்காமல், தொழ வருபர்கள் மேல் கல்லெறியும் கலாச்சாரத்தை கையிலெடுப்பது, காவிகள் கூட செய்யத்துணியாத செயகாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது திட்டில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றியும் பதிப்பாடல்களை நிறுத்தியும் முஸ்லிம்கள் தொழுகைக்கு வழிவிட்ட ஹிந்து சகோதரர்களுக்கு இருக்கும் மனோபக்குவம் கூட தங்களை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இல்லாமல் போனது வெக்கப்பட வேண்டிய விசயமாகும், ஊரு பொது இடம் என்பது ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமான இடம் இல்லை அதில் எல்லோருக்கும் உரிமையுள்ளது, நாம் யாருக்கும் இடையூறோ அல்லது, கேளிக்கை கூத்தாட்டம் நடத்தவோ பொது இடத்தை பயன்படுத்தவில்லை, மாறாக அமைதியான முறையில் தொழுகை நடத்தியது பொறுத்துக்கொள்ள முறியாமல் கலகம் செய்தவர்களை பொதுமக்கள் புறக்கணிக்கவேண்டும், நன்மையான காரியங்கள் யார் செய்தலும் அதை ஊர் பொதுமக்கள் வரவேற்க வேண்டும், அராஜக காரர்களை ஓரம் கட்டவேண்டும், இதுதான் ஊரு நலத்திற்கும், மார்கதிற்கும் நலன் பெயர்க்கும், வல்ல இறைவன் நம் அனைவரது உள்ளங்களையும் விசாலமாக்கி நல்லதின் பக்கம் கொண்டுசேர்ப்பானாக.
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள்(நிராகரிப்போர் ) வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(61:8)
அபூ ஜஸ்ரா
0 comments:
Post a Comment