Thursday, September 29, 2011

விவாதமென்றதும் ஓடி ஒளியும் பொட்டைகள் தேர்தல் நிலைபாடும் அயோக்கியன் அப்பாஸின் அறியாமையும்




ஏற்கனவே பித்அத் என்றால் என்ன என்பதை சிறு பிள்ளைக்குபாடம் நடத்துவது போன்று நடத்துகிற அளவிற்கு அதில் உங்களை மிகவும் ஞானசூனியமாக காட்டிக்கொண்டீர்கள்.
இப்போதுவிமர்சனங்கள் வைப்பதிலும்அதற்கு மறுப்பு எழுதுவதிலும் கூட தான் ஒரு அதிமேதாவி (??) என்பதை நிரூபிதுக்கொண்டுள்ளீர்கள்.
தேர்தல் விஷயத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு அடிப்படை..
முதலில்மார்க்கம் என்றால் என்னஅதில் உள்ள ஹலால் ஹராம் என்ன என்பதற்கும்உலக விஷயங்களில் ஒன்றை செய்வதற்கும் தவிர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டினை உம்போன்றவர்கள் புரிந்துக்கொள்ளுங்கள்.
புரியவில்லை எனில் அதை கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு விமர்சனங்களுக்கு வாருங்கள்..
மத்ஹப் இமாம் ஒன்றை கூடும்அல்லது கூடாது என்று சொல்வது மார்க்க சட்டம் ! மார்க்க சட்டங்களில் ஒன்றை தவிர்ப்பதா அல்லது அனுமதிப்பதா என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவாக காட்டி விட்ட பிறகுஅதில் எதனையும் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ எந்த மனிதனுக்கும் அனுமதியில்லை.
தெளிவாக சொல்வதானால் இந்த சட்டம் என்றும்தமது கருத்தாக வேறு சட்டம் என்றும் சொல்வதற்கு மார்க்கம் இடம் தரவில்லை என்பதை அடிப்படையாக புரிந்து கொள்ளுங்கள், (புரிய முடிந்தால்..)
இதற்கும் தேர்தலில் ஒரு நிலைபாட்டை மாற்றுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எந்த தவ்ஹீத்வாதியும் சொல்ல மாட்டான். ஜனநாயகம் என்பது மார்க்கத்திற்கு எதிரானது என்கிற கோஷத்தை போட்டுக்கொண்டிருந்தவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிட்டு சுயலாபம் அடைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில்,ஜனநாயகமும் இஸ்லாத்திற்கு உட்பட்டது தான் என்று கூறுகிற தவ்ஹீத்வாதி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்ல மாட்டான்.
இது இரண்டாவது அடிப்படை.
ஜனநாயகம் என்பது இஸ்லாத்திற்கு உட்பட்ட விஷயம் தான் எனும் பொழுதுஜனநாயக ரீதியில் நடத்தப்படும் தேர்தலும் கூட இஸ்லாத்திற்கு உட்பட்டது தான் !!!
அதை ஹராம் என்று யாரும் சொல்லக்கூடாதுசொன்னதும் கிடையாது. நீங்கள் குறிப்பிடக்கூடிய சகோ. பிஜே கூட தேர்தலில் போட்டியிடுவதை தவறு என்று ஒரு போதும் சொன்னது கிடையாது. ஒன்றை செய்வதால் மார்க்கத்தை புறக்கணிக்க வேண்டிய சூழல் வருமானால் அதனை காரணமாக கொண்டு அதை செய்யாமல் இருக்கலாம் என்கிற அடிப்படையில்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றால் நமது கொள்கையை பல சந்தர்ப்பங்களில் அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன் காரணமாக,தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்து தமது இயக்க நிர்வாகிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார் என்பது தான் விஷயமே தவிரதேர்தலே ஹராம் என்று அவரும் சொன்னதில்லைவேறு எவரும் சொன்னதில்லை!!
தேர்தலில் போட்டியிடுவதாலேயே ஒருவர் மார்க்க வரம்பை மீறி விட்டதாக அர்த்தம் இல்லை. அதில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக அவர் செய்யும் செயல்கள் அவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும் என்பதற்கு நிகழ்காலஉதாரணங்களாக சமுதாய மானம் காத்த (?) பலர் உள்ளனர் !
ஆகதேர்தலில் போட்டியிடுவதையே தவறு என்று ஒரு காலத்திலும் பிஜே சொன்னது கிடையாது என்பது முதலாவது அடிப்படையான செய்தி.
அடுத்துசில சட்டங்கள் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்றால் அதை பைலாவில் காட்ட வேண்டும் என்று கேட்டு,எதை கேள்வியாக கேட்க வேண்டும் என்கிற அடிப்படை சிந்தனை கூட உங்களுக்கு இல்லை என்பதை நீங்கள் காட்டியுள்ளீர்கள் .
திருடினால் மூக்கை அறுக்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார் என்று வைப்போம். அதெப்படிஅப்படியொரு சட்டம் நம் நாட்டு அரசியல் அமைப்பில் இல்லையேஎன்று கேட்கும் போதுஅப்படியொரு சட்டம் இல்லை என்று அரசியல் அமைப்பில் காட்டுங்கள் என்று அவன் கேட்பதற்கும்,உறுப்பினர்களை பைலா சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்பதை பைலாவில் காட்டுங்கள் என்று கூறுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
சகாத் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று குர் ஆனில் அல்லாஹ் எட்டு வகையான மனிதர்களை கூறுகிறான். அந்த எட்டில் அடங்காதஎல்லா ஐந்து வயது குழந்தையும் சகாத் பெற தகுதியானவர்கள் என்று ஒருவன் சொன்னால் அவனை நோக்கி என்ன கேட்போம்?
அல்லாஹ்யார் யாருக்கெல்லாம் சகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளான்அந்த பட்டியலில் ஐந்து வயது குழந்தை இல்லையே என்று கேட்போம்.
ஐந்து வயது குழந்தைக்கு சகாத் வழங்க வேண்டியதில்லை என்கிற ஷரத்தை குர் ஆனிலிருந்து காட்டுங்கள் பார்ப்போம்,என்று அந்த நபர் திருப்பிக்கேட்டால் அந்த நபரை எங்கு கொண்டு போய் சேர்க்க?
அதே நிலை தான் முகவை அப்பாஸின் நிலையும்!
சிந்தித்து புரிய தான் அறியவில்லை என்றால் ஒன்றை படித்து புரிந்து கொண்டு அதன் பிறகாவது வாதங்கள் வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் நிலைப்பாடு குறித்த ஒரு சட்டம் யாரை எல்லாம் கட்டுப்படுத்தும் என்பதை தவ்ஹீத் ஜமாத்தின் பைலாவிலேயே தெளிவாக சொல்லியுள்ளனர். அந்த பட்டியலில் உறுப்பினர்கள் இல்லை ! யாரையெல்லாம் அந்த சட்டம் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளதோஅவர்களை தவிர மற்றவர்களை அது கட்டுப்படுத்து என்பது அதிலேயே அடங்கியுள்ள சாதாரண உண்மை!
நான்கு பேரை ஒரு சட்டம் கட்டுப்படுத்தும் என்றால் ஐந்தாவதுநபரையும் ஆறாவது நபரையும் அது கட்டுப்படுத்தாது என்பது தான் பொருள். ஆறாவது நபருக்கு இதில் விதிவிலக்கு உள்ளது என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதாஎன்று கூமுட்டையாக இருந்தாலே தவிர வேறு எவரும் கேட்ககூடாது!
அடுத்துஉறுப்பினர் இந்த தவறை செய்யலாம் என்று அனுமதித்து விட்டுபிறகு அவர்கள் நிர்வாகத்தில் வரக்கூடாது என்று சொல்வது ஏன் என்று கேட்கிறீர்.
இதுவும்ஒரு அரைவேக்காட்டுதனமான கேள்வி..
உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற அனுமதி வழங்கும் போதுதேர்தலில் போட்டியிடுபவர்கள் நிர்வாகியாக ஆக முடியாது என்கிற சட்டம் பைலாவில் இல்லாமல் இல்லை!
ஏதோஇவ்வாறு அனுமதி கொடுக்கிற சமயத்தில் பைலாவில் அத்தகைய சட்டமே இல்லாதது போலவும்அனுமதியையும் கொடுத்து விட்டுஅதன் பிறகு பைலாவில் புதிதாக சட்ட திருத்தம் செய்துஅனுமதி வழங்கப்பட்டவர்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது போலவும் கேட்கிறீர்கள் !.
உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற அனுமதியை வழங்குகிற நேரத்திலேயேஅவ்வாறு தேர்தலில் போட்டியிட்டால் நிர்வாகப் பொறுப்பில் வர முடியாது என்கிற சட்டத்தையும் சேர்த்தே தான் சொல்கிறார்கள். அதாவது,அத்தகைய சட்டம் பைலாவில் உள்ளது என்பதை அவர்கள் அறிகிற வகையில் தான் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற அனுமதியையும் வழங்குகிறார்கள் எனும் போது, நிர்வாகியாக விரும்பாதவர்கள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற சட்டம் இதனுள் ஒளிந்துள்ளது .
· தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினராகிய நான் தேர்தலில் போட்டியிட்டால் அதனால் எனது உறுப்பினர் தகுதியை நான் இழக்க மாட்டேன் என்பதை நான் அறிந்து தான் வைத்திருக்கிறேன்.
· அதோடுஇவ்வாறு தேர்தலில் போட்டியிட்டால்தவ்ஹீத்ஜமாத்தின் நிர்வாக பொறுப்பு எதிலும் நான் அங்கம் வகிக்க முடியாது என்பதையும் சேர்த்தே தான் நான் அறிந்து வைத்துள்ளேன்.
ஆகஇந்த வாதமும் உங்கள் அரைவேக்காட்டு சிந்தனையையே காட்டுகிறது.
அடுத்துநிர்வாகிகள் தான் தவறு செய்யக்கூடாது,உறுப்பினர்கள் எல்லா தவறுகளையும் செய்யலாம் என்று சொல்வீர்களா ? என்று கேட்கிறீர்.
ஒரு விஷயத்தில்இதை இவர்கள் எல்லாம் செய்யக்கூடாது என்று சட்டம் இட்டால்மற்றவர்கள் செய்யலாம் என்று நான் அனுமதி கொடுத்ததாக ஆகாது.
யார் யாரெல்லாம் செய்யக்கூடாது என்று நான் தடுதிருக்கிறேனோஅவர்கள் அதை மீறினால்,தண்டிக்கப்படுவார்கள்தண்டிக்கிற அதிகாரம் எனக்கு உள்ளது,இவர்கள் அல்லாதவர்கள் அதை செய்தால் அவர்கள் விஷயத்தில் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது தான் இதனுடைய பொருள்.
ஒரு தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள். தமது பிள்ளைகளிடம் , "யாரும் புகை பிடிடிக்ககூடாதுயாரும் மது அருந்தக்கூடாது,யாரும் அந்நிய பெண்களை அழைத்துக்கொண்டு தனியாக பஸ்ஸில் செல்லக்கூடாது என்று கட்டளையிடுகிறார் என்று வைப்போம்.
அதெப்படிஇந்த நான்கு பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த கட்டளையாஅப்படியானால்உங்கள் பக்கத்துக்கு வீட்டு நபரின் மகன் இதை செய்யலாம் என்று அனுமதி கொடுக்கிறீர்களாஎன்று கேட்டால் அவனை என்னவென்பீர்கள்?
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்எதையெல்லாம் நிர்வாகிகள் செய்யக்கூடாது என்று பட்டியலிடப்பட்டுள்ளதோ,அவை அனைத்தும் ஒரே தரத்திலான தவறுகள் கிடையாது.
எது மார்க்கத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதோ,அதை நிர்வாகியும் செய்யக்கூடாதுஉறுப்பினரும் செய்யக்கூடாதுஏன்தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான கபுர் வணங்கியும் தான் செய்யக்கூடாது!
வட்டி வாங்குவது , விபச்சாரம் செய்வதுமது அருந்துவது போன்ற செயல்கள்மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்கிற வகையில் அதை யாருமே செய்யக்கூடாது என்பது தான் ஜமாத்தின் நிலை.
அதே சமயம்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எந்த குர் ஆன் வசனமும் சொல்லவில்லை. குர் ஆன் தடுக்காத ஒன்றை நாம் செய்யவும் செய்யலாம்செய்யாமல் தவிர்ந்து கொள்ளவும் செய்யலாம் என்கிற வகையில் தேர்தல் விஷயம் மற்ற தவறுகளிலிருந்து வேறுபட்டு தான் நிற்கிறது.
அப்படியானால்நிர்வாகியாக இருந்த பாக்கரைபெண் பித்தன் என்பதால் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டும் விலக்கியது ஏன்நிர்வாகியாக இருக்க முடியாதுஉறுப்பினராக இருக்கலாம் என்று விட்டு வைக்க வேண்டியது தானேஎன்று கேட்கிறீர்.
பாக்கர்தேர்தலில் போட்டியிட்டுஅதனால் அவரை நீக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டிருந்தால் அப்படி முடிவெடுதிருப்பார்கள்.
அந்நிய பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டதால் அவருக்கு அத்தகைய சட்டம் பொருந்தாது.
உறுப்பினர் என்பது வேறு நிர்வாகி என்பது வேறு.
உறுப்பினருக்கு அந்த இயக்கத்தின் நிர்வாக விஷயங்களில் யாதொரு தொடர்பும் இருக்காது. இயக்கத்தின் நியாயங்கள் அநியாயங்கள் எதற்கும் அவர் பொறுப்பாக மாட்டார்.
ஆனால்நிர்வாகி என்பவர் அப்படியல்ல. இயக்கம் செய்கிற செயல்களுக்கு அவர் பொறுப்புஅதே போன்று அவர் செய்வதற்கு இயக்கம் பொறுப்பு.
ஆகநிர்வாகியாக இருக்கிற ஒருவர்பெண்ணுடன் சல்லாபிதுக்கொண்டிருகக்கூடிய நிலையில் மாட்டிக்கொள்ளும்பொழுதுஅவரை நீக்கி இயக்கத்தின் பரிசுத்த நிலையை பறைசாட்டியாக வேண்டும் என்கிற கட்டாயம் அங்கே ஏற்படுகிறது. இயக்கத்தின் கண்ணியத்திற்கும்அதன் ஒழுக்கத்திற்கும் வைக்கப்படுகிற check இது என்பதால்அதை களைவதற்குசம்மந்தப்பட்ட நபரை அடிமட்ட உறுப்பினர் அந்தஸ்தை கூட வழங்காத அளவிற்கு தூக்கி வீசினால் தான் சாத்தியப்படும். இதுகட்டமைப்புடனும்ஒழுக்கத்துடனும் இயக்கங்கள் நடத்துபவர்களுக்கு புரிகிற ஒன்று.. உங்களுக்கு புரியாததில் எந்த ஆச்சர்யமும் இல்லை!
நமது வீட்டில் வேலைக்காரன் ஒருவன் இருக்கிறான். நமது மகனும் இருக்கிறான்..
வேலைக்காரன் வெளியே ஏதாவது ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றிக்கொண்டிருப்பது நம் காதுக்கு எட்டினாலும்அதை நாம் கண்டுக்கொள்ள மாட்டோம்அல்லதுஅவனை அழைத்து லேசாக அதட்டி விட்டு பேசாமல் விட்டு விடுவோம்.
அதுவேநமது மகன் அவ்வாறு செய்ததாக ஒரு செய்தி கிடைத்தால் என்ன செய்வோம்?
வீட்டை விட்டு வெளியே பொ என்று துரத்துவோம்.
என்னப்பா அநியாயம்ஒரு வேலைக்காரன் தவறு செய்யும் போது அவனது வேலையை நீ பறிக்கவில்லைஅதுவே உன் மகன் அவ்வாறு செய்தால்வீட்டை விட்டே துரத்தி விட்டாயே,உன் வீட்டு வேலைக்காரனாகவாவது உன் மகனை வைத்துக்கொள்ள கூடாதாஎன்று யாராவது கேட்டால் அது எவ்வளவு அபத்தமான கேள்வியோஅதே போன்று இருக்கிறது உங்கள் கேள்வியும்.
ஒரு நபர்நமது முழு நம்பிக்கையையும் பெறுகிற வகையில் பல நாள் இருந்து விட்டுநமது நம்பிக்கைக்கு விரோதமாக அவர் செயல்பட்டால்அவருக்கு கீழ் தரத்தில் நாம் கருதக்கூடிய அந்தஸ்தில் கூட அந்த நபரை நாம் வைக்க மாட்டோம்.
சரிஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்,மேல்பட்டாம்பாக்கத்தில்யூசுப் என்கிற தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட போது,நீங்களும் உங்களது தானே தலைவர் பாக்கரும் தவ்ஹீத் ஜமாத்தில் அங்கம் வகித்து அதை நியாயம் என்று தானே சொன்னீர்கள் .
உறுப்பினர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றால் அதை பொது செயலாளரான பாக்கர் ஏன் கண்டிக்கவில்லை?
எந்த பெண்ணை எந்த பேருந்தில் அழைத்துக்கொண்டு செல்லலாம் என்கிற சிந்தனையில் இருந்ததா இயக்கத்தில் நடப்பவையெல்லாம் கவனிக்க அவருக்கு நேரமில்லையா ?இல்லை எனில் வேறு என்ன காரணம்?
ஆகஎந்த வகையில் பார்க்கிற பொழுதும்எந்த கூறும் இல்லாத மூலை மழுங்கிய வாதங்களாக உள்ளன உங்கள் வாதங்கள்.
இது போன்று எழுதி பலருடைய நேரத்தை கெடுப்பதை விட,வேறு ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவிடுங்கள்.
- நாஷித் அஹமது ஆக்கத்திலிருந்து

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons