Thursday, September 29, 2011

போராளிகளின் போர் குணம் ,பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு




நெல்லை, செப். 30:
கடன் பத்திரத்தை வைத்து கொண்டு பாளை நகர தலைவரை மிரட்டிய வழக் கில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாளை தில்லை கூத்த நாயனார் தெருவை சேர்ந்தவர் ஷேக்முகமது(34). இவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் பாளை நகர தலைவராக இருந்து வந்தார். கட்சியின் முழு நேர ஊழியரான இவருக்கு, அமைப்பு சார்பில் மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்த முடியாது என்பதால் அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஏற்கனவே மேலப்பாளையத்தை சேர்ந்த பிஸ்மி காஜா என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடனாக பெற்றுள் ளார். கொஞ்சம், கொஞ்ச மாக அக்கடன் தொகையை அவர் திருப்பி செலுத்தி விட்ட நிலையில் கடன் பத்திரத்தை பிஸ்மி காஜா திருப்பி தர மறுத்துள்ளார்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந் தியா அமைப்பின் நிர்வாகிகள் கடன் பத்திரத்தை வைத்து கொண்டு, கட்சியை விட்டு விலக நினைத்த ஷேக் முகமதுவை மிரட்டுவ தாக அவர் மேலப்பாளை யம் போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் முசல்காலிம், முசாபா ஜாபர்அலி, பிஸ்மி காஜா, சாகுல்ஹமீது உஸ் மானி, ஹைதர் அலி, பக்கீர்முகமது லெப்பை, பஷீர், உஸ்மானி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த னர். இதில் சாகுல் ஹமீது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் கிழக்கு மாவட்ட தலைவராகவும், ஹைதர் அலி செயலாளராகவும் உள்ளனர்.


                             thanks to  http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons