Saturday, September 10, 2011

போலிஸ் அராஜகத்தை எதிர்த்து



தாவா சென்டரில் அத்துமீறி நுழைந்த காவல் துறையை எதிர்த்து நடந்த மாபெரும் ஆர்பாட்டத்தில் பெரும் திரளானோர் பங்கேற்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
09 செப்டம்பர் 2011 மாலை 05:10
தஃவா சென்டரின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நமதூர் மெயின் ரோட்டில் வைத்து மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது. மக்கள் உணர்வுடன் பெரும் திரளாக கலந்து கொண்டு கோசங்களை உரக்க உரைத்து கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
IMG_6569
IMG_6579
IMG_6590_copy_copy
      இந்த ஆர்பாட்டத்தில் ஆய்வாளர் பார்த்திபன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சகோதர அமைப்புகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பதாக தஃவா சென்டர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
IMG_6594
IMG_6593
IMG_6588
மேலும் காயல்பட்டணத்தின் மக்கள்கள் ஏமாளிகள் என்றும் கோழைகள் என்றும் கூறி இளிவுபடுத்திய ஆய்வாளர் பார்த்திபனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பொது மக்களும் இதனை அமோதித்து உரக்க கூறினர்.
IMG_6578
IMG_6596
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோசங்களாக.,
 தஃவா சென்டரில் அத்துமீறிய காவல்துறையை கண்டித்தும் காவல்துறையைக் கலங்கப்படுத்திய ஆய்வாளர் பார்த்திபனை கண்டித்தும்
 போலிஸ் அராஜகத்தை நிறுத்த வேண்டும் என்றும்
 ஃபர்தாவை இழிவுபடுத்திய ஆறுமுகநேரி பெண்காவலரைக் கண்டித்தும்
 தஃவா சென்டர் நிர்வாகிகளுக்கு FIR மிரட்டல் விடுத்ததைக் கண்டித்தும்
 சட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும்
 அரசியல் சாசனத்தின் உரிமைகளை காக்க வேண்டும் என்றும்
 மேலும் ஆய்வாளர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரே குரலில் உரக்க பதிவு செய்தார்கள். 
IMG_6573
IMG_6595
1_copy_copy_copy
2_copy_copy_copy
IMG_6599
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
காயல்பட்டணம் தஃவா சென்டரில் கடந்த 27.08.2011 சனிக்கிழமையன்று சட்டத்திற்குப் புறம்பாக இரவில் ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு. பார்த்திபன் தலைமையில் அத்துமீறி நுழைந்து அமைதியையும் கண்ணியத்தையும் எப்போதும் விரும்புகின்ற காயல்பட்டணத்தின் மக்களிடையே வீண் பதற்றத்தை ஏற்படுத்திய காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்திய அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்துவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்துகிறோம்.
IMG_6602
IMG_6601
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு ஒற்றுமை வெளிப்படுத்தினார்கள்.
இறுதியில், தஃவா சென்டர் நிர்வாகிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தனர்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons