கடந்த 22-9-2011 அன்று உதகை படகு இல்லம் செல்லும் வழியல் சாலையோரம் வக்ஃபுக்கு சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் இந்து முன்னனியினர் தங்களது கொடியை வைத்து வக்ஃபுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றனர்.
இதை பார்த்த ஊட்டி காந்தல் கிளை நிர்வாகிகள் உடனே அருகில் உள்ள G1 காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார் புகார் செய்தனர். காவல் துறை ஆய்வாளர் ”அது வக்ஃபு நிலம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?” என்று கேட்டு வழக்கு ஏதும் பதிவு செய்யவி்ல்லை.
உடனே ஊட்டி காந்தல் கிளை நிர்வாகிகள் வக்ஃபு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ”அது வக்ஃபு நிலம் தான்” என்பதற்கான அதாரத்தை திரட்டி மறுநாள் அதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
ஆதாரத்தை பார்த்த காவல்துறையினர் உங்கள் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வக்ஃபு நிலத்தில் அத்துமீறி வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியினரின் கொடியை அகற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment