Monday, September 5, 2011

ஆயங்குடி சமாதின் ஐந்து தீர்மானங்களும்! அதற்கான பதிலும்!!


அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.(21:18)



மேலே உள்ள நோட்டிசை படித்து விட்டு தயவு செய்து யாரும் சிரிக்கவேண்டாம், இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஜாஹிலியாக்களா? என்றும் என்ன வேண்டாம், இவர்கள் தான் நம் பிரசார பீரங்கிகள், இந்த நோடிசிற்கு பொது மக்களிடம் விளக்கம் சொல்ல தேவை இல்லை என்றாலும், இதை எழுதிய அறிவுக்கடளுக்கு? சில விளக்கங்களை சொல்லியாகவேண்டும், என்னுடைய பதிமூன்று வருட ஏகத்துவ வரலாற்றில் எத்தனையோ, ஏகத்துவ எதிர்ப்பு பிரசுரங்களை படித்துள்ளேன், அவதூறு பிரசுரங்கள் ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டுள்ளன, ஆனால் இதுபோன்ற உப்புச்சப்பில்லாத என்ன எழுதவேண்டும் என்றே தெரியாமல் "தொப்பி போடதே என்கிறார்கள் இவர்கள் முஸ்லிமா?" என்று கேட்ட உலக மகா காமிடி பிரசுரத்தை நான் பார்த்ததே இல்லை, சரி விசயத்திற்கு வருவோம், தொப்பி போடதே என்று நாங்கள் என்றாவது சொல்லி இருக்கின்றோமா? எங்களுடைய தாயிக்கள் யாரவது அப்படி பேசியுள்ளார்களா?, எங்களுடைய எந்த புத்தகத்திலாவது அப்படி எழுதி இருக்கின்றோமா? அப்படி ஏதாவது ஒரு ஆதாரத்தை பிரசுரம் தயாரித்த மேற்படியாரால் காட்டமுடியுமா?, எங்கள் மார்க்க அறிஞர்களில் சிலபேர் தொப்பி போடத்தானே செய்கிறார்கள் அப்படி இருக்க தொப்பி போடதே என்று நாங்கள் எப்படி சொல்லுவோம்?, ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்வது போல்  தொப்பி போடதே என்று நாங்கள் பிரச்சாரம் செய்வதாகவே வைதுக்கொவோம், அதனால் நாங்கள் காபிர்கள் ஆகிவிடுவோமா? பிரச்சாரம் செய்யும் நாங்கள் காபிர் என்றால், நஜாத் காரர்கள் அல்லாத தொண்ணூறு சதவிகித சுன்னத் ஜமாஅத் பொதுமக்கள் அதை அமல் படுத்துகிறார்களே அவர்கள் எல்லாம் யார்?, தொப்பி தொழுகைக்கு மட்டும் தான் என்றால் தொழுகை நேரத்தில் மட்டும் தான் நாம் முஸ்லிமா? மற்ற நேரத்தில் இல்லையா?, எங்களை பொறுத்தவரை தொப்பி அணிவது மார்க்க கடமை அல்ல, அதை அணிந்து தான் தொழவேண்டும் என்று சொல்வது தவறு, விரும்பினால் அணித்து கொள்ளலாம், இல்லை என்றால் விட்டுவிடலாம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு, இது தவறு என்றால் மேற்படியார் தொப்பி போட்டுத்தான் ஆக வேண்டும் என்பதற்கு குர்ஆனில் இருந்தோ, பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் இருந்தோ ஆதாரம் காட்டட்டும், நாமும் தொப்பியை அணிந்துக்கொள்வோம் அதில் எங்களுக்கு எந்த விருப்பு வெறுப்பும் இல்லை, 
நாமாவது தொழுகையில் மட்டும் தொப்பியை போட்டுக்கொல்கின்றோம், சீக்கியர்கள் தூங்கும் பொழுதும் தலைப்பாகையை அகற்றுவது இல்லை அதனால் அவர்களை முஸ்லிம் என்று சொல்வீர்களா?, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சீருடையே தொப்பிதான் அதனால் அவர்களை முஸ்லிம் என்று சொல்லிடலாமா?, 
இவ்வளவு ஏன் நித்தியானந்தா கூட பளபளவென்று அழகான தலைப்பாகை கட்டியுள்ளார் அதனால் அவரை முஸ்லிம் என்று சொல்லிவிடலாமா? ஒருவருடைய தோற்றத்தை வைத்தோ? உடையை வைத்தோ முஸ்லிம் என்று சொல்லிவிட முடியாது, அவனுடைய செயல்களும் எண்ணங்களுமே இறைவனிடத்தில் முஸ்லிமாக முஹ்மினாக மாற்றும், ஆர்,எஸ்,எஸ், இயக்கத்தில் இருந்து பணம் வர யாருக்கு அதிக வாய்ப்பிருக்கின்றது?, அவர்களுடைய கொள்கை என்ன தெரியுமா? இதியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருக்கவேண்டும், இல்லை என்றால் எல்லா மதத்தினரும் ராமரையும் கடவுகாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான், அதாவது ஒன்று நீ ஹிந்துவாக இரு இல்லை என்றால் முஸ்லிமாக இருந்து அல்லாஹ்வை வணங்குவது போல் ராமரையும் வணங்கு என்கிறார்கள், இவர்கள் கொள்கை யாருடைய கொள்கைக்கு ஒத்து போகின்றது என்றால், அல்லாஹ்வை மட்டும் வணங்கமால், நல்லடியார்கள், அவ்லியாக்கள், ஷெய்குமார்கள் என்று எல்லோரையும் வணங்கும் உங்கள் கொலையோடுதான் ஒத்துபோகின்றது, நாங்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்காதே என்கின்றோம் ஆகவே ஆர்.எஸ்.எஸ் , காரர்களுக்கு நாங்கள் தான் முதல் எதிரி, இறுதியாக உங்களை அறியாமலேயே நீங்கள் செய்துள்ள துவாவை அர்த்தம் செய்து பாருங்கள், நஜாத் என்ற ஈடேற்றத்தை விட்டும், தவ்ஹீத் என்ற ஏகதுவதைவிட்டும்  பாதுகாவல் தேடுகிறீர்கள், அல்லாஹ் இந்த ஜமாத்திற்கு செய்த மிகப்பெரும் பாக்கியம் என்ன தெரியுமா? எதிரிகள் எங்களை திட்டுவதாக இருந்தாலும் நஜாத்காரன்(வெற்றியாளர்கள்), தவ்ஹீத்காரன் ( ஏகத்துவவாதிகள்) என்று தான் சொல்லவைக்கின்றான், அல்லாஹ்விற்கே எல்லாபுகழும், சரி இவர்களின் தீர்மானத்திற்கு  வருவோம் 

படுபயங்கரமான? அந்த தீர்மாங்களை மேலே உள்ள அவர்கள் நோடிசில் பார்த்துகொள்ளுங்கள் பதிலை மட்டும் இங்கு பதிகிறேன் 

1) இதுபோன்ற மிரட்டல்கள் எல்லாம் எங்களுக்கு புதிதல்ல, உண்மையான ஆண் மகனாக இருந்தால் மேற்படியார் இதை செய்துகாட்டட்டும், சட்டப்படி நாங்கள் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.

2) ஜமாதோ ஜமாஅத் பெயரில் அதன் மெம்பர்களோ கலந்துகொள்ளவில்லை என்றால் கல்யாணம் நின்றுவிடப்போவதில்லை, பொதுமக்களும் நடுநிலையாளர்களும் வந்தால் போதும், 

3) உங்கள் பாத்திரங்களில் சமைத்தால் தான் சோறு வேகும் என்று இல்லை, உலகம் ரொம்ப பெருசுப்பா 

4) இதுபோன்ற மிரட்டல்கள் எல்லாம் எங்களுக்கு புதிதல்ல, உண்மையான ஆண் மகனாக இருந்தால் மேற்படியார் இதை செய்துகாட்டட்டும், சட்டப்படி நாங்கள் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.

5) இந்த உச்சகட்ட மிரட்டலையும் நாங்கள் சட்டப்படி சந்திப்போம் , இப்படியெல்லாம் மிரட்டினால் கொள்ளையை விட்டுவிட்டு உங்களிடம் மண்டிய்ட்டுவிடுவோம் என்று எதிர்பார்ப்பது நகைப்பிற்குரியது.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.(17:81)

                                                                                                                                    ...அபூ ஜஸ்ரா 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons