Tuesday, September 27, 2011

முக்கிய அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை!

                                                                                                                   நம் ஜமாஅத்தின்  மாணவரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சர்வத்கான் என்பவர் கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பொன்னாடை போர்த்துவது உள்ளிட்ட ஜமாஅத்திற்கு கலங்கம் எற்படும் வகையிலும் செயல்பட்ட காரணத்தால் ”நம் ஜமாஅத்தின்  அனைத்து பொறுப்புகளிலிருந்தும்” நீக்கப்படுகிறார்.


இப்படிக்கு
மாநில நிர்வாகம்
இது குறித்து சம்பந்தட்டவருக்கு அனுப்பட்ட மின்னஞ்சல் கடிதம்
சர்வத் கான் அவர்களுக்கு,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
கடந்த 25/09/2011 கூத்தாநல்லூரில் நடந்த ஒரு இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் அவர்களின் உத்தரவை மீறி கலந்து கொண்டதற்காகவும், அங்கு நடைபெற்ற ஜமாஅத்திற்கு எதிரான மேலும் மார்க்கத்திற்கு முரணான சால்வை போர்த்துவது போன்ற அநாச்சரங்களில் தங்களை இணைத்து கொண்டதற்காகவும் தங்களை மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து விலக்குகிறோம்.
இதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் பொதுச்செயலாளர் அவர்களால் விரிவாக விளக்கப்பட்டது. அதையும் மீறி வாக்கு கொடுத்துவிட்டேன் என்ற காரணத்தை சொல்லி கலந்து கொள்வது ஏற்கதக்கத்தல்ல, ஏனெனில் நீங்கள் என்னிடம் வாங்கிய அனுமதி ஒரு சாதாரண ஊர்கூட்டத்திற்கு மட்டுமே, விரிவாக சொல்ல வேண்டும் எனில் அக்கூட்டத்தில்(சாதரண மசூரா) அவ்வூரை சார்ந்த மக்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனவும் தவ்ஹீதுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிரான கருத்துக்களோ, நடைமுறைகளோ இருக்காது என்று நீங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நோட்டீசு அடிக்கப்பட்டதும், இந்தக் கூட்டம் ஒரு பொது மேடையில் நடப்பதும், இதில் கூத்தாநல்லூரை சாராத பல அரசியல் வாதிகள் கலந்து கொள்வதும், ஒரு இயக்கம் தொடங்கப்படுவதும்  தெரிந்தவுடன் நானும் , மாநில நிர்வாகமும் உங்களை தடுத்தை அம்மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியிருக்க வேண்டும்.
ஏனெனில் அம்மக்கள் இதில் நீங்கள் கலந்து கொள்வதற்காக பல விஷயங்களை மறைத்துள்ளனர். அம்மக்கள் மறைக்க இல்லையென்றால் நீங்கள் என்னிடம்  மறைத்து அனுமதி பெற்றதாகிவிடும். இரண்டுமே தவறு எனவே கொடுத்த வாக்குக்காக சென்றேன் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.
மாவட்ட நிர்வாகம் உங்கள் மீது காழ்புணர்ச்சி காட்டுகிறது என்பதும் , ஜமாத் உங்களை மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கிறது என்ற வாதமும் உங்களால் ஆதாரங்களோடு விளக்கப்படவில்லை
உங்கள் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நீங்கள் சொல்வது போல் யாருடைய மெருகேற்றிய பேச்சினாலும் எடுக்கப்பட்டதல்ல மாறாக நிகழ்ச்சி நடத்தியவர்களின் வலைத்தளத்தில் நீங்கள் போர்வை போர்த்தியதும், இளைஞர் இயக்கத் தொடக்க விழாவில் இடம்பெற்றுள்ள உங்கள் பெயரும்  படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.
சில மனிதர்களை விட ஜமாஅத்தின் கொள்கையும், தூய இஸ்லாமிய வழிமுறையும் மிக முக்கியம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!



மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களும், SDPI மாநில செயலாளர் A. அபூபக்கர் சித்திக்அவர்களும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் மப்ஸ் ஒன்றாக உணவருந்திய பொழுது 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons