Sunday, July 24, 2011

நாடு கடந்த பொய்யனின் புளுகு மூட்டை!


இந்தியாவில் பொய் சொல்வதையே தன் கொள்கையாகக் கொண்டு இன்றுவரை அதையே தன் கம்பெனியின் பைலாவாக வைத்துக் கொண்டிருக்கும் பொய்யன் சமாத்தினர்இந்தியாவில் பொய் சொன்னது போதாது என்று இலங்கை சென்று அங்கு கூடிய கூட்டத்தை ஏதோ இவர்கள் தான் கூட்டியதாக பீலா விட்டு அலைகின்றனர்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என போராட்டம் நடத்தும் இந்த ஈனபிறவிகள் அங்கே சென்று முஸ்லிம்களை சந்தித்து விட்டு வந்திருக்கின்றனர். ஆனால் அங்கே சென்று இவர்கள் தமிழ் ஈழம் குறித்துப் பேசினால் அந்த மக்கள் இவர்களை செருப்பால் அடித்தே விரட்டியிருப்பார்கள்.

ஆனால் இடத்திற்கு தகுந்தார் போல தங்களின் நிறங்களை மாற்றுவதில் வல்லவர்கள் இவர்கள். சரி தொலையட்டும்,,.செயலில் தான் சுத்தம் இல்லை. பிறரின் பணங்களை ஆட்டையை போடுவதும்பிஜேவின் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதும்,விபச்சாரத்தினையும் அதனை விரும்புவர்களையும் ஒன்றினைத்ததும் இவர்களின் தொழிலாக இருந்தது. ஆனால் பேச்சிலாவது சுத்தம் வேண்டாமா?

இவர்கள் இலங்கைக்கு சென்றார்கள். சரி உண்மைதான். அங்கே கூட்டம் கூடியது. அதுவும் உண்மைதான்ஆனால் அது எவ்வளவு என்பது தான் இப்போது விசயமே!

சரி அவர்கள் வாதப்படி 5000 பேர் கூடியதாகவே இருக்கட்டும். அந்த இடத்தில் இவர்கள் தவ்ஹீதைச் சொல்லவா போனார்கள்கிடையவே கிடையாது.பிஜேவை எதிர்ப்பதற்காக மத்ஹபு மவ்லீதுகளைக் கூட ஆதரிப்பதற்கு தயாராகி விட்ட இந்த பொய்யன் கூட்டம் இலங்கையில் கூட்டம் நடத்த தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா?

கலாவெவ தப்லீக் ஜமாத்திற்கு உற்பட்ட ஜும்மா பள்ளி வாசல். இங்கே போய் பொய்யன் தவ்ஹீதைச் சொன்னால் அவர்கள் கல்லால் அடிப்பார்கள். பொய்யன் வகையறாக்கள் அங்கே சென்று தவ்ஹீதைச் சொல்லவில்லை. மாறாக இளைஞர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் தான் பொய்யன் உரையாற்றினார். அதுமட்டுமல்ல. பொய்யன் கூட்டம் இலங்கைக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரிலேயே போகவில்லை. அங்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை கீழே பாருங்கள்.

 மீடியா வேர்ல்ட்ன் ஓனராகத்தான் பொய்யன் அங்கே போயிருக்கிறார். ஆனால் இவர்கள் ஏதோ தவ்ஹீதைச் சொல்லப்போனதாகவும் அங்கே பெரும் கூட்டம் கூடி இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாகவும் சமுதாய பொய்யன் ரிப்போர்ட்டில் பக்கத்து பக்கம் கதை விடுகிறார் பொய்யன்.

பேரா.அப்துல்லா யாவாரம்:
கலாவெவெ தப்லீக் ஜமாஅத் பள்ளியில் கூடிய கூட்டம் முழுக்க முழுக்க பேரா.அப்துல்லா அவர்களுக்காக கூடிய கூட்டம். ஆனால் அதை பில்டப் செய்து எழுதும்பொய்யன் கூட்டம் ஏதோ பாக்கரையும் பேச்சழகையும்,அறுந்த பிளேடு அண்ணன் சொங்கி மங்கியின் சிறப்புரையையும் காண்பதற்கு கூடியதாக இவர்களே இவர்களின் சமுதாய பொய்யன் ரிப்போட்டில் கதை அளந்து விடுகின்றனர். இப்படியும் சொன்னாலும் சொல்வார்கள். பார்த்தீர்களா! நாங்கள் இத்தனை சுன்னத் ஜமாஅத்தினரைக் கூட்டி பேசிவிட்டோம்,தவ்ஹீதை நிலைநாட்டி விட்டோம் என்று. ஆனால் முழுக்க முழுக்க அங்கே பொய்யன் வகையறாக்கள் பேசிய 20 நிமிடங்கள் பொதுவான இஸ்லாம் பற்றித்தான்.

ஆனால் பேரா. அப்துல்லா அவர்கள் பேசிய என்னைக் கவர்ந்த இஸ்லாம் என்ற உரையை கேட்பதற்காகத் தான் அங்கே கூட்டம் கூடியதே தவிரபொய்யன் வகையறாக்களுக்கு கூடியதாகச் சொல்வது மிகப்பெரிய காமெடியாகும். அதைவிட பெரிய கொடுமை என்ன தெரியுமாபொய்யன் ரிப்போர்டில் பேரா.அப்துல்லா பேசிய பிறகு தான் பொய்யன் உரையாற்றினார் என செய்து வெளியிட்டுள்ளனர்.

அடப்பாவிகளா! கேட்பவன் கேனயனாக இருந்தால் செங்கிஸ்கானுக்கு சிவகாசியிலே செருப்புக் கம்பெனி இருக்கு என்று சொன்னாலும் சொல்வார்கள் இவர்கள். அத்தனையும் பச்சைப் பொய். அயோக்கியத்தனம். கூட்டம் கூடும் வரை மைக் செட்டை செக் செய்வதற்கு ஹலோமைக் டெஸ்டிங்க் ஒன் டு திரீ என்று சொல்வார்களே!

அதேபோலத்தான் இந்த பொய்யன் வகையறாக்கள் முதலில் பேச பின்னர் பேரா.அப்துல்லா பேசினார். ஆனால் கூடிய கூட்டத்தினர் அனைவரும் சுன்னத் ஜமாத்தினர்முழுக்க முழுக்க அவர்கள் பேரா.அப்துல்லாவைப் பார்க்கத்தான் கூடினார்கள். சொல்லப்போனால் இந்த சில்லறைகள் அங்கே வருவதே அந்த மக்களுக்குத் தெரியாது. யாரோ சிலர் பேரா.அப்துல்லாவுக்கு பூனைப்படைப் போல செக்யூரிட்டியாக பாதுகாப்புக்கு வந்துள்ளனர் என்று தான் நினைத்துக் கொண்டுள்ளனர். காரணம் இந்தக் கூட்டம் முடிந்து அடுத்த நாள் இலங்கையில் வெளியாகும் தமிழ் தினசரி வீரகேசரி வெளியிட்ட செய்தியில் பேரா.அப்துல்லா பற்றி மட்டும் தான் இருக்கிறதே தவிர பொய்யன் பற்றியோ சொங்கி மங்கி பற்றியோ ஒரு எழுத்து கூட இல்லை.
விடிவெள்ளி செய்தி இதோ.
ஆனால் இவர்களே அடித்து இவர்கள் மட்டுமே படித்துக் கொள்ளும் சமுதாய பொய்யன் ரிப்போர்டில்ஏதோ இவர்கள் கூட்டிய கூட்டம் என்று பீலா விட்டுள்ளனர். பீஜேவை வைத்து இப்போது சீடி யாவாரம் செய்ய முடியாததால் பேரா.அப்துல்லாவை வைத்து சீடி யாவாரம் செய்யத்துவங்கி விட்டனர். பேரா. அப்துல்லா இதைப் புரிந்து கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.

தேர்தல் நேரத்தில் வடிவேலுவைப் பார்க்க கூடிய கூட்டத்தினரை திமுகவிற்கு கூடிய கூட்டம் என்று மக்கள் நினைத்துக் கொண்டது போலபேரா.அப்துல்லாவை பார்க்க கூடிய கூட்டத்தில் அவருடன் நின்று வளைச்சி வளைச்சி போட்டா எடுத்துக் கொண்டு வந்து இங்கே கதை விடுகிறார்கள்.

பேரா.அப்துல்லாவை வளைத்துப் போடும் முயற்சி:
செங்கிஸ்கான் பேசிய சீடிக்களை பொய்யன் சமாத் போடும் பொதுக்கூட்டங்களில் போட்டு விற்கிறார்கள். ஆனால் ஃபிரீயாகக் கொடுத்தாலும் செங்கிஸ்கானின் சீடிக்களை மக்கள் வாங்கிக் கொள்வதில்லை. அதையும் மீறி வற்புறுத்தி அவர்களிடம் அந்த சீடியைக் கொடுத்தால் அங்கிருக்கும் கரண்டு பொட்டியில் கையைக் கொடுத்து விடுவேன் எனச் சொல்லி அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவிடுகின்றனர். எனவே இப்போது சீடி யாவாரம் செய்ய ஆள் வேண்டும்.

ஆல்ரெடி கோவை அய்யூப்ஜாஹிர் நாயக் சீடிகள் பொய்யனின் பொதுக்கூட்டத்தில் விற்பனைக்கு வந்து விட்டன. இன்னும் ஷேக் அப்துல்லா சமாளி (எதைக் கேட்டாலும் சமாளிப்பார்) அவர்களின் சீடி மட்டும் தான் பாக்கி. அதுமட்டுமில்லாமல் 39 லட்ச ரூபாய் மோசடி மன்னன் சைபுல்லா ஹாஜாவையும் புக் செய்து விட்டார்கள். ஆனால் சைபுல்லா பேசினால் மேடைக்கு முன்பக்கம் இருக்கும் மைக்செட்காரனே உள்ளதை உள்ளபடி போட்டு விட்டு டீ சாப்பிட போய் விடுவான். ஆளே இல்லாமல் வெறும் பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துவார் சைபுல்லா. அதனால் தான் வேறு வழியில்லாமல் பேரா.அப்துல்லாவை எப்படியாவது வலை வீசி பிடித்து விட்டால் அவரை வைத்து சீடி யாவாரம் செய்து விடலாம் எனக் கருதி அவருக்கு பலமுறை வலை விரித்து விட்டது பொய்யன் கூட்டம். சில்வண்டு சிக்கும் ஆனால் சிறுத்தை சிக்காது என்ற ரீதியில் தான் பேரா.அப்துல்லா எஸ்கேப் ஆகி வருகிறார். பீஜேவைப் பற்றி அவரிடம் இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக்கொடுத்து அவரை பீஜேவின் எதிர்ப்பாளர் ஆக்கிவிட்ட இந்த பொய்யன் கூட்டம்,எப்படியாவது அவரை பீஜேவிற்கு எதிராக களமிறக்கி விடவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.

ஆக பேரா.அப்துல்லா சிக்குவாராஅவரை வைத்து சீடியாவாரம் பண்ண முடியுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எல்பிடன் அரங்கமும் பீஜேயும்:
எல்பிடன் அரங்கில் பீஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மை. ஆனால் இப்போது அது பொய்யனுக்கு வரவேற்பு கொடுத்தது என பீலா விடுகிறார் பொய்யன்.
பேரா. அப்துல்லாவுக்குத் தான் அந்த அரங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டதே தவிர பொய்யன் வகையறாக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏதோ இவர்களுக்காகத் தான் அந்த அரங்கத்தின் கதவு திறந்ததாக கதை விடுகிறார்கள். தனியாகப் போயிருந்தால் எல்பிடன் அரங்கின் காம்பவுண்டுக்குள் கூட இந்த குஜால் பார்ட்டிகளை அனுமதித்திருக்க மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி இந்த அயோக்கிய பொய்யர்கள் விடுதலைப்புலி பிரபாகரனின் தீவிர ஆதவாளர்கள் என்ற விசயம் இலங்கை அரசுக்கோ அந்த மக்களுக்கோ தெரிந்திருந்தால் இவர்கள் கதி அதோ கதிதான். பேரா அப்துல்லாவின் முகமூடியைப் போட்டுக்கொண்டு நைசாக இலங்கைக்குள் போய் விட்டு வந்து இப்போது ஏதோ எல்லாமே தங்களால் தான் என பீற்றிக் கொள்கிறார்கள்.

TNTJ தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்.


பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.

ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள்.
அவர்களுக்குள்ளேயே இந்த ஏகத்துவ தீபம் சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால், அந்த மஹதீ வழிகேடர்களால் இவர்களை அடித்து உதைப்பதைத் தவிர வேறு வழியை அவர்களால் கையாள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏகத்துவ சகோதரர்களை இதனால் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும் இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்கள் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில் அங்கே ஆய்வாளர் மற்றும் துனைக்கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே இவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர் அந்த வழிகேடர்கள். காவல்துறையில் போதிய பலம் இல்லை என்று கூறி காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். அதுமட்டுமின்றி இவர்களிடம், நீங்கள் எங்காவது தப்பித்து ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள் என இவர்களுக்கு அறிவுறையும்(?) வழங்கியுள்ளனர் காவல்துறையினர். இவர்களின் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஊர் சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கையில் காசும் இன்றி உடுத்திய ஆடையுடன் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்தனர். மஹதிகளின் வெறியாட்டத்தால் அகதிகளாக வந்திருக்கும் கொள்கைச் சகோதரர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரவனைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.

அந்த மஹதி வழிகேடர்களின் அயோக்கியத்தனங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று(21/07/2011) பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.,

பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தச் சகோதரர்கள் தங்களின் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தனர். வந்திருந்த எல்லோருமே கண்ணீர் விட ஆரம்பித்தனர்.
"எங்களுக்கு உடுத்துவதற்கு துணியில்லை, எங்கள் பிள்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லை, சொந்த ஊருக்குள்ளே நுழைய முடியவில்லை, நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைக்காக நாங்கள் இப்போது இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். என்ன ஆனாலும் எங்களின் கொள்கையிலோ, பிரச்சாரத்திலோ நாங்கள் பின்தங்கிட மாட்டோம். ஆனால் எங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியின்றி எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெறியாட்டம் நடத்திய அத்தனை பேரையும் கைது செய்து எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாங்கள் பிறந்த எங்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாட எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், இந்த வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்."
தப்பித்தோம் பிழைத்தோம் என சென்னை வந்த சகோதரர்கள் பத்திரிக்கையாளர் முன்பு கண்ணீர் மழ்க பேட்டியளிக்கும் வீடியோ காட்சி.


"அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்."
[அல் குர்ஆன் 61:8]

நன்றி www.tntj.net

Thursday, July 21, 2011

கொள்கை வீரர்களை கொச்சைப்படுத்திய சைபுல்லா


            சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள்  4

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் அனைத்து மக்களிடமும் வசூல் செய்து பொதுக் காரியங்களுக்குவாங்கப்படும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின், அந்த குறிப்பிட்ட கிளையின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என 2009 ஆம் ஆண்டின் இறுதியில் கோவை ரஹ்மத்துல்லா அறிவித்ததாகவும், அந்த மினிட்(சட்டப் பதிவுக் குறிப்பேடு) புத்தகத்தில் அன்றைய மாநில நிர்வாகியாக இருந்த தானும் கையெழுத்திட்டதாகவும்சைபுல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் மஸ்ஜித் முபாரக் அருகே இருக்கும் நிலம் அதற்கு முன்பதாக (கிட்டத்தட்ட கோவை ரஹ்மத்துல்லாஹ்அறிவித்த தினத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால்) தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது எனவும் சைபுல்லாதெரிவித்து, சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே அந்த விசயம் முடிந்து விட்டது., அந்தச் சட்டத்திற்கு நானும்கட்டுப்பட்டவன் எனவும், தன்னை வேண்டுமென்றே பழி சுமத்தி நீக்கிவிட்டதாக ஒரு அப்பட்டமான பொய்யைமக்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேற்படி சட்டம் பதிவுக் குறிப்பேட்டில் ஏற்றப்பட்டது 2009 ஆம் ஆண்டின் இறுதியில் என்பது உண்மை தான். ஆனால்இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது 2005 ஆம் ஆண்டில். இதன் காரணமாகத் தான் அன்றைக்கு மாநிலப்பொறுப்பில் இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவர்களே பல ஊர்களின் கிளைகளுக்குச் சென்று டிரஸ்டி பெயரில் இருந்தசொத்துக்களை எல்லாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை பெயரில் பதிவு செய்தார்.
ஆனால் மற்ற ஊர்களுக்கு இதை அமுல்படுத்திய சைபுல்லாஹ் தன்னுடைய சொந்த ஊரில் மட்டும் பள்ளியைதன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அந்த நிலத்தை ஒரு தனி நபர்பெயரில் பதிவு செய்திருக்கிறார். அதை டிரஸ்டாகக் கூட பதிவு செய்ய எண்ணம் வராமல், தான் வைத்தது தான்அங்கே சட்டமாக இருக்க வேண்டும், கணக்கு வழக்குகளைக் கேட்டு யாரும் வந்துவிடக் கூடாது என்ற ரீதியில்முற்றுரிமை (monopoly) அடிப்படையில் இவ்வாறு செய்து மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்திருக்கிறார்என்பது உறுதியாகிறது.
அடுத்து ஒரு முக்கியமான விசயம் இங்கே நாம் பதிவு செய்தாக வேண்டும்.
ஜாக் மற்றும் தவ்ஹீத் ஜமாத்திற்கு முபாரக் பள்ளி விஷயமாக பிரச்சனை வரும் போது, நான் பீஜேவிடம் இதைக்கொண்டு சென்றேன். அவர் செத்த பாம்பை என்னிடம் கொண்டு வராதீர்கள் என்று சொன்னார். பிறகு நானே என்சொந்த முயற்சியில் போராடி வெற்றி பெற்றேன் என ஒரு பச்சைப் பொய்யை இட்டுக்கட்டியிருக்கிறார்.
சைபுல்லாஹ் ஹாஜா அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ள வேண்டும்.
முபாரக் பள்ளி சம்மந்தமாக சைபுல்லாஹ் ஹாஜாவிடம் பீஜே பல ஆலோசனைகளைச் சொல்லி அவர் அதைக்கேட்காமல் தான்தோன்றித் தனமாக நடந்து பள்ளியை பூட்ட வைத்தார். பூட்டிய பிறகு சைபுல்லா ஹாஜா, பீஜேயிடம்மீண்டும் ஆலோசனை கேட்கிறார். நான் சொன்ன எல்லா யோசனைகளையும் புறந்தள்ளி செத்த பினமாக ஆக்கிவிட்டுவைத்தியம் பார்க்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா என சைபுல்லாஹ்வைக் கண்டித்தார் பீஜே.
ஆனாலும் கூட  RTO அந்தப் பள்ளியைப் பூட்ட உத்தரவிட்ட போது தவ்ஹீத் ஜமாத் உடனடியாக அதிமுக பன்னீர்செல்வம் வழியாக அந்த ஆர்டரை கேன்சல் செய்யச் சொல்லியது. இந்தச் சம்பவங்கள் நடந்த போது சைபுல்லாஹ்ஹாஜா அவர்கள் கடையநல்லூரை விட்டு தலைமறைவாகி ராஜபாளையத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.
நடந்த உண்மை இவ்வாறு இருக்க இன்றைக்கு சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அப்படியே வரலாற்றைத் திரிக்கப்பார்க்கிறார்.
இதையெல்லாம் விடக்கொடுமை, அன்றைக்கு பள்ளியைக் காப்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்தமக்களைக் கொச்சைப்படுத்திகிறார் சைபுல்லாஹ்.
அதாவது ஜாக் அமைப்பினர் ஒரு இஸ்திமா நடத்தி முபாரக் பள்ளியை அபகரிக்கப் போகிறார்கள், நாமும் அதற்குப்போட்டியாக இஸ்திமா நடத்தினால் தான் முபாரக் பள்ளியைக் காப்பாற்ற முடியும் என மேலப்பாளையம் சென்றுசம்சுல்லுஹாவிடம் ஆட்கள் அனுப்புங்கள் என்று கேட்டார் சைபுல்லாஹ். அத்தோடு பீஜேவுக்கும் போன் செய்து இந்தவிசயத்தைச் சொல்ல, உடனடியாக பீஜே, மதுரையில் இருந்து ஒரு இளைஞர் படையை கடையநல்லூருக்கு அனுப்பிவைக்கிறார்.
முபாரக் பள்ளியைப் பாதுகாப்பதற்காக களமிறங்கிய அந்தக் கொள்கைச் சகோதரர்களிடம் பீஜே தரப்பு முன்வைத்தஒரு நிபந்தனை என்ன தெரியுமா? நீங்கள் பள்ளிவாசலைப் பாதுகாக்கச் செல்கிறீர்கள்., அங்கே உங்களின் உயிரைக் கூட தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் எனவே அதற்கெல்லாம் தயாரானவர்கள் மட்டும் செல்லுங்கள் என அந்தகொள்கைச் சகோதரர்களிடம் சொல்லப்படுகிறது. ஆனால் கொள்கைக்காக உயிரைத் தியாகம் செய்யவும் தயாராகஇருந்த அந்த இளைஞர்களில் ஒருவர் கூட பின்வாங்காமல் கடையநல்லூருக்குப் படையெடுத்தனர்.
ஆனால் அந்த சகோதரர்களின் தியாகத்தை இன்று சைபுல்லாஹ் கொச்சைப் படுத்துகிறார், எப்படி தெரியுமா? அது தான் அவர்கள் வந்த வாகனத்துக்கு நான் வாடகை கொடுத்து விட்டேனே! அதன் பிறகு அவர்களுக்கும் இந்தப்பள்ளிக்கும் என்ன உறவு இருக்கிறது? அவர்கள் என்ன பள்ளியைப் பாதுகாக்கவா வந்தார்கள்? இஸ்திமாவுக்குத்தானே வந்தார்கள் என இன்றைக்குச் சொல்கிறார் சைபுல்லாஹ்.
தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக, தவ்ஹீத் பள்ளியைப் பாதுகாப்பதற்காக தலைமையின் உத்தரவை ஏற்றுஉயிரைக் கூட துச்சமென நினைத்து வந்த கூட்டத்தை, இன்றைக்கு கூலிப்படையின் அந்தஸ்தில் வைத்துப் பேசுகிறார்சைபுல்லா. கேவலம் 39 லட்ச ரூபாய் பணம் அவரை தடம்புரட்டி விட்டது. இவர் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கிவைத்திருந்த இன்னும் பல வாதங்களுக்கு தெளிவான சரியான பதிலடிக்கு வீடியோவைப் பாருங்கள்.


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons