Thursday, July 21, 2011

கொள்கை வீரர்களை கொச்சைப்படுத்திய சைபுல்லா


            சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள்  4

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் அனைத்து மக்களிடமும் வசூல் செய்து பொதுக் காரியங்களுக்குவாங்கப்படும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின், அந்த குறிப்பிட்ட கிளையின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என 2009 ஆம் ஆண்டின் இறுதியில் கோவை ரஹ்மத்துல்லா அறிவித்ததாகவும், அந்த மினிட்(சட்டப் பதிவுக் குறிப்பேடு) புத்தகத்தில் அன்றைய மாநில நிர்வாகியாக இருந்த தானும் கையெழுத்திட்டதாகவும்சைபுல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் மஸ்ஜித் முபாரக் அருகே இருக்கும் நிலம் அதற்கு முன்பதாக (கிட்டத்தட்ட கோவை ரஹ்மத்துல்லாஹ்அறிவித்த தினத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால்) தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது எனவும் சைபுல்லாதெரிவித்து, சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே அந்த விசயம் முடிந்து விட்டது., அந்தச் சட்டத்திற்கு நானும்கட்டுப்பட்டவன் எனவும், தன்னை வேண்டுமென்றே பழி சுமத்தி நீக்கிவிட்டதாக ஒரு அப்பட்டமான பொய்யைமக்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேற்படி சட்டம் பதிவுக் குறிப்பேட்டில் ஏற்றப்பட்டது 2009 ஆம் ஆண்டின் இறுதியில் என்பது உண்மை தான். ஆனால்இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது 2005 ஆம் ஆண்டில். இதன் காரணமாகத் தான் அன்றைக்கு மாநிலப்பொறுப்பில் இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவர்களே பல ஊர்களின் கிளைகளுக்குச் சென்று டிரஸ்டி பெயரில் இருந்தசொத்துக்களை எல்லாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை பெயரில் பதிவு செய்தார்.
ஆனால் மற்ற ஊர்களுக்கு இதை அமுல்படுத்திய சைபுல்லாஹ் தன்னுடைய சொந்த ஊரில் மட்டும் பள்ளியைதன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அந்த நிலத்தை ஒரு தனி நபர்பெயரில் பதிவு செய்திருக்கிறார். அதை டிரஸ்டாகக் கூட பதிவு செய்ய எண்ணம் வராமல், தான் வைத்தது தான்அங்கே சட்டமாக இருக்க வேண்டும், கணக்கு வழக்குகளைக் கேட்டு யாரும் வந்துவிடக் கூடாது என்ற ரீதியில்முற்றுரிமை (monopoly) அடிப்படையில் இவ்வாறு செய்து மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்திருக்கிறார்என்பது உறுதியாகிறது.
அடுத்து ஒரு முக்கியமான விசயம் இங்கே நாம் பதிவு செய்தாக வேண்டும்.
ஜாக் மற்றும் தவ்ஹீத் ஜமாத்திற்கு முபாரக் பள்ளி விஷயமாக பிரச்சனை வரும் போது, நான் பீஜேவிடம் இதைக்கொண்டு சென்றேன். அவர் செத்த பாம்பை என்னிடம் கொண்டு வராதீர்கள் என்று சொன்னார். பிறகு நானே என்சொந்த முயற்சியில் போராடி வெற்றி பெற்றேன் என ஒரு பச்சைப் பொய்யை இட்டுக்கட்டியிருக்கிறார்.
சைபுல்லாஹ் ஹாஜா அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ள வேண்டும்.
முபாரக் பள்ளி சம்மந்தமாக சைபுல்லாஹ் ஹாஜாவிடம் பீஜே பல ஆலோசனைகளைச் சொல்லி அவர் அதைக்கேட்காமல் தான்தோன்றித் தனமாக நடந்து பள்ளியை பூட்ட வைத்தார். பூட்டிய பிறகு சைபுல்லா ஹாஜா, பீஜேயிடம்மீண்டும் ஆலோசனை கேட்கிறார். நான் சொன்ன எல்லா யோசனைகளையும் புறந்தள்ளி செத்த பினமாக ஆக்கிவிட்டுவைத்தியம் பார்க்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா என சைபுல்லாஹ்வைக் கண்டித்தார் பீஜே.
ஆனாலும் கூட  RTO அந்தப் பள்ளியைப் பூட்ட உத்தரவிட்ட போது தவ்ஹீத் ஜமாத் உடனடியாக அதிமுக பன்னீர்செல்வம் வழியாக அந்த ஆர்டரை கேன்சல் செய்யச் சொல்லியது. இந்தச் சம்பவங்கள் நடந்த போது சைபுல்லாஹ்ஹாஜா அவர்கள் கடையநல்லூரை விட்டு தலைமறைவாகி ராஜபாளையத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.
நடந்த உண்மை இவ்வாறு இருக்க இன்றைக்கு சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அப்படியே வரலாற்றைத் திரிக்கப்பார்க்கிறார்.
இதையெல்லாம் விடக்கொடுமை, அன்றைக்கு பள்ளியைக் காப்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்தமக்களைக் கொச்சைப்படுத்திகிறார் சைபுல்லாஹ்.
அதாவது ஜாக் அமைப்பினர் ஒரு இஸ்திமா நடத்தி முபாரக் பள்ளியை அபகரிக்கப் போகிறார்கள், நாமும் அதற்குப்போட்டியாக இஸ்திமா நடத்தினால் தான் முபாரக் பள்ளியைக் காப்பாற்ற முடியும் என மேலப்பாளையம் சென்றுசம்சுல்லுஹாவிடம் ஆட்கள் அனுப்புங்கள் என்று கேட்டார் சைபுல்லாஹ். அத்தோடு பீஜேவுக்கும் போன் செய்து இந்தவிசயத்தைச் சொல்ல, உடனடியாக பீஜே, மதுரையில் இருந்து ஒரு இளைஞர் படையை கடையநல்லூருக்கு அனுப்பிவைக்கிறார்.
முபாரக் பள்ளியைப் பாதுகாப்பதற்காக களமிறங்கிய அந்தக் கொள்கைச் சகோதரர்களிடம் பீஜே தரப்பு முன்வைத்தஒரு நிபந்தனை என்ன தெரியுமா? நீங்கள் பள்ளிவாசலைப் பாதுகாக்கச் செல்கிறீர்கள்., அங்கே உங்களின் உயிரைக் கூட தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் எனவே அதற்கெல்லாம் தயாரானவர்கள் மட்டும் செல்லுங்கள் என அந்தகொள்கைச் சகோதரர்களிடம் சொல்லப்படுகிறது. ஆனால் கொள்கைக்காக உயிரைத் தியாகம் செய்யவும் தயாராகஇருந்த அந்த இளைஞர்களில் ஒருவர் கூட பின்வாங்காமல் கடையநல்லூருக்குப் படையெடுத்தனர்.
ஆனால் அந்த சகோதரர்களின் தியாகத்தை இன்று சைபுல்லாஹ் கொச்சைப் படுத்துகிறார், எப்படி தெரியுமா? அது தான் அவர்கள் வந்த வாகனத்துக்கு நான் வாடகை கொடுத்து விட்டேனே! அதன் பிறகு அவர்களுக்கும் இந்தப்பள்ளிக்கும் என்ன உறவு இருக்கிறது? அவர்கள் என்ன பள்ளியைப் பாதுகாக்கவா வந்தார்கள்? இஸ்திமாவுக்குத்தானே வந்தார்கள் என இன்றைக்குச் சொல்கிறார் சைபுல்லாஹ்.
தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக, தவ்ஹீத் பள்ளியைப் பாதுகாப்பதற்காக தலைமையின் உத்தரவை ஏற்றுஉயிரைக் கூட துச்சமென நினைத்து வந்த கூட்டத்தை, இன்றைக்கு கூலிப்படையின் அந்தஸ்தில் வைத்துப் பேசுகிறார்சைபுல்லா. கேவலம் 39 லட்ச ரூபாய் பணம் அவரை தடம்புரட்டி விட்டது. இவர் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கிவைத்திருந்த இன்னும் பல வாதங்களுக்கு தெளிவான சரியான பதிலடிக்கு வீடியோவைப் பாருங்கள்.


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons