சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் - 5
சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு 15 காரணங்கள் உணர்வு பத்திரிகையில் வெளியாகி இருந்தன. ஆனால் இதெல்லாம் என் மீது சுமத்தப்பட்ட அவதூறு என்று சொல்லிக் கொண்டு தர்பியா என்ற பெயரில் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார் சைபுல்லாஹ்.
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இவர் ஆடம்பரத்திருமணத்தை நடத்தி வைத்தார் என்பதும் முக்கியமானதாகும். ஆனால் ஒரே ஒரு ஆடம்பரத் திருமணத்தைத் தவிர நான் வேறு எதிலாவது கலந்து கொண்டேனா? அதுவும் அந்த ஆடம்பரங்கள் என் கண் முன்னால் நடந்ததா? என் பார்வையில் பட்டதா என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முனைந்து தோற்றுப்போனார் சைபுல்லாஹ்.
அத்தோடு நிற்காமல் அப்துந்நாசரின் சகோதரிக்கு நடந்த திருமணத்திலே பெண் வீட்டு விருந்து வைக்கப்பட்டது என்றும் அதிலே நான் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தது சைபுல்லாஹ் தான். பெண் வீட்டு விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பது சரி என்றால் அந்தத் திருமணத்திலும் கலந்து கொள்ளக்கூடாது என்பது தானே சரி! ஆனால் இவர் அதை நியாயப்படுத்தப் போய் இப்போது கூணிக்குறுகி நிற்கிறார். அதேநேரம் நாசர் வீட்டில் நடந்த பெண்வீட்டு விருந்து நியாயமா என்றால் அது தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் நாசர் அன்றைக்கு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர். அவரால் தடுத்திருக்க முடியாது. ஆனால் சைபுல்லாஹ் ஹாஜா தான் அந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அந்த விருந்தே நடக்காமல் தடுத்திருக்க முடியும்.
அடுத்து இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் இயங்கும் ஆம்புலன்ஸ் சம்பந்தமான கணக்கு வழக்குகளை யாரிடமும் சமர்ப்பிக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. ஆனால் பொதுச் சொத்துக்களில் யார் கணக்கு கேட்டாலும் அதை வெளியிடுவது தான் சிறந்த நிர்வாகத்திற்கு அழகு. ஆனால் இவரோ, காசு கொடுத்தவர்கள் கணக்குக் கேட்டால் தான் அதைச் சொல்வேன் என சம்பந்தமில்லாமல் சப்பை கட்டு கட்டுகிறார். அத்தோடு நிற்காமல் முஸ்லிம் மீடியா டிரஸ்டிற்கு தலைவராக இருக்கும் பீஜே 2004 முதல் கணக்கு காட்டினாரா? என்று கேட்கிறார்.
முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு லுஹா உறுப்பினர் இல்லை, அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி உறுப்பினர் இல்லை.. நான் உறுப்பினர், ஆனால் எனக்கு கணக்கு காட்டவில்லை என்று சொல்கிறார். ஆனால் லுஹாவும், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியும் முஸ்லிம் மீடியா டிரஸ்டின் உறுப்பினர்கள் என்பது அவருக்கே தெரியும். அதுமட்டுமல்ல, சைபுல்லா அவர்கள் முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு உறுப்பினர் இல்லை என்பது அவருக்கு தெரியாமல் போய் விட்டது தான் பரிதாபம்.
அதற்காக, அவர் டிரஸ்டி உறுப்பினர் இல்லை என்பதற்காக முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கணக்குகளை காட்ட பீஜே மறுப்பாரா? முதலில் முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு என்னென்ன சொத்துக்கள் உள்ளன? நீலகிரியில் இரண்டு ஏலக்காய் எஸ்டேட்டும், சென்னை அண்ணாசாலையில் 15 மாடி கட்டிடமும் இருக்கிறதா? முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு உள்ள சொத்து என்றால் அது உணர்வு பத்திரிகை மட்டும் தான்.
அந்த உணர்வு பத்திரிகையை முடக்க எதிரிகளின் சூழ்ச்சி செய்த போது, அதன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது அதைத் தூக்கி நிறுத்தியவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உலகளாவிய உறுப்பினர்கள் தான். அன்று முதலே உணர்வு பத்திரிகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியே இவர் கணக்கு கேட்பதாக இருந்தால் இவர் தானே மாநிலப் பொறுப்புகளில் பலமுறை இருந்தார்., அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை? அவருக்கே தெரியும் முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கணக்கு வழக்கு எப்படி இருக்கிறது என்று. ஆனால் இன்றைக்கு அதை ஒரு குற்றச்சாட்டாக வைத்து களங்கம் கற்பிக்கப் பார்க்கிறார். இதுசம்பந்தமான முழுமையான விவரங்களுக்கு வீடியோவைக் காண்க.
திருகுதாளங்கள் தொடரும்.., இன்ஷா அல்லாஹ்..,
0 comments:
Post a Comment