Saturday, October 22, 2011

போலி ஒற்றுமையும் முறிந்து போன கயிறும் ??

+

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.  (அல்குர்ஆன் 3-103)

மேற்க்கண்ட வசனத்தை சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர். "ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மேற்க்கண்ட வசனத்தை தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுவந்தது. இதற்காக தமிழகத்தில் பல இயக்கங்கள் (போலி) ஒற்றுமையாக நாங்கள் இருக்கிறோம் என்றும் ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் தான் இந்த ஒற்றுமையை சீர்குழைப்பதாகவும் பேசிவந்தவர்கள்.

திருவாரூர் மாவட்டம், திருவிடைசேரி என்ற ஊரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிய பிறகும் அதை அலட்சியம் செய்தவர்கள், இவர்கள் போலி ஒற்றுமைவாதிகள்  என்பதை நாம் அன்று கூறியதையும் விமர்சித்தவர்கள், தமிழகத்தின் 12 அமைப்புகள், இயங்கள்கள், கழகத்தின் பெயரில் TNTJ-விற்கு எதிராக கண்டன போஸ்டர்கள் அடித்தவர்கள்.... அன்று

ஆனால் இன்று....


திண்டுக்கலில் ம.ம.க குண்டர்கள் தாக்குதல் - எஸ்.டி.பி.ஐ யினர் 3 பேர் படுகாயம்

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரைச் சேர்ந்த 3 நபர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி பிரச்சாரம் முடிவடைந்த நாளிலிருந்து வாக்குப்பதிவு நடைபெறு நாள் வரை யாரும் எந்தவிதமான பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் இந்த விதிமுறையை மீறி வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் (வார்டு எண் 40 மற்றும் 41) இருந்து கொண்டு வாக்களிக்க வருபவர்களிடம் தங்கள் கட்சிக்கு ஓட்டுபோடுமாறு ம.ம.கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.டி..பி.ஐ கட்சியின் ஷர்ஃபுதீன் அவர்களை நோக்கி எவ்வளவோ எடுத்துக்கூறியும் ம.ம.கவினர் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர்.

வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியது. இறுதியில் ம.ம.கட்சியைச்சேர்ந்த 60 நபர்கள் ஒன்று கூடி ஷர்ஃபுதீனை இரும்பு கம்பிகளைக்கொண்டு கடுமையாக தாக்கினர்.இதனை தடுக்க வந்த ஹுஸைன் மெளலானா மற்றும் இபுராஹீமும் தாக்குதலுக்கு இலக்காணார்கள்.
தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட மூவரும் உடனடியாக திண்டுக்கள் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷர்ஃபூதீன் படுகாயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களை மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
(நன்றி நெல்லைPFI)



நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல் வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

"அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடியுங்கள்'' என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக் குர்ஆன், நபி வழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.

"குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்'' என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.

அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.


எனவே இனிமேலாவது இவர்கள் ஒற்றுமை எனும் அல்லாஹ்வுடைய கயிற்றை குர்ஆன், ஹதீஸ் பின்பற்றுவதில் தான் உள்ளது என்பதை உணர்ந்தால் சரி.



அபூ யூசுப் சொன்னதில் என்ன தவறு உள்ளது?



வாசகர் கடிதம்

அபூ யூசுப் சொன்னதில் என்ன தவறு உள்ளதுஅண்ணணிடம்ஓர் அழகிய வேண்டுகோள்.

சகோதரர்களே!
தமிழுலகறிந்த சிறந்த அறிஞரும்பிரபல எழுத்தாளருமானசகோதரர் பி.ஜெ அவர்கள் பற்றி இணைய தளங்களில்பலவிதமான செய்திகளையும் சில கயவர்கள் எழுதி வருகிறார்கள்.இந்நேரத்தில் அவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை அடித்துநொருக்கும் விதமாக சகோதரர் அபூ யூசுப் அவர்கள் பொய்யன்டிஜெ என்ற ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம்நயவஞ்சகர்களின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற சிறப்பானசீரிய அமைப்பைசீர்குலைத்து சின்னா பின்னப்படுத்திநல்வழிப்பட்டு ஏகத்துவக்கொள்கையை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டுள்ள மக்களைமீண்டும் வழிகேட்டிட்கு அழைத்துச் செல்ல எத்தனிக்கிறது இந்தபொய்யன் கூட்டமும் அவர்களின் அடிவருடிகளும்.
அப்படியிருக்கையில் அவர்களின் முகத்திரையை கிழிப்பதில்என்ன தவறு இருக்கிறது?
தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து ஏகத்துவத்திற்காகபாடுபட்டுஆயிரக்கணக்கான உரைகளையும் நூற்றுக்கணக்கானபுத்தகங்களையும்ஆயிரக்கணக்கான ஆக்கங்களையும் தனதுபேச்சால்எழுத்தால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கியசகோதரர் பி.ஜெ அவர்களை கொச்சைப்படுத்திஇழிவுபடுத்தநினைக்கும் இந்த அயோக்கியர்களை அடையாளம் காட்டுவதில்என்ன தவறு இருக்கிறது.
அபூ யூசுப் வார்த்தை கடிணத்திற்காக தளத்தை மூடுவதா?
ன்பின் சகோதரர்களே அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில்பொய்யன் பாக்கர் வகையராக்கள் போன்றவர்களைப் பார்த்துசொல்லக் கூடிய வார்தை என்ன தெரியுமா?
நபி நூஹ் (அலைஅவர்களை கப்பலை கட்டுமாறு அல்லாஹ்பணித்த நேரத்தில் நபி நூஹ் அவர்கள் கப்பலைப் கட்டிக்கொண்டிருக்கும் போது அந்தக் கப்பலைத் தாண்டிச் செல்லும்போதெல்லாம் அவரைக் கேலிகிண்டல் செய்தார்கள்.
அப்போது நபி நூஹ் அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்என்பதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் 11வதுஅத்தியாயத்தில் 38வது வசனத்தில் அவர்களுக்கு பதில் சொல்லும்படி நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
நபி நூஹ் அவர்களின் பதில்.
அவர் கப்பலை செய்யலாளார் அவரது சமுதாயத்தின்பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக்கேலி செய்தனர். “ நீங்கள் எங்களைக் கேலி செய்தால்நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலிசெய்வோம் என்று அவர் கூறினார். (11-38)
இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்நிலையானவேதனை யாருக்கு இறங்கும்என்பதைப் பின்னர் அறிந்துகொள்வீர்கள்” என்றும் கூறினார். (11-39)
சகோதரர் அபூ யூசுப் அவர்கள் தானாக பொய்யன் பாக்கர்கூட்டத்தை விமர்சிக்க ஆரம்பிக்கவில்லைஅல்லது சொந்தகோபத்தை வைத்து விமர்சிக்கவும் இல்லை.
ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பாடு படும் ஒரு அமைப்பை சுயநலத்திற்காக மானங்கெட்டுப் போய் விமர்சிக்கும் ஒரு கும்பலின்வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுகிறார் இதில் என்னதவறு?
கப்பலைக் கட்டிய நபியை கேலி செய்தவர்களுக்கு நூஹ் நபிசொன்ன பதில் “ நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள்கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலிசெய்வோம் பொய்யன் பாக்கர் வகையராக்கள் செய்தஅயோக்கியத் தனத்தை அபு யுசுப் அடையாளம் காட்டுகிறார்.இதனை யாரும் தவறு என்று வாதிட முடியாது.
அது மட்டுமன்றி பொய்யன் கூட்டம் உண்மையில்யோக்கியர்களாக இருந்தால் அல்லது அபூ யூசுப் பொய்யையும்புரட்டையும் எழுதினால் பொய்யன் டிஜெ தளம் மூடப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லைஆனால் அபு யுசுப்அவர்கள் அப்படி எழுதவில்லை.
நேருக்கு நேர் பதில் கொடுக்கிறார் ஆதாரத்துடன் விமர்சிக்கிறார்இதை எப்படி குறை காண்பது.
கண்டிப்பாக பொய்யன் டிஜெ தளம் இயக்கப்பட வேண்டும்.எந்தக் காரணம் கொண்டும் அத்தளம் மூடப்படக் கூடாதுஅந்தத்தளத்திற்கும் ஜமாத்திற்கும் தொடர்பில்லை என்பதினால் ஒருஜமாத் மீது தான் கொண்டுள்ள நல்லெண்த்திற்காக அந்த ஜமாத்மீது சொல்லப்படும் அவதூறுக்கு யார் வேண்டுமென்றாலும்தெளிவான பதில் கொடுத்து அயோக்கியர்களை இனம்காட்டலாம் அந்த வேலையைத் தான் அபூ யூசுப் செய்கிறார்.
அண்ணனிடம் ஓர் வேண்டுகோள்!
நிறைய சகோதரர்கள் உங்களிடம் கேட்ட ஒரு கேள்விஎன்னவென்றால் !!!!!!!!!!!!!!!! இந்த அயோக்கியர்களின்கேள்விகளுக்கு பதில் கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தைஇந்த கழிசடைகளுக்காக வீனாக்க வேண்டுமாஎன்பதுதான்.
நானும் அதையே மீண்டும் கேட்கிறேன்ஆன்லைன் பி.ஜெஇணையதளத்தில் கேள்விகள் குவிந்து கிடக்கின்றனஇது வரை2010 மார்ச் 9ம் தேதி வரை கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு தான்பதில் கொடுத்துள்ளீர்கள்.
இந்த கழிசடைகளின் பொய்யான விமர்சனங்களுக்கு உங்கள்நேரத்தை ஒதிக்கு சமுதாயத்திற்று செய்ய வேண்டிய அல்லதுஉங்களிடம் இருந்து சமுதாயம் பெற வேண்டிய பிரயோஜமானசேவைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறீர்களா?
பொய்யன் பாக்கர் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு சிலநாட்களில் கடையநல்லூரில் நடந்த இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்த நேரம் சகோதரர் அப்துரஹ்மான் பிர்தவ்சி உங்களிடம் கேட்ட ஒரு கேள்விக்கு நீங்கள்கொடுத்த ஒரு பதிலை இங்கு உங்களுக்கு ஞாபகப்படுத்தநினைக்கிறேன்.
அதாவது பொய்யன் பாக்கர் வெளியேற்றப்பட்டவுடன்பத்திரிக்கை அலுவலகங்களுக்கு சென்று என்னை ஜமாத்தைவிட்டு நீக்கிவிட்டார்கள்நீக்கி விட்டார்கள் என்று சொல்லிஅந்த செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிடச் சொல்லி அதன்மூலம் பப்லிசிட்டியை தேட முனைந்தார்.
அப்போது இது தொடர்பாக அப்து ரஹ்மான் பிர்தவ்சிஉங்களிடம் கேட்ட கேள்வி.
பொய்யன் பத்திரிக்கையாளர்களிடம் என்னை நீக்கிவிட்டார்கள்,என்னை நீக்கி விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டுதிரிகிறார்நாமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நாங்கள்பொய்யனை நீக்கிவிட்டோம் என்ற தகவலை கொடுத்துவிட்டால்என்னஎன்று கேட்டார்.
அதற்கு நீங்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
அப்து ரஹ்மான்…. பொய்யன் பாக்கர் நமது ஜமாத்தை விட்டுநீக்கப்பட்டார் என்ற தகவல் தானே பொது மக்களுக்கு தெரியவேண்டும்அதனை அவரே பத்திரிக்கைகள் வாயிலாக செய்துகொண்டிருக்கும் போது நாம் ஏன் நமது நேரகாலத்தை வீனாக்கவேண்டும்?
நடக்க வேண்டிய காரியம் நடந்தால் சரிஅந் நேரத்தில் நாம்மக்களுக்குத் தேவையான வேறு காரியங்களை செய்யலாமே?
இதே பதிலை இப்போது உங்களுக்கு மீண்டும் பொருத்திப்பாருங்கள் பொய்யனின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லிகாலநேரத்தை வீனாக்கப் போகிறீர்களா?
அந்த வேலையைத் தான் அபூ யூசுப் செய்கிறாரே?
உங்களிடம் அன்பாய் நாம் வேண்டுவது தயவு செய்து உங்கள்சேவையை மீண்டும் அதிகப்படுத்துங்கள்உங்களிடம் இருந்துநிறைய அறிவுத் தகவல்களை நாம் பெற ஆசைப்படுகிறோம்.அல்லாஹ் உங்களுக்கு நிறைய ஆயுளையும்அறிவையும்,ஆற்றலையும் தர வேண்டும் என்று இறைவனைப்பிரார்திக்கிறோம்.
தயவு செய்து பொய்யன் கூட்டத்தின் கழிசடைத் தனமாககேள்விகளுக்கு பதில் கொடுப்பதை விட்டு விட்டு ஆன்லைன்பி.ஜெ தளத்தின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முன் வாருங்கள்என்று அன்பாய் தெரிவித்துக் கொள்கிறேன்.


-முஹம்மது இம்தியாஸ்
குவைத்
                                           
                                                                THANKS TO    பொய்யன் டிஜே

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons