Sunday, December 2, 2012

யார் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ்விடம் கையேதுங்கள்




யார் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ்விடம் கையேதுங்கள்

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!! 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !! 

இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே

3.149. நம்பிக்கை கொண்டோரே! (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீங்கள் கட்டுப் பட்டால் உங்களை வந்த வழியே திருப்பி விடுவார்கள். இதனால் இழப்பை அடைவீர்கள்!


தமிழகத்தில் எந்த ஜாமத் தூய்மையானது ?
எந்த இயக்கம் தூய்மையானது ?
எந்த கழகம் தூய்மையானது?
எந்த பிரான்ட் தூய்மையானது ?
என்று உங்களுக்கு தெரியவில்லையா ?

தமிழ் நாட்டில் எத்தனையோ இயக்களும் ,ஜாமத்களும் ,கழககளும் ,லெட்டர் ப்டு இயக்களும் இருக்கிறது ஆனால் தமிழக முஸ்லிம் களின் முகியனமாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தில் யாரு தூயவர்கள் யார் அல்லாஹ் அவனதும் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் முஸ்லிம் இளைஞர்கள் வழி நடத்தி செல்லுகிறார்கள் என்றும் இளைஞர்கள் மத்தில் பெரும் குழப்பம் இருகிறது .ஓவ்வரும் நாங்கள் தான் தூயவர்கள் மார் தட்டி கொளுகிறாரகள் அனால் அவர்கள் யாரு தூயவர்கள் .

தூயவர்கள் என்று நம்மாள் சரியான கணிக்கமுடியவில்லை ஒருவன் குரான் ஹதீத் பத்தி சொல்லுகிறார்கள் மறோருவர் வாருகள் இஸ்லாமிய ஆட்சி ஆக்குவோம் என்று இஸ்லாமிய இளைஞர்கள் நரக படுகுழிக்கு இழுத்து செல்லுகிறார்கள் என்னும் சில கூட்டம் அரசில் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்று சாக்கடை அரசில் செய்து கொண்டு இருகிறார்கள் ,என்னும் பல முஸ்லிம் இயக்களும் என்ன கொள்கை என்று இயக்கம் நடத்துபவர்களுக்கு தெரியாது .

2:251. இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.

28 : 21. என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!

26 : 169. என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!


#யார் சத்தியத்தை சொல்லுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?


#யார் மக்கள் பணத்தை கொள்ளை அடிகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?

# வசூலை யாரு கொள்ளை அடிகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?



#யார் அரசியல்க்காக மக்களை ஆளும்வர்க்கமிடம் மக்களை அடமானம் வைகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா ?

#யார் பதவி ஆசைக்காக இஸ்லாத்தை விட்டே வெளியே செல்லுகிறார்கள் என்று தெரியவில்லையா ?

எங்களை ஏமாற்றிய இவர்களுக்கு நாசம் உண்டாகட்டும் கேடு உண்டாகட்டும் என்று பிராத்தனை செய்யுங்கள்

நயவஞ்கர்கள் !!!!!!!!!!!!!!!!!!

ஒரு பக்கம் ஒரு முகமும் மறு பக்கம் ஒரு முகமும் காட்டும் நயவஞ்சகர்களுகக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டு

4.138. ''நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!

4.145. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.

9.67. நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர் கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கை களை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான்.6 நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள்.

அல்லாஹ் இந்த வசனத்தில் நயவஞ்ச கொண்டவர்களை பத்தி சொல்லுகிறான் அவர்கள் என்ன செய்கிறார்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர் இது தான் தமிழகத்தில் நடத்து கொண்டு இருக்கிறது நபி வழி தொழுகை நடத்த விடாமல் தடுப்பது நபி வழி ஜனாஸா தொழுகை விடாமல் தடுப்பது ,வரதச்சனை திருமணத்தை தடுப்பது என சொல்லிகொண்டே போகலாம்




26 : 83. 84. 85. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!



கையே துங்கள் அல்லாஹ்விடம் இறைவா யார் சத்தியத்தை சொல்கிறார்களோ அவர்கள் வளரட்டும் ,யார் அசத்தியத்தை சொல்கிறார்களோ அவர்ககளை நாசமாகட்டும் அவர்களுக்கு கேடு உண்டாகட்டும் என்று அல்லது அவர்களை திருத்துவாயாக !உங்கள் 5நேரம் தொளுகையுளும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுகள்

3 : 8. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

14. 'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விடநான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2

28 : 21. என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!


29 : 30. என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக! என்று அவர் கூறினார்

2 : 128. எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும் எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.
23 : 93 94. என் இறைவா! அவர்கள் எச்சரிக்கப்படுவதை எனக்குக் காட்டினால் என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!



இந்த கட்டுரையை எழுதிய Mohideen K Razool ஆகிய நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் கிளையில் உறுப்பினராக இருகிறேன்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons