Thursday, December 6, 2012

முஸ்லீம்களிடையே காணப்பட்ட பல மூடநம்பிக்கைகளையும்



அல்லாஹுவின் திருப்பெயரால்....

தமிழக வரலாற்றில் 1984 காலகட்டங்களில் முஸ்லீம்களிடையே காணப்பட்ட பல மூடநம்பிக்கைகளையும்,மாற்றுமத கலாசாரங்களையும்,வரதட்சணை கொடுமைகளையும் நீக்க தௌஹீத் அமைப்புகள் அரும்பாடுபட்டுள்ளது.பல்வேறு மார்க்க அறிஞர்களும் ஆற்றிய சீரியப்பணிகளால் அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இன்று ஏகத்துவதில் தமிழகம் மற்றமாநிலங்களுக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது.

ஆனால் இன்று SDPI,PFI,MNP,ABCD ect
,போன்ற அமைப்புகள் தன்னுடைய சுயலாபத்திற்காக மக்களை வழிகெடுத்து மீண்டும் பழைய போக்கிலேயே அழைத்து செல்ல முயல்வது வேதனைக்கும்,கண்டனத்திற்கும் உரியது.

விநாயகர் சதுர்த்திக்கு நோட்டீஸ்,நாகூர் கந்தூரி விழாவிற்கு வாழ்த்து,பொங்கல்வாழ்த்து.பிறந்தநாள் வாழ்த்து என்று மனம்போனபோக்கில் மார்க்கத்தை கையாழ்வது இவர்கள் வாடிக்கையாகிவிட்டது.

நாங்கள் ஒட்டுப்பொறுக்கத்தான் அரசியலில் இறங்கினோம் அதனால் மார்க்கத்தை எங்களிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று இவர்கள் வெளிப்படையாக அறிவித்துவிட்டால் நாம் இவர்களை பெரிதாக எடுக்கத்தேவையில்லை.ஆனால் முஸ்லிம்களின் உரிமை மீட்க அமைப்பு ஆரம்பித்ததாக சொல்லி போலி முகமூடி அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்ஷாஅல்லாஹ் துரோக வரலாறின் பட்டியல் தொடரும்.
                                


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons