Thursday, June 9, 2011

காசு கேட்டு மாட்டிக்கொண்ட ஜாக்’ஸ் அமைப்பினர் உளறிக்கொட்டி வெளியிட்டுள்ள நோட்டீஸ்களுக்கு பதிலடி.







  • மேலப்பாளையம், திருச்சி, கடையநல்லூர் பள்ளிகள் TNTJ பெயர் சொல்லி வசூல் செய்யபட்டதாக ஆதாரம் இருக்கிறதா என கேட்கும் முட்டாள்களே! அன்றைக்கு TNTJ என்ற அமைப்பே கிடையாது என்பது உங்களுக்கும் தெரியும் தானே! ஜாக் பெயரைச் சொல்லித் தான் அப்போது வசூல் செய்யப்பட்டது. அதில் உறுப்பினர்களாக இருந்த அதிகமான நபர்கள் ஜாக் என்ற மோசடி அமைப்பை வெறுத்த காரணத்தால் அது ததஜ உறுப்பினர்களிடம் இருக்கிறது. இதிலே ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. காரணம் அன்றைக்கு ஜாக் பெயரைச் சொல்லி ஜாக் தான் வசூல் செய்தது. சுன்னத் ஜமாத் பெயரைச் சொல்லி வசூல் செய்தால் தான் அதைப்பற்றிக் கேட்க வேண்டும்.
  • பசுலுல் இலாஹியை வேட்பாளராக அறிவித்த நேரமும், கோட்டாறு இமாம் அரசியலை ஹராம் என்று சொல்லிய நேரமும் சம காலங்கள் என்பதால் தான் அதைக் கொண்டுவர அவசியம் ஏற்பட்டது. பசுலுல் இலாஹியை வேட்பாளராக நிறுத்த ஆர்பாட்டம் நடத்தியதாக நீங்கள் இட்டுக்கட்டிய(?) செய்தியை உங்களால் நிறுபிக்க முடியுமா என இத்தனை காலமும் கேட்டு வந்த இந்த கேடுகெட்ட ஜாக்கினர் இப்போது அதை அந்தர்பல்டியாக மாற்றி கரணம் போடுவதை நாம் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.



  • கோவை அய்யூப் பீட்டர் அல்போன்சை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்கான நோட்டீஸை மட்டும் வெளியிட்டீர்கள்,,அவர் பேசியதை வெளியிட வேண்டாமா என்ற முட்டாள் தனமானவாதத்தை வைக்கிறார்கள். ஆக இவர்கள் அய்யூப் பேசியதை மறுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
  • மனநோயை விட பதவி வெறி கொடியது என்று உணர்வில் கடிதம் எழுதியதால் தாங்களை மனநோயாளி என்று ஒத்துக் கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு மனநோயாளி தன்னை மனநோயாளி என ஒப்புக்கொள்ள மாட்டான். அதேபோல ஒரு திருடன் தன்னை திருடன் என ஒப்புக்கொள்ள மாட்டான். உதாரணம் ஜாக். ஆனால் ஒரு வாசகர் எழுதிய மனநோயை விட பதவி வெறி கொடியது என்ற விவகாரத்தை ஒப்புக்கொண்டு எழுதும் போது, அது கருத்தை எதிர்கொள்வதாக அமையுமே தவிர மனநோயை ஒப்புக்கொண்டதாக அமையாது என இந்த கள்ள அமைப்புத் திருடர்களுக்கு நாம் சொல்லிக்கொள்கிறோம்.
  • மலுக்கு முதலியை இப்போது யார் என்றே தெரியாதவர் போல கேட்கிறார்கள். பிறகு நாம் இதோ போட்டோ போட்டு நிறுபிக்கிறோம். மலுக்கு முதலி ஜாக் வகையறா என்பதற்கான ஆதாரத்தையும் இதோடு வெளியிடுகிறோம். இதன் பின்னர் நோட்டீஸ் அடிக்கும் இந்த பைத்தியக்காரர்கள் மலுக்கு முதலியை நாங்களும் கண்டித்தோம் என்பார்கள். இப்படித்தான் பசுலுல் இலாஹியை ஆதரித்ததாக ஒரு பிட் நோட்டீஸ் காட்ட முடியுமா எனக் கேட்டார்கள்.
  • பிஜே இறைமறுப்புக் கொள்கையில் கொஞ்ச காலம் இருந்த்தாக நீங்கள் சொல்லும் காலம் அவர் ஜாக் அமைப்பில் இருந்த காலம் என்பது தான் சரி. அப்போது நீங்களும் அவரோடு சேர்ந்து காபிராக இருந்தீர்கள் என சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
  • பிஜே தொழுவதை ஏதாவது ஒரு பள்ளியில் பார்த்ததுண்டா என கேட்கும் இந்த உத்தமர்கள், தமிழகம் அல்லது இந்தியா முழுவதும் இருக்கும் பள்ளியில் ஒரே நேரத்தில் எல்லாரும் பார்க்கும் வகையில் பிஜே தொழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் போலும். அப்படி ஒரே நேரத்தில் எல்லா பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் தொழுதால் மட்டும் தான் எல்லார் கண்களிலும் படமுடியும். ஆனால் அது பிஜேவாலும் முடியாது, யாராலும் முடியாது.
  • தவ்ஹீத் ஜமாத் பெட்டி வாங்கியதாக எழுதியிருக்கும் இவர்கள் தான் அந்தப் பெட்டியை வாங்கிக் கொடுத்தார்களா? 2 லட்சம் ரூபாய் கொடுங்கள் எங்கள் பகுதி வாக்குகளை வாங்கித் தருகிறேன் என்று கேட்ட பாம்பன் ஜாக் வகையறாக்களுக்கும், தவ்ஹீத் பள்ளிக்கு காசு தாருங்கள் என கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கேட்ட பாம்பன் ஜாக் அமைப்பின் கிளையே இப்படி என்றால் மாநில தலைமை எப்படி இருக்கும்?
ஆனால் ஜாக் அமைப்பினர் கேட்டு தவறிப் போய் தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கு வந்தக் காசைக் கூட வாங்கிக் கொள்ளாமல் அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, எங்கள் அமைப்பில் கிளை முதல் மாநிலம் வரை என யாரிடமும் காசு கேட்க மாட்டோம், யாரிடமும் விலை போக மாட்டோம் என ராமவன்னியிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிய தவ்ஹீத் ஜமாஅத் எங்கே? மானங்கெட்டு மற்ற அமைப்பின் பெயர் சொல்லி காசு கேட்ட ஜாக் எங்கே? ராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாத் நினைத்திருந்தால் சத்தமில்லாமல் அந்தக் காசை வாங்கி பதுக்கியிருக்கலாம். ஆனால் இறையச்சம் உள்ளவர்கள் இந்த அமைப்பில் உள்ளவர்கள் என்பதை இதன் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டிவிட்டார்கள் இராமநாதபுரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்.
  • ததஜ LTTE மாதிரி செயல்படுகிறதாம். அவர்களுக்கெதிரான அமைப்பு இருப்பதை விரும்பவில்லையாம். சரி இது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் கேள்வி அதுவல்ல. புலிகளை ஆதரிக்கும் சீமான் ஆதரித்த ஜவாஹிருல்லாவை இவர்கள் ஆதரித்தார்களா இல்லையா என்பது தான். அதற்கு இன்னும் பதிலைக் கானோம்.
  • பிஜே எழுதிய தர்ஜூமா விளக்கமா? குழப்பமா என தெளிவாகவே விவாதத்தில் சொல்லியிருக்கிறார் பிஜே. மதுரை பாதிரியார் ஜெபமணி குரானில் முரண்படும் வசன எண்கள் குறித்து கேலி செய்த போது பிஜே குர்ஆன் அன்றைக்கு நடப்பில் இல்லை. அன்றைக்கு இருந்த குரான்கள் அதற்கு பதில் சொல்வதாக அமையவில்லை. பிஜே குர்ஆன் தர்ஜூமா தவிர்த்து வேறு எந்த தர்ஜூமா இந்த கேள்விக்கு விளக்கமாக இருந்து விடைதரும் என்று ஜாக்கினர் சொன்னால் மிக நன்றாக இருக்கும். அதற்கு விடை சொல்லி விட்டு பிஜே தர்ஜூமா பற்றி பேசலாம் ஜாக்கினர்
  • சஹாபாக்களை இழிவுபடுத்துகிறாராம் பிஜே. ரசூலுல்லாஹ் இறந்த பிறகு சஹாபாக்களிடையே பதவிப்போட்டி வந்த்ததா இல்லையா? இல்லை என்றால் அதை இவர்கள் நிறுபிக்க வேண்டும். அதேபோல சகாபாக்கள் இருபிரிவுகளாக மாறி அன்னை ஆயிஷா தலைமையில் நடந்த ஒட்டகப்போர் எதைக் குறிக்கிறது என இவர்கள் விளக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கவ்ஸர் தடாகத்தில் தடுக்கப்படும் தன் தோழர்கள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன கருத்தை இவர்கள் மறுக்கிறார்களா அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா?
  • உணர்வு செய்தி சம்பந்தமாக பாம்பன் கிளைத் தலைவர் கலிபுல்லாவுக்கு 10/05/2011 பதிவுத் தபால் அனுப்பப்பட்டதே! அதற்கு இன்று வரை எந்த விதமான பதிலும் இல்லையே! அதையெல்லாம் இந்த யோக்கிய சீலர்கள் கேட்டுத் தெளிவு செய்யாமல் ஊருக்கு ஊர் நோட்டீஸ் போட்டு தங்களை உத்தமர்களாக காட்டிக் கொள்ள இவர்கள் நினைத்ததும் இப்போது கிழிந்து போனது. இவர்களை ரகசியக் கூட்டங்கள் போடுவதைப் போன்று ரகசியமாக இந்த நோட்டீஸைப் பரப்பலாம் என அனுப்பிய காப்பிகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்து இவர்களின் முகத்திரையை மேலும் கிழித்தது தான் நிஜம்.
ரசூல் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று,
அவன் பேசினால் பொய்யே பேசுவான். அவன் வாக்களித்தால் அதனை மீறி விடுவான். அவனிடம் அமானிதங்கள் வழங்கப்பட்டால் அதனை நிறைவேற்ற மாட்டான். அவன் நோன்பு நோற்றாலும்தொழுதாலும்தன்னை ஒரு முஸ்லிம் என்று அழைத்துக்கொண்டாலும் சரியே.
அறிவிப்பாளர்: அபு ஹூரைரா (ரலி)
புஹாரிமுஸ்லிம்
உங்களிடம் நான்கு தகுதிகள் காணப்பட்டால் நீங்கள் உங்கள் வாழ்வில் எதனையும் தவறவிட்டுவிட்டேனே என கவலைப்படத்தேவையில்லை. அத்தகுதிகளாவன: அமானிதத்தை பாதுகாத்தல்,உண்மையை பாதுகாத்தல்நற்பண்புகளை பேணல்நேர்மையானதூய்மையான உணவை உட்கொள்ளல்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
புஹாரி, அஹ்மத்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எவரொருவரிடம் நம்பகத்தன்மை இல்லையோஅவரிடம் சத்தியம் அல்லது தீன் இல்லை. எவனொருவன் தனது வாக்குறுதியை அல்லது தான் செய்த சத்தியத்தினை நிறைவேற்ற இல்லையோ அவரிடம் தீன் இல்லை.
-அஹ்மத்

நடந்த ஒரு உண்மையை மறைக்க ஒரு பொய், அந்த பொய்யை மறைக்க ஆயிரம் பொய்., இவர்கள் தான் யோக்கியர்கள் என ஒரு ஹக்கை மறைப்பதற்காக ஊர் தோறும் நோட்டீஸ்கள், ஈ மெயில் மற்றும் இஸ்லாமிய மெயில் குழுமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இ மெயில்கள் என ஏகப்பட்ட பித்னாக்கள். இப்போது இதைப் படிக்கும் பொதுமக்கள் இதை எவ்வளவு பரப்ப முடியுமோ அவ்வளவு பரப்புங்கள் . ஜாக் என்ற பிராடு இயக்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி ஜாக் வசூல் மோசடி அம்பலம்


இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் என்ற ஊரில் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லி பரிசுத்தவான்களான ஜாக் அமைப்பினர் தங்களை தவ்ஹீத் ஜமாஅத் என காட்டிக்கொண்டு மீட்டர் போட முயன்றதாகவும் , அவர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்டத்தலைவர் ராமச்சந்திர ராமவன்னி அவர்கள், கிளையில் ஒப்படைப்பதை விட மாவட்டத் தலைமையிடம் ஒப்படைப்பதே சிறந்தது என நினைத்து இராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் சைபுல்லாவைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நாங்களோ, எங்கள் கிளையில் உள்ள யாருமோ இங்கல்ல , தமிழகம் முழுவதும் எங்கேயும் யாரிடமும்மானங்கெட்டு காசு கேட்க மாட்டோம் என சொல்லியிருக்கிறார்.
உடனே அவர், உங்கள் பாம்பன் கிளையில் கட்டிக்கொண்டு இருக்கும் பள்ளிவாசலுக்குத் தான் காசு கேட்டார்கள் எனச் சொல்ல சூடு பிடித்து சாயம் வெளுத்து டர்ராகியது ஜாக்கின் முகமூடி..
ஜாக் பாம்பன் கிளைக்கு ஓட்டுக் கேட்கப் போன காங்கிரஸ்காரர்களிடம் “தவ்ஹீத் பள்ளிக்கு” கட்டிடத்துக்கு காசு தாருங்கள் என கேட்டிருக்கிறார்கள். தவ்ஹீத் என்றதும் சரி இது தவ்ஹீத் ஜமாத் பள்ளி என நினைத்த ராமவன்னி சரி நான் கொண்டு வந்து தருகிறேன் என சொல்லிய பிறகு தான் மேற்கண்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. காசு கேட்ட விசயத்தில்“ஹபிபுல்லா” என்பவர் தான் கதாநாயகன் என்று தெரிய வந்தது. ஆனால் இந்த செய்தியைப் பிரசுரம் செய்த உணர்வு பத்திரிகை, ஹபிபுல்லாவின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என முடிவு செய்து பொதுவாக செய்தி வெளியிட்டது. இதனால் கொதித்தெழுந்த ஜாக்கினர் கோயமுத்தூரிலும், திருச்சியிலும் வெளியிட்ட நோட்டீஸில் இதை நிருபிக்க முடியுமா எனக் கேட்க, அதன் பிறகு தான் ஹபிபுல்லாவின் பெயர் சீனுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் அதன் பிறகும் அசராத இந்த அயோக்கியர்கள், தாங்கள் செய்த தவறை மறைக்க நாங்கள் காசே கேட்கவில்லை. யாரிடமும் காசு கேட்கும் ஈன புத்தியும் எங்களுக்கு இல்லை. நாங்கள் பரிசுத்தவான்கள் என ஊருக்கு ஊர் நோட்டீஸ் விட்டனர் ஜாக்கினர். அதுமட்டுமின்றி ராமவன்னியைச் சந்தித்த ஒரு குழு அவரிடம் ஹபிபுல்லா என்பவரோ, ஜாக் அமைப்போ காசு கேட்கவில்லை என எழுதி வாங்கி வந்து விட்டனர்.
இந்தச் செய்தியை மறுத்து ஜாக்கினர் உலகம் முழுவதும் நாங்கள் தான் யோக்கியன் என்று நோட்டீஸ் அடித்து பரப்பியது.
ஆனால் டிஎன்டிஜேவினர், தங்களிடம ஆதாரங்கள் இருந்தும் ஜாக் சம்பந்தமாகஎந்தவித பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தனர். நாமும் அமைதியாக இருந்து விட்டோம். இந்த நிலையில் தான் கீழ்க்கண்ட நோட்டீஸ்கள் உலகம் முழுவதும் அச்சிட்டு பரப்பப்படுவது நம் கவனத்துக்கு வந்தது.
இனி டிஎன்டிஜேவினரை நம்பி பிரயோஜனம் இல்லை. நாமே இவர்களுக்கு பதில் கொடுத்தால் தான் இவர்களின் விசப்பல்லைப் பிடுங்க முடியும் என இதோ நாம் சேகரித்த ஆதாரங்களை உங்களிடம் அள்ளிப் போடுகிறோம்.
ராமவன்னியிடம் அவர்கள் வாங்கிய கடித்ததில் சில முரண்பாடுகள் இருப்பது நமக்குத் தெரியவந்தது. அதாவது என்னிடம் ஹபிபுல்லா என்பவரோ, ஜாக் அமைப்பினரோ யாருமோ காசு கேட்கவில்லை என துவங்கும் கடிதம் கடைசியாக, நான் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொண்டேன் என வந்து முடியும்.
அந்தக் கடிதம் இதோ:

யாருமே காசு கேட்கவில்லை, பிறகு ஏன் இவர் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆக இதற்குள் ஏதோ சதி இருக்கிறது என்பதை உணர்ந்து இதை சரியான முறையில் விசாரிக்க முடிவு செய்த நம் செய்தியாளர்கள் குழு பல வகையில் இதை அலசி ஆராய்ந்து பலவிதமான ஆதாரங்களைத் திரட்டியது.
முதலில் ராமவன்னியைப் பொருத்தவரை அவர் பாம்பனில் சேர்மனாக (சேர்மனோ அல்லது கவுன்சிலரோ தெரியவில்லை) இருக்கிறார். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலை எதிர் நோக்கி இருக்கிறார். எனவே அவர் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது மிகத் தெளிவாகியது ( ராமவன்னியுடன் பேசியஆடியோவைக் கேட்கவும்)
அடுத்து சில நபர்கள் தன்னை பாம்பன் ஜாக் தலைவர் கலிபுல்லா தலைமையில் சந்தித்து கடிதம் கேட்டதாக சொல்லியிருக்கிறார் ராமவன்னி. அதற்கு மறுமுனையில் பேசியவர் உங்களுக்கு ஹபிபுல்லா என்பவரைத் தெரியுமா எனக் கேட்கிறார். இவர் எனக்கு ஹபிபுல்லா என்பவரைத் தெரியாது. ஆனால் அங்கு வந்தவர்கள் ஒரு நபரைக் காட்டி இவர் தான் ஹபிபுல்லா, எனவே இவர் காசு கேட்கவில்லை என எழுதித்தாருங்கள் என கேட்க அதேபோல இவரும் எழுதித் தந்து இருக்கிறார்.(ராமவன்னியுடன் பேசிய ஆடியோ கேட்கவும்)
காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்டத்தலைவர் ராமவன்னியுடன் பேசிய ஆடியோ:

அதாவது இன்னும் உதாரணமாக சொல்ல வேண்டுமானால்,
பிஜே ஒருவரிடம் காசு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காசு கேட்டவருக்கு பிஜேவையும் யார் என்று தெரியாது, பிஜேவின் பெயரும் தெரியாது. ஆனால் அங்கிருந்தவர்கள் விசாரிக்கும் போது பிஜே தான் காசு கேட்டார் என்று சொல்கிறார்கள். இதனால் கொதித்தெழுந்த சிலர் ஒரு அடையாளம் தெரியாத நபரை, இவர் தான் பிஜே எனக் காட்டுவதற்காக அவரிடம் அழைத்துக் கொண்டு சென்று, நல்லா பாருங்க! இவர் தான் பிஜே, இவரா உங்ககிட்ட காசு கேட்டார் என கேட்கிறார்கள். அதற்கு முன் இவரை யார் என்றே தெரியாத அந்த நபர், ஓ! இவர் தான் பிஜேயா, இவரை நான் பார்த்ததும் இல்லை, இவர் என்னிடம் காசு கேட்கவும் இல்லை என சொல்கிறார். இதை அப்படியே எழுதித்தாருங்கள் எனக் கேட்க, அதுபோலவே அவருக்கு எழுதிக் கொடுக்கிறார்கள். இப்படித்தான் நடந்தது ஹபிபுல்லா என்பவர் காசு கேட்கவில்லை என ராமவன்னி எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற செய்தியின் சாராம்சம்.
அதெல்லாம் சரி! தவ்ஹீத் என்ற வார்த்தையை நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்று அவர்களின் கடிதத்தில் வந்த கருத்துப் பிழையின் உள் அர்த்தம் ஆயிரம் கதை சொல்கிறது. அதாவது இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றால் பிறகு ஏன் அவர் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும்?
அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ராமவன்னி எழுதியிருக்கும் கடிதத்தில் யாருமே காசு கேட்கவில்லை. ஆனால் பள்ளிவாசல் கட்ட காசு கேட்டது உண்மை என்று சொல்கிறார்.இதுவும் ஒன்றுக்கொண்று முரண். அப்படியானால் காசு கேட்ட்து யார்? வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா வாராது என்ற கதை தான்.
தவ்ஹீத் ஜமாத்துக்கு ராமவன்னி எழுதிய கடிதம்:
ஆக இதிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு தான் ராமவன்னி முழுமையாக வாய் திறக்க மறுக்கிறார் என்பதை.
சரி! இனி அவர்களே மாட்டிக்கொண்ட விவகாரங்களுக்கு வரலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி நாங்கள் காசு கேட்கவில்லை, அந்த அவசியமும் இல்லை. நாங்கள் காசு கேட்டது எங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தான். அதாவது நாங்களும் தவ்ஹீத் ஜமாத்தான் என்று சொல்லாமல் சொல்லி , உணர்வு அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில்“தவ்ஹீத் ஜமாத் ஜாக்” என்று இதற்காகவே புது லட்டர்பேடு அடித்து உணர்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அந்தக் கடிதம் இதோ:
ஆக இதுவும் அவர்கள் தப்பித்துக் கொள்ளும் ஒரு வழிதான். உணர்வு செய்தியாளரிடம் தொலைபேசியில் பேசிய கலிபுல்லா, “ஏன் நீங்கள் மட்டும் தான் தவ்ஹீத் ஜமாத்தா? நாங்களும் தவ்ஹீத் ஜமாத் தான் என்ற பாணியில் பேசியிருக்கிறார். ஆக இவர்கள் மீட்டர் போட்ட செய்தியை மறைக்க ஆயிரம் கதையை அவிழ்த்து விட வேண்டியாதாய் இருக்கிறது ஜாக் அமைப்பினருக்கு.
இதைவிடக்கொடுமை தவ்ஹீத் ஜமாத் பெயரைச் சொல்லி வசூல் மோசடி செய்து விட்டு, பாருங்கள் நாங்கள் யோக்கியர்கள், அவர்கள் தான் அயோக்கியர்கள் என்ற பாணியில் ஊரெல்லாம் நோட்டீஸ் பரப்பி வரும் இந்த யோக்கிய சிகாமனிகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுகிறார், பாம்பன் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர். அவர் தான் அசன் அலியை ஓட்டுக்கேட்க அழைத்துச் சென்றவர். வெறும் 2 லட்ச ரூபாய் கொடுத்தால் எங்கள் பகுதி ஓட்டுக்களை அப்படியே வாரித்தருகிறேன் என்று சொன்னதை ஆடியோவில் கேட்கலாம்.
உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் என்ன நடந்தது என்பதை விளக்குகிறார்கள்:

Wednesday, June 8, 2011

சட்டமன்ற முற்றுகை

Tuesday, June 7, 2011

இரட்டைப் புலிகள்


இரட்டைப் புலிகள் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ புலி மார்க் சீயக்காய் விளம்பரம் என நினைத்து விடக்கூடாது. மாறாக இது சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி நகரில் நடந்த அண்ணன் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைக்கும் கோஷ்டிகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு புலிகளாக மாறிய இரண்டு பெயர் தாங்கிகளைப் பற்றிய செய்திகளாகும்.
ஒருவர் ஓட்டுக்காக பிலியாக மாறியவர்,மற்றவர் டிவிக்காக பிலியாக மாறியவர். ஒருவர் தன்னை கரும்புலித் தலைவர் என்றும்,மற்றொருவர் தன்னை செம்புலித் தலைவர் என்றும் பறைசாற்றுகின்றனர். இவர்கள்பிலிகளாக மாறியதன் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இஸ்லாமியர்களும்(?) அங்கம் வகிக்கிறார்கள் என உலகுக்கே உரைத்து விட்டார்கள்.



கடந்த சில வாரங்களுக்கு முன்பு புலிகளின் ஆதரவாளர்கள் சென்னை தி நகரில் ஒரு கூட்டம் போட்டு மேற்படி இரண்டு புலிகளின் பெயர்களையும் இணைத்து போஸ்டர் அடித்திருந்தார்கள். தமிழீழம் அமைக்க வராவிட்டால்நீ தலைவனுக்குத் தம்பியுமல்ல,தமிழ்த்தாய்க்கு மகனுமல்ல என வாசகங்களைக் கொண்ட அந்த போஸ்டரை நாம் வெளிப்படுத்திய பிறகும் கூட அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் இந்த செம்பிலியும் கரும்பிலியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றியிருக்கிறார்கள்.
சரி போனா போவுதுஅந்த செய்திய அப்படியே ரகசியமா போட்டு மறைச்சிட்டு போறத விட்டு விட்டு அந்தக் கூட்டத்தில் இவர்கள் தமிழீழம் குறித்து பேசிய பேச்சுக்களை சமுதாய பொய்யன் ரிப்போர்டிலும் போட்டு இவர்கள் உண்மையான பிலிகள் என்பதை நிறுபித்துவிட்டார்கள்.
அந்தச் செய்தியை வெளியிட்ட உணர்வு வார இதழை கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பொய்யன் தனது ரிப்போர்டில். அதாவது ததஜவினர் ராஜபக்‌ஷவின் ஏஜண்டுகளாம். இஸ்லாமியர்களைக் கருவருத்த பிரபாகரனின் ஏஜண்டாய் இருப்பதை விட ராஜபக்‌ஷவின் ஏஜண்டாய் இருப்பது அவ்வளவு ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆனால் ததஜவைப் பொருத்தவரை எவனுடைய ஏஜண்டும் கிடையாது.
ராஜபக்‌ஷ தமிழ்மக்களின் மீது ஏவிய அடக்குமுறைகளை ததஜ கண்டிக்காமல் இல்லை. அதே நேரம் பிரபாகரனுக்கும் அதே கேட்டகிரி தான் வழங்கியுள்ளது ததஜ.
முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தார் பிரபாகரன் என உணர்வில் வந்த செய்திக்கு ஆதாரம் காட்டமுடியுமா எனக் கேட்டு தன்னை முழுமையான பிலி என்று வெளிப்படுத்தி விட்டார் பொய்யன். பிரபாகரன் முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததற்கு ஆதாரம் இல்லையாம். இதை நாம் மக்களிடமே விட்டு விடலாம். அல்லது பிரபாகரன் கொஞ்சூண்டு முஸ்லிம்களைத் தான் கொன்றார்அதுவும் சும்ம்ம்மா வெளையாட்டுக்குச் செய்தார் என பொய்யன் நிறுபிக்கட்டும்.
அதான் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த செயலுக்கு பிரபாகரன் மன்னிப்பு கேட்டு விட்டாரே! இன்னும் அதை ஏன் கிளறி…,அதாவது அவர்கள் எழுதியுள்ள வாசகம், “ஆறிய புண்ணைக் கீறிக் கீறி ஏன் நக்கிப் பார்க்கிறீர்கள்என்பதாகும். இதன் மூலம் தாங்கள் முழு பிலியாக மாறிவிட்டதை மக்களிடத்திலே பறை சாற்றுகிறார் பொய்யன். இப்போ உதாரணமாக குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொண்டு குவித்த நர மாமிச மோடி நாளைக்கே மன்னிப்புக் கேட்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வேளை நர மாமிச மோடியின் இயக்கத்திலே பொய்யன் சேர்ந்து விட்டார் என வைத்துக் கொள்வோம். அப்போது நாம் குஜராத் சம்பந்தமாக ஏதாவது எழுதினால் பொய்யன் இதைப்போலத்தான் கேட்பார். அவர் ஆயிரக்கணக்கிலே முஸ்லிம்களை கொன்று குவித்ததற்கு ஆதாரம் இருக்கிறதா உங்களிடம்?ஏன் பழைய புண்ணை கீறி நக்கிப் பார்க்கிறீர்கள் என்று நிச்சயம் கேட்பார். காரணம் பிரபாகரன் விசயத்திலே ஆதாரம் கேட்கும் பொய்யன் நாளைக்கே இப்படி மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் தங்களை பிலிகள் என்று சொல்வது என்ன நியாயம் என பொய்யன் கேட்கிறார். அதாவது இலங்கைத் தமிழ் மக்களை ஆதரிப்பதிலே இரண்டு வகை உண்டு. ஒன்று அவர்களின் அமைதியான வாழ்க்கைக்காக குரல் கொடுப்பது. இது ததஜ உள்ளிட்ட அதிகமான அமைப்புகள் செய்து வருகின்றன. இன்னொன்று தனித் தமிழ் ஈழம் அமைப்பது.
தமிழ் ஈழம் என்பது பிரபாகரன் கைப்பற்றியிருந்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஆகும். இலங்கை என்ற சிறிய நாட்டின் தலைநகரம் கொழும்பு ஆகும். பிரபாகரன் கையகப்படுத்தி வைத்திருந்த இலங்கையின் ஒரு பகுதியான தமிழ் ஈழம் என்ற நாட்டின் தலைநகர் திரிகோணமலை ஆகும். அதனால் தான் தங்களை Liberation Tigers of Tamil Eelam (LTTE)என சொல்லிக் கொண்டார்கள் புலிகள். தமிழ் ஈழத்திற்கென்று தனி போலீஸ், தனி ராணுவம்,தனி பாஸ்போர்ட் என அனைத்துமே உண்டு. ஆனால் இலங்கை என்ற சிறிய நாட்டினை ஆக்கிரமித்து வைத்திருந்ததால் தான் புலிகளுடன் காலம் காலமாக மீட்புப் போரை நடத்தியது இலங்கை ராணுவம்.
இதன் மூலம் தமிழ் மக்கள் வேறுதமிழ் ஈழம் என்பது வேறு என்பதை நாம் தெளிவாக உணரமுடியும். ஆக தமிழீழம் அமைக்கப் பாடு படுவோம் என்று சொல்பவர்கள் புலிகளாக இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்?பொய்யனும்வாத்தியாரும் 100% பிலிகள் தான் என்பதை நிறுபிக்க இதை விட ஆதாரம் தேவையில்லை.
அடுத்து முள்ளிவாய்க்காலின் இறுதிப்போரின் போது மக்களை வெளியேற விடாமல் தங்களுக்கு அரணாக புலிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற செய்தியும் உணர்வு இதழில் வெளி வந்தது. இதனால் பொங்கியெழுந்த பொய்யன் பிலிபாருங்கள் இவர்கள் ராஜபக்‌ஷ சொன்னதை அப்படியே சொல்கிறார்கள். இவர்கள் ராஜபக்‌ஷவின் ஏஜண்டுகள் என்பது இதன் மூலம் நிறுபனமாகிறது என சீறியெழுந்தார்கள். மேற்கண்ட முள்ளிவாய்க்கால் செய்தியை ராஜபக்‌ஷ மட்டுமா சொன்னார்?
புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த தமிழ் மக்கள், டான் தமிழ் ஒளி தொலைக்காட்சிக்கும்,ரூபவாஹினி தொலைக்காட்சிக்கும் அழுகையும் கண்ணீருமாக அளித்த பேட்டிகள் தான் இது. ஆனால் இது தவறான செய்தி என்று வண்மையாகக் கண்டித்து தன்னை பிலியாக மாற்றிக் கொண்ட பொய்யன் கோசமிடுகிறார்.

கூடுதல் ஆதாராமான செய்தி இதோ:
முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்து சினிமாகாரராக மாறிவிட்ட இயக்குனர் அமீர் ஒருமுறை பீஜேவையும் பொய்யரையும் பார்க்க வந்தார். இந்த சந்திப்பு பொய்யரின் தக்வா ஹஜ் வியாபார நிறுவனத்தில் நடந்திருக்கிறது. அமீருடன் தமிழ் எம்பி சிவாஜி லிங்கமும் கலந்து கொண்டார். அந்த சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் எப்படியெல்லாம் முஸ்லிம்களை கருவறுத்தார்கள் என்பதை ஆதாரத்துடன் பீஜேயும் பொய்யரும் விளக்கியிருக்கிறார்கள். இனிமேல் புலிகள் ஆதரவு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அமீரிடம் பொய்யர் கோரிக்கையும்ம் வைத்திருக்கிறார். இது உணர்வு இதழிலும் விரிவாக வந்துள்ளது. இது நடந்த போது பீஜேயும் பொய்யரும் நிர்வாகத்தில் இல்லை. பொய்யர் மீது பாலியல் நடவடிக்கையும் எடுக்கப்படாத நேரம். இப்படி பேசிய பொய்யன் கூட்டம் இப்போது அதற்காக ஆதாரம் கேட்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
ஆக முஸ்லிம்கள் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்த புதிய பிலித்தலைவர்களின் செயல்பாடுகளை உணர்ந்து கொண்டு இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

Monday, June 6, 2011

மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.
அவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது.
கயவர்களால் கள்ளத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலகத்தை 14 ஆம் தேதிக்குள் நம்மிடம் ஒப்படைக்காவிட்டால் 14 ஆம் தேதியன்று சட்டமன்றக்கூட்டம் நடக்குமேயானால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும், அதற்குள் சட்டமன்றக் கூட்டம் முடிக்கப்பட்டு விட்டால், அதே தேதியில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற முற்றுகை போராட்டம் ஏன் ? வட மரைக்காயர் தெரு அலுவலகம் யாருக்குச் சொந்தம் ? நடந்தது என்ன?


1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.
4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை
5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDOவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும்இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.
9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும்மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.
10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.
12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும்சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன்ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும்காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை11மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.

Wednesday, June 1, 2011

கோவையில் SDPI போலி போராளிகள்(?) தொடர்ந்து அத்துமீறல்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் சார்பாக 08.05.2011 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அது சமயம் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.சத்திய பாதையில் லட்சிய பயணத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் மாணவரணியின் கல்வி வழிகாட்டி போஸ்டர்கள் மீது, விடியல் வெள்ளி போஸ்டர்களை SDPI அரசியல் கட்சியினர் ஒட்டினர்.
மேலும் இந்த வாரம் நம் சமுதாய வார இதழான உணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்ட பல்வேறு இடங்களில் தங்களது விடியல் வெள்ளி போஸ்டரை ஒட்டி தொடர்ந்து அத்துமீறி வருகின்றனர் SDPI அரசியல் கட்சியினர்..
நடந்து முடிந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் குறைந்தது 10,000ஓட்டுகள் பெறுவார்கள் என்பது பொது மக்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் அரசியல் கட்சி ஏவிய கூலிப்படையாக செயல்பட்டு TNTJவினர் மீது கோவையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியதன் விளைவாக 40,000 திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஓட்டு உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் வெறும் 4519 ஓட்டுகள் மட்டுமே SDPI அரசியல் கட்சியினரால் பெற முடிந்தது.
தொடர்ந்து இது போன்ற செயல்களில் SDPI கட்சியினர் ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய காலங்களில் ஒட்டுமொத்தமாக மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதே நிதர்சனம்.



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons