Monday, March 21, 2011

ஹைதர் அலிக்கு சீட்டு கொடுக்காதது ஏன்?

                                                     முக்கியச்செய்தி: நிரந்தரப் பொதுச்செயலாளருக்கு சீட் மறுப்பு.. ஹைதர் அலிக்கு சீட்டு கொடுக்காதது ஏன்? மமகவில் நிலவும் மர்மம்... வக்ஃப் வாரியம் என்பதெல்லாம் வெறும் சால்ஜாப்பு... விரைவில் விசயம் புரியும் என மமகவின் முக்கிய மாவட்டம் ஒருவர் தகவல்............,

மமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஒரு சிறப்பு பார்வை


கலைஞரை விட்டு வெளியேறி தனித்து நின்று ஜெயா டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அம்மா துதிப்பாடல் பாடியது முதல் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மூன்று சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு பல்லைக்காட்டியது வரை மமகட்சியின் மானங்கெட்டத்தனத்தைப்பார்த்து ஊரே சிரிக்கிறது. பச்சை அரசியல்வாதிகளைக் கூட வென்று விட்டார்கள் இவர்கள். கலைஞர் தான் நம் சமூக காவலர் என நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியது முதல் (கோவையில் இருந்து தனி ரயிலே வந்தது தனிக்கதை) அதைக் காட்டி கலைஞரிடம் பேரம் பேசிஜெயலலிதா மோடியின் தோழிஅராஜகக்காரி என அள்ளிவிட்டு கலைஞரிடம் நற்சான்றிதழ் பெற முயற்சித்து வக்ப் போர்டை வாங்கி கொண்டை வைத்த சிவப்புக் காரில் சுற்றிவந்து ஒரு சீட்டுத்தான் தருவோம் என கலைஞர் சொல்லமுடியாது முடியாது அப்பறம் அந்த ஒரு சீட்டுல யார் போட்டியிடுவது என எங்களுக்குள் சண்டை வந்து விடும்எனவே இரண்டு சீட்டாவது தாருங்கள் என கெஞ்சிக் கூத்தாடி கலைஞர் இவர்களை கழுத்தைப்பிடித்து தள்ளி கதவைச்சாத்தியது வரை,
இன்றைக்கு அம்மாவிடம் சரணாகதி அடைந்தது முதல் அம்மான்னா சும்மா இல்லடாகலைஞர் தான் கைது செய்தார்கலைஞரின் துரோக வரலாற்றுத் தொடர் என கலைஞரைக் கஞ்சி காய்ச்சுவது வரை
மக்கள் இவர்களின் ஈனச்செயல்களை உன்னிப்பாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு சீட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற ரீதியில் அனைத்துக்கும் தயாராய் களமிறங்கிவிட்டார்கள்.
3 சீட்டு பெற்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும்ஏம்பா! மமக தொண்டர்களில் யாருக்கு போட்டியிட விருப்பம் இருந்தாலும் மணு செய்யலாம் என அறிவித்திருக்க வேண்டும். ஆனால் செய்தார்களாசெய்யவில்லை. என்ன காரணம்மமகவில் அல்லது தமுமுகவில் இவர்களை விட்டால் ஆளே இல்லையா?
தமிழிலே ஒரு பழமொழி இருக்கிறது.
கல்யாண வீடாக இருந்தால் நான் தான் மாப்பிள்ளையா இருப்பேன்,
எழ‌வு வீடா இருந்தா நான் தான் பொணமா இருப்பேன்.,
எங்க போனாலும் மாலையும் மரியாதையும் எனக்குத்தான்
இந்தப் பழ்மொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ! கழகத்தின் நிரந்தரத்தலைவருக்கும் நிரந்தரப் பொதுச்செயலாளருக்கும் நன்றாகப் பொருந்தும். தலைவர் பதவியாஎனக்குத்தான்வக்ப் வாரிய பதவியா?எனக்குத்தான்சவூதி அரேபிய தூதர் பதவியாஅதுவும் எனக்குத்தான். எம்பி பதவியா அதுவும் நான் தான். கக்கூஸ் திறப்பு விழாவாஅதுக்கும் நான் தான்
என தான் தான் என ஆடி ஓடி திரிந்து பதவிவெறி பிடித்து அலையும் இவர்களை என்னவென்று சொல்லஇவர்கள் தேர்தலில் போட்டியிட்டு பவுசு காரில் பவனி வருவதற்கு சாதாரண ஆட்டோ ஓட்டும் என் சகோதரன் ஏன் அவன் வேலையை விட்டு உழைக்க வேண்டும்இவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கும் கட் அவுட் வைப்பதற்கும் சுண்டல் விற்கும் என் சகோதரன் ஏன தன் 5 நாள் உழைப்பைத் தரவேண்டும்இவர்களை அரியாசனம் ஏற்றுவதற்கு அடுப்பங்கரையில் இருந்து இடியாப்பம் சுட்டு விற்கும் என் சகோதரி ஏன் இவர்களுக்கு காசு தரவேண்டும்?இவர்களுக்கு தேவைப்பட்டால் காசே இல்லாமல் பிரச்சாரம் ஊர் ஊராய் பஸ்ஸில் போய் செய்யுங்கள். அல்லது ஜவாஹிருல்லாவும்ஹைதரும் தங்களின் பூர்வீகச்சொத்துக்களை விற்று விட்டு இவர்களுக்கு போஸ்டர் அடிக்க காசு கொடுங்கள். இவர்கள் குதிரை ஓட்டுவதற்கு கடிவாளம் வாங்கிக்கொடுக்க வக்கில்லாத சமுதாயத்திடம் எங்களுக்கு குதிரையே உங்கள் காசில் இருந்து வாங்கித்தாருங்கள்அதிலே ஏறி நாங்க எப்படி ஓடுறோம்னு மட்டும் பாருங்க,கிளைக்கு 10 ஆயிரம் ரூபா கண்டிசனா வந்துடனும் என கட்டளை போடும் இந்த கர்மவீரர்களை வெற்றியடையச் செய்ய நாம் ஏன் உழைக்க வேண்டும்?
மமகவில் யாருமே வேட்பாளர்கள் இல்லையாஇவர்களை விட்டால் மமகவில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களாபயந்தாங்கொள்ளிகளாகோழைகளா?இவர்களை ஏனப்பா எல்லாவற்றிற்கும் முன்னிறுத்துகிறீர்கள். எல்லாவற்றிற்கும் முன் நிற்க வேண்டும் என ஆசைப்படும் நிரந்தர தலைவரும்நிரந்தர பொதுச்செயலாளரும் திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸில் அப்பாவி மமக தொண்டர்கள் குமுறக்குமுற அடிவாங்கிய போது அந்த தகவல் உடனடியாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போதும் நிரந்தரத்தர பொதுச்செயலாளர் தன் பாதையையே மாற்றிக்கொண்டு தாம்பரம் பக்கம் தாவிச்சென்றாரா இல்லையா?கலாட்டா நடக்கும் இடத்திலே தகவல் கொடுத்தும் கழகத்தின் பொதுச்செயலாளர் கடைசிவரை அந்தப்பக்கமே தலைவைத்துப் படுக்காமல் அந்தி சாயும் நேரத்துல ஆஸ்பத்திரிக்கி போய் ஆறுதல் சொன்னாரா இல்லையா?எல்லாவற்றிலும் முன் நிற்போம் என சொல்லக்கூடியவர்கள் அடிவாங்குவதில் மட்டும் பின் நிற்க காரணம் என்னபாவம் அப்பாவி தமுமுக தொண்டர்கள்.
சரி விசயத்திற்கு வரலாம். என்னவோ 1200 பேர் தேர்தலில் போட்டியிட மணுச்செய்த மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்தில் மாமா கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவுதாம். மொத்தம் இருப்பது 3 சீட்டு அதுல போட்டியிட 2 பேருன்னு உலகுக்கே விசயம் தெரிந்து இருக்கும் போது என்னத்தய்யா புதுசா வேட்பாளர் பட்டியலை விடப்போறீகஅந்த மூனாவது நபர் யாருன்னு வேணுமினா காத்திருக்கலாம். மற்றபடி உண்மையிலேயே 1200 பேர் தேர்தலில் மமக சார்பில் போட்டியிட விண்ணப்பம் செய்திருந்தாலும் அவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்போம் என சொல்லி 1200 பேர் பெயரையும் சீட்டில் எழுதி ஒரு அண்டாவில் போட்டு குலுக்கி அதிலிருந்து 3 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். அதிலும் இந்த இரண்டு பேர் இருப்பார்கள். அய்யா! மமக தமுமுக தொண்டர்களே! கொஞ்சமாவது சிந்திங்கப்பா! உங்கள் உழைப்பைச் சுரண்டி இவர்கள் ஏறி நிற்க முயற்சிக்கிறார்கள். உஷார் ஆகுங்கள்
மமக செய்த சமுதாய நன்மைகளும்வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்த லட்சனமும் குறித்த விரிவான அலசல் மிக விரைவில்
பரிசுக்கேள்வி:
மமகவினர் மீது கொலைவெறி தாக்குதல்ஹைதர் அலி உள்ளிட்டவர்கள் கள்ள ஓட்டுப்போடுபவர்களை அடையாளம் காட்டிய போது ஹைதர் அலி உள்ளிட்ட கழகத்தொண்டர்கள் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் என்பது அன்றைய தட்ஸ்தமிழின் செய்தி. அடையாளம் காட்டும் போது நின்ற ஹைதர் அலிஅடிவாங்கும் போது எங்கே சென்றார்அங்கு நின்ற அப்பாவி தொண்டர்கள் எல்லாம் ரத்தம் சொட்டச்சொட்ட அடிவாங்கிய போது ஹைதர் அலி மட்டும் ஒரு சிறு கீற‌ல் கூட இல்லாமல் தப்பியது எப்படி?
இந்தக் கேள்விகளுக்கு சரியான விடையளிப்பவர்களுக்கு மமகவுக்கு பாண்டிச்சேரியில் ஒதுக்கப்பட்ட ஒரு சீட்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்,








அடிவாங்கி ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் நலம் விசாரிக்க சென்ற ஹைதர் அவர்கள் ஒருவரிடம் சென்றுஅடிவாங்கும் போது என் பேர சொன்னீங்களா?என் பேர சொன்னா விட்டு இருப்பாங்கள்ல! என்று கேட்டாராம்அதற்கு டென்சனான அவர்அட ஏங்க! உங்கப்பேர சொன்ன பெறகு தான் அடியே பலமா விழுந்துச்சின்னாராம்.

Saturday, March 19, 2011

வாத்தியாரும், ஹைதரும் போட்டியிட மாட்டார்கள். மாணவர் அணி தரும் பரபரப்புச் செய்தி


வரக்கூடிய தேர்தலில் மமகவின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் தமுமுகவின் மாநிலத் தலைமையில் நடந்தது. இந்தகூட்டத்தில் தமுமுக மற்றும் மமகவின் முக்கியப்பொருப்பாளர்கள் மற்றும் அணியினர் கலந்து கொண்டார்களாம். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமுமுக மற்றும் மமகவின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் எப்படி இருக்க வேண்டும் என்ற ரீதியில் கலந்துரையாடல் நடந்திருக்கிறது.
இந்தக்கலந்துரையாடலின் போது வரும் தேர்தலில் கழகத்தின் நிரந்தரத் தலைவரையும்நிரந்தர பொதுச்செயலாளரையும் எப்படியாவது எம்எல்ஏ ஆக்கிவிடவேண்டும் என்பதற்காக இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அஇஅதிமுக கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் கடுமையாக பாடுபட்டு உழைப்பது என்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டதாம்.(பாவம்! இஸ்லாமிய சமுதாயம் 3 வாங்கிக்கொண்டு 300க்கு உழைக்கும் என்ற கேவல நிலையை உருவாக்கி விட்டார்கள் இந்த மமவினர்)
மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் கலந்து கொண்டவர்களின் வாதங்கள் மிகக் கடுமையாக இருந்ததாம். அதாவது நீங்கள் வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு நம் சமுதாயத்திற்கே பெரிய தலைகுணிவை ஏற்படுத்தி விட்டீர்களே என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்களாம்.(பரவாயில்லை தமுமுக தொண்டர்கள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்) ஆனால் தமுமுகவின் நிரந்தரத் தலைவரும் நிரந்தரப் பொதுச்செயலாளரும் ரோஸ்டர் முறையை எப்படி நியாயப்படுத்தினார்களோ அதே போல சொந்தச்சின்னம் என்ற கருத்தை முன்வைத்து அவர்களைக் கூல் படுத்தினார்களாம்.,இதை ஒப்புக்கொண்ட மாணவர் அணியினரும் வழக்கறிஞர் அணியினரும் தமுமுகவின் வெப்சைட்டில் கழகம் 3 சீட்டுக்கள் பெற்றதற்கு ஆதரவாக வந்த வெறும் 7 கருத்துகளை மட்டுமே தான் வெளியிட்டீர்கள்ஆனால் நீங்கள் 3 சீட்டு வாங்கியதற்கு எதிராக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துக்களை ஏன் வெளியிடவில்லை எனக் கேட்டார்களாம். இந்த இடத்தில் விழி பிதுங்கி தலைவரும்பொதுச்செயலாளரும் விழிக்க நிலைமையை உணர்ந்த தமீம் அன்சாரி ஒருவகையாய் சமாளித்தாராம்.
அதாவது எதிரிகள் (வேற யாரு?) கூட தவறான கருத்துக்களைப் பதிவுசெய்யலாம்பதிவும் செய்கிறார்கள்.,ஆகவே இதை நாங்கள் முறைப்படுத்தினோம் என்றார்களாம். உடனே பதில் தாக்குதல் நடத்திய மாணவர் அணியினர்நம் வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு செய்திக்கும் எவ்வித கருத்துக்களையும் நீங்கள் வெளியிடுவதில்லைஇதைப்பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை எனக் கேட்டார்களாம். அதையும் பூசி மெழுகிய அன்சாரிஉங்கள் தொகுதியில் வசூல் நிலவரம் எப்படி என்பதை கேட்கஇடைமறித்த மாணவர் அணியினர் எங்களுக்கு தேர்தல் குறித்து இன்னமும் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்களாம். அனுமதி வழங்கப்பட்டவுடன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாம் கழகக்குழு.
அதாவது வரும் தேர்தலில் மாணவர் அணி சார்பில் ஒருவரும்,வழக்கறிஞர் அணி சார்பில் ஒருவரும் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்களாம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமா குழுவினர் ஒரு ரகசிய செய்தியைப் போட்டு உடைத்தார்களாம். அதாவது சென்ற முறை வர்த்தகர் அணியில் தங்க முட்டையிடும் வாத்தாய் இருந்த பள்ளிவாசல் மூடிய ஊர்காரரை கழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் தான் ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டார். அவரைப் போல இனி யாரும் கழகத்தைவிட்டு கழன்று விடக்கூடாது என்பதற்காக இம்முறை வர்த்தகர் அணிக்கு ஒரு சீட்டு ஒதுக்குவது என கழகம் முடிவெடுத்திருக்கிறது.
எனவே மிச்சமிருப்பது இரண்டு சீட்டு தான் (ஒன்னு உனக்க்க்க்கு,இன்னொன்னு எனக்க்க்க்கு). எனவே இனி வேறு நபர்களுக்கு ஒதுக்குவது சிரமம் என நிரந்தர தலைவர் விளக்கதங்கள் கொள்கையில் உறுதியாக இருந்த மாணவர் அணியினர் முடியவே முடியாது என சொல்லியிருக்கின்றனர். அத்தோடு பேசிய அவர்கள் நீங்களும்பொதுச்செயலாளரும் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டுயிட்டு விட்டீர்கள். எனவே நீங்கள் திரும்ப சட்டமன்றத்திற்கு போட்டியிடுவது தகுதி குறைவாக இருக்கும். அத்தோடு கழகத்திற்கு வரும் பதவிகளை எல்லாம் நீங்கள் மட்டுமே அனுபவிக்கிறீர்கள்இதனால் தான் உங்களை எதிரிகள் பதவி வெறி பிடித்தவர்கள் என தூற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி ஐநா சபையிலேயே ஆங்கில புலமையாற்றிய நீங்கள் தான் நாடாளுமன்றம் போக மிகத்தகுதியான நபர் (கழகத்தின் நிரந்தரத் தலைவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதாவது நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஊருக்கு ஊர் சென்று மீட்டிங் போட்டார். அதிலே அவர் பேசிய பேச்சுக்கள், " " நாடாளுமன்றத்திற்குச் சென்று நம்முடைய குறைகளை ”Mr.Prime Minister, What about our Reservation?”“ என்று ஆங்கிலத்திலே கேட்பதற்கு ஆள் இல்லையே! என்று சொன்னாரு.
அப்ப நாம நெனச்சோம்சே! தலைவர் இன்னாமா பீல் பண்ணி கூவுறாருன்னுஅப்பறம் தான தெரிஞ்சது ,அந்த இங்கிலிபீசு பேசுற ஆளுன்னு அவரத்தான் சொன்னாருன்னு) எனவே நீங்கள் தான் நாடாளுமன்றம் செல்லத் தகுதியான நபர். அதுமட்டுமின்றி உங்கள் மற்றும் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதல் கழகத்திற்கு அவசியம் தேவை. எனவே நீங்கள் வெளியே இருந்து வழிகாட்டினால் தான் எங்களைப் போன்ற இளைஞர்கள் நாளை இந்தக் கழகத்தைக் கட்டிக்காகக் இயலும் எனவும் வலியுறுத்தினார்களாம். இதைக்கேட்டு நிரந்தர தலைவரும்பொதுச்செயலாளரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே அமைதி காக்க ஆடிப்போனதாம் கழகத்தின் சபை.
நீண்ட நேர மௌணத்திற்கு பிறகு இதைப்பற்றி இஷா தொழுகைக்குப் பின் முடிவெடுக்கலாம் என்ற ரீதியில் பெருந்தலைகள் இழுத்துவிடமாணவர் அணியும்வழக்கறிஞர் அணியும் இஷா தொழுகை வரை காத்திருந்ததாம். ஆனால் இஷா முடிந்தும் ஒரு முடிவை அறிவிக்காமல் காலம் கடந்து செல்லவே கடைசியில் நாளை முடிவு சொல்கிறோம் என கழகத்தினர் இவர்களை அனுப்பிவைத்தார்களாம். இதற்கிடையில் இரவோடு இரவாக மாணவர் அணியைச் சார்ந்த சிறந்த நிர்வாகி பொருள் வரும் பெயர் கொண்டவருக்கு போன் போட்டுஎன்னப்பா இப்படி பண்றீங்கஉங்க முடிவை மாத்துங்கப்பா என பொதுச்செயலாளர் பேசஇல்லண்ணே! பசங்க எல்லாம் ரொம்பவே காட்டமாஆஆ இருக்காங்கநீயூ காலேஜில வேற இப்ப ஏதோ கூட்டம் போடுறாங்களாம்இந்த முடிவை நம்ம மாற்றிக்கொண்டால் நாம் மாணவர் அணியை இழக்க வேண்டி வரும் என சொல்லஅதிர்ந்து போன கழகத்தின் நிரந்தர தலைவரும்பொதுச்செயலாளரும்,வழக்கறிஞர் அணியைத் தொடர்பு கொள்ள அங்கே கடைசிவரை தொடர்பு கிடைக்கவேயில்லையாம்.
ஒரு வகையாய் மறுநாள் காலை 10 மணிக்கே மாணவர் அணியும்,வழக்கறிஞர் அணியும் தலைமைக்கு வந்து சேர அவர்களை மசூரா அறையில் அமரவைத்து விட்டு பல‌ மணி நேரங்களுக்குப்பிறகு அவர்களை சந்திக்க ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்களாம். மீண்டும் ஒருமுறை அவர்களிடம், அறிமுகமான முகமாக இருந்தால் நல்ல வாக்குகள் கிடைக்கும் அதனால் தான் கழகத்தின் நிரந்தர தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட விரும்புகிறார்கள் என மமகவின் தலைவர் சால்ஜாப்பு சொல்ல, கடைசிவரை மறுத்தார்களாம் மாணவர் அணியும் வழக்கறிஞர் அணியும். நேரம் நீண்டு கொண்டே செல்ல இறுதியில் நாளை வாருங்கள் பேசிக்கொள்ளலாம்நாங்கள் அம்மாவிடம் சென்று அட்னன்ஸ் போட்டால் தான் எந்தெந்த தொகுதி கிடைக்கும் என்பது தெரியும் என கழகத்தின் நிதவும் நிபொவும் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல்இன்றைக்கே முடிவைச்சொல்லுங்கள் என அடம்பிடிக்க இவர்கள் செயலிழந்து தான் போனார்களாம்.
இறுதியில் இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வரும் தேர்தலில்
சீட்டுக்களில் ஒன்றை ஏற்கனவே வர்த்தகர் அணிக்கு வழங்கிவிட்டதால்மீதமிருக்கும் இரண்டையும் மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி என அணிக்கு ஒருவர் வீதம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்களாம் சமாதானக்குழுவினர். மாணவர் அணியில் இடம்பெற்றிருக்கும் ததஜவின் தலைவர் பெயர் கொண்டவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும்வர்த்தகர் அணியில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊர்க்காரரான டிராவல்ஸ்காரருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் செய்தி வருகிறது. டிராவல்ஸ்காரர் இப்போது ஆளுங்கட்சியில் இருந்தாலும் தங்கமுட்டையிடும் வாத்தான அவரை மீண்டும் உள்ளே இழுக்கவே இது செய்யப்படுகிறாம்.
இதைப்பற்றி நம்மிடம் சொல்லி பெருமையடித்த அந்த அப்பாவி மாணவரணிக்காரரிடம் நாம் சொல்லிய பதில் இதுதான்,
வர்த்தகர் அணிக்கு கொடுப்பது உண்மையாக இருக்கும். ஆனா நீங்க வேணுமினா பாருங்கமிச்சம் ரெண்டுலயும் கழகத்தின் நி.தவும் நி.பொவும் மட்டும் தான் நிப்பாங்க,. பதவிவெறி அவர்களின் கண்களை மறைத்து விட்டது. அவர்கள் மட்டும் தான் எம்.பி ஆகனும்அவர்கள் மட்டும் தான் எம்எல்ஏ ஆகனும். அவர்கள் மட்டும் தான் வக்ஃப் வாரியத்துக்கு தலைவராகனும்அவர்கள் மட்டும் தான் சவூதி அரேபியாவுக்கு தூதர் ஆகனும். அதனால தான் நடந்து முடிந்த பொதுக்குழுவில் எவ்வித நிபந்தனையும் இன்றி இதே மாநில பொருப்பாளர்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டது. செயிச்சா எம்எல்ஏதோத்தா பழையபடி காலத்துக்கும் நிரந்தர தலைவர்நிரந்தர பொதுச்செயலாளர். ஏன் இவர்களைத்தவிர தமுமுகவில் வேறு யாருமே இல்லையாஅப்ப மிச்சம் மமகவிலும்தமுமுகவிலும் இருப்பவனெல்லாம் என்ன இழிச்சவாயனாஅவங்க சொன்னாங்களாம் இவங்க கேட்டாங்களாம். வர்த்தகர் அணிக்கு ஒன்னுங்கிறது உண்மையா இருக்கலாம்.மற்றபடி மாணவரணிக்கு ஒன்னு மருத்துவரணிக்கு ஒன்னு வழக்கறிஞர் அணிக்கு ஒன்னு,தொண்டரணிக்கு ஒன்னுகுண்டரணிக்கு ஒன்னுன்னு சொல்வதெல்லாம் சுத்த அல்வா!!! என சொன்னதும் அவர் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் தான் நேற்று மமகவுக்கு சேப்பாக்கம்ராமநாதபுரம்,ஆம்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமுமுகவின் தலைமை அமைந்திருக்கும் தெருவில் நேற்று கசிந்த தகவல் படி சேப்பாக்கம் தொகுதியில் நிரந்தரப்பொதுச்செயலாளரும்ஆம்பூரில் கழகத்தின் நிரந்தரத்தலைவரும்இராமநாதபுரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊரைச்சார்ந்த டிராவல்ஸ்காரரும் (அவர் ஆளும்கட்சியை விட்டு விலகி இவர்களிடம் இணைந்தால்), அல்லது அனார்கலியின் கணவர் பெயர் கொண்டவரும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்களாம்.
யப்பா! தமுமுகவின் தங்கங்களே! உங்கள் கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்நிரந்தரப் பொதுச்செயலாளருக்கும் பதவிவெறி இல்லையென்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தீர்களே! இப்ப தெரிகிறதா உங்க கழகத்தின் நிரந்தரவான்களின் யோக்கியதை. அடச்சீ.....மானங்கெட்டவனுங்க...

தட்டுத்தடுமாறி தடம்புரண்ட ஜாக்

ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற ஜாக் இயக்கம் மௌலவி பி.ஜே அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும். அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்திற்கு தலைவராக இருந்த பிஜேதலைவர் பொருப்பில் இருப்பது தவ்ஹீத் பிரச்சாரத்தை பாதிக்கிறது என்ற நோக்கில் கமாலுதீன் மதனியை தலைவராக ஆக்கிவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அன்றைய அவ்வளவு எதிர்ப்புகளையும் அடிதடி வெட்டுக்குத்துக்களையும் மீறி வெடித்துக்கிளம்பிய ஒரு இயக்கம் தான் இந்த ஜாக். குர்ஆன் மற்றும் ஹதீஸ் இரண்டை மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்ற நோக்கில் அன்றைக்கு இருந்த வழிகேடுகளைத் தவிர்த்து விட்டு உண்டாக்கப்பட்ட இந்த‌ இயக்கம்,இன்றைக்கு அவர்களின் சுய நலனுக்காகவும் உலக ஆதாயங்களுக்காகவும் மட்டுமே இரத்தம் சிந்தி உண்டாக்கப்பட்ட ஒரு இயக்கம் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் மிஞ்சும்.
அதாவது சினிமாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறி சினிமாவே ஹராம் என்று சொன்னவன் இன்றைக்கு அவனே சொந்தமாக‌ சினிமா தியேட்டர் கட்டி டிக்கெட் கிழித்த கதையாக ஆகிவிட்டது இன்றைய ஜாக்கின் நிலை.
எதையெல்லாம் வழிகேடுகள் என்று சொன்னார்களோஇன்றைக்கு அதெல்லாம் சரி என்ற ரீதியில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் சஹாபாக்கள் மற்றும் இமாம்கள் என்ற ரீதியில் இறங்கிவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் தர்ஹாதரீக்கா என்ற ரீதியில் இறங்கி கழிசடையாகி கடைசியில் 1980 களுக்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலைக்கு விரைவில் வந்து விடுவார்கள் என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
பிறை விசயத்தில் பயங்கர பில்டப் கொடுத்து தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே ரீதியில் பிறையைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தார்கள். அமீருக்கு கட்டுப்படுதல் என்பது பிஜே இன்றைக்கு எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர். ஆனால் ஜாக்கின் வழிகெட்ட கொள்கையில் மிக முக்கியமானது அமீருக்கு கட்டுப்படுதல். இந்த அமீருக்கு கட்டுப்படுதலும்,பிஜே அவர்கள் எழுதியிருக்கும் அமீருக்கு கட்டுப்படுதலும் ஒன்றுக்கொன்று முரண்படும். காரணம் ஜாக் என்ற வழிகெட்ட இயக்கத்தில் அமீர் என்ன சொன்னாரோ அது தான் ஃபத்வா ஆகும். நாளை முதல் தண்ணீர் ஹராம் என்று சொன்னால் அதை ஏன் எதற்கு என்று கேட்காமல் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டே கட்டுப்பட வேண்டியது தான் ஜாக்கில் இருப்பதற்கு தகுதிகள் ஆகும். இந்த வழிகெட்ட கூட்டத்தினர் ஒப்புக்கொண்டு வெளியிட்ட அல் ஜன்னத் பத்திரிக்கையின் ஒரு பகுதி தான் இது. தாமதமாக கிடைத்ததால் செய்தியும் தாமதமாகிறது.
முக்கியக் குறிப்பு:
இவர்கள் எழுதியுள்ள குறிப்பு எண் 9ம் குறிப்பு எண் 11 ம் ஒன்றுக்கொண்டு நேராக மோதுவதை கவனியுங்கள்
நபித்தோழர்களை மதிக்க வேண்டும் என்ற விசயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்றைக்குமே முரண்பட்டதில்லை. ஆனால் வஹி என்பது ரசூலுல்லாஹ் அவர்களின் காலத்தோடு நின்று போய்விட்டதால் நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவதோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்,அவர்களை பின்பற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதற்கு உதாரணமாக உமர்ஹத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம்.
உமர் ஹத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெண்கள் கேட்கும் மஹர் தொகையின் அளவு மிக மிக அதிகமாகி ஆண்கள் திருமணமாகமல் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதை அறிந்த உமர் அவர்கள் மஹருக்கு கட்டுப்பாடு விதித்து ஒரு சட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். இதை அறிந்த ஒரு பெண்மனி உமர் (ரலி) அவர்களிடம்உமர் அவர்களே! இந்தச் சட்டம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னதா அல்லது நீங்களாகச் சொல்கிறீர்களாஎனக் கேட்டவுடன் உமர் அவர்கள்இல்லை! இல்லை! இது நானாகத் தான் சொல்கிறேன் என்று சொன்னார்கள். அதற்கு அந்தப்பெண்மனிஅல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னால் கட்டுப்படுவோம்உங்களது சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என சொல்லஉடனடியாக உமர் (ரலி) அவர்கள் அந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு ஏழை ஆண்குமர்களுக்கு அரசு உதவி வழங்கும் என அறிவிக்கிறார்கள்.
இந்த ஒரு ஹதீஸ் போதும்அல்லாஹ்வும் அவனது தூதரும் தவிர்த்து கண்ணியம்மிக்க ஸஹாப்பாக்களையோ அல்லது இமாம்களையோ பின்பற்றத் தேவையில்லை என்பதற்கு. ஆக ஜாக் மற்றும் அதன் விசுவாசிகளே! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

Friday, March 18, 2011

இன்றைய "ஜால்ரா"


                                          "

Thursday, March 17, 2011

பைலா தான் இல்ல! கொள்கை கூட இல்லையா?

                                                         மார்ச் 30 ஆம் தேதி பொதுக்குழு என பதிவுசெய்யப்படாத‌ பொய்யன் சமாத்தார்களால் அறிவிக்கப்பட்டு பின்னர் அவசர அவசமாக 15ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் பொதுக்குழுவிற்கு எதிர்பார்த்த கூட்டம் வராத காரணத்தால் அது செயற்குழுவாக ஆக்கப்பட்டது. அடிப்படை உறுப்பினர் கூட செயற்குழுவில் கலந்து கொள்ளலாம் என்ற விதி பொய்யன் சமாத்தில் மட்டும் தான் இருக்கிற‌து போலும். சரி அப்படியே நடந்தாலும் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானதா என்றால் அதுவும் முரணோ முரண். ஆமாம். கடந்த ஜனவரி மாதம் கோவையில் இதஜடியின் மர்க்கஸ்ஸை திறந்து வைத்து வீர உரையாற்றிய தலைவர் யார் மாநிலத்தில்7 சதவிகிதமும்மத்தியில் 10சதவிகிதமும் இடஒதுக்கீடு தருபவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு என அறிவித்தார்.
ஆனால் பதிவுசெய்யப்படாத‌ டிரஸ்டு சமாத்தை யாருமே சீண்டிப்பார்க்காத நிலையில் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. அதாவது மாநிலத்தில் இருக்கும் 3.5 இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக ஆளுங்கட்சி சட்டமியற்றினால் திமுகவுக்கும்,எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தாலே போதும் அவர்களுக்கு ஆதரவு என்றும் நிலைப்பாட்டை எடுத்தது. இதை அறிந்து கொண்ட பொய்யன் சமாத்தினர் நெல்லையில் வைத்து ஒரு புது நிலைப்பாட்டை அறிவித்தார்கள். அதாவது ததஜ எடுத்த அதே நிலைபாடு. காரணம் ஒருவேளை அது சட்டமாக்கப்பட்டால் நாங்கள் தான் கேட்டோம் என சொல்லிக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் அந்தர் பல்டி அடித்தது இந்த சர்க்கஸ் கூடாரம்.
சரி அந்த நிலைப்பாட்டின் படியாவது இப்போது முடிவெடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து கேட்பதாக இருந்தால் இரண்டு புறமும் தான் பேச்சு நடத்த வேண்டும். ஆனால் பதிவுசெய்யப்படாத‌ இந்திய‌ சமாத்தினர் அம்மாவுக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதிவிட்டு அப்போதே அவர்களின் அரசியல் நிலைபாட்டை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அப்பொழுதும் கூட அம்மாவின் கரிசனம் கிடைக்கவில்லை. 3சீட்டு முன்னேற்றக்கழகமாவது தூதுவிட்டு தூதுவிட்டு 3 மாசம் காத்திருந்து ,எங்களை பன்னீர் தொடர்பு கொண்டார்வெண்ணீர் தொடர்பு கொண்டார் என இவர்களாகவே சொல்லிக்கொண்டார்க‌ள்.
ஆனால் பதிவுசெய்யப்படாத‌ இந்திய சமாத்து டிரஸ்டினருக்கு அந்த பாக்கியம் கூட கிடைக்கவில்லை. கடைசிவரை அம்மாவிடம் இருந்து அழைப்பும் வரவில்லை ஆளும் வரவில்லை. சிக்னல் இழந்த செல்போன் போல ஆனார்கள் பதிவுசெய்யப்படாத‌ இந்திய சமாத்தினர். இனி சும்மா இருந்தால் சோலியாகாது என நினைத்து வேறு வழியில்லாமல் பொதுக்குழு என அறிவித்து செயற்குழுவாக்கினார்கள்.
அதற்கு முன்னதாக எந்த கட்சி முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் தருகிறதோ என அறிவித்து விட்டு இப்போது அதிமுகவுக்கு ஆதரவு என கொடி தூக்கத் தயாராகிவிட்டார்கள். இப்போது நாம் கேட்கும் கேள்வி.
நீங்கள் அம்மாவுக்கு எழுதிய கடிதம் தவிர்த்து வேறு எந்த வகையில் அதிமுகவை தொடர்பு கொண்டீர்கள்?
* “எந்த கட்சி தருகிறதோ என சொன்ன நீங்கள் அதிமுகவிற்கு மட்டும் கடிதம் எழுதிய காரணம் என்ன?கலைஞருக்கு உங்களால் எழுதப்பட்டதாக நீங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடித்ததில் தேதி இல்லையே! அது எப்படி ஒரு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லாமல் போகும். அதை நீங்கள் அனுப்பினீர்களா அல்லது எழுதி நீங்களே வைத்துக்கொண்டீர்களா?
அவ்வாறு எழுதிய கடிதத்திற்கு இன்று வரை எந்த விதமான பதிலோ தகவலோ வராத நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பதற்கு என்ன காரணம்?
அஇஅதிமுக உங்கள் கோரிக்கையான(?) 5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்து விட்டார் என சொல்லுக்கொள்ளும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடத்தயாராஎத்தனைமுறை உங்களை அதிமுக பிரமுகர்கள் சந்தித்தார்கள் அல்லது நீங்கள் எத்தனை முறை அவர்களைச் சந்தித்தீர்கள் என்ற விபரங்களை வெளியிடத்தயாராஅப்பறம் என்ன காரணத்திற்காக அதிமுகவை ஆதரிக்கிறீர்கள என விவரம் சொல்ல தயாரா?
இட ஒதுக்கீடு 7 சதவிகிதம் வேண்டும் என கேட்ட நீங்கள் திடீரென அந்தர்பல்டி அடித்து அமைப்பின் பெயர்கொடி என எல்லாவற்றிலும் ததஜவை காப்பியடித்தது போல இந்த தேர்தல் நிலைப்பாட்டிலும் ததஜவை காப்பியடித்த காரணம் என்னஒருவேளை 5சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தால்நாங்கள் தான் கடிதம் எழுதினோம்நாங்கள் தான் போன் பேசினோம்,நாங்கள் தான் எஸ்எம்எஸ் அனுப்பினோம் என சொல்லிக்கொள்ளும் உங்களையும் நம்பி சில அப்பாவிகள் நிற்கிறார்களே அவர்களின் நிலை என்ன?
இடஒதுக்கீடும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. இப்போதைய தேவை கழகத்தின் நிரந்தர தலைவரும்,பொதுச்செயலாளரும் எம்மெல்லே ஆனால் போதும் என வாய்மூடி மௌனித்து இருக்கும் மானங்கெட்ட மாமா கட்சியை நீங்கள் ஆதரிப்பது ஏன்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே உங்களால் பதில் தர முடியாது. ஏற்கனவே அப்துல் முஹைமீன் என்ற அரைலூசு குவைத் விவகாரத்தில் மூச்சித்தினறி கதவிடுக்கில் மாட்டிய எலியாய் தவிக்கும் போது அதே நிலைதானே இப்போது உங்களுக்கும்.
உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம் சமுதாயப் பணியாற்றும் இயக்கம் என நீங்கள் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். நீங்கள் உறங்கும் நேரம் தான் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்

Wednesday, March 16, 2011

ஏகத்துவமா? அல்லது சமூக மரியாதையா? மார்க்கமா? அல்லது மக்களிடம் கிடைக்கும் அந்தஸ்தா?


                                            

நமது ஊரில் உள்ள பலர் இந்த சத்திய கொள்கையை மனப்பூர்வமாக ஏற்று உள்ளனர், இருப்பினும் இந்த ஏகத்துவ கொள்கையை கடைபிடிப்பதை பெரும்பாலானவர்கள் தவிர்த்து வருகிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம். இதற்கு முக்கிய காரணம் எவர் இந்த கொள்கையை தன்வாழ்வில் செயல்படுத்த தொடங்குகிறாரோ அன்றய  தினத்தில் இருந்து அவருக்கு முதலில் பரிபோவது நமது ஊரில் அவருக்கு உள்ள அந்தஸ்ததுதான் என்றாள் அது மிகையாகாது.

எனினும் கண்ணிய மிக்க இறைவன் அற்பமான இந்த அந்தஸ்தை பறித்துவிட்டு அதே மக்கள் வாயின் மூலமகா "நஜாத்-நேர்வழியில்  நடப்பவன்" என்ற  பட்டத்தை நம்மை நோக்கி அழைக்கச் செய்கிறான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஏக இறைவன் இந்த சத்திய கொள்கையில் இருப்பவர்களை சாதாரன மக்களை கொண்டு கண்காணிக்க செய்கிறான். நாம் இந்த சத்திய கொள்கையிலிரிந்து சிறிது தவறினாலும்  இதே மக்கள் நம்மை நோக்கி "என்ன நீங்கள் இந்த செயலை செய்யலாமா, இதை நீங்கள் செய்ய மாட்டீர்களே, நீங்கள் இப்படி நடப்பவர்கள் இல்லையே"  என்று கேட்கும் அளவிற்கு ஒரு கண்ணிய்த்தை நமக்கு கிடைக்க செய்கிறான். 

 நம் மக்கள் நம்மை நன்கு அறிந்து  வைத்து இருக்கிறார்கள் எவ்வாரெணில்  இந்த சத்திய கொள்கையை தன்வாழ்வில் செயல்படுத்துபவர்கள் மோசடி செய்யமாட்டார்கள், வரதட்சணை வாங்க மாட்டார்கள், வரதட்சணை திருமணங்களை ஆலிம்களை விட இவர்கள் தான் வீரியமாக எதிர்ப்பார்கள்,  ஹராமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள், அநியாயத்தை யாருக்கும் பயப்படாமல் எதிர்ப்பவர்கள், சமுதாய மக்களின் நளணுக்காக போராடுபவர்கள் என்று. இதுவே இந்த சத்திய கொள்கையை செயல்படுத்துபவருக்கு அல்லாஹ் அளிக்க கூடிய உயரிய அந்தஸ்துகளாகும்.

 TNTJ துபாய் மண்டலம் வெளியிட்ட  ஒரு கட்டுரை நமக்கு பொருந்தும் என்று அதனை  நான்  உங்களின் பார்வைக்கு தருகிறேன் .

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். ''நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

''எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

''என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று (நூஹ்) கேட்டார்.

''என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி­ அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்''

என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க மாட்டீர்களா?

''என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' (எனவும் கூறினார். (அல்குர்ஆன் 11:25,31)

மேற்காணும் வசனங்கள் நம்மிடம் படம் பிடித்துக் காட்டுகின்ற செய்தி, சத்தியத்தை முதன்முத­ல் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் எந்த அந்தஸ்தும் இல்லாதவர்கள் தான். சத்தியத்தை ஏற்க மறுப்பவர்கள் சமூக அந்தஸ்தைக் கொண்ட செல்வாக்கு படைத்தவர்கள். இவர்கள் தான் சத்தியப் பாதைக்குக் குறுக்கே வந்து நிற்கின்றார்கள் என்பதை மேற்கண்ட வசனங்களில் நாம் காண முடிகின்றது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் இதை நாம் காண முடியும்.

பொதுவாக சமூகத்தில் மரியாதை பெற்றிருப்பவர்கள் இந்த மார்க்கத்தில் இணையும் போது அவர்களுக்கு அந்த சமூக அந்தஸ்து, மரியாதை பறி போய் விடும். இதன் காரணமாகவே இவர்கள் சத்தியப் பாதைக்கு வருவதில்லை. அதுமட்டுமின்றி சத்தியத்தையும், அதில் உள்ளவர்களையும் மிகக் கடுமையாக எதிர்க்கத் துவங்கி விடுகின்றார்கள்.

எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் ''எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்'' என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 34:34)

''இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன் 23:33)

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் ''எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்'' என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 43:23)

எனவே சமூக மரியாதை என்பது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த சமூக மரியாதை என்பது செல்வத்தினால் மட்டுமல்லாது இன்னபிற பதவி, பொறுப்புகளின் மூலமாகவும் கிடைக்கும்.

அல்லாஹ் சத்தியப் பாதையில் உள்ளவர்களை பலவிதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கின்றான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் சோதனைகளின் பட்டிய­ல் 'பலன்களைப் பறித்தல்'என்ற சோதனையையும் குறிப்பிடுகின்றான்.

இதன்படி ஓர் ஏகத்துவவாதிக்குக் கிடைத்திருக்கும் சமூக மரியாதை என்பது அல்லாஹ்வால் அளிக்கப்பட்ட ஒரு பலனாகும். அந்தப் பலனை அந்த ஏகத்துவவாதியிடமிருந்து பறிக்கும் சூழலை அல்லாஹ் உருவாக்குவான். ஏகத்துவமா? அல்லது சமூக மரியாதையா? மார்க்கமா? அல்லது மக்களிடம் கிடைக்கும் அந்தஸ்தா? என்ற ஒரு சோதனையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

இதுபோன்ற கட்டங்களில் ஓர் ஏகத்துவவாதி, தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு ஆபத்து வந்து விட்டால் இந்த சமூக மரியாதையைத் தூக்கி எறிந்துவிட முன் வருவான். இத்தகைய தியாகிகளுக்கு முன்னுதாரணம், அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு (அவர்கள் யூதராயிருந்த போது) எட்டியது. உடனே அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகின்றேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.

பிறகு, ''1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி மு­தலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை ஒத்திருப்பது எதனால்? அது தாயின் சதோதரர்களின் (சாயலை) ஒத்திருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சற்று முன்பு தான் இது குறித்து ஜிப்ரீல் எனக்குத் தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள், ''வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே'' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி நாளின் அடையாளங்களில் முதல் அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களை கிழக்கி­ருந்து மேற்கு திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகளின் முதல் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் சாயலுக்குக் காரணம், ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது, அவனது நீர் முந்தி விட்டால் குழந்தை அவனது சாய­ல் பிறக்கின்றது. பெண்ணின் நீர் முந்திக் கொண்டால் அவளது சாய­ல் பிறக்கின்றது'' என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி), ''தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்கள். பிறகு ''அல்லாஹ்வின் தூதரே, யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி தங்களிடம் பொய்யுரைப்பார்கள்'' என்று கூறினார்.

அப்போது யூதர்கள் வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) வீட்டினுள் புகுந்து மறைந்து கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (யூதர்களிடம்) ''உங்களில் அப்துல்லாஹ் பின் ஸலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''அவர் எங்களில் ஞானம் மிக்கவரும், எங்களில் அறிவு மிக்கவரின் மகனும் ஆவார். எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், எங்களில் அனுபவமும் விபரமும் மிக்கவரின் மகனும் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அப்துல்லாஹ் (பின் ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் அவரை அதி­லிருந்து காப்பானாக'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) வெளியே வந்து, ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்.

உடனே யூதர்கள், ''இவர் எங்களில் கெட்டவரும், கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்­லி விட்டு அவரைக் குறித்து அவதூறு பேசலானார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ர­லி),நூல்: புகாரி 3329

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) அவர்களுக்கு யூத சமுதாயத்தில் எத்தகைய மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதை இந்த ஹதீஸி­ருந்து விளங்கலாம். ஆனால் சத்தியம் என்று வருகின்ற போது, அந்த சமூக அந்தஸ்தை, மரியாதையைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

அவ்வாறு சமூக மரியாதையைத் தூக்கி எறிந்து சத்தியப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது, அதுவரை மதிப்பு மரியாதை கொடுத்து வந்தவர்கள் கூட அவரைப் பற்றி அவதூறுகளைக் கூறி, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசத் துவங்கி விடுவதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இதுபோன்ற கட்டத்தில் அவர் இந்த இழப்பிற்காக பொறுமையை மேற்கொள்கின்றார். இத்தகையவர்களுக்கு அல்லாஹ் தன் திருமறை மூலம் ஆறுதல் அளிக்கின்றான்.

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (அல்குர்ஆன் 2:156,157)

எனவே ஓர் ஏகத்துவவாதி அவனது கொள்கைக்கு, ஏகத்துவத்திற்கு ஆபத்து வருகின்ற போது, அதற்காக அந்தஸ்து, மரியாதை உள்ளிட்ட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்கி விடக் கூடாது.

அப்படி ஒரு தயக்கம் நம்மிடம் வந்து விடுமானால், நம்முடைய அந்தஸ்துகள் நமது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுமானால் அல்லாஹ் வைத்த சோதனையில் தோற்று விட்டதாகத் தான் அர்த்தம். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons