
ஆனால் பதிவுசெய்யப்படாத டிரஸ்டு சமாத்தை யாருமே சீண்டிப்பார்க்காத நிலையில் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. அதாவது மாநிலத்தில் இருக்கும் 3.5 இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக ஆளுங்கட்சி சட்டமியற்றினால் திமுகவுக்கும்,எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தாலே போதும் அவர்களுக்கு ஆதரவு என்றும் நிலைப்பாட்டை எடுத்தது. இதை அறிந்து கொண்ட பொய்யன் சமாத்தினர் நெல்லையில் வைத்து ஒரு புது நிலைப்பாட்டை அறிவித்தார்கள். அதாவது ததஜ எடுத்த அதே நிலைபாடு. காரணம் ஒருவேளை அது சட்டமாக்கப்பட்டால் நாங்கள் தான் கேட்டோம் என சொல்லிக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் அந்தர் பல்டி அடித்தது இந்த சர்க்கஸ் கூடாரம்.
சரி அந்த நிலைப்பாட்டின் படியாவது இப்போது முடிவெடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து கேட்பதாக இருந்தால் இரண்டு புறமும் தான் பேச்சு நடத்த வேண்டும். ஆனால் பதிவுசெய்யப்படாத இந்திய சமாத்தினர் அம்மாவுக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதிவிட்டு அப்போதே அவர்களின் அரசியல் நிலைபாட்டை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அப்பொழுதும் கூட அம்மாவின் கரிசனம் கிடைக்கவில்லை. 3சீட்டு முன்னேற்றக்கழகமாவது தூதுவிட்டு தூதுவிட்டு 3 மாசம் காத்திருந்து ,எங்களை பன்னீர் தொடர்பு கொண்டார், வெண்ணீர் தொடர்பு கொண்டார் என இவர்களாகவே சொல்லிக்கொண்டார்கள்.
ஆனால் பதிவுசெய்யப்படாத இந்திய சமாத்து டிரஸ்டினருக்கு அந்த பாக்கியம் கூட கிடைக்கவில்லை. கடைசிவரை அம்மாவிடம் இருந்து அழைப்பும் வரவில்லை ஆளும் வரவில்லை. சிக்னல் இழந்த செல்போன் போல ஆனார்கள் பதிவுசெய்யப்படாத இந்திய சமாத்தினர். இனி சும்மா இருந்தால் சோலியாகாது என நினைத்து வேறு வழியில்லாமல் பொதுக்குழு என அறிவித்து செயற்குழுவாக்கினார்கள்.

அதற்கு முன்னதாக எந்த கட்சி முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் தருகிறதோ என அறிவித்து விட்டு இப்போது அதிமுகவுக்கு ஆதரவு என கொடி தூக்கத் தயாராகிவிட்டார்கள். இப்போது நாம் கேட்கும் கேள்வி.
* நீங்கள் அம்மாவுக்கு எழுதிய கடிதம் தவிர்த்து வேறு எந்த வகையில் அதிமுகவை தொடர்பு கொண்டீர்கள்?
* “எந்த கட்சி தருகிறதோ” என சொன்ன நீங்கள் அதிமுகவிற்கு மட்டும் கடிதம் எழுதிய காரணம் என்ன?கலைஞருக்கு உங்களால் எழுதப்பட்டதாக நீங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடித்ததில் தேதி இல்லையே! அது எப்படி ஒரு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லாமல் போகும். அதை நீங்கள் அனுப்பினீர்களா அல்லது எழுதி நீங்களே வைத்துக்கொண்டீர்களா?
* அவ்வாறு எழுதிய கடிதத்திற்கு இன்று வரை எந்த விதமான பதிலோ தகவலோ வராத நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பதற்கு என்ன காரணம்?
* அஇஅதிமுக உங்கள் கோரிக்கையான(?) 5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்து விட்டார் என சொல்லுக்கொள்ளும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடத்தயாரா? எத்தனைமுறை உங்களை அதிமுக பிரமுகர்கள் சந்தித்தார்கள் அல்லது நீங்கள் எத்தனை முறை அவர்களைச் சந்தித்தீர்கள் என்ற விபரங்களை வெளியிடத்தயாரா? அப்பறம் என்ன காரணத்திற்காக அதிமுகவை ஆதரிக்கிறீர்கள என விவரம் சொல்ல தயாரா?
* இட ஒதுக்கீடு 7 சதவிகிதம் வேண்டும் என கேட்ட நீங்கள் திடீரென அந்தர்பல்டி அடித்து அமைப்பின் பெயர், கொடி என எல்லாவற்றிலும் ததஜவை காப்பியடித்தது போல இந்த தேர்தல் நிலைப்பாட்டிலும் ததஜவை காப்பியடித்த காரணம் என்ன? ஒருவேளை 5சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தால், நாங்கள் தான் கடிதம் எழுதினோம், நாங்கள் தான் போன் பேசினோம்,நாங்கள் தான் எஸ்எம்எஸ் அனுப்பினோம் என சொல்லிக்கொள்ளும் உங்களையும் நம்பி சில அப்பாவிகள் நிற்கிறார்களே அவர்களின் நிலை என்ன?
* இடஒதுக்கீடும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. இப்போதைய தேவை கழகத்தின் நிரந்தர தலைவரும்,பொதுச்செயலாளரும் எம்மெல்லே ஆனால் போதும் என வாய்மூடி மௌனித்து இருக்கும் மானங்கெட்ட மாமா கட்சியை நீங்கள் ஆதரிப்பது ஏன்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே உங்களால் பதில் தர முடியாது. ஏற்கனவே அப்துல் முஹைமீன் என்ற அரைலூசு குவைத் விவகாரத்தில் மூச்சித்தினறி கதவிடுக்கில் மாட்டிய எலியாய் தவிக்கும் போது அதே நிலைதானே இப்போது உங்களுக்கும்.
உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம் சமுதாயப் பணியாற்றும் இயக்கம் என நீங்கள் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். நீங்கள் உறங்கும் நேரம் தான் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்
0 comments:
Post a Comment