Thursday, March 3, 2011

காசு வேண்டுமா? உடல் சுகத்திற்கு ஆள் வேண்டுமா?


பீஜே கூறிய அனைத்துவிஷயங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி தவ்ஹீது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறிய வழிகெட்டக் கூட்டத்தாரின் அசிங்கமான செயல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் கட்டப்பஞ்சாயத்து விச‌யத்திலும்தங்களின் முன்னோர்களான மாமா கட்சியினரின் கட்டபஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் தொழிலுக்கு ஆப்பு வைக்கஅவர்களது வருமானத்தை பறிக்க முயற்சி எடுத்துவருகிறார்கள் என்பதை தற்போது புரிந்து கொள்ள முடிகின்றது. இதையெல்லாம் மெய்ப்பிக்கும் வண்னம் காரைக்குடியில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் தான் இவர்களின் வழக்கமான நிலையை பறைசாற்றுகிறது.
காரைக்குடியைச் சேர்ந்த அப்துல் பீவி என்ற அந்தப்பெண் அவருடன் இணைந்து வாழ்ந்த ஒரு நபர் தன்னை ஏமாற்ற நினைக்கிறார்அவர் குடும்பமும் அவரோடு இணைந்து கொள்கிறார்கள். அந்த நபருக்கு வேறு திருமணம் செய்து வைக்கவும் முயற்சிக்கிறார்கள். இதனால் விரக்தியடைந்த அந்தப்பெண் அந்தப்பகுதி ஜமாத்தார்களிடம் சென்று இதுசம்பந்தமாக மனு கொடுக்கிறார். அவர்களும் இது சம்பந்தமாக அவர்களுடன் கலந்து பேசி அந்த நபரின் திருமணத்தை தடுத்து வைப்பதாக உறுதி கூறுகின்றனர். இதில் உடன்பட்டு அந்தப் பெண் திரும்பி விட அந்தக் குடும்பத்தினர் இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் அமைப்பைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுத்து சரி கட்டிவிடவும்தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கவும் கேட்டுக்கொள்கிறார்கள். உடனே நம்முடைய தொழிலை மேம்படுத்திக்கொள்ள தக்க தருணம் கிடைத்துவிட்டது என்று சுதாரித்துக் கொண்டு பிரச்சனையை கையில் எடுத்த இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் அந்தப் பெண்ணை அழைத்து " நீ பணம் வாங்கிக் கொள்கிறாயா அல்லது உன் உடல்சுகத்திற்கு உனக்கு ஏற்றார் போல் மாப்பிள்ளை பார்த்து தரட்டுமா?" என கீழ்த்தரமாக பேசி அந்தப் பெண்ணைத் துரத்தியது மட்டுமல்லாமல் அந்த நபருக்கு வேறு திருமணம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளதாக அந்தப் பெண் தெரிவிக்கிறார்.
அந்தப் பெண் செய்தது நியாயமாஇல்லையா என்பது வாதமல்ல. ஆனால் தவ்ஹீத் கொள்கையைப் போல் தோற்றமளிக்கும் ஒரு போலிக்கூட்டம் தொடர்ந்து பெண்களுக்கும்,அவர்களின் மானத்திற்கும் கேடு விளைவிக்கும் நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. யாராவது கேட்டால் தவறுதலாக அந்த வார்த்தையை தவ்ஹீத்காரன் கேட்டான் என பொத்தாம் பொதுவாக சொலும் போது அது நிச்சயமாக ததஜவை பாதிக்கும் என அவர்கள் செய்து வரும் விதவிதமான பிரச்சாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆக அவர்களின் நோக்கமே ஏதாவது ஒரு பிரச்சனையை செய்து அதை ததஜ பக்கமாக திருப்பி விட்டு மக்களிடத்திலே கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். பாவம் அவர்கள் அமைப்பிலும் பெண்கள் இருக்கிறார்கள்.பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புகள் பெண்கள் விசயத்தில் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் இருக்கும் இவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை?அது சரி தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழியே!
அந்தப் பெண் கையெழுத்திட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு கொடுத்த மனுவை கீழே காணலாம்.






0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons