Saturday, March 19, 2011

தட்டுத்தடுமாறி தடம்புரண்ட ஜாக்

ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற ஜாக் இயக்கம் மௌலவி பி.ஜே அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும். அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்திற்கு தலைவராக இருந்த பிஜேதலைவர் பொருப்பில் இருப்பது தவ்ஹீத் பிரச்சாரத்தை பாதிக்கிறது என்ற நோக்கில் கமாலுதீன் மதனியை தலைவராக ஆக்கிவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அன்றைய அவ்வளவு எதிர்ப்புகளையும் அடிதடி வெட்டுக்குத்துக்களையும் மீறி வெடித்துக்கிளம்பிய ஒரு இயக்கம் தான் இந்த ஜாக். குர்ஆன் மற்றும் ஹதீஸ் இரண்டை மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்ற நோக்கில் அன்றைக்கு இருந்த வழிகேடுகளைத் தவிர்த்து விட்டு உண்டாக்கப்பட்ட இந்த‌ இயக்கம்,இன்றைக்கு அவர்களின் சுய நலனுக்காகவும் உலக ஆதாயங்களுக்காகவும் மட்டுமே இரத்தம் சிந்தி உண்டாக்கப்பட்ட ஒரு இயக்கம் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் மிஞ்சும்.
அதாவது சினிமாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறி சினிமாவே ஹராம் என்று சொன்னவன் இன்றைக்கு அவனே சொந்தமாக‌ சினிமா தியேட்டர் கட்டி டிக்கெட் கிழித்த கதையாக ஆகிவிட்டது இன்றைய ஜாக்கின் நிலை.
எதையெல்லாம் வழிகேடுகள் என்று சொன்னார்களோஇன்றைக்கு அதெல்லாம் சரி என்ற ரீதியில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் சஹாபாக்கள் மற்றும் இமாம்கள் என்ற ரீதியில் இறங்கிவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் தர்ஹாதரீக்கா என்ற ரீதியில் இறங்கி கழிசடையாகி கடைசியில் 1980 களுக்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலைக்கு விரைவில் வந்து விடுவார்கள் என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
பிறை விசயத்தில் பயங்கர பில்டப் கொடுத்து தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே ரீதியில் பிறையைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தார்கள். அமீருக்கு கட்டுப்படுதல் என்பது பிஜே இன்றைக்கு எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர். ஆனால் ஜாக்கின் வழிகெட்ட கொள்கையில் மிக முக்கியமானது அமீருக்கு கட்டுப்படுதல். இந்த அமீருக்கு கட்டுப்படுதலும்,பிஜே அவர்கள் எழுதியிருக்கும் அமீருக்கு கட்டுப்படுதலும் ஒன்றுக்கொன்று முரண்படும். காரணம் ஜாக் என்ற வழிகெட்ட இயக்கத்தில் அமீர் என்ன சொன்னாரோ அது தான் ஃபத்வா ஆகும். நாளை முதல் தண்ணீர் ஹராம் என்று சொன்னால் அதை ஏன் எதற்கு என்று கேட்காமல் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டே கட்டுப்பட வேண்டியது தான் ஜாக்கில் இருப்பதற்கு தகுதிகள் ஆகும். இந்த வழிகெட்ட கூட்டத்தினர் ஒப்புக்கொண்டு வெளியிட்ட அல் ஜன்னத் பத்திரிக்கையின் ஒரு பகுதி தான் இது. தாமதமாக கிடைத்ததால் செய்தியும் தாமதமாகிறது.
முக்கியக் குறிப்பு:
இவர்கள் எழுதியுள்ள குறிப்பு எண் 9ம் குறிப்பு எண் 11 ம் ஒன்றுக்கொண்டு நேராக மோதுவதை கவனியுங்கள்
நபித்தோழர்களை மதிக்க வேண்டும் என்ற விசயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்றைக்குமே முரண்பட்டதில்லை. ஆனால் வஹி என்பது ரசூலுல்லாஹ் அவர்களின் காலத்தோடு நின்று போய்விட்டதால் நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவதோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்,அவர்களை பின்பற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதற்கு உதாரணமாக உமர்ஹத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம்.
உமர் ஹத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெண்கள் கேட்கும் மஹர் தொகையின் அளவு மிக மிக அதிகமாகி ஆண்கள் திருமணமாகமல் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதை அறிந்த உமர் அவர்கள் மஹருக்கு கட்டுப்பாடு விதித்து ஒரு சட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். இதை அறிந்த ஒரு பெண்மனி உமர் (ரலி) அவர்களிடம்உமர் அவர்களே! இந்தச் சட்டம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னதா அல்லது நீங்களாகச் சொல்கிறீர்களாஎனக் கேட்டவுடன் உமர் அவர்கள்இல்லை! இல்லை! இது நானாகத் தான் சொல்கிறேன் என்று சொன்னார்கள். அதற்கு அந்தப்பெண்மனிஅல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னால் கட்டுப்படுவோம்உங்களது சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என சொல்லஉடனடியாக உமர் (ரலி) அவர்கள் அந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு ஏழை ஆண்குமர்களுக்கு அரசு உதவி வழங்கும் என அறிவிக்கிறார்கள்.
இந்த ஒரு ஹதீஸ் போதும்அல்லாஹ்வும் அவனது தூதரும் தவிர்த்து கண்ணியம்மிக்க ஸஹாப்பாக்களையோ அல்லது இமாம்களையோ பின்பற்றத் தேவையில்லை என்பதற்கு. ஆக ஜாக் மற்றும் அதன் விசுவாசிகளே! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons