Monday, March 28, 2011

அடாடா! இம்ச தாங்கமுடியலடா!!


அவதூறு பரப்புவதையும் அண்ணன் ஜமாத்துக்குப்பின்னாடி பூதக்கண்ணாடி கொண்டு அலைவதையுமே தங்களின் முழு நேரத்தொழிலாகக் கொண்டுள்ள மன்மதனும் மன்மதனின் சேனைகளும் குவைத்திலிருந்து கும்மியடிக்கும் சின்ன மன்மதனும் மறுபடி மறுபடி பலகேள்விகளைக் கேட்டு அவர்களுக்கு போதிய பொழுதுபோக்கு இல்லை என்பதை மீண்டும் நிறுபித்திருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு டப்பா கேள்விக்கும் ஏற்கனவே பதில் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் இவர்களின் சொத்தை வாதங்களை கொத்தி எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்பதால் நாமும் வேலை மெனக்கெட்டு இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டியிருக்கிறது.
திமுகவிற்கு அண்ணன் ஜமாத்தினர் திடீர் என ஆதரவு என்று பொய்யன்டிஜே டிரஸ்ட் தளத்திலும்எல்லா செய்திகளையும் தின்று மறுவாந்தி எடுக்கும் மன்மதனின் "பெர்சனல்" ஆலோசகர் தளத்திலும் செய்திகள் வந்திருக்கின்றன.
அண்ணன் ஜமாத்தைப் பொருத்தவரை எல்லாரிடமும் இருந்து 100% மாறுபட்டது என்பது அங்கிருக்கும் அடிப்பொடிகள் முதல் அடிவருடி சேணைகள் வரை எல்லாருக்குமே நன்கு தெரியும். இருந்தாலும் எதையாவது சொல்லி கிண்டி விட்டால் தான் அவர்களுக்கு பொழுது போகும் என்ற அடிப்படையில் தான் மறுபடி மறுபடி வாயைக்கொடுத்து புண்ணாக்கிக் கொள்கிறது இந்த பொய்யன் கூட்டம்.
திமுகவை ஆதரிக்க என்ன காரணம்? என அண்ணன் ஜமாஅத் தெளிவாக விளக்கி விட்டார்கள். ஆனாலும் நாங்க புடிச்ச நாயிக்கு 3 கால் தான் என விடாப்பிடியாக இயங்கும் இயக்கத்திற்கு அதையே பதிலாக கொடுத்து விட்டு,அவர்கள் கேட்டுள்ள எக்ட்ரா கேள்விகளுக்கு இங்கே நாம் விடையளிக்கிறோம்.
மத்தியில் இட ஒதுக்கீடு விஷயத்தில் தொடர்ந்து துரோகமிழைக்கும் காங்கிரஸ் விஷயத்தில் இவர்களின் நிலை என்ன?
மத்தியில் துரோகமிழைக்கும் காங்கிரஸ் துரோகி தான் என்பது தான் எங்கள் நிலையும். ரோஸ்டர் முறையிலு குழப்பம் இருக்கிறது என கருணாநிதியே சொல்லியும் கூடஅதெல்லாம் இல்லை ரோஸ்டர் முறை தான் சிறந்தது என நியாயப்படுத்தினார்களே உங்கள் சகாக்கள் அவர்களைப் போல இவர்கள் நியாயப்படுத்த மாட்டார்கள். மத்திக்கு காங்கிரஸ் ஓட்டுக் கேட்டு வரும் போது அவர்களுக்கு வேட்டுவைக்கும் செயல்திட்டங்கள் அவர்களிடம் தயாராகவே இருக்கிறது. ஆனால் முன்பைவிட குறைந்த‌ மைனாரிட்டியில் போட்டியிடும் கருணாநிதியை மட்டும் ஆதரித்தால் அவர் படுதோல்வி அடைய வாய்ப்பு இருப்பதால் கூட்டணிக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்துள்ளது ததஜ. கலைஞரை ஆதரிக்கும் போது அவரிடம் சென்று ஈஈஈஈஈஈஈஈ என இளிக்கவில்லை. அவர்களின் துரோகங்களை அவர்களிடமே பட்டியலிட்ட பிறகு தான் அவர்களிடம் இந்த நிலையே அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா இரு முஸ்லிம்களை மட்டுமே நிறுத்தியுள்ளார் என முறுக்கிக்கொண்ட இவர்கள்ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமக விஷயத்தில் நிலை என்ன?
அறிவுச்சுடர் அப்பாஸின் ஆற்றலைக்கண்டு வியப்பாகத்தான் இருக்கிறது. நாம ஏற்கனவே கேட்டதுமாதிரி உங்களில் யாருக்கும் கொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவையும்சுயமாக முடிவெடுக்கும் திறனையும் இறைவன் கொஞ்சம் கூட வைக்கவில்லையா என மீண்டும் கேட்கிறோம். பாமக என்பது முழுக்க முழுக்க வன்னியர்களுக்காக அமைக்கப்பட்ட ஜாதிய சங்கம்பின்னர் அது கட்சியாக மாற்றப்பட்டது. அந்த அமைப்பின் நோக்கம் முழுக்க முழுக்க வன்னியர்களின் இடஒதுக்கீடு சம்பந்தமாக துவக்கப்பட்ட கட்சியில் எப்படி முஸ்லீம்களுக்கு இடமளிப்பார்கள்முஸ்லீம் லீக்கில் மாற்றுமதத்தவரை ஏன் நிறுத்தவில்லை என கேட்க முடியுமாபாமகவில் முஸ்லீம்கள் உறுப்பினராக இருப்பதும்,முஸ்லீம்களுக்கு சீட்டை எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம் என்பது பைத்தியக்காரர்களுக்கே தெரியும் போது மன்மதன் ஜமாஅத்தினருக்கு தெரியாமல் போனது ஏனோநல்ல பிஞ்சி வெண்டக்காயை வாங்கி மோர்குழம்பு செஞ்சி சாப்பிட்டா அறிவு நல்லா வளருமாம். அதே மாதிரி தயிரில் சக்கரை கலந்து சாப்பிட்டாலும் நல்ல அறிவாற்றல் வருமாம்! பொய்யன் டிரஸ்டில் உள்ள எல்லாரும் இதை டிரை பண்ணலாமே!
* சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
சிறுத்தைகள் வேகமாக ஓடும். வண்டலூர் ஜூவில் இருக்கிறது. அதைப்போய் பார்ப்பதில் எவ்விதமான குற்றமும் இல்லை என்பது அவர்களின் நிலைபாடு.
* மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை ததஜ கணக்கிலேயே எடுப்பது கிடையாது என்று எழுதிய இவர்கள்முஸ்லிம்லீக் விசயத்தில் எடுக்கும் நிலை என்ன?
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிய பதில் இதற்கும் பொருந்தும்.
* முஸ்லிம் லீக்கை கணக்கிலெடுக்க இப்போது இவர்கள் முன் வந்தால் அதே நிலையில் உள்ள மமகவை மட்டும் புறக்கணிப்பது ஏன்?
முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் அடிமைத்தனத்தை ஒழிக்கப்போகிறோம் சமுதாய மானம் காக்கப்போகிறோம் என சொல்லி சந்தி சிரிக்கும் மமகவினரை ஒப்பிடும் போது முஸ்லீம் லீக் எவ்வளவோ பரவாயில்லை. அட இன்னமும் சொல்லனும்னாசுன்னத் ஜமாத்காரர்கள் விவரம் தெரியாமல் பேசுகிறார்கள் எனலாம்ஆனால் நீங்கள் எல்லாம் தெரிந்து கொண்டே அதை மறைத்துவிட்டு தவ்ஹீதை ஒழிக்க வேண்டும் என களமிறங்குகிறீர்கள். அதுபோலத்தான் லீக்குக்கும் மாமாவுக்கும் உள்ள வேறுபாடு
ஆகதனிநபர் ஜமாஅத்தின் முடிவுவேறு வழியின்றி எடுக்கப்பட்டதாகவும்,வலிமையான சமுதாய நலன் புறந்தள்ளப் பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக 'சிந்திப்பவர்களுக்குபுலப்படும்.

அப்படியா! இப்ப நான் கேக்குற கேள்விக்கு பதில அடிச்சிவிடுங்க பார்க்கலாம்
* இட ஒதுக்கீடு 7 சதவிகிதம் வேண்டும் என கேட்ட நீங்கள் திடீரென அந்தர்பல்டி அடித்து அமைப்பின் பெயர்கொடி என எல்லாவற்றிலும் ததஜவை காப்பியடித்தது போல இந்த தேர்தல் நிலைப்பாட்டிலும் ததஜவை காப்பியடித்த காரணம் என்னஒருவேளை 5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தால்நாங்கள் தான் கடிதம் எழுதினோம்நாங்கள் தான் போன் பேசினோம்நாங்கள் தான் எஸ்எம்எஸ் அனுப்பினோம் என சொல்லிக்கொள்ளும் உங்களையும் நம்பி சில அப்பாவிகள் நிற்கிறார்களே அவர்களின் நிலை என்ன?
* நீங்கள் அம்மாவுக்கு எழுதிய கடிதம் தவிர்த்து வேறு எந்த வகையில் அதிமுகவை தொடர்பு கொண்டீர்கள்?
எந்த கட்சி தருகிறதோ என சொன்ன நீங்கள் அதிமுகவிற்கு மட்டும் கடிதம் எழுதிய காரணம் என்னகலைஞருக்கு உங்களால் எழுதப்பட்டதாக நீங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடித்ததில் தேதி இல்லையே! அது எப்படி ஒரு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லாமல் போகும். அதை நீங்கள் அனுப்பினீர்களா அல்லது எழுதி நீங்களே வைத்துக்கொண்டீர்களா?
* அவ்வாறு எழுதிய கடிதத்திற்கு இன்று வரை எந்த விதமான பதிலோ தகவலோ வராத நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பதற்கு என்ன காரணம்?
* அஇஅதிமுக உங்கள் கோரிக்கையான(?) 5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்து விட்டார் என சொல்லுக்கொள்ளும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடத்தயாராஎத்தனைமுறை உங்களை அதிமுக பிரமுகர்கள் சந்தித்தார்கள் அல்லது நீங்கள் எத்தனை முறை அவர்களைச் சந்தித்தீர்கள் என்ற விபரங்களை வெளியிடத்தயாராஅப்பறம் என்ன காரணத்திற்காக அதிமுகவை ஆதரிக்கிறீர்கள என விவரம் சொல்ல தயாரா?
(திருச்சி பிரச்சாரத்தில் சொல்வதற்கு முன்னரே நீங்கள் அம்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது)
* அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து எதுவுமே வெளிவராத நிலையில்இடஒதுக்கீடும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. இப்போதைய தேவை கழகத்தின் நிரந்தர தலைவரும்துணைப்பொதுச்செயலாளரும் எம்மெல்லே ஆனால் போதும் என வாய்மூடி மௌனித்து இருக்கும் மானங்கெட்ட மாமா கட்சியை நீங்கள் ஆதரிப்பது ஏன்?
* முஸ்லீம்களை திட்டமிட்டு கொன்று குவித்த விடுதலை பிலிகளை கேவலம் ஓட்டுப்பிச்சைக்காக ஆதரிக்கும் மாமாக்களும் அவர்களுக்கு விளக்குப்புடிக்கும் உங்களுக்கும் சிறுத்தைப் பற்றி பேச என்ன அறுகதை இருக்கிறது?
முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிப்போம் என்று வாய்கிழிய சொல்லும் நீங்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடும் மமகவை விட வலுவான கட்சியான எஸ்டிபியை ஆதரிக்கப்போகிறீர்களா அல்லது மமகவுக்குத் தான் உங்கள் ஆதரவாகாரணம் மமகவிற்கு முன்பாகவே எஸ்டிபிஐ அங்கே மணுத்தாக்கல் செய்துவிட்டார்கள்.
ஏற்கனவே எஸ்டிபிஐ ராமநாதபுரத்தில் நின்றுவிட்டதால் முஸ்லீம் சமுதாயத்தின் நன்மை கருதி வாத்தியாரை வாபஸ் வாங்கச்சொல்வீர்களா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே உங்களால் பதில் தர முடியாது. ஏற்கனவே அப்துல் முஹைமீன் என்ற அரைலூசு குவைத் விவகாரத்தில் மூச்சித்தினறி கதவிடுக்கில் மாட்டிய எலியாய் தவிக்கும் போது அதே மாதிரி இன்னொரு எலி மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறது

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons