Friday, March 4, 2011

கோவணத்தை இழந்த மானம் காக்கும் ஸ்பெசலிஸ்ட்



உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா:


தமிழில் ஒரு பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா
இவர்களை தற்போது நினைத்தால் இந்தப்பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது. தி.மு.க அணியில் தந்த ஒரு எம்.பி சீட்டை நாங்கள் வாங்கமாட்டோம். எங்களுக்கு சமுதாய மானம் காப்பதுதான் முக்கியமே தவிரஇந்த சீட்டுக்கள் தேவையில்லை என வீராப்பு பேசியவர்கள் தற்போது அதைவிட குறைவான சட்டமன்ற தொகுதிகளை பெற்று கேவலப்பட்டுள்ளார்கள் என்றால் உள்ளதையும் இழந்து நிற்கும் இவர்களை என்னவென்பது.
கோவணத்தை இழந்த மானம் காக்கும் ஸ்பெசலிஸ்ட்:
கோவணம் கட்டியிருந்த ஒருவன் இன்னொருவனிடத்தில் தனக்கு உடுத்த துணியில்லை. எனக்கு மானம் தான் முக்கியம். எனவே எனக்கு உடுத்தஎனது மானம் காக்க அழகான ஒரு வேட்டி வேண்டும் என்று கேட்டானாம். அதற்கு வேட்டிவைத்திருந்தவனோ என்னிடத்தில் வேட்டி இருந்தாலும் அதை நான் உனக்குத்தரமாட்டேன். என்னிடத்தில் உள்ள அரைக்கால் டவுசரை வேண்டுமானால் தருகிறேன் என்று சொல்லஅதை மறுத்த இந்த மானம் காக்கும் பேர்வழி எனக்கு வேட்டிதான் முக்கியம்எனக்கு மானம்தான் முக்கியம் நீ தரும் அரைக்கால் டவுசர் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறி அவனிடத்தில் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டானாம்.
அரைக்கால் டவுசர் போய் அம்மனமான கதை :


அரைக்கால் டவுசர் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறி ரோஷத்தோடு வந்தவனுக்கு உண்மையிலேயே மான ஈனம் இருக்குமேயானால்சூடு சொரணை இருக்குமேயானால்வெட்கம் என்ற உணர்வு என்று ஒன்று இருக்குமேயானால் இவன் வேறு எவனிடத்திலாவது சென்று வேட்டியை வாங்கியிருக்க வேண்டும் அல்லது தானாக தனித்து நின்று வேட்டியை தயார் செய்து இருக்க வேண்டும். வேட்டிக்கு வக்கற்ற இந்த கோவணம் உடுத்திய பேர்வழி இன்னொருவனிடத்தில் சென்றானாம். அவனிடத்தில் மானத்தை பற்றி பேசிய இந்த
மானம் காக்கும் ஸ்பெஷலிஸ்ட்வேட்டியை வாங்குவதற்கு பதிலாக கட்டியிருந்த கோவணத்தை கழற்றிக்கொடுத்துவிட்டு வந்தால் எப்படி கேவலமாக இருக்குமோ அதுபோன்றுதான் தற்போது மானம் காக்க புறப்பட்ட இந்த ம.ம.கட்சியின் நிலை உள்ளது என்பதை யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons