Friday, March 11, 2011

இஸ்லாம் கூறும் அழைப்பு பணி எங்களுக்கு தேவை இல்லை.... (ஒப்புதல் விடியோ 02)






அன்பு சகோதர சகோதரிகளே ஒரு முஸ்லீம் என்பவன்இஸ்லாம் கூறும் உயர்ந்த கொள்கைகளையும்வழிமுறைகளையும் தான் மட்டும் பின்பற்ற வேண்டும்என்று நினைக்க கூடாது. ஏன் என்றால் இஸ்லாம் என்பதுஉலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட நம்மைஎல்லாம் படைத்த இறைவன் புரத்தில் இருந்து வந்தமார்க்கம்.

முஸ்லீமாக பிறந்த ஒவ்வொரு சகோதரசகோதரிகளுக்கும் இந்த அழைப்பு பணியானது மிகவும் முக்கியமான ஒன்று.

ஒருவன் தனது தனிபட்ட வாழ்வில் மட்டும் இஸ்லாத்தை கடைபிடித்துவிட்டு தனதுகுடும்பத்தாரும் தன்னுடன் இருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நன்பர்களும் எப்படிவேண்டுமானாலும் போகட்டும் என்று அவர்களுக்கு இஸ்லாத்தை கூறாமல் இருப்பதும்இஸ்லாத்தை பொருத்தவரை தவறு தான் இதை அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்)அவர்களும் பல இடங்களில் வழியுறுத்தி கூறியுள்ளனர்...

நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருகிறீர்கள் !நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையை தடுகிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !வேதமுடையோர் நம்பிக்கை கொண்டு இருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாகஇருந்து இருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில்அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
(அல்‍‍குர்ஆன் 3:110)

அவர்கள் உம்மிடம் விதன்டாவாதம் செய்வார்களானால் " என் முகத்தைஅல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னை பின்பற்றியோரும் (இவ்வாறேசெய்து விட்டனர்)" எனக் கூறுவிராக ! வேதம் கொடுக்கபட்டோரிடமும் எழுத படிக்கதெரியாதோரிடமும் "இஸ்லாத்தை ஏற்கிறீர்களா ?" என்று கேட்பிராக ! அவர்கள்இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர். புறகணித்தால் எடுத்து சொல்வதே உமக்குகடமை. அல்லாஹ் அடியார்களை பார்ப்பவன்.
(அல்‍‍குர்ஆன் 3:20)

அவர்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்து சொல்வதே உமது கடமை.
(அல்‍‍குர்ஆன் 16:82)

இப்படி பல இறை வசணங்கள் இந்த அழைப்பு பணியின் அவசியத்தை பற்றி முஸ்லிம்சமுதாயத்திற்க்கு எடுத்து கூறியுள்ளது.

தீமையை தடுபதோடு மட்டும் நின்று விடாமல்!! நன்மையை ஏவுவதோடு மட்டும் நின்றுவிடாமல் !! மக்களை நேர் வழியில் அழைப்பதன் மூலம் தான் ஒவ்வொரு முஸ்லிமும்வெற்றி அடைய முடியும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆனால் இன்று முஸ்லிம்களின் ஒரு சிலரை தன் வசம் வைத்துள்ள இந்த SDPI அழைப்புபணியை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மறக்கடித்து. வாருங்கள் அதிகாரத்தை நோக்கிஎன்றும் ஆட்சியை நமதாக்குவோம் என்றும் முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆன் ஹதீஸ் கூறும்வழிமுறைகளை புறகணித்து மக்களை குறிப்பாக இளைஞர்களை தவறான பாதைக்குஅழைத்து சென்று கொண்டு இருப்பதை நம்மால் கண்கூடாக கான முடிகின்றது.

இளைஞர்கள் மத்தியில் அறிவுபூர்வமான சிந்தனையை ஊட்டாமல் உணர்வுபூர்வமான இயக்கவெறியினை ஊட்டி இளைஞர்களின் சிந்தனைக்கு பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர் இந்தகொள்கை இல்லா கூட்டத்தினர்.

இதற்க்கு சான்று நாம் வெளியிட்ட விடியோ மற்றும் இன்ஷா அல்லாஹ் இன்னும் நாம்வெளியிட போகும் விடியோகள் ஆகும் .

இஸ்லாம் கூறும் அறிவு பூர்வமாண வாதங்களுக்கு பதில் அளிக்க முடியாத இவர்கள்கூட்டத்தை கூட்டி வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளையும், பேச்சாளர்களையும்,உறுபினர்களையும் மற்றும் மர்கஸ்களையும் அவ்வபோது தாக்கி வருவதும் ஆங்காங்கேநடந்தேரி கொண்டு தான் வருகிறது. (விடியோ ஆதாரம் விரைவில் வெளியிடப்படும்)

...


இப்போது இந்த விடியோவை பாருங்கள்....




 (உங்கள் இன்டர்நெட் வேகத்தை பொருத்தே விடியோ ஒடும்).





இந்த விடியோவை நடு நிலை சிந்தனையோடு பார்க்கும் பலருக்கும் அவங்க தான்சமுதாயத்தை உயர்துவது தான் அவங்க பணி என்று கூறுகின்றார்களே விடு விட வேண்டியதுதானே என்று மனதில் தோன்றும்.

ஆனால் இஸ்லாமியனுக்கு தேவையான குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல்அங்கிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால் இவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்களையும்இளைஞர்களையும் அவர்களுக்கு கிடைக்க வேன்டிய பல நன்மயான கரியங்களில் இருந்துதடுத்து பல தீம்மைகளின் பக்கம் எப்படி அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதுபுரியும்.

உதாரணமாக இந்த விடியோவில் SDPI திருபூர் மாவட்ட தலைவர் அமானுல்லாஹ்கூறியிருப்பதை தெளிவாக கவணித்தால் புரியும். சுன்னத் ஜமாஅத் ஒரு வேலைசெய்கின்றார்கள் தப்லிக் ஜமாஅத் ஒரு வேலை செய்கின்றார்கள் மொளலீது ஒத கூடியவர்கள்அதை ஓதி கொண்டு தான் இருப்பார்கள் , தர்காவிற்க்கு போக கூடியவர்கள் போய் கொண்டுதான் இருப்பார்கள் அதே போல் குர் ஆன் ஹதீஸ் சொல்ல கூடிய வேலை தவ்ஹீத் ஜமாதுக்குஆனால் இது எங்க வேலை இல்லை எங்களுக்கு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்துசெயல்படுவது தான்  ஆனால் நான் என் வாழ்வில் கடைபிடிப்பேன் என்று  கூறியிருக்கின்றார்.

இதன் மூலம் இவர்கள் இரட்டை வேடம் போடக் கூடியவர்கள் என்பது நமக்கு தெளிவாகவிளங்குகின்றது. இது போன்றவர்கள் பற்றி அல்லாஹ்வும் தனது திருமறையில் தெளிவாககூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது " நம்பிக்கை கொண்டுள்ளோம்"என்று கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது " நாங்கள்உங்களை சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே" எனகூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)

இப்படி தான் இவர்கள் மக்களை அழைப்பதற்க்காக நாங்கள் குர் ஆன் ஹதீஸ் படிதான்நடகின்றோம் என்றும் இயக்க நிலைபாடு என்று வரும் போது குர் ஆன் ஹதீஸ் போதிப்பதுஎங்கள் பணி இல்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டும் இரட்டை வேடம்போட்டுக் கொண்டும் உள்ளனர்.

அழைப்பு பணி செய்வது எங்கள் வேலை இல்லை என்று கூறும் இவர்கள் இந்த அழைப்புபணியினால் கிடைக்கும் எவ்வளவு நன்மைகளை இழக்கிறார்கள் என்று தெரியுமா ?

தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்ப்படுத்துதல்ஆகியவற்றை ஏவியதை தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுகளில் எந்தநன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்குமகத்தான கூலியை வழங்குவோம்.
(அல்குர்ஆன் 4:114)

நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நன்பர்கள்.அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையை தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனதுதூதருக்கும் கட்டுபடுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புறிவான். அல்லாஹ்மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 9:71)


(அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்;நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையைஏவுபவர்கள்; தீமையைத் தடுபவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளை பேணிக்கொள்பவர்கள். (இத்தகைய) நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் 9:112)

இந்த வசணங்கள் எல்லாம் அழைப்பு பணியினால் கிடைக்கும் நன்மைகளை பற்றிகூறுகின்றன. இவர்கள் இந்த அழைப்பு பணியை செய்யாததன் மூலம் அல்லாஹ்விடமிருந்துகிடைக்கும் மகத்தான கூலியையும், அவனது அருளையும் , அவனிடமிருந்து மறுமையில்கிடைக்க இருக்கும் நற்செய்திகளையும் இழந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இவர்கள் மட்டும் இலக்காமல் இவர்களை சார்ந்தவர்களுக்கும் இந்த நன்மைகளை கிடைக்கபெறாமல் வைத்துள்ளனர்.

இதை எல்லாம் சொன்னால் தன்னை என்றுமே இஸ்லாமிய அமைப்பு என்று கூறியதுகிடையாது ஆனால் அதில் இஸ்லாமியர்கள் அதிகம் இருகின்றார்கள் என்றும் வியாக்கியானம்பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களை போல் பேசக் கூடியவர்களுக்கும் அல்லாஹ் தனது திருமறையிலே ஒருவசணத்தில் தெளிவாக கூறுகின்றான்.

எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும் நான்முஸ்லீம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரை விடஅழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார் ? (அல்குர்ஆன் 41:33)

அனால் இவர்கள் என்றும் தன்னை முஸ்லிம் என்று கூறியது இல்லை என்று கூறிக் கொண்டுஅழைகின்றார்கள்.

இதில் இருந்து இவர்கள் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு அழைபவர்கள் என்பது தெளிவாகதெரிகின்றது. அதே போல் தான் மட்டும் இஸ்லாத்தை சரியாக பின்பற்றுவேன்(பின்பற்றவில்லை என்பது ஒரு புறம் இருக்க) ஆனால் என்னை சார்ந்த மக்களுக்கு சொல்லமாட்டேன். சுன்னவல் ஜமாஅத் தர்கா தாயத்து மொளலீது என்று எப்படி வழிகெட்டாலும் சரி ,தப்லிக் ஜமாஅத் குர் ஆன் ஹதீஸை விட்டு தஹ்லீம் என்று போனாலும் சரி என்று இவர்கள்இருக்கின்றார்கள்.

இதுவும் நபி வழிக்கு மாற்றமானது என்பதை பின்வரும் நபி மொழி நமக்கு தெளிவுபடுத்தும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் தமக்கு விரும்பியதை தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை(முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ்( ரலி)
ஆதாரம் : புகாரி 13

ஆனால் இவர்களோ நான் பின்பற்றுவேன் ஆனால் மற்றவர்களுக்கு கூறமாட்டேன் என்று கூறிநபி மொழிக்கு மாற்றமாக மக்களை அழைத்து செல்வதை உறுதி செய்துள்ளனர்.

இவர்களை போண்று அழைப்பு பணிக்கு ஆப்பு வைக்கும் கொள்கை இல்லா கூட்டங்களைபுறகணித்து அல்லாஹ் கூறும் அழைப்பு பணியை மறுமை வெற்றி ஒன்றை மட்டும்குறிக்கோளாக கொண்டு செய்து அல்லாஹ்விடம் மகத்தான கூளியை பெறுவோமாக

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons