Saturday, May 28, 2011

தலையங்கம் எழுதும் தருதலைகள் 2


பத்திரிகை நடத்துபவர்கள் ஒன்று சொல் புத்தியில் நடத்த வேண்டும், அல்லது சுய புத்தியிலாவது நடத்த வேண்டும். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாமல் காப்பி அடிப்பதையே பிழைப்பாகக் கொண்டு காலம் தள்ளினால் அது மாட்டி விடப்படும் போது அதை விடக்கேவலமாக எதுவுமே இருக்காது என்ற நிலைக்கு வந்து விடும். தினமலரின் வந்த ஒரு காப்புரிமை பெற்ற செய்தியை எந்தவிதமான கூச்ச நாச்சமும் இன்றி காப்பி அடித்து அதை தங்களுடைய தலையங்கத்தில் விட்டுருக்கிறது இந்த பொய்யன் கூட்டம். பொய்யன் ரிப்போர்ட் என்ற பெயரைக்கூட சொந்தமாக வைக்கத் துப்பில்லாமல் அதையும் காப்பி அடித்து போட, உண்மையான இதழ்காரர் இவர்கள் மீது வழக்கு மிரட்டல் விடுக்க அப்பறம் அது சமுதாய பொய்யன் ரிப்போர்ட் என மாறிப்போனது. இப்போது பாருங்கள் தினமலரில் இருந்து அடித்த அட்டுக்காப்பியை.


இதைவிடக் கேவலமான ஒரு செய்தி. இவர்கள் சொந்தமாக எழுத துப்பில்லாமல், தினமலர் மற்றும் ஏனைய பேப்பர்களில் இருந்து காப்பியடித்துப் போடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் ததஜவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான உணர்வில் இருந்தே காப்பியடித்துப் போட்ட செய்தி தெரியுமா? காத்திருங்கள் ஆதாரத்துடன் பொய்யன் போலி முகமூடியைக் கிழிக்கும் செய்தி அடுத்து..

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons