Tuesday, May 17, 2011

இங்கிலாந்து இளவரசரின் திருமண விழாவை புறக்கணித்த பொய்யன் சமாத்


அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்கும் போது பொய்யன் சமாத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் பொய்யன் சமாத் தலைவருக்கும் செயலாளருக்கும் டிக்கெட் சார்ஜ் கொடுக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்ததால் பொய்யன் சமாத்திலிருந்து யாருமே பதவியேற்பு விழாவிற்கு போகவில்லை,.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பொய்யன் சமாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் அது ஆடம்பரத்திருமணம் எனபதால் அதையும் புறக்கணித்தது பொய்யன் சமாத்.
அதுபோல நேற்று ஒரு சம்பவம் நடந்தது,. ஆமாம்! அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்ற விழாவிற்கும் பொய்யன் சமாத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். (இதைப் படிக்கும் போது தயவு செய்து சத்தம் போட்டு சிரிக்க வேணாம்). ஆனால் இவர்கள் அதைப் புறக்கணித்தார்களாம். என்ன கொடுமை! என்ன கொடுமை!
தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருப்பதே தெரியாது என்பது தான் உண்மை. இந்த பொய்யர்கள் இவர்களுக்கென்று வந்த அழைப்பிதழை வெளியிட்டு விட்டு நாங்கள் புறக்கணித்தோம் என்று செய்தி போட்டால் நன்றாக இருக்கும். எங்கே போடச்சொல்லுங்க பார்ப்போம்?
இன்னும் பதில்வராத கேள்விகள்:
· அட்சய திருதியை முட்டாள் தனமானது என தலையங்கள் எழுதிய இவர்கள்,,பொய்யன் சமாத்தின் தலைவர் பாக்கர் அதிகபட்ச பங்குதாரராக இருக்கும் பாத்திமா ஜூவல்லர்ஸுக்கு அட்சய திருதியை விளம்பரம் போட்டது உண்டா இல்லையா?
· இனி பொய்யன் சமாத்தில் நீடிக்க முடியாது என பாக்கரைத் தாக்கி கடிதம் எழுதிய செங்கியின் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லையே!

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons