Monday, December 26, 2011

டிசம்பர் 25 ஐ பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு தினமாக அறிவித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு தேசியத் தலைவர் மாலிக் தரும் செய்தி:


அன்பு கொள்கைச் சொந்தங்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்,

சத்தியக் கொள்கையை ஏந்தி தவ்ஹீத் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் நாம் நம் மார்க்கம் சொன்னதன் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்நியப் பெண்களுக்கு உள்ள வரைமுறைகள் குறித்து நாம் நன்கு அறிவோம். அதன் அடிப்படையில் நாம் வாழ்வது மட்டுமின்றி நம் சகோதரர்களின் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதற்கு நாம் உதவி புரிய வேண்டும்.

நம் அமைப்பைக் கள்ளத்தனமாக பதிவு செய்து வைத்திருக்கும் கூட்டத்தில் உள்ள அனைவருமே பாலியல் குற்றவாளிகள் என்கிற செய்தி கடந்த சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது.அதிலும் குறிப்பாக நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் போலித்தனமாகப் பயன்படுத்தி தன்னை தலைவர் என்று சொல்லி வலம்வரும் பாக்கர் என்ற நபர், நம் சகோதர அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த போது பலமுறை பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதால் அவர் அந்த ஜமாஅத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக மட்டுமே நம்முடைய ஜமாஅத் பெயரில் ஒரு கள்ள இயக்கத்தைத் துவக்கி அதன் மூலம் பல தவறுகளைச் செய்து வருகின்றார்.

அதிலும் சமீபத்தில் அவர் செய்த பாலியல் சேட்டை இணைய தளங்களில் வெளியாகி மக்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதை அறிந்த சில பத்திரிகைகள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் பெண்களுடன் உல்லாசம் என தலைப்பிட்டு செய்திகள் எழுதி நம் ஜமாஅத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல் வந்தததன் அடிப்படையில் தான் அதற்கான மறுப்பு அறிக்கை அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப் பட்டது. ஆனாலும் சில பத்திரிகையாளர்கள் இதை பெட்டிச் செய்தியாகவும் கிசுகிசுவாகவும் தொடர்ந்து வெளியிட்டு வருவது நம் கவனத்துக்கு வருகின்றது.

எனவே நாம் இந்த டிசம்பர் 25 ஆம் தேதியை பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு தினமாகக் கடைபிடித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் போலிகளை பத்திரிகையாளர்களுக்கும் நம் சமூகத்திற்கும் அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு நம் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இருக்கிறது.

எனவே டிசம்பர் 25 ஆம் தேதி அன்று நம் ஜமாஅத் நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள பத்திரிகை ஊடகத்துறை அலுவலர்களைச் சந்தித்து உண்மையான நம்முடைய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குறித்து விளக்கமளித்து விபச்சாரக் குற்றவாளிகளின் முகத்திரையைக் கிழித்து அன்றைய தினத்தை பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு தினமாக கொண்டு செல்ல வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

மாலிக்
தேசியத் தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons