
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான போராட்டங்கள் போதும்”என்று சென்னை மக்கா பள்ளியின் பேஷ் இமாம் சம்சுதீன் காசிமி வேண்டுகோள் விடுத்துள்ளதாகஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்த யூதன் சாம் பெசிலி, அந்தப் படத்தை “யுடியூப்” மூலம் விளம்பரம்செய்த கிறிஸ்தவ பிஷப் டெர்ரி ஜோன்ஸ், இந்த படத்திற்கு பரிபூரண ஆசி வழங்கி, அனைத்துஉதவிகளையும் செய்த அமெரிக்க அரசு ஆகியவற்றிற்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள்போராடி வருகிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அதே சமயம் இந்தியாவின்எல்லா மாநிலங்களுக்கும் தலைமை ஏற்கும் வகையில் தமிழகத்தில்...