
நபி வழியை மறந்தோரே--நரகத்தை அஞ்சிடுவீர் .....
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்க வேண்டும் ...
முஸ்லிம்கள் தவறு செய்தால் நாங்கள் கண்டிக்க மாட்டோம் மாறாக அந்த தவறுக்கு ஆதரவாக
நிற்போம் என்று சொல்பவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது .
நெல்லையில் ம.ம.மு .க நடத்திய ஆர்ப்பாட்ட முறையே முதலில் தவறு
நபி (ஸல் ) அவர்கள் கூற்றுப்படி ஒரு முஸ்லிம் என்றால் தனது நாவினாலும் கரத்தினாலும்
பிறருக்கு எந்த தீங்கும் செய்ய கூடாது என்பதே .
ஆனால் இவர்களோ நபி ஸல் அவர்களை கேலி செய்தவர்களை கண்டிக்க போகிறோம் என்ற
பெயரில் ரயில் மறியல் என்று அறிவித்து பொது மக்களுக்கு தீங்கு தொந்தரவு கொடுக்கும்
போராட்டத்தை நடத்தினர் .
இவர்கள் ஆர்பாட்டதினால் பர பரப்பாக இயங்கும் ரயில் நிலையத்தை கலவர பூமியாக்கினர் .
வெளியூர் செல்வதற்கு வந்த பயணிகளும் பொது மக்கள் அனைவரும் சிதறி ஓடி மிகப் பெரும்
இன்னலுக்கு ஆளாகினர் .
பயணிகளின் சுமையை அவர்களின் வாகனத்தில் ஏற்றி விடுவது சுன்னத் (நபிவழி )
என்று சொல்கிற மார்க்கத்தில் இருந்துகொண்டு பயணிகளுக்கு இடைஞ்சல் செய்யும்
ஆர்ப்பாட்டத்தை அறிவித்ததே தவறு .
மேலும் பஸ்களின் கண்ணாடிகளை நொறுக்கி ,சைக்கிள் ,பைக், ஆகிவற்றையும் அடித்து
நொறுக்கி மாற்று மதத்தவர்களெல்லாம் பாராட்டும் படி நபி வழியை சிறப்பாக பேணி நடந்தனர்
இந்த போராளிகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் மீண்டும் மேலப்பாளையத்தில்
பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நாளை மறுதினம் திங்கள்கிழமை முழு
அடைப்பு நடத்த 19 அமைப்பை சார்ந்தவர்களும் முடிவு செய்து உள்ளனர் ...
இஸ்லாத்தின் பெயரை கெடுக்கும் இழி பிறவிகள் ...
நபியின் பெயரை வைத்து அரசியல் பண்ணும் கூட்டங்கள் .....
எளிய மார்க்கத்தை எடுத்து சொல்வோம் பிறருக்கு...
0 comments:
Post a Comment