Saturday, September 22, 2012

அமெரிக்க துணைத் தூதரக கல்வீச்சும் பயந்து ஓடி ஒளிந்து நடுநடுங்கிய புதிய தலைமைத்துவத்தினரும்....



இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அமெரிக்க துணைத் தூதரக கல்வீச்சும் பயந்து ஓடி ஒளிந்து நடுநடுங்கிய புதிய தலைமைத்துவத்தினரும்.....
எதிர்பாராத விதமான உண்மைத் தொண்டர்களின் கொந்தளிப்பால் சிறு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது. அதை ஏற்படா வண்ணம் எப்படியேனும் தடுத்துவிட வேண்டும் என்று களமிறங்கி ஆக்ரோஷப்பட்டவர்களை அமைதிப்படுத்திய உண்மைக் கழக விசுவாசிகளையும் காண முடிந்தது. இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஒரு 100 தொண்டர்களோடு புதிய தலைமைத்துவத்தினர் கைதாகி தங்களுடைய மார்க்கப் பற்றையும் சமுதாய உணர்வையும் பறை சாற்றி தாங்கள் யாருக்கும் அஞ்சா சிங்கங்கள் தான் என்று நிரூபிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் ஒரு மூத்த நிர்வாகி மட்டும் சிறை செல்லும் குழுவிற்கு தலைமை ஏற்று செல்ல தயாராக இருந்தார் என்ற செய்தியும் மற்ற இளவல்கள் [நிர்வாகிகள்] எல்லாம் தொடை நடுங்கிகளாக இருந்தார்கள் என்பதையும் இவர்கள் அன்று கோவை சம்பவத்தின் பொழுது பொறுமையோடு கையாண்ட நிர்வாகத் திறனை இவர்கள் கோவை மாவட்ட முன்னாள் நிர்வாகிகளிடமிருந்து பெற வேண்டிய பாடம் நிறைய இருக்கின்றது. இவர்களின் தற்போதைய தொடை நடுங்கி சம்பவம் சமூக சேவைக்கும், செயல்பாட்டுக்கும் தனக்கென்று தனி முத்திரை பதித்து செயல்படும் காஞ்சி மாவட்டத் தலைவர் அன்புச் சகோதரர் துணிச்சல் மிகு செயல்பாட்டிற்கு சொந்தக்காரர் தாம்பரம் யாகூப் அவர்கள் எப்போதும் சமுதாயத்திற்காக போராடும் இந்தக் கழகத்திற்காக சிறை செல்ல தயங்காத சொந்தக்காரரிடம் இந்த தலைமை கேட்டுக் கொண்டிருந்தால் அந்த தூதரக கல்வீச்சு சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுமார் 500 பேரோடு கைதாகி சிறைக்கு சென்றிருப்பார். ஆனால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை நாங்கள் பேசி சரி செய்துவிட்டோம் என்று கூறி கைதாக இருந்தவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அவ்வாறு சென்றவரை நள்ளிரவில் காவல் துறை பலவந்தமாக கைது செய்வது போல் சூழ்நிலையை உறுவாக்கிவிட்டனர். இந்த காவல்துறையோடு என்ன தான் பேச்சு நடத்தினார்கள் நம்மை எல்லாம் படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

நமது தலைமைத்துவத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் உட்பூசல்களின் விளைவாகவும், இவர் சிக்க வைக்கப்பட்டு இருக்கலாமோ தமுமுகவில் உள்ள கருத்துரிமை ஜனநாயக மறுப்பிற்கு எதிராக குரல் கொடுத்து வந்த தாம்பரம் யாகூப் அவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தார் என்பது தான் உண்மை. ஒரு வேளை சிக்க வைக்கப்பட்டு இருக்கின்றாரோ என்ற கருத்து செயற்குழு மற்றும் கழகத்தின் முன்னோடிகள் மத்தியில் நிலவுகின்றது.

உணர்வுகளை அடக்க முடியாத பொதுமக்களாலும், உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்களாலும் இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் காவல்துறையினர் மிகுந்த கவனத்தோடும் ஒரு இனக்கலவரமோ, அரச வன்முறையோ ஏற்படாமல் செயல்பட்டதை கண்ணுற்ற நியாயமான உணர்வுள்ள கடை நிலை தொண்டர்களும், பொதுமக்களும் மற்றும் நமது உண்மையாளன் செய்திக் குழுவும் வெகுவாக பாராட்டாமல் இல்லை.

முதிர்ச்சி இல்லா ஒரு இளம் தலைவர் எப்போதும் மாநாடு நடத்தி, மைக்கைப் பிடிக்கத் துடிக்கும் அந்த தலைவர் தனது பக்குவமற்ற பேச்சால் காவல்துறை தான் காரணம் என்று கூறி அமைதி காத்திருந்த காவலர்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசி கலவர சூழலை ஏற்படுத்த எத்தனித்தார். அந்த ஒரு தூண்டுதலையும் பொருட்படுத்தாமல் பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் நடந்து கொண்டது ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் ஐயமில்லை.

சிங்காரச் சென்னையை சரியான மற்றும் நிர்வாகத் திறன் மிக்க காவல் துறை அதிகாரிகளை வைத்து முதல்வர் நிர்வகித்து வருகின்றார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. முற்றுகைப் போரை தலைமையேற்று நடத்திய மாநில நிர்வாகிகள் திருமண மண்டபங்களில் காலையில் அடைத்து மாலையில் விடுவிக்கும் பொழுது எப்படி புன்முறுவல் பூப்பார்களோ அதே போன்று புழல் சிறை செல்லவும் தயாராவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த வெகுஜன மக்கள் மத்தியில் மேடையில் மைக்கினை பிடித்த பொழுதெல்லாம் நாங்கள் சிங்கக்குட்டிகள், புலிக்குட்டிகள், கரடிக்குட்டிகள், வரிக்குதிரைகள், கவரி மான்கள் என்றெல்லாம் பேசும் அந்த இளம் தலைவர் தான் கைதாகி விடக்கூடாது என்பதில் தனிக் கவனம் செலுத்தி வந்தார். அதற்காக எத்தனை தொண்டர்களை வேண்டுமானாலும் காவல் துறையில் ஒப்படைக்கலாம் என்பதை கவனமாக கண்ணுற்ற மூத்த மாவட்ட முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் இந்த தொடை நடுங்கிகளின் பின்னால் நாம் ஒன்றுமறியாத வீரியமிக்க தொண்டர் பட்டாளத்தை அழைத்துச் செல்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமமானது என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்.

சிரத் தன்மை இல்லாத, தன்னம்பிக்கையற்ற, ஒரு வஞ்சகத் தலைமை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை மேற்சொன்ன விவரங்களும் தாம்பரம் யாக்கூப் கைதும் நிரூபித்து கொண்டிருக்கின்றது.

தாக்குதல் நடத்தியவர்களை களமிறங்கித் தடுத்த தாம்பரம் யாகூப் கைது என்ற பெயரில் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார்!!!!!!!

ஆனால் முற்றுகைக்கு ஆக்ரோஷ கோசங்களை முழங்கிய மாநில நிர்வாகிக்கு பூச்செண்டு மரியதையாம்??????

நன்றி  ---------- போலிகளை அடையாளம் காட்டும் உன்னதப் பணியில்,
உண்மையாளன் மற்றும் செய்திக் குழு

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons