Friday, April 8, 2011

நாங்க ரெடி! நீங்க ரெடியா? ஒரு சமுதாய சவால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இஸ்லாமிய வேட்பாளார்களை ஆதரிக்காமல் அவர்களுக்கு மாற்றாக போட்டியிடும் மாற்றுமத வேட்பாளர்களை ஆதரிக்கிறார்கள். இவர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட மாட்டார்கள் பாருங்கள்! நாங்களெல்லாம் எப்படி முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு தருகிறோம் என தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டுமே சுற்றி சுற்றி பழிக்கும் இயக்கங்களும் அவர்கள் சார்ந்த மக்களும் ஒவ்வொரு தேர்தலுக்கும் விடுக்கும் அறிக்கைதான் இது.

அது போலத்தான் இந்தத் தேர்தலிலும் பரவலாக இது போன்றதொரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவிர மற்ற இயக்கங்கள் ஒற்றுமையுடன் ஒரணியில் திரண்டு தங்கள் பலத்தை நிரூபித்து எல்லாரும் ஒரே இயக்கத்திற்கு அல்லது முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவது போலவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும்தான் முஸ்லிம் வேட்பாளர்களை புறக்கணிப்பதாகவும் மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்தை இந்த விசமிகள் பரப்பி வருகிறார்கள்.

ஆனால் இih சொல்பவர்கள் இந்த கருத்திலே அவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? என்றால் சுத்தமாக இல்லை. காரணம் முஸ்லிம் வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என முழங்கும் தலைவர்கள் வேறு ஏதாவது ஒரு முஸ்லிம் வேட்பாளரைத்தான் எதிர்த்து நிற்கிறார்கள்.

ஊதாரணமாக நம் சமுதாய மானம் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு பெற்று கேவலப்பட்டு நிற்பதை அறிந்து கொதித்தெழுந்த மமகட்சியினர் இப்போது ஒரு சீட்டை விட குறைவான சதவிகிதத்தில் சீட்டுகள் வாங்கி கேவலப்பட்டு நிற்கிறார்கள்.

நேற்றைக்கு கருனாநிதிதான் நம் சமுதாயத்தின் பாதுகாவலர் என பல்லைகாட்டி அவருக்கு நன்றி அறிவிப்ப மாநாடு நடத்தி,அதற்கு அவர்களின் அப்பாவித் தொண்டர்கள் தங்கள் சொந்தக் காசகளில் ஒரு ரயிலையே வாடகைக்கு எடுத்து வந்த கூத்துக்கள் எல்லாம் நடந்தன.

ஆனால் கலைஞர் இழைத்த சமுதாய துரோகத்தின் காரணமாக, அதாவது அவர்களில் இரண்டு பேர் போட்டியிட வேண்டும் என தூர நோக்கு சிந்தனையோடு கலைஞர் தந்த ஒரு தொகுதியை மறுத்தது அவர்களின் கழகம்.

ஆனால் புத்திசாலியான ஜெயலலிதாவிடம் ஒரு நாடாளுமன்ற விகிதத்தில் ஒரு தொகுதி அளவு கூட பெற முடியாமல் இன்றைக்கு அரை சதவிகித அளவிற்கு மூன்று சீட்டுக்களைப் பெற்று கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு கருனாநிதியை வசைபாடுகிறது இந்தக் கழகம். ஆக அவர்களுக்கு அதிலே இருக்கும் ஒருவர் எப்படியாவது வெற்றியடைந்து விட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதனால்தான் ஜெயலலிதா சமுதாயத்திற்கு செய்த கடுமையான துரோகங்களை எல்லாம் மறந்து விட்டு இன்றைக்கு புரட்சித்தலைவி அன்புச் சகோதரி ஜெயலலிதா என வாய் கூசாமல் லாவனி பாடுகிறார் பேராசிரியர்.

பாபர் மசூதியின் இடம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல என தீர்ப்பு வெளியானதும், சமுதாய நலனையெல்லாம் தூக்கி குப்பையில் வீசிவிட்டு தன் அன்புச் சகோதரி மட்டும் மகிழ்சியடைந்து தனக்கு ஒரு சீட்டு மட்டும் தந்தால் கூட போதும் என்று கருதிதான் பாபார் மசூதி தீர்ப்பு அற்புதமான தீர்ப்பு என்றும், அதை மனமாற ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார் இந்த பேராசிரியர்.

ஆக சமுதாய நலன் கொஞ்சமும் இல்லாமல் இவர்களின் சுயநலத்திற்காக எப்படியாவது ஏதாவது ஒரு பதவியை அடைந்துவிட மாட்டோமா என்ற லட்சியத்தில் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெளியிலே சொல்லிக் கொள்வது நம் சமுதாயத்திற்கு ஆதரவு தாருங்கள் என்று.

யார் வேண்டுமானாலும் எல்லாப் பகையையும் மறந்து ஆதரிப்பர்கள். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் எப்போதுமே சமுதாய வேட்பாளர்களுக்கு எதிராகத்தான் செயல்படும் என இந்த மமகவினர் பரப்புவார்கள். பரப்பி வருகிறார்கள்.

தமுமுகவின் இந்த கோரிக்கை நியாயமான கோரிக்கை என்பதை பரிசீலித்து சமுதாய வேட்பாளர்களை ஆதரிப்பதும் ஒரு நல்ல திட்டம் தானே என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் இம்முறை தேர்தலில் போட்டியிடும் மமக உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களையும் ஆதரிக்கலாம் என்ற முடிவை இரண்டொரு நாட்களில் அறிவிக்க இருக்கிறது.

ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான். அது என்னவென்றால் சமுதாய வேட்பாளர்களை ஆதரிக்காமல் துரோகம் செய்கிறார்கள் என முழங்கும் தமுமுகவினரும் எங்களோடு இணைந்து கீழ்க்கண்ட தொகுதிகளில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க களமிறங்க வேண்டும்.

அத்தோடு அவர்கள் போட்டியிடும் கூட்டணி மட்டுமல்லாது திமுக கூட்டணியுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள்,எஸ்டிபிஐ நிறுத்தியுள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் மற்றும் இதர கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிப்போம் எனவும், அது தவிர மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணியை மமக ஆதரிக்கும் எனவும் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டால் அடுத்த விநாடியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக, திமுக, மமக, எஸ்டிபிஐ மற்றும் இதர கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்கும் என்ற அறிக்கை பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அனைத்து தொலைகாட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அத்தோடு அதிமுக திமுக முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் மமக, எஸ்டிபிஐ வேட்பாளர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் சளைக்காமல பாடுபட்டு அவர்களை வெற்றிப்பெறச் செய்வார்கள்.

ஆனால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நீங்க மட்டும் ஆதரிப்பது தான் சமுதாயத்துக்கு செய்யும் நன்மை என மமகவினர் சொல்வது அவர்களை புத்திசாலிகளாக நினைத்து மக்களை முட்டாளாக்கும் செயலாகும். ஆக முடிவு மமகவின் கையில் மட்டுமே உள்ளது. மமகவினர் எங்களுக்கு நேரமே இல்லை. தேர்தல் வேலை இருக்கிறது என்று சொல்வார்கள்.

எனவே அவர்களின் வேலையை சுலபப்படுத்த வேண்டி நாமே அவர்களை ஆதரித்து வெளியிட வேண்டிய அறிக்கைக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் தொகுதிகளையும் இங்கே பட்டியலிடுகிறோம்.

ஆவடி  : அப்துல் ரகீம் (அதிமுக)

ராணிப்பேட்டை : அ. முகமத் (அதிமுக)

திருச்சி மேற்கு : என். மரியம் பிச்சை (அதிமுக)

ஆயிரம் விளக்கு : அசன் முஹம்மது ஜின்னா (திமுக)

தஞ்சாவூர்     : உபயதுல்லா (திமுக)

மதுரை மத்தி  : கவஸ் பாஷா (திமுக)

பாளையங்கோட்டை: மைதீன்கான் (திமுக)

கிருஷ்னகிரி    : சையது ஜியாவுல் ஹக் (காங்கிரஸ்)

துறைமுகம் : அல்தாப் ஹூசைன் (முஸ்லீம் லீக்)

வானியம்பாடி   : எச். அப்துல் பாசித் (முஸ்லிம் லீக்)

நாகப்பட்டினம்: எம். முஹம்மது சேக் தாவூது (முஸ்லீம் லீக்)

கடையநல்லூர்: நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ)

தொண்டமுத்தூர் : உமர் (எஸ்டிபிஐ)

பூம்புகார்      : முஹம்;மது தாhரிக் (எஸ்டிபிஐ)

நிரவி திருப்பட்டினம்: பத்ருதீன் (எஸ்டிபிஐ)

ஆம்பூர் : அஸ்லம் பாட்சா (மமக)

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி: தமிமுல் அன்சாரி (மமக)

இராமநாதபுரம்: ஜவாஹிருல்லாஹ் (மமக) அசன்அலி (காங்கிரஸ்) குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

திருவாடானை: முஜ்பூர் ரஹ்மான் (தேமுதிக)

உளுந்துர்பேட்டை: முகமது யூசுப் (விடுதலை சிறுத்தை)

மேற்கண்ட தொகுதிகளில் இஸ்லாமியர்கள் போட்டியிடுகின்றார்கள். ஆனால் மமகவினர் மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் எங்களை மூன்று தொகுதிகளில் ஆதரிக்காமல் துரோகம் செய்கின்றனர் என மக்கள் மத்தியில் செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் தங்களை சமுதாயக் காவலர்களாக சொல்லிக் கொள்ளும் கழகக் கண்மணிகள் கீழ்கண்ட தொகுதிகளில் யாரை ஆதரிக்கிறார்கள் என்ற பட்டியலை பாருங்கள்:

தொகுதிகள் வேட்பாளர்கள்                                        மமகஆதரிப்பது

  • ஆயிரம் விளக்கு அசன் முஹம்மது ஜின்னா    வளர்மதி(அதிமுக)

  • தஞ்சாவூர்     உபயதுல்லா   ஹ்       எம்.ரெங்கசாமி (அதிமுக)

  • மதுரைமத்தி   கவுஸ்பாஷா         ஆர். சுந்தர்ராஜன்(அதிமுக

  • பாளையங்கோட்டை மைதீன் கான்     வி.பழனி (மா. கம்யு)

  • துறைமுகம் அல்தாப் ஹூசைன்    பழ. கருப்பையா (அதிமுக)

  • வாணியம்பாடி  அப்துல் பாசித்    கோ.வி.சம்பத்குமார்(அதிமுக)

  • நாகப்பட்டினம்  ஷேக் தாவூது     கே.ஏ. ஜெயபால் (அதிமுக)

  • கடையநல்லூர் நெல்லைமுபாரக்    செந்தூர்பாண்டியன்(அதிமுக)

  • தொண்டாமுத்தூர் உமர்            எஸ்.பி.வேலுமணி (அதிமுக)

  • பூம்புகார்   முஹம்மது தாரிக்     எஸ்.மலைராஜ் (அதிமுக)

  • நிரவிதிருப்பட்டினம் பத்ருதீன் எம்.செல்வராஜ் (அதிமுக)

  • உளுந்தூர்பேட்டை முகம்மது யூசுப் ரா.     குமரகுரு (அதிமுக)

ஆக சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட அன்புச் சகோதரர்களே!

இதோ முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரிக்க இஸ்லாமிய சமூகத்தின் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகி விட்டது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இஸ்லாமிய சமூக காவலர்களை உமனடியாக தொடர்பு கொண்டு மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களையும் நம் சமுதாய நலன் கருதி அந்த தொகுதிகளில் மட்டும் ஆதரிக்கச் சொல்லுங்கள். அடுத்த விநாடியே அவர்களை ஆதரிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் தயார்.

Thursday, April 7, 2011

தமுமுகவின் சமுதாய துரோக வரலாறு..பாகம் - 1

ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய கட்சி எது என்பதை பொறுத்து முஸ்லிம்களின் வாக்குகள் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடனும் வீரியத்துடனும் செயல்பட்டு வந்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். தேர்தலில் போட்டியிட்டு தமக்காக எந்த சீட்டும் பெறுவதில்லை என்பதை தன் அடிப்படை கொள்கையாகவே கொண்டுள்ள தவ்ஹீத் ஜமாத்தின் பின்னால் மக்கள் அணியணியாக திரண்டு வந்ததை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த சமூகம் கவனித்து வருகிறது.
சமுதாய மக்களிடையே விழிப்புணர்வும் செயல்திறனும் அதிகரித்திருப்பதற்கு இது போன்ற சமூக மாற்றங்கள் ஒரு அத்தாட்சியாகவும் உள்ளன.
இதை கண்டு பொறுக்க இயலாத தமுமுகவினர், இந்த சமுதாயத்தை தன் பக்கம் இழுத்துக்கொள்ள பல வகையான முயற்சிகளை செய்து பார்த்தாலும் எந்த முயற்சிக்கும் அவர்களுக்கு அல்லாஹ் பலன் அளிக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
ஒரு காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதையே கொள்கையாக கொண்டு செயல்பட்ட இந்த இயக்கம், தவ்ஹீத் ஜமாத்திற்கு கிடைத்திருக்கும் அபரிவிதமான வளர்ச்சியை கண்டு கொதிப்படைந்து , நேரடி அரசியலில் பங்கு கொண்டு அதன் மூலம் மக்களை கவர்ந்து தன் பக்கம் இழுதுக்கொள்ளலாம் என்று தப்புக்கணக்கு போட்டனர்.
தங்களின் சுய லாபத்திற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும், புகழ் அடைவதற்காகவும், அரசியல் அதிகாரத்தை பெற்று சமூகத்தை சுரண்டிப்பிழைப்பதற்காகவும் அரசியல் களம் கண்டுள்ளனர் இந்த தமுமுகவினர்.
ஏற்கனவே இறைவன் மீது ஆணையாக அரசியலில் நுழைவதில்லை என்று இந்த சமுதாயத்திடம் சத்தியம் செய்ததையும், இன்று அந்த சத்தியத்தை அவர்களே மீறி, தாங்கள் எந்த கொள்கையும் அற்றவர்கள் என்பதை தாங்களே நிரூபித்துக்கொண்டனர் என்பதையும் பல முறை நாம் விரிவாக விளக்கியுள்ளோம்.
அது ஒரு பக்கம் இருக்க, தாங்கள் எந்த நோக்கத்திற்காக அரசியலில் நுழைந்தோமோ, அந்த நோக்கத்தை வெளிக்காட்டினால் இந்த சமூகம் காறித்துப்பும் என்பதால், நாங்களும் சமுதாய போராளிகள் தான் என்ற நாடகத்தை அரங்கேற்றும் விதமாக தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலின் போதும் சமுதாய கோரிக்கை ஒன்றை முன்வைத்து போராடுவதை போன்று இந்த கும்பலும் போராட்டங்களை அறிவிக்க துவங்கியது.
கடந்த 2005 - 2006 ஆம் ஆண்டுகளில் தமிழக அளவில் முஸ்லிம்களுக்கான தனி இட ஓதிக்கீட்டுக்கான அவசியத்தை தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரங்கள் வாயிலாக அனைத்து மக்களும் மிக துல்லியமாக விளங்கிக்கொண்டனர்.
2006 
இல் ஆட்சி மாற்றத்திற்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகளின் முன்னால் இட ஒதிக்கீட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, அதை நிறைவேற்றி தருபவர்களுக்கே முஸ்லிம் சமுதாயத்தின் வாக்கு, என்ற உறுதியான நிலையை உருவாக்கி, மொத்த இந்தியாவின் அரசியல் பார்வையை தமிழக முஸ்லிம்களை நோக்கி திருப்பியதில் தவ்ஹீத் ஜமாஅத் தனது பங்களிப்பை வெகு சிறப்பாக செய்திருந்தது.
முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய விழிப்புணர்வை கண்டு கொண்ட இந்த தமுமுகவினர், இதே போன்ற ஆயுதத்தை நாமும் கையில் எடுத்தால் எளிதாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம், இதன் மூலம் அரசியல் பிரவேசத்திற்கு தேவையான மக்கள் செல்வாக்கையும் மிக எளிதாக சம்பாதித்து விடலாம் என்ற நப்பாசையில் தங்கள் இயக்கம் சார்பாக இட ஒதிக்கீடு கோஷங்களை செய்ய துவங்கினர்.
தேர்தலில் போட்டியிடாதவர்கள் போராட்டத்திற்கு அழைத்தால் மக்கள் வருவார்கள், தேர்தலில் போட்டியிட்டு தங்களுக்காக சீட்டு பெறும் நோக்கில் செயல்படுபவர்களின் பின்னால் மக்கள் அணி திரள மாட்டார்கள் என்ற சாதாரண உண்மையை கூட விளங்காத இவர்கள்,தங்கள் நோக்கம் நிறைவேறி விடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தனர்.
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை கூட மறந்து, இவர்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் விதமாக அல்லாஹ் இவர்களை அன்றே சந்தி சிரிக்க வைத்தான்.
இட ஒதிக்கீட்டை தருபவர்களுக்கு தான் ஓட்டு, அதை தராமல் ஏமாற்றும் எந்த கட்சியானாலும் தயவு தாட்சணியமற்ற எதிர்ப்பு என்ற மிக உறுதியான நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பக்கம் போராடிக்கொண்டிருந்த வேளையில், தாங்கள் அப்போது சார்ந்துள்ள திமுகவின் தயவை இழந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தாங்கள் நடத்திய இட ஓதிக்கீட்டு போராட்டத்தை கூட மென்மையாக்கி கொண்டனர் இந்த தமுமுகவினர்.
மாநில அரசுக்கு இட ஒதிக்கீடு வழங்குகின்ற அதிகாரமே இல்லை என்று கூறி, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியை எதிர்த்து தமிழகத்தில் போராட துப்பில்லாமல் டில்லி சென்றனர் இந்த கும்பல். 
இந்த சமுதாயம் அன்றே இவர்களை அடையாளம் கண்டு கொண்டது !
இருந்தாலும், பேராசையும் பணத்தாசையும் ஒருவனுக்கு வந்து விட்டால்,அவன் எந்த இழி நிலைக்கும் செல்வான் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும் என்பதற்காக இந்த கும்பலின் பச்சோந்தித்தனத்தை அன்று முதல் இன்றைய தேதி வரை அல்லாஹ் நமக்கு அம்பலப்படுத்தி தந்து கொண்டே இருக்கிறான் என்பது தான் வேடிக்கை!
இட ஒதிக்கீட்டை வழங்குகின்ற அதிகாரம் கருணாநிதிக்கு இல்லை என்றார்கள். 
கருணாநிதியை அவராகவே இட ஒதிக்கீட்டை வழங்க வைத்து , இட ஒதிக்கீட்டை வழங்கும் அதிகாரம் கருணாநிதிக்கு உள்ளது என்றும், இந்த போலிகள் கூறுவது தான் பொய் எனவும் அல்லாஹ் உடனடியாக நிறைவேற்றிக்காட்டினான்.
அடுத்ததாக, இந்த அளவிற்கு போராடி கிடைத்த இட ஓதிக்கீட்டில் குளறுபடி என்று மக்கள் மீண்டும் வெம்ப துவங்க, இட ஒதிக்கீடு என்றால் இப்படி தான், இது ஒரு "சைக்கிள்" , ரோஸ்டர் முறையில் பல வருடங்கள் கழித்து தான் மக்களுக்கு கிடைக்கும் என்று மீண்டும் கருணாநிதிக்கு முட்டுக்கொடுத்து தங்கள் அரசிய சுயநலத்தை வெளிப்படுத்தியது இந்த கூட்டம்.
உண்மையில், இது ரோஸ்டர் முறையோ, 'cyclic ' முறையோ அல்ல, இது நிர்வாக குறையால் தான் ஏற்படுகிறது என்று அன்றே தவ்ஹீத் ஜமாத மக்களிடையே பிரசாரம் செய்து, இதற்காகவும் பல போராட்டங்களை நடத்தியது.
முடிவு என்ன? அல்லாஹ் இந்த செயலிலும் அந்த கும்பலுக்கு செருப்படி கொடுத்தான்.
மக்களின் முழு வீச்சான போராட்டங்களை கண்டு கொண்ட முதல்வர்,இது ரோஸ்டரும் இல்லை சர்கிளும் இல்லை, இது அதிகாரிகள் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் என்றும், உடனடியாக இது சரி செய்யப்படும் என்று தன் வாயாலேயே உறுதி கொடுத்தார்.
எவருக்காக இந்த கும்பல் வக்காலத்து வாங்கியதோ, அவரே இந்த கும்பலுக்கு மூக்குடைப்பு கொடுத்தார் எனும் போது, இதை விடவும் சமுதாயத்தில் அவமானப்பட்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது .
தங்களின் நோக்கம் பதவியும் பணமும் தான் என்றாலும், அந்த நோக்கத்தை வெளிக்காட்டாமல் அரசியல் செய்ய இவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் இறுதியில் இறைவனால் கேவலப்படுதப்பட்டன!
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்தது.
தொடர்ந்து அவமானப்பட்டதால் , இனியும் கருணாநிதியிடம் இருந்து வந்தால் தங்களுக்கு போதிய மதிப்பும் அந்தஸ்தும் , தேவையான பணமும் கிடைக்காது என்று எண்ணிய இவர்கள், அவரை விட்டு விலகி தனியாக தேர்தலை சந்தித்து ஓட்டு பொறுக்கலாம் என்று முடிவு செய்தனர்.
அன்றைய தேதி வரை கலைஞரை புகழ்ந்து வந்தவர்கள், திடீரென அவை விட்டு விலகுகிறார்களே என்று மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக இவர்கள் இன்னொரு பொய்யை சொன்னார்கள்.
கலைஞர் பாராளுமன்றத்திற்கு எங்களுக்காக ஒரு தொகுதி மட்டுமே ஒதிக்கீடு செய்துள்ளார். அது எங்களுக்கு போதுமானதாக இல்லை, ஆகவே நாங்கள் அவரை விட்டு விலகுகிறோம், என்றனர்.
2006 
இல் இட ஓதிக்கீட்டுக்காக போராட்டங்கள் பல செய்த நிலையில் ,அதை நிறைவேற்றி தந்த கலைஞருக்கு நன்றி செய்யும் முகமாக பாராளமன்ற தேர்தலில் கலைஞருக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்த நிலையில், தங்களுக்கும் இட ஓதிக்கீட்டு போராட்டங்களுக்கும் துளி கூட சம்மந்தமில்லை என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் முகமாக,தங்களின் சுய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு செய்தனர் இந்த தமுமுகவினர்.
மக்களை ஏமாற்றி நயவஞ்சக செயலில் ஈடுபடுகிற எவரையும் அல்லாஹ் விட்டு வைக்க மாட்டான் என்பதற்கு அந்த தேர்தலின் முடிவே பாடமாக அமைந்தது!
ஆம்!, அந்த தேர்தலில் தனியாக, சிறு சிறு சில்லறை கட்சிகளின் ஆதரவோடு பதவி ஆசையை நிறைவேற்றுவதற்காக போட்டியிட்டவர்கள்,தாங்கள் செலுத்திய முன்பணத்தை கூட திரும்ப பெற திராணியற்று டெபாசிட் இழந்தனர்!!
உண்மையில் அவர்கள் இழந்தது டெபாசிட்டா? இல்லை!! தங்களின் மானம் தான் அன்று அவர்களால் இழக்கப்பட்டது !!!!

ஒரு முமின் ஒரு முறை தவறு செய்வான். பின்னர் திருந்திக்கொள்வான். அது முமினின் பண்பு தான், எங்களின் பண்பல்ல என்பதை வெளிக்காட்டும் முகமாக, இதோ, இந்த வருடத்தின் சட்ட மன்ற தேர்தலில் அவர்கள் மீண்டும் படையெடுக்க துவங்கியுள்ளனர்.
அது சரி, மானம் உள்ளவர்களுக்கு தானே அவமானம் என்ற ஒன்று ஏற்படும், அவர்கள் தான் அனைத்தையும் அன்றே இழந்து விட்டார்களே,இனியும் அவர்களுக்கு மானம் போய் விட்டது என்று நம்மால் சொல்ல முடியாது தான்!

இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரையிலும், தவ்ஹீத் ஜமாஅத் அதே சமுதாய அக்கறையை மையப்படுத்தி தேர்தலை சந்திக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.
கலைஞர் முன்பு தந்துள்ள இட ஓதிக்கீட்டுக்கான நன்றியை முந்தைய பாராளமன்ற தேர்தலிலேயே காட்டி விட்ட நாம், இப்போது அடுத்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.
கிடைத்த இட ஓதிக்கீட்டின் அளவு போதுமானதாக இல்லை. நம் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் 3 .5 % என்பது மிக குறைவான அளவு என்பதால், இதை மேலும் அதிகரித்து தருபவர்களுக்கு இந்த முறை முஸ்லிம்கள் வாக்களிக்கலாம் என்ற முடிவை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து, அதையே கோரிக்கையாக கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வைத்தது!
வழக்கம் போல, இந்த மானமிழந்த தமுமுகவினர், அவர்கள் பங்குக்கு வேறு கோரிக்கை ஒன்றை வைத்தனர். தங்களுக்கென்று அதிகமாக சீட்டையும் நோட்டையும் யார் தருகிறாரோ, அவர்களுக்கு ஆதரவு என்பது அந்த கோரிக்கை.
இட ஓதிக்கீட்டின் அளவு மிகக்குறைவு எனவும், கிடைத்த ஒதிக்கீடு கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் பல பிரச்சனைகளை மையப்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத் போராடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், எதை பற்றியும் கவலைப்படாமல் 
தங்களுக்கு சீட்டு தான் முக்கியம் என்று போராடியது இந்த மானங்கெட்ட கூட்டம்!
இவர்கள் மானத்தின் லட்சணத்தை அறிந்து கொண்ட கருணாநிதி,முஸ்லிம் சமுதாய மக்களின் மத்தியில் கூட இந்த கும்பல் ஒரு கேலிப்பொருளாக, மானமிழந்த பேடிகளாக காட்சி தருகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களால் திமுகவிற்கு துளியும் நன்மை இல்லை என்பதால் அவர்களை துரத்தியடித்தார்.
தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதிக்கீடு கோரிக்கைக்கு செவி சாய்த்தார். ஆணையம் அமைத்தார். இருக்கின்ற இட ஒதிக்கீடு இனி இந்த ஆணையத்தின் மூலம் முறையாக செயல்படுத்தப்படும் என்று சட்டமியற்றினார்.
அடுத்து ஆட்சிக்கு வந்தால், இதே இட ஒதிக்கீட்டை இன்னும் அதிகமாகி தருவேன் என்று தன் தேர்தலில் அறிக்கையில் வாக்களித்தார்.
தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததை முறையாக செயல்படுத்தி பெயர் வாங்கிய கருணாநிதி அடுத்த முறையும் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திமுகவிற்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஜெயலலிதாவோ, வழக்கம் போல, தனது காவி சிந்தனை வெளிக்காட்டும் விதத்தில் இட ஒதிக்கீடு குறித்த எந்த வாக்குறுதியும் அளிக்காமல் முஸ்லிம்களை வஞ்சித்தார். 
கடந்த 2006 இல், தோல்வி பயத்தின் காரணமாக, வேறு வழியின்றி முஸ்லிம் வாக்குகளையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இட ஓதிக்கீட்டுக்கான ஆணையத்தை அமைத்த ஜெயலலிதா, இன்று தமக்கென்று பலமான கூட்டணி அமைந்து விட்டது என்பதால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று எண்ணினார்.
இந்த மானகெட்ட கூட்டத்திற்கு அதை பற்றிய கவலையோ அக்கறையோ இல்லையே! கலைஞர் சீட்டு தராமல் துரத்தி விட்டதால் இன்று ஜெயலலிதாவின் பக்கம் சாய்த்துள்ளனர்.
அவர் இட ஓதிக்கீட்டுகான எந்த வாக்குறுதியும் தரவில்லை என்றாலும் ,அதை பற்றி துளி கூட கவலையில்லாமல் தங்கள் சுய நலனை மையப்படுத்தி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
இட ஒதிக்கீடு குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் நடந்து கொண்ட இவர்களை நோக்கி இந்த இடத்தில் சமுதாயம் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கிறது.
ஏற்கனவே பல முறை மானகெட்ட நீங்கள், கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி தந்த ஒரு சீட்டு (அதாவது ஆறு சட்டமன்ற தொகுதி) போதுமானதில்லை, நாங்கள் எங்களின் மானத்தை காத்தாக வேண்டும் என்று அறிவித்தீர்களே, இன்று இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிடம் மூன்று சீட்டை மட்டும் பெற்று மானம் காத்த லட்சணத்தை கொஞ்சம் விளக்குங்களேன் என்று மக்கள் கேட்கின்றனர். 
வழக்கம் போல, மானமாவது மண்ணாங்கட்டியாவது .. காசே தான் கடவுளடா என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டு வீர நடை போடுகின்ற இவர்கள், இட ஒதிக்கீடு கோரிக்கை நாடகங்கள் இனி பயன் தராது என்ற நிலை ஏற்பட்டு விட்டதால், நாங்கள் முஸ்லிம் என்பதால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இட ஒதிக்கீடு கோரிக்கையை வைக்ககூடிய தார்மீக உரிமையை இழந்த இவர்கள், இப்போது இந்த இன உணர்வை தூண்டுவதிலாவது நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
தமிழகத்தில் இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பத்து இடங்களிலும், சுயேட்சையாக முப்பது, நாற்பது இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில், இந்த மானமிழந்த கூட்டம் முன்வைக்கும் இன உணர்வு நாடகம் உண்மை என்றால், மேலே குறிப்பிட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் இவர்கள் தங்களை ஆதரவை முதலில் தெரிவித்திருக்க வேண்டும். 
"
கட்சி வேறுபாடு பாராமல், நாங்கள் இதோ, முஸ்லிமுக்கு ஆதரவளிக்கிறோம், அதே போன்று நீங்களும் ஆதரவளியுங்கள், நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எங்களுக்கு வாக்களியுங்கள்", என்று இவர்கள் சொல்லியிருந்தால், இந்த விஷயத்திலாவது இவர்கள் நேர்மையுடன் நடக்கிறார்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்வார்கள். 
நேர்மைக்கும் தங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை என்று கூறும் வகையில், மற்ற மற்ற தொகுதிகளில் முஸ்லிமை எதிர்த்து காபிரை ஆதரிக்கும் இவர்கள், தங்கள் தொகுதியில் மட்டும் முஸ்லிம் என்ற முறையில் தங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது இன உணர்வா அல்லது நயவஞ்சகத்தனமா? என்பதை இனியும் விளக்க வேண்டியதில்லை. 

அடி மேல் அடி வாங்கி இனியும் இழப்பதற்கு கொஞ்ச நஞ்ச மானம் கூட இல்லை என்ற நிலையில் அல்லாஹ் இவர்களை புறந்தள்ளி விட்ட நிலையில், "நாங்கள் முஸ்லிம்கள்" என்று கோரிக்கை வைப்பதை, எந்த ஒரு முஸ்லிமும் காறி உமிழாத குறையாக வெறுப்பார்கள் என்பது,மானமிழந்த இவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை..
தொடரும்...

இட ஒதிக்கீடு கோரிக்கையும் இன உணர்வு நாடகமும்

ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய கட்சி எது என்பதை பொறுத்து முஸ்லிம்களின் வாக்குகள் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடனும் வீரியத்துடனும் செயல்பட்டு வந்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். தேர்தலில் போட்டியிட்டு தமக்காக எந்த சீட்டும் பெறுவதில்லை என்பதை தன் அடிப்படை கொள்கையாகவே கொண்டுள்ள தவ்ஹீத் ஜமாத்தின் பின்னால் மக்கள் அணியணியாக திரண்டு வந்ததை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த சமூகம் கவனித்து வருகிறது.
சமுதாய மக்களிடையே விழிப்புணர்வும் செயல்திறனும் அதிகரித்திருப்பதற்கு இது போன்ற சமூக மாற்றங்கள் ஒரு அத்தாட்சியாகவும் உள்ளன.

இதை கண்டு பொறுக்க இயலாத தமுமுகவினர், இந்த சமுதாயத்தை தன் பக்கம் இழுத்துக்கொள்ள பல வகையான முயற்சிகளை செய்து பார்த்தாலும் எந்த முயற்சிக்கும் அவர்களுக்கு அல்லாஹ் பலன் அளிக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
ஒரு காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதையே கொள்கையாக கொண்டு செயல்பட்ட இந்த இயக்கம், தவ்ஹீத் ஜமாத்திற்கு கிடைத்திருக்கும் அபரிவிதமான வளர்ச்சியை கண்டு கொதிப்படைந்து , நேரடி அரசியலில் பங்கு கொண்டு அதன் மூலம் மக்களை கவர்ந்து தன் பக்கம் இழுதுக்கொள்ளலாம் என்று தப்புக்கணக்கு போட்டனர்.

தங்களின் சுய லாபத்திற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும், புகழ் அடைவதற்காகவும், அரசியல் அதிகாரத்தை பெற்று சமூகத்தை சுரண்டிப்பிழைப்பதற்காகவும் அரசியல் களம் கண்டுள்ளனர் இந்த தமுமுகவினர்.
ஏற்கனவே இறைவன் மீது ஆணையாக அரசியலில் நுழைவதில்லை என்று இந்த சமுதாயத்திடம் சத்தியம் செய்ததையும், இன்று அந்த சத்தியத்தை அவர்களே மீறி, தாங்கள் எந்த கொள்கையும் அற்றவர்கள் என்பதை தாங்களே நிரூபித்துக்கொண்டனர் என்பதையும் பல முறை நாம் விரிவாக விளக்கியுள்ளோம்.
அது ஒரு பக்கம் இருக்க, தாங்கள் எந்த நோக்கத்திற்காக அரசியலில் நுழைந்தோமோ, அந்த நோக்கத்தை வெளிக்காட்டினால் இந்த சமூகம் காறித்துப்பும் என்பதால், நாங்களும் சமுதாய போராளிகள் தான் என்ற நாடகத்தை அரங்கேற்றும் விதமாக தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலின் போதும் சமுதாய கோரிக்கை ஒன்றை முன்வைத்து போராடுவதை போன்று இந்த கும்பலும் போராட்டங்களை அறிவிக்க துவங்கியது.

கடந்த 2005 - 2006 ஆம் ஆண்டுகளில் தமிழக அளவில் முஸ்லிம்களுக்கான தனி இட ஓதிக்கீட்டுக்கான அவசியத்தை தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரங்கள் வாயிலாக அனைத்து மக்களும் மிக துல்லியமாக விளங்கிக்கொண்டனர்.
2006 இல் ஆட்சி மாற்றத்திற்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகளின் முன்னால் இட ஒதிக்கீட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, அதை நிறைவேற்றி தருபவர்களுக்கே முஸ்லிம் சமுதாயத்தின் வாக்கு, என்ற உறுதியான நிலையை உருவாக்கி, மொத்த இந்தியாவின் அரசியல் பார்வையை தமிழக முஸ்லிம்களை நோக்கி திருப்பியதில் தவ்ஹீத் ஜமாஅத் தனது பங்களிப்பை வெகு சிறப்பாக செய்திருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய விழிப்புணர்வை கண்டு கொண்ட இந்த தமுமுகவினர், இதே போன்ற ஆயுதத்தை நாமும் கையில் எடுத்தால் எளிதாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம், இதன் மூலம் அரசியல் பிரவேசத்திற்கு தேவையான மக்கள் செல்வாக்கையும் மிக எளிதாக சம்பாதித்து விடலாம் என்ற நப்பாசையில் தங்கள் இயக்கம் சார்பாக இட ஒதிக்கீடு கோஷங்களை செய்ய துவங்கினர்.

தேர்தலில் போட்டியிடாதவர்கள் போராட்டத்திற்கு அழைத்தால் மக்கள் வருவார்கள், தேர்தலில் போட்டியிட்டு தங்களுக்காக சீட்டு பெறும் நோக்கில் செயல்படுபவர்களின் பின்னால் மக்கள் அணி திரள மாட்டார்கள் என்ற சாதாரண உண்மையை கூட விளங்காத இவர்கள், தங்கள் நோக்கம் நிறைவேறி விடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தனர்.
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை கூட மறந்து, இவர்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் விதமாக அல்லாஹ் இவர்களை அன்றே சந்தி சிரிக்க வைத்தான்.

இட ஒதிக்கீட்டை தருபவர்களுக்கு தான் ஓட்டு, அதை தராமல் ஏமாற்றும் எந்த கட்சியானாலும் தயவு தாட்சணியமற்ற எதிர்ப்பு என்ற மிக உறுதியான நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பக்கம் போராடிக்கொண்டிருந்த வேளையில், தாங்கள் அப்போது சார்ந்துள்ள திமுகவின் தயவை இழந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தாங்கள் நடத்திய இட ஓதிக்கீட்டு போராட்டத்தை கூட மென்மையாக்கி கொண்டனர் இந்த தமுமுகவினர்.

மாநில அரசுக்கு இட ஒதிக்கீடு வழங்குகின்ற அதிகாரமே இல்லை என்று கூறி, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியை எதிர்த்து தமிழகத்தில் போராட துப்பில்லாமல் டில்லி சென்றனர் இந்த கும்பல்.
இந்த சமுதாயம் அன்றே இவர்களை அடையாளம் கண்டு கொண்டது !

இருந்தாலும், பேராசையும் பணத்தாசையும் ஒருவனுக்கு வந்து விட்டால், அவன் எந்த இழி நிலைக்கும் செல்வான் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும் என்பதற்காக இந்த கும்பலின் பச்சோந்தித்தனத்தை அன்று முதல் இன்றைய தேதி வரை அல்லாஹ் நமக்கு அம்பலப்படுத்தி தந்து கொண்டே இருக்கிறான் என்பது தான் வேடிக்கை!

இட ஒதிக்கீட்டை வழங்குகின்ற அதிகாரம் கருணாநிதிக்கு இல்லை என்றார்கள்.
கருணாநிதியை அவராகவே இட ஒதிக்கீட்டை வழங்க வைத்து , இட ஒதிக்கீட்டை வழங்கும் அதிகாரம் கருணாநிதிக்கு உள்ளது என்றும், இந்த போலிகள் கூறுவது தான் பொய் எனவும் அல்லாஹ் உடனடியாக நிறைவேற்றிக்காட்டினான்.

அடுத்ததாக, இந்த அளவிற்கு போராடி கிடைத்த இட ஓதிக்கீட்டில் குளறுபடி என்று மக்கள் மீண்டும் வெம்ப துவங்க, இட ஒதிக்கீடு என்றால் இப்படி தான், இது ஒரு "சைக்கிள்" , ரோஸ்டர் முறையில் பல வருடங்கள் கழித்து தான் மக்களுக்கு கிடைக்கும் என்று மீண்டும் கருணாநிதிக்கு முட்டுக்கொடுத்து தங்கள் அரசிய சுயநலத்தை வெளிப்படுத்தியது இந்த கூட்டம்.

உண்மையில், இது ரோஸ்டர் முறையோ, 'cyclic ' முறையோ அல்ல, இது நிர்வாக குறையால் தான் ஏற்படுகிறது என்று அன்றே தவ்ஹீத் ஜமாத மக்களிடையே பிரசாரம் செய்து, இதற்காகவும் பல போராட்டங்களை நடத்தியது.
முடிவு என்ன? அல்லாஹ் இந்த செயலிலும் அந்த கும்பலுக்கு செருப்படி கொடுத்தான்.
மக்களின் முழு வீச்சான போராட்டங்களை கண்டு கொண்ட முதல்வர், இது ரோஸ்டரும் இல்லை சர்கிளும் இல்லை, இது அதிகாரிகள் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் என்றும், உடனடியாக இது சரி செய்யப்படும் என்று தன் வாயாலேயே உறுதி கொடுத்தார்.
எவருக்காக இந்த கும்பல் வக்காலத்து வாங்கியதோ, அவரே இந்த கும்பலுக்கு மூக்குடைப்பு கொடுத்தார் எனும் போது, இதை விடவும் சமுதாயத்தில் அவமானப்பட்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது .

தங்களின் நோக்கம் பதவியும் பணமும் தான் என்றாலும், அந்த நோக்கத்தை வெளிக்காட்டாமல் அரசியல் செய்ய இவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் இறுதியில் இறைவனால் கேவலப்படுதப்பட்டன!

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வந்தது.
தொடர்ந்து அவமானப்பட்டதால் , இனியும் கருணாநிதியிடம் இருந்து வந்தால் தங்களுக்கு போதிய மதிப்பும் அந்தஸ்தும் , தேவையான பணமும் கிடைக்காது என்று எண்ணிய இவர்கள், அவரை விட்டு விலகி தனியாக தேர்தலை சந்தித்து ஓட்டு பொறுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றைய தேதி வரை கலைஞரை புகழ்ந்து வந்தவர்கள், திடீரென அவை விட்டு விலகுகிறார்களே என்று மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக இவர்கள் இன்னொரு பொய்யை சொன்னார்கள்.
கலைஞர் பாராளுமன்றத்திற்கு எங்களுக்காக ஒரு தொகுதி மட்டுமே ஒதிக்கீடு செய்துள்ளார். அது எங்களுக்கு போதுமானதாக இல்லை, ஆகவே நாங்கள் அவரை விட்டு விலகுகிறோம், என்றனர்.
2006 இல் இட ஓதிக்கீட்டுக்காக போராட்டங்கள் பல செய்த நிலையில் , அதை நிறைவேற்றி தந்த கலைஞருக்கு நன்றி செய்யும் முகமாக பாராளமன்ற தேர்தலில் கலைஞருக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்த நிலையில், தங்களுக்கும் இட ஓதிக்கீட்டு போராட்டங்களுக்கும் துளி கூட சம்மந்தமில்லை என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் முகமாக, தங்களின் சுய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு செய்தனர் இந்த தமுமுகவினர்.

மக்களை ஏமாற்றி நயவஞ்சக செயலில் ஈடுபடுகிற எவரையும் அல்லாஹ் விட்டு வைக்க மாட்டான் என்பதற்கு அந்த தேர்தலின் முடிவே பாடமாக அமைந்தது!
ஆம்!, அந்த தேர்தலில் தனியாக, சிறு சிறு சில்லறை கட்சிகளின் ஆதரவோடு பதவி ஆசையை நிறைவேற்றுவதற்காக போட்டியிட்டவர்கள், தாங்கள் செலுத்திய முன்பணத்தை கூட திரும்ப பெற திராணியற்று டெபாசிட் இழந்தனர்!!
உண்மையில் அவர்கள் இழந்தது டெபாசிட்டா? இல்லை!! தங்களின் மானம் தான் அன்று அவர்களால் இழக்கப்பட்டது !!!!

ஒரு முமின் ஒரு முறை தவறு செய்வான். பின்னர் திருந்திக்கொள்வான். அது முமினின் பண்பு தான், எங்களின் பண்பல்ல என்பதை வெளிக்காட்டும் முகமாக, இதோ, இந்த வருடத்தின் சட்ட மன்ற தேர்தலில் அவர்கள் மீண்டும் படையெடுக்க துவங்கியுள்ளனர்.
அது சரி, மானம் உள்ளவர்களுக்கு தானே அவமானம் என்ற ஒன்று ஏற்படும், அவர்கள் தான் அனைத்தையும் அன்றே இழந்து விட்டார்களே, இனியும் அவர்களுக்கு மானம் போய் விட்டது என்று நம்மால் சொல்ல முடியாது தான்!

இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரையிலும், தவ்ஹீத் ஜமாஅத் அதே சமுதாய அக்கறையை மையப்படுத்தி தேர்தலை சந்திக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.

கலைஞர் முன்பு தந்துள்ள இட ஓதிக்கீட்டுக்கான நன்றியை முந்தைய பாராளமன்ற தேர்தலிலேயே காட்டி விட்ட நாம், இப்போது அடுத்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.
கிடைத்த இட ஓதிக்கீட்டின் அளவு போதுமானதாக இல்லை. நம் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் 3 .5 % என்பது மிக குறைவான அளவு என்பதால், இதை மேலும் அதிகரித்து தருபவர்களுக்கு இந்த முறை முஸ்லிம்கள் வாக்களிக்கலாம் என்ற முடிவை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து, அதையே கோரிக்கையாக கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வைத்தது!

வழக்கம் போல, இந்த மானமிழந்த தமுமுகவினர், அவர்கள் பங்குக்கு வேறு கோரிக்கை ஒன்றை வைத்தனர். தங்களுக்கென்று அதிகமாக சீட்டையும் நோட்டையும் யார் தருகிறாரோ, அவர்களுக்கு ஆதரவு என்பது அந்த கோரிக்கை.
இட ஓதிக்கீட்டின் அளவு மிகக்குறைவு எனவும், கிடைத்த ஒதிக்கீடு கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் பல பிரச்சனைகளை மையப்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத் போராடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், எதை பற்றியும் கவலைப்படாமல்
தங்களுக்கு சீட்டு தான் முக்கியம் என்று போராடியது இந்த மானங்கெட்ட கூட்டம்!

இவர்கள் மானத்தின் லட்சணத்தை அறிந்து கொண்ட கருணாநிதி, முஸ்லிம் சமுதாய மக்களின் மத்தியில் கூட இந்த கும்பல் ஒரு கேலிப்பொருளாக, மானமிழந்த பேடிகளாக காட்சி தருகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களால் திமுகவிற்கு துளியும் நன்மை இல்லை என்பதால் அவர்களை துரத்தியடித்தார்.
தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதிக்கீடு கோரிக்கைக்கு செவி சாய்த்தார். ஆணையம் அமைத்தார். இருக்கின்ற இட ஒதிக்கீடு இனி இந்த ஆணையத்தின் மூலம் முறையாக செயல்படுத்தப்படும் என்று சட்டமியற்றினார்.
அடுத்து ஆட்சிக்கு வந்தால், இதே இட ஒதிக்கீட்டை இன்னும் அதிகமாகி தருவேன் என்று தன் தேர்தலில் அறிக்கையில் வாக்களித்தார்.

தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததை முறையாக செயல்படுத்தி பெயர் வாங்கிய கருணாநிதி அடுத்த முறையும் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திமுகவிற்கு ஆதரவளிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஜெயலலிதாவோ, வழக்கம் போல, தனது காவி சிந்தனை வெளிக்காட்டும் விதத்தில் இட ஒதிக்கீடு குறித்த எந்த வாக்குறுதியும் அளிக்காமல் முஸ்லிம்களை வஞ்சித்தார்.
கடந்த 2006 இல், தோல்வி பயத்தின் காரணமாக, வேறு வழியின்றி முஸ்லிம் வாக்குகளையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இட ஓதிக்கீட்டுக்கான ஆணையத்தை அமைத்த ஜெயலலிதா, இன்று தமக்கென்று பலமான கூட்டணி அமைந்து விட்டது என்பதால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று எண்ணினார்.
இந்த மானகெட்ட கூட்டத்திற்கு அதை பற்றிய கவலையோ அக்கறையோ இல்லையே! கலைஞர் சீட்டு தராமல் துரத்தி விட்டதால் இன்று ஜெயலலிதாவின் பக்கம் சாய்த்துள்ளனர்.
அவர் இட ஓதிக்கீட்டுகான எந்த வாக்குறுதியும் தரவில்லை என்றாலும் , அதை பற்றி துளி கூட கவலையில்லாமல் தங்கள் சுய நலனை மையப்படுத்தி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
இட ஒதிக்கீடு குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் நடந்து கொண்ட இவர்களை நோக்கி இந்த இடத்தில் சமுதாயம் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கிறது.

ஏற்கனவே பல முறை மானகெட்ட நீங்கள், கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி தந்த ஒரு சீட்டு (அதாவது ஆறு சட்டமன்ற தொகுதி) போதுமானதில்லை, நாங்கள் எங்களின் மானத்தை காத்தாக வேண்டும் என்று அறிவித்தீர்களே, இன்று இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிடம் மூன்று சீட்டை மட்டும் பெற்று மானம் காத்த லட்சணத்தை கொஞ்சம் விளக்குங்களேன் என்று மக்கள் கேட்கின்றனர்.
வழக்கம் போல, மானமாவது மண்ணாங்கட்டியாவது .. காசே தான் கடவுளடா என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டு வீர நடை போடுகின்ற இவர்கள், இட ஒதிக்கீடு கோரிக்கை நாடகங்கள் இனி பயன் தராது என்ற நிலை ஏற்பட்டு விட்டதால், நாங்கள் முஸ்லிம் என்பதால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இட ஒதிக்கீடு கோரிக்கையை வைக்ககூடிய தார்மீக உரிமையை இழந்த இவர்கள், இப்போது இந்த இன உணர்வை தூண்டுவதிலாவது நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
தமிழகத்தில் இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பத்து இடங்களிலும், சுயேட்சையாக முப்பது, நாற்பது இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில், இந்த மானமிழந்த கூட்டம் முன்வைக்கும் இன உணர்வு நாடகம் உண்மை என்றால், மேலே குறிப்பிட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் இவர்கள் தங்களை ஆதரவை முதலில் தெரிவித்திருக்க வேண்டும்.
"கட்சி வேறுபாடு பாராமல், நாங்கள் இதோ, முஸ்லிமுக்கு ஆதரவளிக்கிறோம், அதே போன்று நீங்களும் ஆதரவளியுங்கள், நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எங்களுக்கு வாக்களியுங்கள்", என்று இவர்கள் சொல்லியிருந்தால், இந்த விஷயத்திலாவது இவர்கள் நேர்மையுடன் நடக்கிறார்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.
நேர்மைக்கும் தங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை என்று கூறும் வகையில், மற்ற மற்ற தொகுதிகளில் முஸ்லிமை எதிர்த்து காபிரை ஆதரிக்கும் இவர்கள், தங்கள் தொகுதியில் மட்டும் முஸ்லிம் என்ற முறையில் தங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது இன உணர்வா அல்லது நயவஞ்சகத்தனமா? என்பதை இனியும் விளக்க வேண்டியதில்லை.

அடி மேல் அடி வாங்கி இனியும் இழப்பதற்கு கொஞ்ச நஞ்ச மானம் கூட இல்லை என்ற நிலையில் அல்லாஹ் இவர்களை புறந்தள்ளி விட்ட நிலையில், "நாங்கள் முஸ்லிம்கள்" என்று கோரிக்கை வைப்பதை, எந்த ஒரு முஸ்லிமும் காறி உமிழாத குறையாக வெறுப்பார்கள் என்பது, மானமிழந்த இவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை..

மாமா கட்சி வேட்பாளர் விஜய்யுடன் சந்தி(சிரி)ப்பு

அரசியலுக்கு போய் விட்டால் எப்படி வேண்டுமானாலும் வளையலாம் வெளியலாம் குலையலாம் பதவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஈமான் எப்படி போனாலும் பரவாயில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக நம் சமுதாய மான்ம் காக்க புறப்பட்டு சந்தி சிரித்துப் போன மானங்கெட்ட மாமா கட்சியினரின் அடுத்த அவதாரம் தான் வேட்பாளர் தமிமுன் அன்சாரி நடிகை விஜய்யை சந்தித்து பொன்னாடை போர்த்திய நிகழ்ச்சி. ஏற்கனவே ஓட்டுக்காக வாணியம்பாடி வாத்தியார் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசி பெற்றதும், ஹைதர் அலி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மனித சங்கிலியில் மழையில் நனைந்து கொண்டே பங்கேற்றதும் தொடர்கதையான நிலையில் நேற்றைக்கு மாமா கட்சியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி பேந்த பேந்த முழித்த காட்சி இன்றைக்கு செய்தித் தாள்களில் சந்தி சிரிக்கிறது. சமுதாயமே! இவர்களையா நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்கள். சிந்திப்பீர். இதை அனைவருக்கும் பரப்புவீர்.

Wednesday, April 6, 2011

மங்கோலிய பேரரசரின் மனைவியுடன் மன்மதனின் கசகசா

கடையநல்லூர் மதரஸாவில் படிக்க வந்த மாணவர்களிடையே கசமுசா நடந்ததாக மன்மதன் தளத்தில் வந்ததுள்ள செய்தி அவர்களாக கண்டுபிடித்ததா?அல்லது பிஜேயே சொல்லியதா? தவறு என்று நடந்தால் அவர் யாராக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் கண்டிக்காமல் விட்டு விடுவதற்கு இது பொய்யன் டிரஸ்டு கிடையாது. தூய்மையான இயக்கம்.
தூய்மையான இயக்கத்தில் மன்மதன், செங்கிகள் போன்ற சாக்கடைகள் தெரியாமல் கலந்து இருக்கும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களை இந்த ஏகத்துவக் கொள்கையே வெளியே தள்ளிவிடும். அந்த வகையில் தான் பொம்பள குற்றச்சாட்டு சுமத்தி நண்ணீரில் கலந்த பன்றிகள் அந்த நீரையும் சாக்கடையாக்குவது போலத் தான் இந்த மாமாக்கள் கலந்திருந்த தவ்ஹீத் ஜமாஅத்தும் இப்போது தூய்மையாகி இருக்கிறது. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பதைப் போல என்னேரமும் அண்ணனையும் அண்ணன் ஜமாஅத்தையும் நினைத்து நினைத்து புளுங்கி வெந்து கொண்டிருக்கும் பொய்யன் கூட்டத்தை நினைத்து பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது?
அண்ணன் செல்லும் ஊருக்கெல்லாம் கேமிராவோடு திரிந்து அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் படமாக்கி விடிய விடிய உழைத்து திருட்டு விசிடி போட்டு காசு பார்த்த இந்தக் கயவர்கள் கூட்டம் இப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும், சரி சும்மா இல்லைன்னாலும் பரவாயில்லை எதாவது அண்ணன் ஜமாஅத் மீது அவதூறு சொன்னாத் தான் நம்ம வெப்சைட்டையும் நாலு பேரு வந்து பார்ப்பான். அவர்களிடம் நம் முகத்தினை உம்முன்னு வச்சிக்கிட்டு நல்லவனாக ஆகிவிடலாம் என்ற கணக்கில் தான் பொய்யனின் கூட்டம் மாங்குமாங்கென உழைக்கிறது.
சரி இப்போது விசயத்திற்கு வரலாம். கடையநல்லூரில் மனமதனின் கொள்கை வாரிசுகளான சில குட்டி மன்மதன்களிடையே கசமுசா ஏற்பட்டது உண்மை தான் என ஊருக்கே தெரியும். அதை அண்ணன் ஜமாஅத் மறைக்கவும் இல்லை. குறைக்கவும் இல்லை. கடையநல்லூரில் இருந்து மேலப்பாளையத்திற்கு மதரஸாவை மாற்ற வேறு எந்தக் காரணமும் இல்லை. அதைத் தான் அவர்களே தெளிவாக சொல்லி இருக்கிறார்களே!
பொய்யன் பாக்கர் பெண்களிடம் சில்மிசம் செய்து மாட்டிக் கொண்டவுடன் எப்படி நீக்கப்பட்டாரோ அது போல் தவறு செய்த மாணவர்கள் அனைவரும் உடனே கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர். யார் தவறு செய்தாலும் இந்த ஜமாஅத் பார்த்துக் கொண்டிருக்காது என்பதற்கு இது மிகப்பெரும் ஆதாரமாக உள்ளது.
இதை ஏதோ இவர்களே கண்டு பிடித்தவர்களைப் போல தவ்ஹீத்ஜமாஅத்காரன் மறைத்தது போலத் தான் இவர்களின் செய்தி. கடையநல்லூர் செய்தி முற்றிலும் உண்மை. ஆனால் முதியோர் இல்லச் செய்தியை வைத்து இவர்கள் பரப்புவது முழுக்க முழுக்க பொய்யனின் வேலை.
ஏற்கனவே காரைக்குடி மேட்டரில் அண்ணன் செங்கி அவர்கள் யோக்கியர்களைப் போல எழுதி கடைசியில் ஆதாரம் வெளியாகி மானக்கேடு பட்டு அதைப் பற்றியே பேசாமல் அமைதி காக்கிறது இந்த பொய்யர்கள் கூட்டம். காரணம் அதைப் பற்றி பேசினால் நாம் அதை விட பெரிய ஒரு ஆதாரத்தைப் போட்டு அவர்களை இன்னமும் கேவலப்படுத்தி விடுவோம் என்ற பயத்தில். சரி போனால் போகட்டும்.
இது எப்படி என்றால் நாம் ஒருவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவோம்,ஒன்று அதை அவன் இல்லை என நிரூபிக்க வேண்டும், அல்லது பொத்திக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும். ஆனால் நான் அவர்களின் மீதும் சுமத்துகிறேன் பார் என எதையாவது சொல்லி, சிந்திக்காமல் சிக்கும் சில பேர்களை நம்ப வைத்து தூய தவ்ஹீது கொள்கையின் மீது பழிசுமத்தி அவர்களுக்கு தவ்ஹீத் சிந்தனையையே வெறுக்க வைத்து விடலாம் என்ற பாணியில் செயல்படும் நவீன அபூஜகீலின் கொள்கை கொண்டவர்களை என்ன செய்வது?
கேள்விப்படும் செய்தியை எல்லாம் பரப்புபவன் பொய்யன். ஆனால் அவனே இட்டுக்கட்டி பரப்புபவன் எதிலே வருவான்? இவர்கள் முதியோர் இல்லம் குறித்து வெளியிட்டு இருக்கும் அவதூறுகளுக்கு இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்படி ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் அந்தச் செய்தியை நாமும் நம் தளத்தில் போட்டு கிழி கிழி எனக் கிழிப்போம்.
இதைப் போலவே ஒரு அவதூறு செய்தி நம் காதுக்கும் பல மாதங்களுக்குமுன்பு கிடைத்தது. அதைச் சொல்லியவர் நல்ல மனிதராக இருந்தாலும் அதை நிருபிக்க எந்த விதமான ஆதாரமும் இல்லையென்பதால் அதை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். இன்றைக்கு அதைப் போன்றதொரு அவதூறை அண்ணன் செங்கி அவர்கள் கொஞ்சம் கூட விசாரிக்காமல் ஆதாரமில்லாமல் வெளியிட்டு விட்டதால், மேலும் நமக்கு வந்த செய்தியை நாம் இங்கே சூசகமாகத் தெரிவிக்கிறோம். ஆனால் இதற்கு நம்மிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் ஒரு வேளை உண்மையாகவும் இருக்கலாம்.
அதாவது பொய்யன் சமாத்தின் தலைவர் மன்மதன் அவர்கள் பொய்யன் சமாத்தில் முக்கியப் பொருப்பில் இருக்கும் மங்கோலியப் பேரரசர் மனைவியுடன் என்னேரமும் செல்போன் வழி கடலை போடுகிறார் என்பது தான் அந்தச் செய்தி. அதாவது கடலையில் கரை கண்ட மன்மதன் அவர்கள் அவரிடம் தவறுதலாக சிக்கும் நம்பரையே விட மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எதார்த்தமாகக் கிடைக்கும் நம்பரையே விடமாட்டார் என்றால், பதார்த்தமாகக் கிடைக்கும் நம்பரையா விடுவார். அந்த மாதிரி தான் ஒருநாள் ஒரு விசயமாக மங்கோலியர் எண்னுக்கு கால் செய்ய அவர் பாத்ரூமில் இருந்ததால அவரின் மனைவி எடுத்து அலோ சொல்ல, கிலோ கணக்கில் கடலை வறுக்க அன்று முதலே ஆரம்பித்தாராம் மன்மதன்.
இதை அறிந்து ஆத்திரப்பட்ட மங்கோலிய மன்னன் உடனே மன்மதனை நோக்கி விரைந்து வந்து தாருமாறாகப் பேச அன்று முதல் மங்கோலியரை மாநிலச்செயலாளர் ஆக்கிவிட்டாரம் மன்மதன். அன்று வறுக்க ஆரம்பித்த கடலை இன்றைக்கும் கருகக் கருக, செல்போன் பேட்டரி உருக உருக ஓடிக் கொண்டிருப்பதாக அவர் சொன்ன இந்தச் செய்திக்கு , சொன்னவர் அந்தப் பகுதியைச் சார்ந்த நபர் என்பதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அதை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம்.
மேல்பட்டாம் பாக்கம் முதியோர் இல்ல பெண் பணியாளரிடம் அதன் நிர்வாகி தவறாக நடந்து கொண்டதாகவும் அதை பீஜே விசாரித்த போது நீ மட்டும் ஒழுங்கா என்று அவர் மடக்கியதாகவும் பொய்யனின் “பெர்சனல்”உதவியாளர் கூறுகிறார். பொய்யன் பாக்கர் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது இது குறித்து பீஜே நேருக்கு நேர் கேட்டார். என் மீது குற்றச் சாட்டு இருந்தால் பாக்கரும் அவரது ஜால்ராக்களாக ஆகிவிட்ட முன்னாள் நிர்வாகிகளும் கூறலாம் என்று நேருக்கு நேர் பீஜே கேட்ட போது ஒருவனும் வாய் திறக்கவில்லை. மேலும் நான் அப்படி பரப்பவில்லை என்று அந்தர் பல்டி அடித்தனர். இதற்கு பாக்கரிடம் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நேரடி விசாரணை வீடியோ ஆதாரமாக உள்ளது.
அப்படி இருக்க பீஜேயை மடக்கி முதியோர் இல்ல நிர்வாகி கேள்வி கேட்டார் என்று எழுதுகிறார்கள் என்றால் இவர்களை விட கேடு கெட்ட பொய்யர்கள் யாரும் இருக்க முடியாது. பீஜேயிடம் இப்படி நேருக்கு நேர் முதியோர் இல்ல நிர்வாகி கேட்டதை மானம் சூடு சொரணை இருந்தால் நிரூபிக்க வேண்டும் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் அல்லது நேரடி சாட்சிகள் யார் எனபதை மங்கி கூட்டம் காட்ட வேண்டும். அப்படி அப்படி இல்லா விட்டால் மங்கோலியப் பேரரசரின் மனைவியுடன் மன்மதன் சல்லாபம் செய்வதாகக் கூறபடுவதையும் உண்மை என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆனால் இவர்கள் எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறு செய்தியைக் கொஞ்சம் கூட பயமில்லாமல் பரப்பி வருகிறார்கள். இவர்கள் இந்த விசயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஆதாரத்தை வெளியிடட்டும். அதை விடுத்து காரைக்குடி விசயம் போல் சப்பைக்கட்டு கட்டினால் அவர்கள் பொய்யர்கள் என்ற உண்மை மேலும் உறுதியாகும்.
மேல்பட்டாம்பாக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லம் தஞ்சாவூர் பண்டாரவாடைக்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இது உண்மை தான். ஆனால் மாற்றப்படும் காரணம் தான் வேறு. பொய்யன் சொல்லியிருக்கும் கீழ்த்தரமான காரணம் சேற்றை வாரி இறைக்க மட்டுமே தவிர அதில் துளியும் உண்மையில்லை.
பண்டாரவாடையைச் சேர்ந்த ஒரு சகோதரர் கத்தார் சென்று அங்கு பைலட்டாக பணி புரிகிறார். அவர் பீஜேயின் ரமலான் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ஜமாஅத்தில் ஈர்க்கப்பட்டார். இதன் பின்னர் கத்தார் கிளையுடன் தொடர்பு கொண்டு , தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்களிடம் காணப்பட்ட நேர்மை, பாக்கர் போன்ற பெரிய பொறுப்பில் உள்ளவர்களைக் கூட தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்தது போன்ற காரியத்தால் கவரப்பட்டு பல லட்சங்கள் மதிப்புடைய பங்களாவையும் அதை சுற்றியுள்ள பல செண்ட் இடத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தானமாக வழங்கினார்.
இது ஆறு மாதங்க்ளுக்கு முன்னர் அவர் வாக்களித்து வழங்கிய சொத்தாகும். எனவே வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தை இந்த சொந்த கட்டடத்துக்கு மாற்ற முடிவு செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பீஜேயும், பொருளாளர் அன்வரும் பாயும் நேரில் சென்று பார்வையிட்டு முதியோர் இல்லம் அமைப்பதற்கான மராமத்து பணியை முடுக்கி விட்டனர். ஒரு மாதமாக அந்தப் பணி நடந்து வருகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் அங்கே முதியோர் இல்லம் மாற்றப்பட உள்ளது.
அந்த சகோதரருக்கு வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக!
ஆனால் இந்த அவதூறு பரப்பும் கூட்டம் இதைச் சொல்லியாவது மக்களை திசை திருப்ப முடியுமா எனப் பார்க்கிறது. ஏற்கனவே பொய்யன் சமாத்துக்கு இருக்கும் இரண்டு இணைய தளங்களும் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பொதுக்கழிப்பிடம் போல யார் வேண்டுமானாலும் எழுதலாம் என ஆகி நாறி நாற்றமெடுக்கிறது. இந்த நிலையில் இப்படியே அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தால் அது முழுக்க முழுக்க செப்டிக் டேங்க் ஆக மாறிவிடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
முதியோர் இல்லம் மட்டுமல்ல அனாதை நிலையமும் மேல்பட்டாம் பாக்கத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு மாற உள்ளது. அதுவும் தனி நபர் தானமாக வழங்கிய பல கோடி மதிப்புடைய இடம் தான். மங்கிகள் வயிறெரிந்து சாகட்டும். அப்போது அனாதைகளிடம் பாக்கர் வேலை காட்டியதற்காக மாற்றப்படுகிறது என்று மங்கிகள் கூட்டம் சொன்னாலும் சொல்லும்.
இது மட்டுமல்ல பொய்யன் வெளியேற்றப்பட்ட பின்னர் தனவந்தர்கள் ஜமாஅத்துக்கு பல ஏக்கர் கணக்கில் தங்கள் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொய்யர் கூட்டம் இருந்ததால் நமது ஜமாஅத்துக்கு உதவ தயக்கம் காட்டியவர்கள் இன்று அள்ளிக் கொடுக்கின்றனர். எனவே அனைத்து நிருவனங்களூம் சொந்தக் கட்டடத்தில் ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் மாற்றப்படும். அப்போது பாக்க்கர் வேலை செய்ததால் மாற்றி விட்டார்கள் என்று சொல்லி மன நோயை அதிகமாக்கிக் கொள்ளட்டும்
அதுமட்டுமின்றி இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒருஇலவசமனநல காப்பகம் அமைக்கலாம் எனவும் பரிசீலனையில் இருக்கிறது.அப்படிஅமைக்கப்பட்டால் அதிலே பொயாரையாவது சேர்க்கவேண்டுமானால்அதற்கான தகுந்த ஆதாரங்களை அந்தப்பகுதி வி.ஏ.ஓ, தாசில்தார்ஆகியோரிடம்சான்றிதழ் பெற்று அவர் சிகிச்சை எடுத்த மருத்துவமனையின்சான்றிதழ்களைவைத்து அனுப்பினால் தான் அவர்கள்சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஆனால்பொய்யன் சமாத்தின் உள்ளவர்களுக்குமட்டும் அவர்கள் இயக்கத்தின் அடையாளஅட்டை மட்டும் இருந்தால் போதும்,வேறு எந்த சான்றிதழ்களும்தேவையில்லை. அவர்களுக்கு முன்னுரிமை அளித்துஉடனடியாகஇணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
இது சும்மா வெளையாட்டுக்கு...,

Tuesday, April 5, 2011

கூத்தாடிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யும் பனாடைகள்

Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons