Sunday, September 23, 2012

அனைவரும் ஒன்று பட முடியாதா?

அனைவரும் ஒன்று பட முடியாதா?


தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்று பிரச்சாரம் செய்யப்பட்டும் வருகிறது.

ஒற்றுமை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூட்டப்படும் கூட்டங்களில் நாம் கலந்து கொள்வதில்லை
என்பதால் இந்தப் பெயரை நாம் எடுத்துள்ளோம்.

நம்மை விட்டு விடுங்கள். நம்மைத் தவிர மற்ற இயக்கங்கள் இடையே பெருத்த் வேறுபாடு இல்லை.
மார்க்க விஷயத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளைப் பிரச்சாரம் செய்யக் கூடாது எனபது
இவர்களின் கொள்கை. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் எதிர்க்கலாம் என்பதும் இவர்களின் கொள்கை.

நம்மை எதிர்ப்பதிலும் தமக்கிடையே எதிர்த்துச் செயல்படக் கூடாது என்பதிலும் இவர்கள் ஒத்த
கருத்தில் உள்ளதால் நம்மை மட்டும் ஓரம் கட்டிவிட்டு அவர்கள் ஒன்று படலாம் அல்லவா? ஏன் இவர்கள்
ஒன்று படவில்லை? நம்மை எதிர்க்கும் தீர்மானம் நிறைவேற்றும் ஒரு விஷயத்த்ல் தவிர வேறு
எதிலாவது இவர்கள் ஒன்று பட்டதுண்டா?

ஒற்றுமைக்கு ஆசைப்படும் தனவந்தர்கள் இதற்காக பல தடவை முயற்சி எடுத்துப் பார்த்தனர். பல
தடவை ஒற்றுமைக்கு கூட்டம் கூட்டப்பட்டதுண்டு. விருந்து சாப்பிட்டுக் கலைந்தது தவிர
ஒற்றுமை ஏன் ஏற்படவில்லை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

ஒற்றுமை சாத்தியம் என்பதில் இவர்கள் ஒத்த கருத்துள்ளவர்கள் தானே?

மார்க்க அடிப்படையில் உள்ள கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று
இவர்கள் பிரச்சாரம் செய்பவர்கள் தானே?

ஒத்த கருத்துடைய இவர்கள் நம்மை மட்டும் ஒதுக்கி விட்டு ஒன்று பட்டு காட்டலாம் அல்லவா?

தேர்தலில் ஒன்று பட்டு ஒரு முடிவு எடுத்துக் காட்டட்டும்.

அல்லது டிசம்பர் போராட்டம் போன்றவைகளில் ஒன்றுபட்டுக் காட்டட்டும்.

சமுதாயத்தைப்பாதிக்கும் விஷயங்கள் அனைத்திலும் அவர்கள் ஒன்று பட்டு ஒரே முடிவை எடுத்துக்
காட்டட்டும்.

உங்களைப் போன்றவர்களின் ஆதரவை இழந்து விடக் கூடாது என்பதற்காக ஐம்பது வருடமாக
ஒற்றுமைக்கு நாங்களும் தயார் என்று கூறி நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டு அதற்காக போராட்டம் நடத்த இவர்கள்
கூடினால் அந்த நிமிடமே சிதைந்து போய் விடுவார்கள். ஏனெனில்திமுகவின் அடிமைகளாக
இருக்கும் இயக்கத்தினர் இதற்கு உடன்பட மாட்டார்கள்.

அது போல் அதிமுக ஆட்சி நடக்கும் போது முஸ்லிம்களுக்குக் கொடுமை நடந்து அதை எதிர்த்துப்
போராடினால் அதிமுக அடிமைகளால் அந்த ஒற்றுமை சிதைந்து விடும்.

தேர்தல் வந்து விட்டால் ஒரு பக்கமாக வாக்கு வங்கியைத் திருப்பி சமுதாயம் பயன் அடையும்
வகையில் முடிவு எடுக்க முடியுமா? ஏற்கனவே இவர்கள் ஒரு பக்கம் செட்டாகி உள்ளதால் அந்தப்
பக்கம் போய் விடுவார்கள்.

டிசம்பர் ஆறு போன்ற விஷயங்களில் ஒன்று பட்டு போராடுவர்களா?

யார் பெரிய சக்தி? யாருடைய பெயரை முதலில் போடுவது? யார் சிறப்புரை ஆற்றுவது?
என்பதில் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டு அங்கேயே
சண்டை ஆரம்பமாகி விடும்.

எப்படி நடக்கும் என்ற திட்டம் இல்லாமல், நடக்காத ஒன்றை நடக்கும் என்று நம்புவது ஒரு வகை
மனநோயாகும். இதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஒற்றுமைக்கு முயற்சித்தவர்கள் பின்னர் தனி இயக்கமாக ஆகி இன்னொரு பிரிவு அதிகமானதைத்
தவிர வேறு எந்தப் பயனும் இதனால் ஏற்படாது. ஏற்பட்டதுமில்லை

இதன் பிறகும் இந்த உண்மை எப்படி உங்களுக்குப் புரியவில்லை.

எனவே தலைவர்கள் ஒற்றுமையை விட மக்கள் ஒற்றுமை மிக எளிதானது. ஏனெனில் மக்களுக்கு எந்த
எதிர்பார்ப்பும் இல்லை. தலைவர்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

யார் இயக்கம் அமைத்தாலும் அதை ஆதரிக்க நாலு பேர் முன் வந்து விட்டு நாமே இயக்கங்களின்
எண்ணிக்கையை அதிகமாக்கி விட்டு பின்னர் ஒன்று படுங்கள் என்று கூறுவதில் ஒரு பயனும் ஏற்படாது.

இருக்கும் இயக்கங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து தகுதி இல்லாததாக தெரியும் இயக்கங்களை
விட்டு விலகி சரியான இயக்கங்கள் பால் மக்கள் மாறினால் ஒற்றுமை தானாக ஏற்படும்.

நூறு சதவிகிதம் நல்ல மனிதன் இருக்க முடியாது என்பது போல் நூறூ சதவிகிதம் நல்ல
இயக்கமும் இருக்க முடியாது. ஆனால் உள்ளதில் சிறந்த இயக்கத்தைக் கண்டறிய முடியும்.

நாட்டில் உள்ள எல்லா இயக்கங்களையும் பாருங்கள். அனைத்து இயக்கங்கள் மீதும் உள்ள பற்றை ஓரமாக
வைத்து விட்டு ஒவ்வொரு இயக்கமாக எடை போடுங்கள்.

எந்த இயக்கத்தின் தலைவர்கள் தங்களுடைய பணத்தை அல்லது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காக
உள்ளனர்? இயக்கம் ஆரம்பித்து அதன் மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் யார்?

ஊழல், ஒழுக்கக் கேடு, சுய நலன், தனி மரியாதை, கட்அவுட்கள், தனிமனித துதி பாடல்,
இஸ்லாமிய நெறிமுறைகளை மீறுதல், பதவிக்காக அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குதல்,
செல்வந்தர்கள் முன்னிலையில் பல்லிளித்து சாமான்ய மக்களை அலட்சியப்படுத்துவது, மக்களை
மிரட்டுவது கட்டப்பஞ்சாயத்து செய்தல், கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்வது, அனைத்து விதமான
சமரசங்களையும் செய்து கொள்வது வாக்கு மீறுவது என்று தீய பண்புகள் யாரிடம் இல்லை அல்லது
எங்கே குறைவாக உள்ளது என்று சீர்தூக்கிப் பாருங்கள்!

எந்தக் கேள்வி கேட்டாலும் ஏற்கத் தக்க பதில் சொல்லும் தனமை எங்கே அதிகமாக உள்ளது.

செய்யும் அனைத்து காரியத்திலும் மார்ர்க்கத்தின் விதி முறை மீறப்படாமல் உள்ளதா என்று
கவனமாகச் செயல்படுவோர் யார்? இன்னும் அத்தனை விஷயங்களையும் எடை போடுங்கள்.

எந்த இயக்கம் அதிக மதிப்பெண் பெறுகிறதோ அதில் உங்களை இணைத்துக் கொண்டு மார்க்கத்துக்கு
முரணில்லாத விஷயங்களில் அந்த இயக்கத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க முடிவு செய்யுங்கள். மற்ற
இயக்கங்களில் இருந்து விலகுங்கள். தலைவர்கள் மக்களை விட்டு தனியாகி விடுவார்கள். மக்கள்
ஒற்றுமை தானாக ஏற்பட்டு விடும்

அனைவருக்கும் ஒரு பக்கம் நீங்களே அங்கீகாரம் கொடுத்து விட்டு ஒன்று பட மாட்டீர்களா என்று
இன்னொரு பக்கம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

இந்தவழியில் நடை போடுவதால் தான் தவ்ஹீத் ஜமாஅத் தன்னந்தனியாக நின்று மக்களை ஒன்று
படுத்துவதில் (இயக்கங்களை அல்ல) நல்ல வெற்றி பெற்று வருகின்றது.

இது குறித்து உங்களுக்குக் குழப்பம் இருந்தால் அனைத்து குழப்பங்களையும் தெளிவுபடுத்தும்
உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை கேட்கவும்

http://onlinepj.com/bayan-video/samuthaya_pirasanaikal/matru_karuthutaiyavarkalin_kelvikal/

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/ottrumaikku_yetra_vali/

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/sathiaypathai_samuthaya_otrumai/

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/ithu-than-otrumaya/

http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/orirai_kolkayum_otrumai_kosamum1/

Saturday, September 22, 2012

போலி ஒற்றுமை



ரசூல் ஸல் அவர்களை பற்றி படம் எடுத்த அயோக்கியர்களை கண்டித்து உலகின் பல 

மூலைகளிலும் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் .........

ததஜ என்ற ஒரு அமைப்பை மட்டும் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் அமைப்பாகவூம்,,

தனித்து களம் இறங்குகிறவர்கள் என்று ஒப்பாரி வைக்கும் 

என் பாசத்திற்குரிய அமீரக தமுமுக -MA MA க அமைப்பின் பொறுப்பு 

மாமு முத்துபேட்டை முகைதீன் அவர்களே .....

பெரம்பலூரில் கொடிகள் ஒன்று பட்டது ...

அண்ணா சாலையில் அமைப்புகள் ஐக்கியமானது ...

என்று படம் காட்டாமல் ,,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த அத்தனை அமைப்புகளையும் மக்கள் செல்வாக்கு 

உள்ள ஒரே அமைப்பு 

(அப்படின்னு நீங்க மட்டும் கனா காணுங்க )

மாமா க விற்கு இல்லை ஒரே முஸ்லிம் அமைப்பின் கீழ் ஒரே கட்சிக்கு ஒட்டு போட்டு 

ஒன்று பட்டு காட்டுங்க ....

அப்போ நீங்க சொல்றத கேக்கிறோம் ....

ஒற்றுமை விரும்பும் உன்னைப்போல் ஒருவன்

நபி வழியை மறந்தோரே--நரகத்தை அஞ்சிடுவீர் .....


நபி வழியை மறந்தோரே--நரகத்தை அஞ்சிடுவீர் .....

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்க வேண்டும் ...


முஸ்லிம்கள் தவறு செய்தால் நாங்கள் கண்டிக்க மாட்டோம் மாறாக அந்த தவறுக்கு ஆதரவாக 

நிற்போம் என்று சொல்பவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது .
நெல்லையில் ம.ம.மு .க நடத்திய ஆர்ப்பாட்ட முறையே முதலில் தவறு 
நபி (ஸல் ) அவர்கள் கூற்றுப்படி ஒரு முஸ்லிம் என்றால் தனது நாவினாலும் கரத்தினாலும் 

பிறருக்கு எந்த தீங்கும் செய்ய கூடாது என்பதே .
ஆனால் இவர்களோ நபி ஸல் அவர்களை கேலி செய்தவர்களை கண்டிக்க போகிறோம் என்ற 

பெயரில் ரயில் மறியல் என்று அறிவித்து பொது மக்களுக்கு தீங்கு தொந்தரவு கொடுக்கும் 

போராட்டத்தை நடத்தினர் .
இவர்கள் ஆர்பாட்டதினால் பர பரப்பாக இயங்கும் ரயில் நிலையத்தை கலவர பூமியாக்கினர் .
வெளியூர் செல்வதற்கு வந்த பயணிகளும் பொது மக்கள் அனைவரும் சிதறி ஓடி மிகப் பெரும் 

இன்னலுக்கு ஆளாகினர் .
பயணிகளின் சுமையை அவர்களின் வாகனத்தில் ஏற்றி விடுவது சுன்னத் (நபிவழி )
என்று சொல்கிற மார்க்கத்தில் இருந்துகொண்டு பயணிகளுக்கு இடைஞ்சல் செய்யும் 

ஆர்ப்பாட்டத்தை அறிவித்ததே தவறு .
மேலும் பஸ்களின் கண்ணாடிகளை நொறுக்கி ,சைக்கிள் ,பைக், ஆகிவற்றையும் அடித்து 

நொறுக்கி மாற்று மதத்தவர்களெல்லாம் பாராட்டும் படி நபி வழியை சிறப்பாக பேணி நடந்தனர்
இந்த போராளிகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் மீண்டும் மேலப்பாளையத்தில் 

பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நாளை மறுதினம் திங்கள்கிழமை முழு 

அடைப்பு நடத்த 19 அமைப்பை சார்ந்தவர்களும் முடிவு செய்து உள்ளனர் ...
இஸ்லாத்தின் பெயரை கெடுக்கும் இழி பிறவிகள் ...
நபியின் பெயரை வைத்து அரசியல் பண்ணும் கூட்டங்கள் .....
எளிய மார்க்கத்தை எடுத்து சொல்வோம் பிறருக்கு...

அமெரிக்க துணைத் தூதரக கல்வீச்சும் பயந்து ஓடி ஒளிந்து நடுநடுங்கிய புதிய தலைமைத்துவத்தினரும்....



இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அமெரிக்க துணைத் தூதரக கல்வீச்சும் பயந்து ஓடி ஒளிந்து நடுநடுங்கிய புதிய தலைமைத்துவத்தினரும்.....
எதிர்பாராத விதமான உண்மைத் தொண்டர்களின் கொந்தளிப்பால் சிறு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது. அதை ஏற்படா வண்ணம் எப்படியேனும் தடுத்துவிட வேண்டும் என்று களமிறங்கி ஆக்ரோஷப்பட்டவர்களை அமைதிப்படுத்திய உண்மைக் கழக விசுவாசிகளையும் காண முடிந்தது. இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஒரு 100 தொண்டர்களோடு புதிய தலைமைத்துவத்தினர் கைதாகி தங்களுடைய மார்க்கப் பற்றையும் சமுதாய உணர்வையும் பறை சாற்றி தாங்கள் யாருக்கும் அஞ்சா சிங்கங்கள் தான் என்று நிரூபிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் ஒரு மூத்த நிர்வாகி மட்டும் சிறை செல்லும் குழுவிற்கு தலைமை ஏற்று செல்ல தயாராக இருந்தார் என்ற செய்தியும் மற்ற இளவல்கள் [நிர்வாகிகள்] எல்லாம் தொடை நடுங்கிகளாக இருந்தார்கள் என்பதையும் இவர்கள் அன்று கோவை சம்பவத்தின் பொழுது பொறுமையோடு கையாண்ட நிர்வாகத் திறனை இவர்கள் கோவை மாவட்ட முன்னாள் நிர்வாகிகளிடமிருந்து பெற வேண்டிய பாடம் நிறைய இருக்கின்றது. இவர்களின் தற்போதைய தொடை நடுங்கி சம்பவம் சமூக சேவைக்கும், செயல்பாட்டுக்கும் தனக்கென்று தனி முத்திரை பதித்து செயல்படும் காஞ்சி மாவட்டத் தலைவர் அன்புச் சகோதரர் துணிச்சல் மிகு செயல்பாட்டிற்கு சொந்தக்காரர் தாம்பரம் யாகூப் அவர்கள் எப்போதும் சமுதாயத்திற்காக போராடும் இந்தக் கழகத்திற்காக சிறை செல்ல தயங்காத சொந்தக்காரரிடம் இந்த தலைமை கேட்டுக் கொண்டிருந்தால் அந்த தூதரக கல்வீச்சு சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுமார் 500 பேரோடு கைதாகி சிறைக்கு சென்றிருப்பார். ஆனால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை நாங்கள் பேசி சரி செய்துவிட்டோம் என்று கூறி கைதாக இருந்தவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அவ்வாறு சென்றவரை நள்ளிரவில் காவல் துறை பலவந்தமாக கைது செய்வது போல் சூழ்நிலையை உறுவாக்கிவிட்டனர். இந்த காவல்துறையோடு என்ன தான் பேச்சு நடத்தினார்கள் நம்மை எல்லாம் படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

நமது தலைமைத்துவத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் உட்பூசல்களின் விளைவாகவும், இவர் சிக்க வைக்கப்பட்டு இருக்கலாமோ தமுமுகவில் உள்ள கருத்துரிமை ஜனநாயக மறுப்பிற்கு எதிராக குரல் கொடுத்து வந்த தாம்பரம் யாகூப் அவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தார் என்பது தான் உண்மை. ஒரு வேளை சிக்க வைக்கப்பட்டு இருக்கின்றாரோ என்ற கருத்து செயற்குழு மற்றும் கழகத்தின் முன்னோடிகள் மத்தியில் நிலவுகின்றது.

உணர்வுகளை அடக்க முடியாத பொதுமக்களாலும், உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்களாலும் இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் காவல்துறையினர் மிகுந்த கவனத்தோடும் ஒரு இனக்கலவரமோ, அரச வன்முறையோ ஏற்படாமல் செயல்பட்டதை கண்ணுற்ற நியாயமான உணர்வுள்ள கடை நிலை தொண்டர்களும், பொதுமக்களும் மற்றும் நமது உண்மையாளன் செய்திக் குழுவும் வெகுவாக பாராட்டாமல் இல்லை.

முதிர்ச்சி இல்லா ஒரு இளம் தலைவர் எப்போதும் மாநாடு நடத்தி, மைக்கைப் பிடிக்கத் துடிக்கும் அந்த தலைவர் தனது பக்குவமற்ற பேச்சால் காவல்துறை தான் காரணம் என்று கூறி அமைதி காத்திருந்த காவலர்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசி கலவர சூழலை ஏற்படுத்த எத்தனித்தார். அந்த ஒரு தூண்டுதலையும் பொருட்படுத்தாமல் பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் நடந்து கொண்டது ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் ஐயமில்லை.

சிங்காரச் சென்னையை சரியான மற்றும் நிர்வாகத் திறன் மிக்க காவல் துறை அதிகாரிகளை வைத்து முதல்வர் நிர்வகித்து வருகின்றார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. முற்றுகைப் போரை தலைமையேற்று நடத்திய மாநில நிர்வாகிகள் திருமண மண்டபங்களில் காலையில் அடைத்து மாலையில் விடுவிக்கும் பொழுது எப்படி புன்முறுவல் பூப்பார்களோ அதே போன்று புழல் சிறை செல்லவும் தயாராவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த வெகுஜன மக்கள் மத்தியில் மேடையில் மைக்கினை பிடித்த பொழுதெல்லாம் நாங்கள் சிங்கக்குட்டிகள், புலிக்குட்டிகள், கரடிக்குட்டிகள், வரிக்குதிரைகள், கவரி மான்கள் என்றெல்லாம் பேசும் அந்த இளம் தலைவர் தான் கைதாகி விடக்கூடாது என்பதில் தனிக் கவனம் செலுத்தி வந்தார். அதற்காக எத்தனை தொண்டர்களை வேண்டுமானாலும் காவல் துறையில் ஒப்படைக்கலாம் என்பதை கவனமாக கண்ணுற்ற மூத்த மாவட்ட முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் இந்த தொடை நடுங்கிகளின் பின்னால் நாம் ஒன்றுமறியாத வீரியமிக்க தொண்டர் பட்டாளத்தை அழைத்துச் செல்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமமானது என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்.

சிரத் தன்மை இல்லாத, தன்னம்பிக்கையற்ற, ஒரு வஞ்சகத் தலைமை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை மேற்சொன்ன விவரங்களும் தாம்பரம் யாக்கூப் கைதும் நிரூபித்து கொண்டிருக்கின்றது.

தாக்குதல் நடத்தியவர்களை களமிறங்கித் தடுத்த தாம்பரம் யாகூப் கைது என்ற பெயரில் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார்!!!!!!!

ஆனால் முற்றுகைக்கு ஆக்ரோஷ கோசங்களை முழங்கிய மாநில நிர்வாகிக்கு பூச்செண்டு மரியதையாம்??????

நன்றி  ---------- போலிகளை அடையாளம் காட்டும் உன்னதப் பணியில்,
உண்மையாளன் மற்றும் செய்திக் குழு

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அருமைச் சகோதரர்களே!

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று கூறும் 

பழமொழியை நீங்கள் எல்லாம் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

அடுத்தவர்களின் ஆம்புலன்ஸில் தங்களின் [தமுமுக] பெயரை பயன்படுத்த விரும்பாமல் 

ஆம்புலன்ஸை எடுத்துச் சென்றதை மறைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தியும் 

செல்வாக்கை இழந்துள்ள நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி 

வரும் தலைமையின் நிலையினை எடுத்துச் சொல்லவே இந்த பதிவு....... 

சமீபத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மீனவர் பாதுகாப்பு மாநாடு, ஆம்புலன்ஸ் இல்லாமல் 

அர்ப்பணிப்பு பில்டப் எல்லாம் நாம் சமீபத்தில் வெளியிட்டு மேலும் மானமிழந்த கதையை சரி 

செய்ய பிற அமைப்பைச் சேர்ந்த சகோதரர்கள் அர்ப்பணித்த ஆம்புலன்ஸ் நிகழ்ச்சிக்கு உள்ளூர் எம்எல்ஏ என்ற முறையில் அழைத்தால் அதனை பத்திரிக்கை செய்தியில் வந்ததோடு 

விடுவதை விட்டு விட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு விளம்பரம் தேடி 

வரும் அவலம்................

101 - வது ஆம்புலன்ஸ் நிகழ்ச்சி ரத்தாகி தற்சமயம் ஏதோ இவர்கள் அர்பணித்த மாதிரி 

வெளியிட வேண்டிய அவசியம் தான் என்ன?

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2582%3A2012-09-10-10-46-55&catid=54%3Aprint-media&Itemid=172

புரிய வேண்டியவர்களுக்கு புரியும்!

குறிப்பு: 

நமது மானம் காக்கப் புறப்பட்ட கட்சியின் 101 - வது ஆம்புலன்ஸ் காணாமல் போன அதே 


இடத்தில் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மனதை தேற்றி உள்ளனர்.

போலிகளை அடையாளம் காட்டும் உன்னதப் பணியில்,

உண்மையாளன் மற்றும் செய்திக் குழு

நன்றி உண்மை யாளன் .

Monday, September 3, 2012

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா?


அஸ்ஸலாமு அலைக்கும்அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!

கடந்த காலங்களில் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டோம்! நீங்கள் இடஒதுக்கீட்டை அறிவித்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து(?) வேலை செய்து உங்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்! வெறும் சந்திப்பு தேவையில்லை "கையில காசு வாயில தோசை'' ஆர்டர் போடுங்க - ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் கூறியவர், தற்போது எந்த வாக்குறுதியும் தராமல் பிரதமரை ஓடோடிச் சென்று மாநாடு முடிந்த மறுநாளே சந்தித்து இருப்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையே எடுத்துக் காட்டுகிறது.

மாநாட்டின் தோல்விக்கு மன்மோகன் சிங்கிடம் மருந்து தேடுகிறார் பாவம்! மேலும் பிரதமரைச் சந்தித்தது, பெரிய சாதனை போல் அவர்களால் பரப்பப்படுகிறது.  பிரதமரை இதற்கு முன் தமிழகத்தில் தமுமுக தலைவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும், தேசிய லீக் தலைவரும் எந்த மாநாடும் நடத்தாமலேயே ஜே.எம். ஹாரூண் எம்.பி. மூலம் மிக சுலபமாக சந்தித்திருக்கின்றனர். ஆனால் பிரதமரே தங்களை அழைத்தார் என்று "பில்டப்' யாரும் கொடுக்கவில்லை. இது இவர்களது தரத்தையும், நிறத்தையும் எடுத்துக் காட்டுகிறது!

-செங்கிஸ்கான்.




தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா


யாரையும் மேடையில் ஏற்றுவதில்லை என்று கூறி வந்த தவ்ஹீத் ஜமாஅத்இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது என்ற வாதம் சிலரால் எடுத்துவைக்கப்படுகிறது. 
இதற்கு உரிய பதிலைச் சொல்வதற்கு முன்னால் இப்படி கேட்பவர்கள் பற்றியும்நாம் சுட்டிக்காட்டும் அவசியம் இருக்கிறது. 

மாநாடு நடப்பதற்கு முன் அனைவரையும் அழைக்க வேண்டும்; எங்களையும்அழைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். பல்வேறு கட்சிகளின்தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்தெளிவுபடுத்தப்பட்டது. அப்போது இந்தக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.ஏனெனில் மாநாட்டுக்கு மக்கள் வர மாட்டார்கள்; மாநாட்டுக்குப் போகக் கூடாதுஎன்று நாம் பரப்பிய செய்திகளால் தீவுத்திடலில் சமாதி கட்டப்படும் என்று கனவுகண்டார்கள். அதை வெளிப்படையாகவும் சொன்னார்கள். அவர்களுக்குப் பலநாட்கள் தூக்கம் இல்லாமல் செய்யும் அளவுக்கு மாநாடு முஸ்லிம் சமுதாயத்தின்பேராதரவுடன் வரலாற்றுச் சாதனை படைத்ததைப் பார்த்து திகைத்துப்போனவர்கள் மாநாட்டின் நோக்கத்தைத் திசை திருப்பும் வகையில் எதையாவதுஎழுதாவிட்டால் தங்கள் மண்டை வெடித்து விடும் என்று கருதி ஏற்கனவேசரியாகப் புரிந்து வைத்திருந்ததை இப்போது தவறாகச் சித்தரிக்கமுயற்சிக்கிறார்கள். இதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம். 
பிறரை மேடையில் ஏற்றுவது குறித்த தவ்ஹீத் ஜமாஅத் நிலை இவர்களுக்குத்தெரியவில்லை. இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் இது குறித்து எடுத்துள்ளநிலைபாட்டை அறிவதற்கு உரிய முறையில் முயற்சிக்க வேண்டும். இதுவிஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 

மார்க்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் தஹீத் ஜமாஅத் எந்தக் கொள்கையைச் சரிகாண்கிறதோ அந்தக் கொள்கையை ஏற்காத எவரையும் மேடையில்ஏற்றுவதில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு. 

இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 
சமுதாயப் பிரச்சனைக்காக போராடும் போதும் கோரிக்கை வைக்கும் போதும்பிறரை ஏற்றுவது, பிறருக்குப் பேச வாய்ப்பளிப்பது ஆகியவற்றில் கோரிக்கையநிறைவேற்றுபவர்களும் அல்லது அதற்கு உதவியாக இருப்பவர்களும் கடந்தகாலங்களில் தேவைப்பட்டால் மேடையில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்தக்கோரிக்கை குறித்து மாநாடு பொதுக்கூட்டம் நடக்கிறதோ அந்தக் கூட்டத்தில் நான்கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதியளிக்க விரும்பினால் அதற்குஅனுமதி அளிக்கப்பட்டதுமுண்டு. 

உதாரணமாக சென்னை மண்ணடியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 தந்ததற்காக இப்போது ஓட்டு போடுகிறோம்.அதை ஏழு சதவிகிதமாக ஆக்கினால் அடுத்த சட்டசபை தேர்தலிலும்வாக்களிப்போம் என்று பிஜே பேசினார். அந்தக் கூட்டத்தில் மேடையில் இருந்ததயாநிதி மாறன் இதற்காக முயற்சி செய்ய வேண்டும். அது பற்றி அவர் உறுதிஅளிப்பதாக இருந்தால் அளிக்கலாம் என்று பீஜே குறிப்பிட்டார். தயாநிதி மாறனும்எழுந்து அது சாத்தியமில்லாமல் உள்ளது இருந்தாலும் நான் தலைவரிடம் இதுகுறித்து எடுத்துச் சொல்வேன் என்று கூறினார். அத்துடன் திமுக செய்த இலவசதிட்டங்களைப் பற்றியும் பேசினார். அவர் பேசி முடித்ததும் எழுந்து இது போன்றஇலவசங்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. எங்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்புமே முக்கியம் என்று அவரை மேடையில் வைத்துக் கொண்டே பீஜேகூறினார். 
பார்க்க வீடியோ ஆதாரம் 
 
அது போல் தான் இட ஒதுக்கீட்டுக்கான மாநாடு என்பதால்அழைக்கப்பட்டவர்களில் இதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் வந்தால்அவர்களிடம் உறுதி மொழி கொடுக்கச் சொல்ல வேண்டும் என்று தவ்ஹீத்ஜமாஅத் முடிவில் இருந்தது. ஆனால் அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில்அதிகமானவர்கள் வரவில்லை. வந்த பிரமுகர்களில் ஹாரூன் அவர்கள்நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பல வகையில் உதவ முடியும்நிலையில் இருந்தார். துறைமுகம் ஹாஜா, தேசிய லீக் பஷீர் ஆகியோர் மத்தியஅரசாங்கத்தில் வாதாடும் இடத்தில் இல்லை. எனவே தான் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் இட ஒதுக்கீடுக்காக நான் எல்லா வகையிலும் குரல்கொடுப்பேன். தர்காவாதியாக நான் இருந்தாலும் இட ஒதுக்கீடு கோரிக்கையைஆதரித்ததால் கலந்து கொண்டேன் எனக் கூறினார். அதன் பின்னர் பீஜே எழுந்துஹாரூன் அவர்கள் சொன்னபடி இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் ஓட்டு என்றநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். 
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு நுணுக்கமான வேறுபாடுகளைக் கவனத்தில்கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅதின் நிலைபாடு அமைந்துள்ளது. இடஒதுக்கீடுக்காக கூடிக் கலைவது இதன் நோக்கம் அல்ல. அந்தக் கோரிக்கையைவென்றெடுப்பதற்காக தொடர் முயற்சிகளை தவ்ஹீத் ஜமாஅத் விட்டு விடாது. 
கருணாநிதியோ ஜெயலலிதாவோ மாநாட்டுக்கு வந்து இட ஒதுக்கீடுக்க்காக நாங்கள் முயற்சிப்போம் என்று வாக்குறுதி அளிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் மாலை சால்வை உள்ளிட்ட விஷயங்களில் சமரசம் செய்யாது !

Wednesday, August 8, 2012

மணித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட ம.ம.க மற்றும் த.மு.மு.க கட்சியினர்


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சார்ந்த ஹயாத் முகம்மது ஈஸா (வயது 19) என்பவர் தினக்கூலி அடிப்படையில் பிளம்பிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த 03.08.2012 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகில் உள்ள ஹோண்டா மோட்டார் வாகன புதிய கட்டிடத்தின் மாடியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் கயிறு கட்டி வேலை செய்து கொண்டிருந்த போது ஆர்க் கன்சல்டிங் பில்டர்ஸ் நிறுவனத்தின் கட்டிட பொறியாளர் குமார் மற்றும் மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரின் கவனக்குறைவால் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

உடனடியாக அவரது உடல் அருகில் உள்ள பெல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

சம்பவத்தை கேள்விபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம்;இ பாளையங்கோட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெல் தனியார் மருத்துவமனையில் பெருந்திரளாக குழுமினர். 

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மேலும் கட்டிட பொறியாளர் குமார்இ பார்ட்னர் ஆதித்தன் மற்றும் கட்டிட மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரிடம் இறந்து போனவர் குடும்பத்திற்கு ரூ.20இ00இ000ஃ- (இருபது இலட்சம்) உடனடியாக வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கட்டிட பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை மாவட்ட த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து இப்பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் விரும்பாத நிலையில் நஷ்ட ஈட்டுத் தொகையை குறைக்கும் வகையிலும்இ பிரச்சினையை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்த செயல்பாடு சம்பவ இடத்தில் குழுமியிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகள் மத்தியில் மிகப்பெரும் வெறுப்பையும்இ கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு இருபது லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கை விடுத்த போது, மாமா கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியான அதிமுக நிர்வாகிகளிடம், ‘இவர்களுக்கு (தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு) அவ்வளவு விபரம் போதாது. 

ஒரு லட்சம் கொடுத்து பிரச்சனையை முடித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். நஷ்டஈட்டுத் தொகையைக் குறைப்பதன் மூலம் கம்பெனி முதலாளிக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுத்தால் அதற்காக குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகக் கொடுப்பார்கள் என்பது தான் இதற்குக் காரணம்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க வேண்டியவர்கள், கமிஷனைக் கருத்தில் கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகளுடைய நடவடிக்கைகளைக் கண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தார்கள் கடும் வெறுப்படைந்தனர். 

தேவையில்லாமல் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் உடனடியாக இந்த இடத்திலிருந்து வெளியேறிவிடுகள் என்று தமுமுகவினரை விரட்டி, காரிதுப்பும் அளவிற்கு தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கு ரூ.6இ00இ000ஃ- (ஆறு இலட்சம்) வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

மறுநாள் இறந்தவரின் உடல் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மணிதநேய பணியை பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் ஊர் ஜமாஅத்தார்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

அல்லாஹ்விற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொடர்ந்து ஈட்டுத்தொகை கிடைப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட மாமா கட்சியினர், பத்திரிகையாளர்களிடம் தாங்கள் தான் இறந்தவருக்கு ஆதரவாக முற்றுகையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

இதனால் மறுநாள் வெளியான ஒரு தமிழ் நாளிதழில் நமது ஜமாஅத் சகோதரர்கள் முற்றுகையிட்டிருந்த படத்தை வெளியிட்டு தமுமுக, மமகவினர் முற்றுகையிட்டதாக செய்தி வெளியிட்டது. 

மாமா கட்சியினரின் இந்த துரோகச் செயலையும் பத்திரிகையில் செய்தியைத் திரித்துக் கூறிய இழிசெயலையும் கண்டு மக்கள் கொதித்துப் போயினர்.

இவர்களின் கட்ட பஞ்சாயத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது ...

இவர்களின் இந்த இழிவான செயல்களுக்கு இறைவன் மிக விரைவில் ஒரு முற்று புள்ளி வைப்பான் ..இன்ஷா அல்லாஹ்...

Saturday, August 4, 2012

ஜமாத்தே இஸ்லாமி , இக்வான் சகோதரர்களுக்கு மனம் திறந்த மடல்

உலக முஸ்லிம்களை காபிர்கள் என்று சொல்லும் வழிகெட்ட கொள்கையை கொண்டுவந்ததே வழிகெட்ட இக்வானிய கூட்டம்தான். செய்யித் குதுப் உலக முஸ்லிம்கள் அனைவரும் காபிர்கள் ஆகிவிட்டனர் என்றார் ஆனால் இன்று வந்த வழிகெட்ட கர்ளாவி செய்யித் குதுப் வழிகேடர் என்றார். மேலும் வழிகேட்ட மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுத்துள்ளார், எவருமே மறுக்க முடியாத தஜ்ஜாலின் வருகை பற்றிய "முதவாதிரான" ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் தவறாக சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களை பிழை காண்கிறார் மவ்தூதி.

இக்வாங்களின் தலைவர் உமர் தில்மிசாணி கபுர்வணக்கம் செய்வது சரி என்கிறார். எடுத்த எடுப்பில் யாரையும் நாம் வழிகேடு என்று சொல்லவில்லை உசூல் விதிகளை பேணி ஆய்வு செய்து அதில் பிழை வந்தால் வழிகேடு அல்ல ஆனால் இஸ்லாத்தில் "மா உளிம பி அத்தீனி பிள்ளரூரா " என்ற மிகவும் அறியப்பட்ட விடயங்களில் அத்து மீறி இஜ்திஹாத் செய்து வலிகேடான பத்வா சொல்லும் கூட்டத்தையே நாம் வழிகேடு என்று சொல்கிறோம்.

பன்றிக்கொழுப்பு ஹராம் என்று அறியப்பட்டது அதை ஹலால் என்று கர்ளாவி சொல்கிறார், கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்து சொல்வது ஹராம் இதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார், அல்லாஹ்வுக்கு அர்ஷ் எனும் சிம்மாசனம் உள்ளது என்று கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட விடயத்தை செய்யித் குதுப் இல்லை என்கிறார், இது இது வழிகேடு இல்லையா ? நன்மை தீமை அளக்கும் மீசான் எனும் தராசு பற்றி அல்லாஹ் சொல்லியிருக்க அது இல்லை என்று செய்யித் குதுப் அல்லாஹ்வுக்கு பாடம் சொல்லிகொடுக்கிறார் இது வழிகேடு இல்லையா ?..............

பெண்களுக்கு கைகொடுப்பது ஹராம் என்று அறியப்பட்ட விடயம் ஆகும் அதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? இந்த வழிகேட்டை சாதாரண மஸாயில் பிரச்சினை என்று வழிகெட்ட மன்சூர் சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? சியோநிசத்துடன் முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியான பிரச்சினை இல்லை அரசியல் ரீதியான பிரச்சினைதான் உள்ளது என்று யூத சியோனிச கொள்கைக்கு வக்காலத்து வாங்குகிறார் கர்ளாவி இது வழிகேடு இல்லையா 
?.....

பன்றி கொழுப்பு , இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து , புத்தாண்டு வாழ்த்து, பெண்களுக்கு கை கொடுத்தல், என்பவை ஹலால் என்று சொல்லும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான் அதை எதிர்க்க ஒன்றும் இல்லை என்று இந்த கூட்டம் கருதினால் இவ்வாறான எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜாஹிலிய கால காபிர்கள் நிலையை அடைந்த காபிர்கள் என்று செய்யித் குதுப் சொன்னது வழிகேடு இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமி கூட்டம் கருதினால் இவ்வாறான் எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

கபுர்வணக்கம் சரி என்று சொல்லும் இக்வானின் தலைவர் உமர் தில்மிசாணி வழிகேடர் இல்லை என்றால் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது வழிகேடு இல்லை என்றால் இந்த இணைவைப்புக்கு எதிராக எந்த பிரச்சாரமும் செய்யாத இக்வான்கள் இப்படியான ஷிர்க் இல்லாத தவ்ஹீத் வாதிகளுடன் ஏன் எதிர் பிரச்சாரம் செய்கின்றனர் ?.......

மேலே சொன்ன வற்றில் பன்றி கொழுப்பு, இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வது , புத்தாண்டு கொண்டாடுவது கூடும் கபுர்வனங்குவது சரி என்று சொல்வது தஜ்ஜாலின் வருகை இல்லை என்று சொல்வது, அன்னிய பெண்ணுக்கு கைகொடுப்பது கூடும், அல்லாஹ்வின் அர்ஷ் அல்லாஹ்வின் மீசான் இல்லை என்று சொல்வது பாரதூரமாக எதிர்க்க வேண்டிய விடயங்கள் இல்லை என்றால் மற்ற விடயங்களை விட பாலஸ்தீன விடயத்தில் அதிக தீவிரம் காட்டும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் சியோனிச யூதர்களுடன் மார்க்க ரீதியான பிரச்சினை எதுவும் இல்லை என்று யூசுப் கர்ளாவி சொன்னதை கூட ஏற்றுகொள்வீர்களா ? அது வழிகேடு இல்லையா ?......

இவை எல்லாம் வழிகேடு இல்லை என்றால் எதற்காக கிளை விடயமான அரசியலில் அதிக தீவிர போக்கு கொண்டு மாற்று கட்சிகளை தீவிரமாக விமர்சிக்கின்ரீர்? அதற்காக சண்டை பிடிகின்ரீர், கிளை விடயமான அரசியலில் பேதம் கொண்ட சகோதரர்களை கொலை செய்கின்றீர் ?.....

இதுதான் உங்கள் கொள்கை என்றால் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் வழிகேடர்கள் என்று சொல்வதில் கடுகளவு சந்தேகம் கூட எமக்கு கிடையாது, நீங்கள் இந்த கொள்கை சரி என்று வாதிக்கும்வரை உங்கள் கொள்கை வழிகேடே ......!

எப்போது இஸ்லாத்தின் அடிப்படையை சாதாரண மஸாயில் என்றும் இஸ்லாத்தின் கிளை விடயமான அரசியலை அடிப்படை போன்ற எண்ணத்துடனும் ஏற்று அதன்படி உங்கள் வழிகெட்ட தாவாவை செய்துவருகிண்றீர்களோ அப்போதே நீங்கள் வழிகேடர்கள் என்பதில் சந்தேகம் இல்லை ....!

அல்லாஹ் இவர்களுக்கும், இவர்களை நம்பியவர்களுக்கும் நேர்வழியை வழங்க வேண்டும் என பிராத்திக்கின்றேன் 





நன்றி -உங்கள் சகோதரன் : அஹ்மத் ஜம்ஷாத்

நக்கிப்பிழைக்கும் தமுமுக


பாகிஸ்தானில், கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்று ஒரு பொய்யை பரப்பி, அதன் மூலம் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தை தூண்டி விடக்கூடிய விஷமமான செயலை கடந்த வாரம் தினத்தந்தி செய்தது.
அங்குள்ள இந்து பெண்கள் ஆயிரக்கணக்கில் கடத்தப்பட்டு முஸ்லிம்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லா சலுகைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனவும் கூறி, தனது பாஜக ஊதுகுழல் வேலையை வெளிப்படையாகவே செய்திருக்கிறது தினத்தந்தி !
இது குறித்து தமிழக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தினத்தந்தியை முழுமையான முறையில் புறக்கணித்து, அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற இறுமாப்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரண்டு மாத செயல் திட்டம் வகுத்துள்ளது, அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அரசியலில் கால் பதித்து அதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தையும் சுயலாபத்தையுமே தமது ஒரே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் தமுமுக போன்ற கேடுகெட்ட இஸ்லாமிய பெயர்தாங்கிகள், வழக்கம் போல இதற்கும் முட்டுக்கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.


தினத்தந்தியை கண்டித்தது போலவும் இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக "தினத்தந்திக்கு தமுமுக மறுப்பு"என்று தலைப்பு இட்டு விட்டு, உள்ளே மிகவும் மென்மையான முறையில் தங்கள் மறுப்பை சொல்லிய விதத்தை படிக்கும் எவரும் புரிவார்கள், இவர்களின் கேடு கெட்ட பச்சோந்தித்தனத்தை.
மேலும்,
ஹிந்துக்களிடையே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களை தூண்டி விட வேண்டும் என்று விரும்புகிற ஆர்எஸ்எஸ்ஸுக்கும், பாஜகவுக்கும் ஊதுகுழலாக செயல்பட்டு தங்களது காவி சிந்தனையை வெளிப்படையாகவே காட்டியுள்ள   தினத்தந்தியின் அந்த செய்திக்கு இந்த கேடுகெட்ட தமுமுக கொடுத்த மறுப்பின் லட்சணம்..

""பாகிஸ்தானில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான சிறுபான்மை இந்துக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்து அத்தலையங்கம் கவலை தெரிவித்தது நியாயமே. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.""

முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதோ பற்றியோ, நமது மார்க்க கொள்கை கேலிக்குரியதாக ஆக்கப்படுவது பற்றியோ எள்ளளவும் அக்கறையில்லாதவர்கள் தான் இந்த தமுமுகவினர் என்பதை கடந்த பல வருடங்களாக பல சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. 

முஸ்லிம்களுக்கான இட ஒதிக்கீட்டை கூட தர விரும்பாமல் அரசியல் கட்சிகள் இழுத்தடித்த போது அதை கண்டு முஸ்லிம் சமுதாயமே வெகுண்டேழுத போது, இந்த கழிசடைகள் மட்டும், அது ரோஸ்டர் முறையில் கிடைக்கும் என்று கூறி அப்போதைய திமுக அரசுக்கு வால் பிடித்து சுயலாபம் அடைந்தது முதல், 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பது முதல், 
தானே புயல் பாதிப்பிற்கு அம்மா செய்துள்ள நிவாரண உதவிகளை பார்க்கிற போது எங்கள் ஊரிலும் இது போன்று புயல் வந்து ஊரையெல்லாம் அடித்துக்கொண்டு போகாதா என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான் என்று கூறி ஜெயலலிதாவின் வாலை நக்கியது வரை, இவர்களின் அரசியல் ஜால்ரா பட்டியல் மிக நீளம்.

அந்த பட்டியலில் இப்போது தினத்தந்தியின் விஷமதனதிற்கு இவர்கள் அடித்துள்ள ஜால்ராவும் இடம் பிடித்துள்ளது. 
இந்த சமுதாயம் இவர்களை துடைப்பக்கட்டையால் துரத்துகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.. இன்ஷா அல்லாஹ்!

இஸ்லாத்திற்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் ஒரு கட்சி !


தமுமுகவும் அதன் செல்லப்பிள்ளையான மமகவும் திருந்துவார்கள் என்கிற கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்பையும் தவிடு பொடியாக்கும் வண்ணம் இவர்களது சமீபத்திய செயல் அமைந்துள்ளது.

இஸ்லாத்திற்கு எதிரான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் மாபாதக செயலை தலைமை தாங்கி நடத்தி, நரக படுகுழிக்கு தங்களை முன்பதிவு செய்து வருகின்றனர் இவர்கள். இணைப்பை பார்க்கவும்.

அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் என்ன? ஓட்டு கிடைக்கிறதா? அதை மட்டும் பார், என்பது தான் அவர்கள் பைலாவோ என்னவோ..

ஆர்எஸ்எஸ் , சிவசேனா பட்டியலில் இந்த சமுதாயத்தை இது போன்ற நயவஞ்சகர்களிடம் இருந்தும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
புனித ரமளானில் அனைவரும் இதற்காக துஆ செய்யுங்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons