Wednesday, October 3, 2012

காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை.





காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை... ஆம் ஜாக்கின் முகமூடியை தான் 

காணவில்லை.. கண்டெடுத்தவர்கள் சென்னை புதுபேட்டையில் அமைந்திருக்கும் ஜாக் 

தலைமை 

அலுவலகத்தில் ஒப்படையுங்கள். 

இத்தனை நாள் தவ்ஹீத் என்ற முகமூடி போட்டு கொண்டு, இந்த பேரணி ஊர்வலங்கள் 


முஸ்லிம்களின் 


இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, 

இவைகள் 

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல என்று வியாக்கியானம் பேசி நாம் நடத்தும் 

உரிமையை மீட்டெடுக்கும் 

போராட்டங்களை விமர்சனம் செய்வதோடு மட்டுமில்லால் அதில் கலந்து கொள்ளும் எம் 

சகோதரிகளையும், 

தாய்மார்களையும் கொச்சையாக மோசமாக பேசி பித்னா செய்வதையே தொழிலாக 

கொண்டவர்கள் இன்று 

குமரியில் கிறிஸ்த்தவர்களுடன் சேர்ந்து மார்க்கம் அனுமதிக்காத உண்ணா விரத போராட்டம் (பார்க்க : 

தினத்தந்தி குமரி எடிசன் 14.09.2012), தென்காசியில் 28.09.2012 அன்று மற்ற அமைப்புகளுடன் 

சேர்ந்து கண்டன 

ஆர்ப்பாட்டம் (பார்க்க போஸ்டர்) செய்து அவர்களுடைய முகமூடியை தொலைத்து 

விட்டார்கள். இனி எந்த 

முகமூடி போட்டு ஊரை ஏமாற்றுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஜாக் 

சகோதரர்களே சிந்திக்க மாட்டீர்களா?

ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஊதுகுழலாக த.மு.மு.க.


உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதார்களா?:









கட்டுரையாளர் ஹாஜா கனி அவர்கள் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

கலீபா உமர் காலத்தில் பாலஸ்தீனம் வெற்றிக்கொள்ளப்படுகிறது. வேதக்குறிப்புகளின்படி ஜெருசலேமின் சாவியை கலிபா உமரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, அவரை மதீனாவிலிருந்து ஜெருசலேமுக்கு வரவழைத்தப் பாதிரியார்கள் தொழுகை நேரத்தில் உயிர்த்தெழல் தேவாலயத்தில் உமரைத் தொழுமாறு கூறினர். "நான் இங்கு தொழுதால் எனக்குப் பின் வரும் தலைமுறையினர் எங்கள் தலைவர் தொழுத இடம் என உரிமை கோரலாம்' என்று கூறி அங்கே தொழுவதைத் தவிர்த்தார்கள்.

கட்டுரையாளர் கூறுவது போல் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த வரலாற்று நூற்களிலும் கூறப்படவில்லை. இது உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு கட்டுக் கதையாகும்.
இந்தச் சம்பவத்தை சிந்தித்துப் பார்த்தால் தேவாலயங்களில் தொழுவதைக் கூடும் என்று உமர் (ரலி) அவர்கள் ஆதரித்தார்கள் என்பதுதான் வெளிப்படுகிறது. ஏனென்றால் உமர் தொழுதால் பின்வரும் மக்கள் உரிமை கோரிவிடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் உமர் (ரலி) அவர்கள் தவிர்த்துக் கொண்டார்கள் என்றே இதில் கூறப்பட்டுள்ளது. தேவாலயங்களில் தொழுவது கூடாது என்ற அடிப்படையில் அல்ல.

உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாத மக்களிடம் எவ்வளவு நீதமாக,நேர்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான உண்மைச் சான்றுகள் உள்ளன. ஆனால் கட்டுரையாளரோ உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு பொய்யான சம்பவத்தைச் சான்றாகக் காட்டியுள்ளார்.

சத்தியக் கொள்கையின் பாதுகாவலராகத் திகழ்ந்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களை அசத்தியக் கொள்கையின் பாதுகாவலராக கட்டுரையாளர் சித்தரித்துள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக்கிய கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் ஏற்படும் என்று சபித்துள்ளார்கள்.
மேலும் சமாதிகளை நோக்கியும், உருவப்படங்களை நோக்கியும் தொழுவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.
இறைவனுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் நடைபெறும் இடங்களில் இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (1341)

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, "யூதர்களையும்,கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441

கிறித்தவ ஆலயங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்குரிய இடம் அல்ல என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும்போது நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக உமர் (ரலி) தேவாலயங்களில் தொழலாம் என்றும் வேறு காரணத்திற்காக நான் தொழவில்லை என்றும் கூறியிருப்பார்களா? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட சம்பவம் உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட சம்பவம்தான் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
உமர் (ரலி) அவர்கள் ஸாம் நாட்டிற்கு வருகை தந்தபோது ஒரு கிறித்தவர் அவர்களுக்கு உணவைத் தயார் செய்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம் நீங்களும் உங்களுடைய தோழர்களும் என்னிடத்திற்கு வருகைதந்து என்னை சங்கை செய்வதை நான் விரும்புகிறேன்என்று கூறினார். அவர் ஸாம் நாட்டிலுள்ள அந்தஸ்து மிகுந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவருக்கு கூறினார்கள் : நாங்கள் உங்களுடைய தேவாலயங்களில் உருவங்கள் இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அங்கே நுழைய மாட்டோம்என்று கூறினார்கள்.
நூல் : பைஹகி (பாகம் 2 பக்கம் 270)



கட்டுரையாளர் தான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் உண்மை என்று நம்பினால் அதை அவர் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். அதாவது கோவில்களிலும் தேவாலயங்களிலும் முஸ்லிம்கள் தொழலாம் என்று பத்வா கொடுப்பாரா? அது போல் நம்முடைய பள்ளிவாசல்களுக்குள் பிறமதத்தவர்கள் சாமி கும்பிடலாம் என்று பத்வா கொடுப்பாரா? முஸ்லிம்களுக்கு இப்படி அறிவுறை கூறுவாரா? மமகவுக்கு ஆதரவாக இருக்கும் உலமாக்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? நிச்சயமாக இப்படி இவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கருத்துச் சொல்ல முடியாது. தாங்கள் நம்பாத ஒன்றை ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்?

முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கருத்தும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் அதற்கு மாற்றமான ஒரு கருத்தும் சொலவது பச்சை முனாபிக்தனம் அல்லவா?

கிறித்தவ ஆலயங்களில் தொழலாமா?:
உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள். புகாரி434 ஆம் ஹதீஸின் பாடத் தலைப்பு
கிறித்தவ ஆலயங்களில் நுழைவதைக் கூட தவிர்த்துக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவது கூடும் என்பதை ஆதரிப்பதைப் போன்று நடந்திருப்பார்களா?
உமர் (ரலி) அவர்களின் கொள்கைப் பிடிப்பைக் கேலி செய்கின்ற வகையில் அமைந்த பொய்யான கட்டுக்கதையை தமக்குச் சான்றாக கட்டுரையாளர் காட்டியிருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்.
ஓட்டுப் பொறுக்கிகள் ஓட்டுக் கேட்கும்போது கோவில்களில் பரிவட்டம் கட்டி, திலகம் இடுவதை நியாயப்படுத்துவதற்காக இதுபோன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றார்கள்.
சங்பரிவாரம் காலாகாலமாகச் சொல்லிவரும் சித்தாந்தத்துக்கு இஸ்லாமியச் சாயம் பூசுகின்றார் கட்டுரையாளர். முஸ்லிம்கள் மீது மன்னிக்க முடியாத அவதூறை இவர் சுமத்தியுள்ளார். கலீபா உமர் (ரலி) அவர்களின் சம்பவம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள் என்பதற்காக அதில் உரிமை கொண்டாடும் அளவுக்கு முஸ்லிம்கள் கேடுகெட்டவர்களாக இருப்பார்களா?
ஒரு இடத்தில் ஒருவர் தொழுதால் அந்த இடம் அவர்களுக்குச் சொந்தம் என்று கடுகளவு மூளையுள்ள எந்த முஸ்லிமாவது சொல்வானா?
நமது பள்ளிவாசல்கள் எல்லாம் இப்படி பிறமத மக்களிடமிருந்து அடித்துப் பிடுங்கியதுதான் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் நச்சுக்கருத்தை கட்டுரையாளர் பக்குவமாக விதைக்கின்றார்.
எந்தப் பொருளும் முறையாக விலைக்கு வாங்கப்பட்டால், அல்லது அன்பளிப்பாகப் பெறப்பட்டால் மட்டுமே உரிமையாக முடியும். பிறருக்குச் சொந்தமான இடத்தைத் தட்டிப்பறிக்க எந்த முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை எனும்போது, பள்ளிவாசலுக்காக அதை அபகரிப்பது கூடுமா?
முஸ்லிம்கள் இப்படி நடப்பார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியிருப்பார்களா?
----------------------------------------------------------
இன்னும் தோலுரிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்....
முந்தைய ஊதுகுழலை ஊத இங்கே சொடுக்குங்கள் ....
https://www.facebook.com/photo.php?fbid=266536783450060&set=a.108142159289524.9326.100002812208775&type=1&relevant_count=1
---------------------------
https://www.facebook.com/photo.php?fbid=266786006758471&set=a.108142159289524.9326.100002812208775&type=1&relevant_count=1

----------------------------
 

இந்தக் கேவலத்திற்கு துணை போகிறவர்கள் யார்..?



ரஜினி நலமடைந்ததை 

அண்ணாசாலை தர்காவில் 

பிரியாணி வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!


தலைவர் ரஜினி உடல் நலமடைந்து, மீண்டும் ராணாவில் நடிக்கப் போகும் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதத்தில் சென்னை அண்ணா சாலை தர்காவில் பிரியாணி வழங்கி கொண்டாடினர் ரசிகர்கள்.

தலைவர் உடல்நலம் குன்றியிருந்த போது, ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனை மேற்கொண்ட இறைத் தலங்களுள் முக்கியமானது அண்ணாசாலை பெரிய தர்கா. மன்றம் சார்ந்த / சாராத ஏராளமான ரசிகர்கள் இந்த தர்காவில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டிருந்தனர்.
அந்தப் பிரார்த்தனைகள் பலித்து, தலைவரும் இப்போது பூரண நலம்பெற்றுள்ளார். இதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கடந்த ஒரு மாத காலமாகவே பல்வேறு திருத் தலங்களில் ஏழைகளுக்கு உணவு, நல உதவிகள் வழங்கி வருகின்றனர் ரசிகர்கள்.

இது நபி வழியா? இல்ல கமாலுதீன் வழியா?




கடந்த ஆகஸ்ட் 19 அன்று பஹ்ரைன். JAQH தலைவர் கமாலுதீன் மதனி 

மிம்பர் மீது நின்று பெருநாள் உரை ஆற்றும் காட்சி... இது நபிவழி 

இல்லை என்பது மதீனாவில் படித்த பண்டிதருக்கு தெரியாதோ?

Friday, September 28, 2012

கிழிந்து தொங்கியது இரட்டை நாக்கு மக்கா பள்ளி பேஷ் இமாமின் முகம்



“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான போராட்டங்கள் போதும்”
என்று சென்னை மக்கா பள்ளியின் பேஷ் இமாம் சம்சுதீன் காசிமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக
ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்
படுத்தி திரைப்படம் எடுத்த யூதன் சாம் பெசிலி, அந்தப் படத்தை “யுடியூப்” மூலம் விளம்பரம்
செய்த கிறிஸ்தவ பிஷப் டெர்ரி ஜோன்ஸ், இந்த படத்திற்கு பரிபூரண ஆசி வழங்கி, அனைத்து
உதவிகளையும் செய்த அமெரிக்க அரசு ஆகியவற்றிற்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள்
போராடி வருகிறார்கள். 

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அதே சமயம் இந்தியாவின்
எல்லா மாநிலங்களுக்கும் தலைமை ஏற்கும் வகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க
துணை தூதரகத்தின் முன் முஸ்லிம்களின் போராட்டம் நடந்து, அமெரிக்க துணை தூதரகத்திற்கு 3
நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டம் இருந்தது என்பது யாவரும்
அறிந்ததே!

சென்னையில் மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும்
இந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் போராட்டத்தைப்
பார்த்து வேலூர் மாவட்டம் போன்ற ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தாமே திரண்டு போராட்டம்
நடத்தியது தமிழகம் கண்டிராத ஒன்றாகும்.

இவ்வாறு இந்தியாவுக்கே தலைமை தாங்கும் விதத்தில் தமிழக முஸ்லிம்களின் போராட்டம் இருக்க,
அதை முனை மழுங்கச் செய்யும் வகையில் “போராட்டம் போதும்” என்று அறிக்கை வெளியிட்டு
அமெரிக்க அடிமை ஆகி இருக்கிறார் சம்சுதீன் காசிமி என்ற பேஷ் இமாம். ஊரில் எல்லோரும் ஆடை
அணிந்து சென்றால் தான் மட்டும் அம்மணமாகச் சென்று விளம்பரம் தேட நினைப்பவர் மக்கா பள்ளி
பேஷ் இமாம். இந்த எண்ணம் அவரிடம் இல்லாவிட்டால் இது போன்ற அறிக்கையை அவர்
வெளியிட்டிருக்கவே மாட்டார்.

நபிகள் நாயகம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் அவதூறாக படம் எடுத்த சாம் பெசிலியோ,
பிஷப் டெர்ரியோ அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமாவோ மன்னிப்பு கேட்டு, நடவடிக்கை எடுத்து,
அதற்குப் பிறகும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினால், “போராட்டம் போதும்” என்று சொல்லலாம்.
ஆனால் இவர்களுக்கு எதிராக முஸ்லிம் உலகமே கிளர்ந்தெழுந்த போதும் இன்று வரை இவர்கள்
முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

தங்கள் நடவடிக்கையை திருத்திக் கொள்ளவும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் போராட்டத்தை தான்
ஒபாமா போன்றவர்கள் கண்டிக்கிறார்கள். இந்நிலையில் “போராட்டம் போதாது. இன்னும் வீரியம் பெற
வேண்டும்” என்று சொல்வதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகாக இருக்கும். இந்த அழகுணர்ச்சி
சம்சுதீன் காசிமிக்கு வர வேண்டும். வர வேண்டும் என்று தமிழக முஸ்லிம்களும்
எதிர்பார்க்கவில்லை. ஆனால் வரக் கூடாத ஒன்று இவருக்கு வந்து, அமெரிக்காவுக்கு அடிமைச்
சேவகம் புரிவதை முஸ்லிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தமிழக முஸ்லிம்களின் உணர்வு வை.கோ.வுக்கு புரிகிறது. திருமாவளவனுக்கு புரிகிறது.
ராமாதாஸுக்கு புரிகிறது. கருணாநிதிக்கும் புரிகிறது. மதச்சார்பின்மை மீது
நம்பிக்கையுள்ள அனைவருக்கும் புரிகிறது. அதனால் அந்த அரசியல் தலைவர்கள் அனைவரும்
அறிக்கை வெளியிட்டு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்தை வெளியிடக்கூடாது. அதற்காக
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கைவெளியிடுகிறார்கள். அந்த அறிக்கைகளில்
“முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று ஒருவருமே சொல்லவில்லை.

இந்த அரசியல் தலைவர்களுக்கு உள்ள மான உணர்ச்சி சம்சுதின் காசிமிக்கு இல்லாமல் போனது 
ஏனோ? அமெரிக்காவில் ஒரு சீக்கியரின் தலைப்பாகை அவமதிக்கப்பட்டால் பிரதமரும், இந்திய
வெளியுறவுத் துறை அமைச்சரும் அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்கு எதிராக கண்டன
அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்திற்கு எதிராக பிரதமரோ,
வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவோ இதுவரை வாயே திறக்கவில்லை. இவர்கள் வாய் திறந்து
முத்து உதிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய காசிமி “முஸ்லிம்களின் போராட்டங்கள் போதும்”
என முழங்கியது இன துரோகம் இல்லாமல் வேறென்ன?

அமெரிக்க நிறுவனம் ஒன்று சாமி படம் போட்ட செருப்பை தயாரித்து விற்றது. இது அமெரிக்க
விவகாரம் என்று மத்திய அரசு வாய் மூடி இருக்கவில்லை. உடனே கண்டனம் தெரிவித்து,
செருப்புகளை வாபஸ் பெற வைத்தது. செருப்பு விவகாரத்தில் இப்படி மதச்சார்பின்மையை
உலகுக்கு வெளிக்காட்டிய மத்திய அரசு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்திலும்
இவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டுமா? இல்லையா? நடக்கவில்லை எனில் அதை காசிமி சுட்டிக்
காட்ட வேண்டும். ஆனால் இவரோ மானமிழந்து, மதி கெட்டு “போராட்டங்கள் போதும்” என்கிறார்.

“காளி” என்ற பெயரில் இங்கிலாந்தில் புதிய ரக பீர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பீர்
ஒரு போதைப் பொருள். அந்த காளியின் பெயரிலும் விற்கக்கூடாது. வேறு பெயரிலும்
விற்கக்கூடாது என்று மத்திய அரசு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் என்ன சொன்னது
தெரியுமா? பீருக்கு காளியின் பெயரை வைத்ததை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லி, எடுக்க
வைத்துவிட்டது.

இதுபோன்ற உறுதியான அணுகுமுறை “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்தில்
இல்லையே! இது இந்திய முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக நடத்துவது இல்லையா? மத்திய அரசாவது
மௌனம்தான் காக்கிறது. ஆனால் காசிமியோ “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று அறிக்கை
வெளியிட்டு முஸ்லிம்களின் உணர்ச்சியோடு விளையாடுகிறார்.

சென்னை மக்கா பள்ளியின் தலைமை இமாம் என்று லெட்டர் பேடு அடித்து அறிக்கை வெளியிட்டவுடன்
எல்லா இமாம்களுக்கும் இவர் தலைவர் போலும் என்று பத்திரிகைகாரர்கள் நினைத்துவிடுகின்றனர்.
சென்னை மக்கா பள்ளிக்கு உலகின் எந்தப் பகுதியிலும் இன்னொரு கிளைப் பள்ளி கிடையாது.
உலகின் எந்தவொரு பள்ளிவாசல் இமாமுக்கும் இவர் தலைவரும் கிடையாது. எல்லா
பள்ளிவாசல்களிலும் இமாம் ஒருவர் இருப்பார். இவர் விடுமுறை எடுக்கும் போது தொழுகை நடத்த
துணை இமாம் இருப்பார். இதுபோல் மக்கா பள்ளியில் இவர் இமாமாக பணிபுரிகிறார். இவர்
விடுமுறை எடுத்துவிட்டால் இன்னொருவர் தொழுகை நடத்துவார். இந்த சாதாரண பதவியைத்தான்
தமிழகத்தின் பெரும் பதவி போல் “பில்டப்” செய்து இவர் ஊடகங்களில் விளம்பரம் தேடுகிறார்.

இந்தியாவின் எந்த ஒரு பள்ளிவாசல் இமாமும் தன்னை தலைமை இமாம் என்று சொல்லி பெருமைப்
பட்டுக் கொள்வதில்லை. காசிமி மட்டும் இப்படிச் சொல்லிக் கொள்வதின் மூலம் இவருடைய பதவி
மோகத்தையும், விளம்பர வெறியையும் தெரிந்து கொள்ளலாம். 

தர்கா வழிபாட்டுக்கு எதிராக இவர் அனல் கக்கி, பெரிய ஏகத்துவவாதி போல் தன்னைக் காட்டிக்
கொள்வார். ஆனால் ஏகத்துவ கொள்கையையும் இவர் தர்கா வழிபாடு அளவுக்கு விமர்சிப்பார்.

முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பது கட்டாயம். முஸ்லிம் பெண்களைப் போல் தலையில் துப்பட்டா
போட்டுக் கொண்டு ஜுமுஆ சொற்பொழிவு நிகழ்த்தும் இவருடைய பேச்சில் அமெரிக்க எதிர்ப்பு
அதிகமிருக்கும். அந்த அமெரிக்க எதிர்ப்பை பொதுமக்கள் கையில் தூக்கும் போது அதை மழுங்க
வைக்கும் வகையில் இவருடைய நாக்கு தடம் புரளும். இப்படி இரட்டை நாக்கு படைத்த இவரை
முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆக மொத்தத்தில் இவர் காசிமி அல்ல, தனது
இரட்டை நாக்கால் விஷம் கக்கும் விஷமி.

ஆன் லைன் பீஜே.காம்

Wednesday, September 26, 2012

பெண்களே !பெண்களே!உஷார் உஷார் பெயர் மாற்றி வரும் நயவஞ்சக கூட்டம்


பெண்களே !பெண்களே!உஷார் உஷார் பெயர் மாற்றி வரும் நயவஞ்சக கூட்டம்

என்ன இயக்கமோ புதுசு புதுசா இருக்கு ஆரம்பத்தில் MNPஅப்புறம் PFI,SDPI,CFI,NWF,இப்போம் நேஷனல் வோமான்ஸ் பிரான்ட் என்ன இது

இவர்களின் நயவஞ்சக குணம் பெருகிகொடேதான் இருக்கிறது


சேற்றில் ஒரு கால் ஆற்றில் ஒரு கால் மாதிரி போல்


சொல்லு ஒன்று செயல் ஒன்று இவர்கள் இயக்கமான MNP ,PFI ,SDPI ,CFI ,NWF ,போன்ற இயகக்க்ளில் உள்ள உறுபினர்களும் நிவாக்கிகளும் வரதச்சனை திருமணகளில்லும் கலந்து கொள்ளாமல் இருகிறார்கள என்று பார்த்தல் இல்லை அணைத்து வரதச்சனை திருமணகளில் லும் இஸ்லாத்துக்கு எதிரான நடக்கும் பித்ஆத் களின் இவர்கள் போர் படை தளபதிகளின் இருந்து அவர்களின் சிப்பாய்கள் வரை கலந்து கொண்டுதான் இருகிறார்கள் .பின் ஏன் இந்த சுவர் ஓட்டியை ஓட்ட வேண்டும் .இஸ்லாமிய பெண்கள் மந்தியில் இவர்களின் இயக்கம் பெரியதாக பேச படவேயில்லை அதானால் இவர்கள் எடுத்து இருக்கும் ஆயுதம் வரதச்சனையை ஒழிப்போம் .

இவர்களுக்கு சில கேள்விகள்

1. இவர்களின் திருமணகள் வரதச்சனை வாகிதான் நடைபெறுகிறது
2. இவர்களின் வீட்டுல உள்ள திருமணகளும் வரதச்சனை வாங்கி ,கொடுத்துதான் திருமணககள் நடைபெறுகிறது
3. இவர்களின் வீட்டுல திருமணம் நடத்தால் அனைத்தும் பித்ஆத் களின் அரகேறிகொடுதான் இருகிறது அதை இவர்களால் அந்த அனாச்சரத்தை தடுக்க முடிகிறதா ?
4. நபி வழியே இவர்களின் வீட்லில் புறகணிக்க படுகிறதே அதை பற்றி இவர்கள் வாய் திறத்து இருபார்கள
5. பெண் வீட்டு விருந்தை தின்னு இவர்கள் இதை பற்றி பேச தகுதியே கிடையாது
6. இவர்களின் திருமணம் வீட்டில் மாற்று மத கலாசாராம் ச் தலை தூக்கி இருக்குதே அதற்கு இவர்களின் பதில் என்ன


1. 34. 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.


இவர்கள் சுவர் ஓட்டில் கூறும் செய்தி உண்மையா (நேஷனல் வோமான்ஸ் பிரான்ட்) தாய் இயக்மணா MNP ,PFI ,SDPI ,CFI அவர்கள் இதை கடை பிடிகிரார்களா

இல்லை .

அல்லாஹ் குர்ரானில் கூறுகிறான்

61:2. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?

61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
இல்லை என்றால் மறுமை யில் இத்த நிலைமைதான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். அப்போது அவரது வயிற்றிலுள்ள குடல்கள் முழுவதும் வெளியே வந்துவிடும். அவர் குடலை இழுத்துக்கொண்டு கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப் போன்று சுற்றிவருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, "இன்ன மனிதரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியுமாறு ( மக்களுக்குக்) கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாம் என (அவர்களை)த் தடுத்துக்கொண்டிருக்(கும் நற்பணி செய்திகொண்டிருக்)க வில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு அந்த மனிதர், "ஆம்; நற்செயல் புரியும்படி (மக்களுக்கு) நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாம் என (மக்களை) நான் தடுத்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்'' என்று கூறுவார்.

அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)
நூல் : முஸ்லிம் 5713

(நேஷனல் வோமான்ஸ் பிரான்ட்) WISE PRESIDENT
நபி வழியா ?அபுஜஹீலின் வழியா?


SDPI NELLAI PUBLIC MEET NWF WISE PRESIDENT FATHIMAA AALIMA

http://www.youtube.com/watch?v=P0UANcTudc4&feature=player_embedded

உங்கள் பேச்சுக்கு பேச்சி கைதட்டி ஆர்பரித்த தொண்டர்களிடம் கைதட்டுவது அபுஜஹீலின் கொள்கை என சொல்லி அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?நீங்களும் அந்தக் கொள்கையில் இருப்பதால் தான் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

தலைவருக்கு சல்யுட் அடிக்கும் தொண்டன் https://www.facebook.com/photo.php?fbid=2015170342652&set=a.1165999713917.25436.1345642158&type=3
 

Tuesday, September 25, 2012

டிஎன்டிஜே நடத்திய போராட்டத்திற்கும் மற்றவர்களின் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு?

நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்திய அமெரிக்காவிற்கு எதிராக டிஎன்டிஜே நடத்திய போராட்டத்திற்கும் 

மற்றவர்களின் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு?

சம்சுதீன், கோவை

நபிகள் நாயகத்திற்கு எதிரான எந்த ஒன்றையும் டாக்டர் ஹபீப் முகம்மது மற்றும் 

சம்சுதீன்காசிமி போன்ற 

சமுதாய துரோகிகளைத் தவிர எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதற்கான 

அடையாளமாக 

அனைத்து இயக்கத்தினரும் இதற்காகப் போராடியுள்ளனர். இதில் நாம் யாருடைய போராட்டத்திற்கும் நோக்கம் 

கற்பிக்க மாட்டோம். அனைவருமே நபிகள் நாயகத்தின் மீது வைத்துள்ள அன்பின் 

காரணமாகத்தான் போராட்டம்

 நடத்தினார்கள். அதில் கலந்து கொண்டவர்களும் இயக்கத்திற்காக கலந்து கொள்ளவில்லை. 

நபிகள்

 நாயகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கொதிப்படைந்துதான் கலந்து கொண்டார்கள்.

எல்லா அமைப்புகளின் போராட்டங்களிலும் பலர் கலந்து கொண்டதையும் நாம் பார்க்க 

முடிந்தது. இதில் 

இயக்கங்களை முன்னிலைப்படுத்த நாம் விரும்பவில்லை. அதே சமயத்தில் அனைவருக்கும் 

நாம் ஆலோசனை 

சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

கொள்கையிலும், பெயர்களிலும் வேறுபட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவது 

அறிவுடைமை அல்ல.

 ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் அதில் பிரச்சினைகள் இல்லாமல் நடத்திவிடலாம்.

தடையை மீறி நடக்கும் போராட்டங்களையும், உணர்ச்சிகரமான போராட்டங்களையும் 

பிரச்சினை இல்லாமல் 

நடத்திட முடியாது. ஒரு இயக்கம் போராட்டம் நடத்தும்போது அதன் தலைவர்களும் 

தொண்டர்களும் மக்களைக் 

கட்டுப்படுத்த இயலும். மக்களும் கட்டுப்படுவார்கள். ஆனால் பல இயக்கங்கள் ஒன்று சேர்ந்து 

நடத்தும் 

போராட்டங்களில் யாரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள். எந்த ஒருங்கிணைப்பும் 

இருக்காது. பாரதூரமான 

விளைவுகள் ஏற்பட்டால் அதைத் தடுக்க இயலாது. இதை உணர்ந்து உணர்ச்சிகரமான 

விஷயங்களில் 

இதுபோன்ற கூட்டுப் போராட்டங்களைத் தவிர்க்குமாறு அறிவுரை கூறுகிறோம்.

நபிகள் நாயகத்திற்குப் பெருமை சேர்ப்பதற்குப் பதில் முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்ற 

கருத்தையே இது

 விதைத்துவிடும். இதை உணர்ந்துதான் தவ்ஹீத் ஜமாஅத் இது போன்ற கூட்டுப் 

போராட்டங்களில் 

பங்கெடுப்பதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளது

Sunday, September 23, 2012

அனைவரும் ஒன்று பட முடியாதா?

அனைவரும் ஒன்று பட முடியாதா?


தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்று பிரச்சாரம் செய்யப்பட்டும் வருகிறது.

ஒற்றுமை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூட்டப்படும் கூட்டங்களில் நாம் கலந்து கொள்வதில்லை
என்பதால் இந்தப் பெயரை நாம் எடுத்துள்ளோம்.

நம்மை விட்டு விடுங்கள். நம்மைத் தவிர மற்ற இயக்கங்கள் இடையே பெருத்த் வேறுபாடு இல்லை.
மார்க்க விஷயத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளைப் பிரச்சாரம் செய்யக் கூடாது எனபது
இவர்களின் கொள்கை. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் எதிர்க்கலாம் என்பதும் இவர்களின் கொள்கை.

நம்மை எதிர்ப்பதிலும் தமக்கிடையே எதிர்த்துச் செயல்படக் கூடாது என்பதிலும் இவர்கள் ஒத்த
கருத்தில் உள்ளதால் நம்மை மட்டும் ஓரம் கட்டிவிட்டு அவர்கள் ஒன்று படலாம் அல்லவா? ஏன் இவர்கள்
ஒன்று படவில்லை? நம்மை எதிர்க்கும் தீர்மானம் நிறைவேற்றும் ஒரு விஷயத்த்ல் தவிர வேறு
எதிலாவது இவர்கள் ஒன்று பட்டதுண்டா?

ஒற்றுமைக்கு ஆசைப்படும் தனவந்தர்கள் இதற்காக பல தடவை முயற்சி எடுத்துப் பார்த்தனர். பல
தடவை ஒற்றுமைக்கு கூட்டம் கூட்டப்பட்டதுண்டு. விருந்து சாப்பிட்டுக் கலைந்தது தவிர
ஒற்றுமை ஏன் ஏற்படவில்லை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

ஒற்றுமை சாத்தியம் என்பதில் இவர்கள் ஒத்த கருத்துள்ளவர்கள் தானே?

மார்க்க அடிப்படையில் உள்ள கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று
இவர்கள் பிரச்சாரம் செய்பவர்கள் தானே?

ஒத்த கருத்துடைய இவர்கள் நம்மை மட்டும் ஒதுக்கி விட்டு ஒன்று பட்டு காட்டலாம் அல்லவா?

தேர்தலில் ஒன்று பட்டு ஒரு முடிவு எடுத்துக் காட்டட்டும்.

அல்லது டிசம்பர் போராட்டம் போன்றவைகளில் ஒன்றுபட்டுக் காட்டட்டும்.

சமுதாயத்தைப்பாதிக்கும் விஷயங்கள் அனைத்திலும் அவர்கள் ஒன்று பட்டு ஒரே முடிவை எடுத்துக்
காட்டட்டும்.

உங்களைப் போன்றவர்களின் ஆதரவை இழந்து விடக் கூடாது என்பதற்காக ஐம்பது வருடமாக
ஒற்றுமைக்கு நாங்களும் தயார் என்று கூறி நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டு அதற்காக போராட்டம் நடத்த இவர்கள்
கூடினால் அந்த நிமிடமே சிதைந்து போய் விடுவார்கள். ஏனெனில்திமுகவின் அடிமைகளாக
இருக்கும் இயக்கத்தினர் இதற்கு உடன்பட மாட்டார்கள்.

அது போல் அதிமுக ஆட்சி நடக்கும் போது முஸ்லிம்களுக்குக் கொடுமை நடந்து அதை எதிர்த்துப்
போராடினால் அதிமுக அடிமைகளால் அந்த ஒற்றுமை சிதைந்து விடும்.

தேர்தல் வந்து விட்டால் ஒரு பக்கமாக வாக்கு வங்கியைத் திருப்பி சமுதாயம் பயன் அடையும்
வகையில் முடிவு எடுக்க முடியுமா? ஏற்கனவே இவர்கள் ஒரு பக்கம் செட்டாகி உள்ளதால் அந்தப்
பக்கம் போய் விடுவார்கள்.

டிசம்பர் ஆறு போன்ற விஷயங்களில் ஒன்று பட்டு போராடுவர்களா?

யார் பெரிய சக்தி? யாருடைய பெயரை முதலில் போடுவது? யார் சிறப்புரை ஆற்றுவது?
என்பதில் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டு அங்கேயே
சண்டை ஆரம்பமாகி விடும்.

எப்படி நடக்கும் என்ற திட்டம் இல்லாமல், நடக்காத ஒன்றை நடக்கும் என்று நம்புவது ஒரு வகை
மனநோயாகும். இதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஒற்றுமைக்கு முயற்சித்தவர்கள் பின்னர் தனி இயக்கமாக ஆகி இன்னொரு பிரிவு அதிகமானதைத்
தவிர வேறு எந்தப் பயனும் இதனால் ஏற்படாது. ஏற்பட்டதுமில்லை

இதன் பிறகும் இந்த உண்மை எப்படி உங்களுக்குப் புரியவில்லை.

எனவே தலைவர்கள் ஒற்றுமையை விட மக்கள் ஒற்றுமை மிக எளிதானது. ஏனெனில் மக்களுக்கு எந்த
எதிர்பார்ப்பும் இல்லை. தலைவர்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

யார் இயக்கம் அமைத்தாலும் அதை ஆதரிக்க நாலு பேர் முன் வந்து விட்டு நாமே இயக்கங்களின்
எண்ணிக்கையை அதிகமாக்கி விட்டு பின்னர் ஒன்று படுங்கள் என்று கூறுவதில் ஒரு பயனும் ஏற்படாது.

இருக்கும் இயக்கங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து தகுதி இல்லாததாக தெரியும் இயக்கங்களை
விட்டு விலகி சரியான இயக்கங்கள் பால் மக்கள் மாறினால் ஒற்றுமை தானாக ஏற்படும்.

நூறு சதவிகிதம் நல்ல மனிதன் இருக்க முடியாது என்பது போல் நூறூ சதவிகிதம் நல்ல
இயக்கமும் இருக்க முடியாது. ஆனால் உள்ளதில் சிறந்த இயக்கத்தைக் கண்டறிய முடியும்.

நாட்டில் உள்ள எல்லா இயக்கங்களையும் பாருங்கள். அனைத்து இயக்கங்கள் மீதும் உள்ள பற்றை ஓரமாக
வைத்து விட்டு ஒவ்வொரு இயக்கமாக எடை போடுங்கள்.

எந்த இயக்கத்தின் தலைவர்கள் தங்களுடைய பணத்தை அல்லது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காக
உள்ளனர்? இயக்கம் ஆரம்பித்து அதன் மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் யார்?

ஊழல், ஒழுக்கக் கேடு, சுய நலன், தனி மரியாதை, கட்அவுட்கள், தனிமனித துதி பாடல்,
இஸ்லாமிய நெறிமுறைகளை மீறுதல், பதவிக்காக அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குதல்,
செல்வந்தர்கள் முன்னிலையில் பல்லிளித்து சாமான்ய மக்களை அலட்சியப்படுத்துவது, மக்களை
மிரட்டுவது கட்டப்பஞ்சாயத்து செய்தல், கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்வது, அனைத்து விதமான
சமரசங்களையும் செய்து கொள்வது வாக்கு மீறுவது என்று தீய பண்புகள் யாரிடம் இல்லை அல்லது
எங்கே குறைவாக உள்ளது என்று சீர்தூக்கிப் பாருங்கள்!

எந்தக் கேள்வி கேட்டாலும் ஏற்கத் தக்க பதில் சொல்லும் தனமை எங்கே அதிகமாக உள்ளது.

செய்யும் அனைத்து காரியத்திலும் மார்ர்க்கத்தின் விதி முறை மீறப்படாமல் உள்ளதா என்று
கவனமாகச் செயல்படுவோர் யார்? இன்னும் அத்தனை விஷயங்களையும் எடை போடுங்கள்.

எந்த இயக்கம் அதிக மதிப்பெண் பெறுகிறதோ அதில் உங்களை இணைத்துக் கொண்டு மார்க்கத்துக்கு
முரணில்லாத விஷயங்களில் அந்த இயக்கத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க முடிவு செய்யுங்கள். மற்ற
இயக்கங்களில் இருந்து விலகுங்கள். தலைவர்கள் மக்களை விட்டு தனியாகி விடுவார்கள். மக்கள்
ஒற்றுமை தானாக ஏற்பட்டு விடும்

அனைவருக்கும் ஒரு பக்கம் நீங்களே அங்கீகாரம் கொடுத்து விட்டு ஒன்று பட மாட்டீர்களா என்று
இன்னொரு பக்கம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

இந்தவழியில் நடை போடுவதால் தான் தவ்ஹீத் ஜமாஅத் தன்னந்தனியாக நின்று மக்களை ஒன்று
படுத்துவதில் (இயக்கங்களை அல்ல) நல்ல வெற்றி பெற்று வருகின்றது.

இது குறித்து உங்களுக்குக் குழப்பம் இருந்தால் அனைத்து குழப்பங்களையும் தெளிவுபடுத்தும்
உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை கேட்கவும்

http://onlinepj.com/bayan-video/samuthaya_pirasanaikal/matru_karuthutaiyavarkalin_kelvikal/

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/ottrumaikku_yetra_vali/

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/sathiaypathai_samuthaya_otrumai/

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/ithu-than-otrumaya/

http://onlinepj.com/audio_uraikal/siriya_uraikal/orirai_kolkayum_otrumai_kosamum1/

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons