
ரஜினி நலமடைந்ததை
அண்ணாசாலை தர்காவில்
பிரியாணி வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!
தலைவர் ரஜினி உடல் நலமடைந்து, மீண்டும் ராணாவில் நடிக்கப் போகும் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதத்தில் சென்னை அண்ணா சாலை தர்காவில் பிரியாணி வழங்கி கொண்டாடினர் ரசிகர்கள்.
தலைவர் உடல்நலம் குன்றியிருந்த போது, ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனை மேற்கொண்ட இறைத் தலங்களுள் முக்கியமானது அண்ணாசாலை பெரிய தர்கா. மன்றம் சார்ந்த / சாராத ஏராளமான ரசிகர்கள் இந்த தர்காவில் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டிருந்தனர்.
அந்தப் பிரார்த்தனைகள் பலித்து, தலைவரும் இப்போது பூரண நலம்பெற்றுள்ளார். இதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கடந்த ஒரு மாத காலமாகவே பல்வேறு திருத் தலங்களில் ஏழைகளுக்கு உணவு, நல உதவிகள் வழங்கி வருகின்றனர் ரசிகர்கள்.
0 comments:
Post a Comment