Wednesday, October 17, 2012

இஸ்லாத்துக்கும் எங்களுக்கு சம்மதமே இல்லை



4629. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
'நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்' எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) வசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், 'எங்களில் எவர் தாம் (தமக்குத்தாமே) அநீதியிழைக்கவில்லை?' என்று கேட்டனர். அப்போது, 'இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்' எனும் (திருக்குர்ஆன் 31:13 வது) இறைவசனம் அருளப்பட்டது. 
Volume :5 Book :65


இத்த SDPI PFI காரர்கள் எப்படி தெரியுமா ஒரு பக்கம் தவ்ஹீத் எதிராக பேசுவான் இநொரு பக்கம் தவ்ஹீத் ஆதரவாக பேசுவான் இவன் விலா மீன் க்கு ஓப்பானவன் பாம்பு பக்கம் போனால் தன் தலையை தூக்கி காட்டுவார்கள் மீன் பக்கம் போனால் இவன் வாலை தூக்கி காட்டுவார்கள்


3178. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். 
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
Volume :3 Book :58


இவர்களுடைய ஆட்டங்களை அல்லாஹ் பார்க்காமல் இருக்கிறான் என்று எண்ணிக் 

கொண்டார்களா? இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவிலே கொண்டு வரப் போகிறோம் என்று 

உலறிக்கொண்டு உருவாக்கப் பட்ட இந்த அரசியல் கட்சி SDPI, இன்று எந்த அளவிற்கு 

அல்லாஹ்வின் சட்டத்தை மீறி இஸ்லாத்தை விட்டே வெளியேறும் செயல்களைச் 

சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறது என்பதை ஜிஹாத் என்று இந்த ஓட்டுப்பொறுக்கி 

கயவர்களைப் பின்பற்றும் மக்கள் சிந்திக்க வேண்டும். அரசியல் ஹராம் ஜனநாயகம் ஹராம் 

ஓட்டுப் போடுதல் ஹராம் என்று ஆரம்பக் காலத்தில் தவ்ஹீத் சிந்தனையாளர்களை விமர்சித்த 

இவர்கள் இன்று தனக்கென்ற ஒரு அரசியல் கட்சி அமைத்து தானே இன்று அரசியல் பிரச்சாரம் 

செய்து ஓட்டுப் பொறுக்க அலையும் அவல நிலை! இவர்கள் தன்னல வாதிகள். சுய 

மோகங்களுக்காக ஒன்றை ஹராமென்று ஒருநாளும், இல்லை அது ஹலாலென்று ஒருநாளும் 

மாற்றி மாற்றி மக்களை வழிகெடுக்கும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு 

இருகிறார்கள்


அரசியலே ஹராம் தேர்தலும் ஹராம் தேர்தலில் போட்டியிட்டால் ஈமானை இழந்து விடுவர் ,எனவே நமது ஒரே தேவை இஸ்லாமிய ஆட்சி மட்டுமே என இவர்கள் அதிகதிகமான ரகசிய கூட்டங்களை போட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களின் இயக்கத்தில் இணைத்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் பாதை தான் சரி என நம்பி சில அப்பாவி இளைஞர்கள் இவர்களின் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் அன்றைக்கு இவர்களை நம்பி வந்த இளைஞர்களின் நிலை என்ன ?

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons