Monday, October 29, 2012

விளம்பரம் செய்பவர்கள் சிந்திப்பார்களா?

முல்லைப் பெரியாறு விஷயத்தில் மக்களைத் தூண்டி விட்டு மாநில அரசுகள் இரண்டும் வேடிக்கைப் பார்த்தன.

அதே போல் கர்நாடக காவிரி நீருக்காக மக்களைத் தூண்டிவிட்டு அரசுகளை வேடிக்கைப் பார்க்கச் செய்ய கூட்டணிக் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மக்கள் தலையில் மிளாகாய் அரைக்க ஆரம்பித்துள்ளன. 

இது போன்ற போராட்டங்களை கட்சி விளம்பரங்களுக்காகத் தான் செய்கின்றன என்று பொது மக்களும், மக்களின் கோபம் நம்மீது பாயாமல் இருந
்தால் சரி என்ற நிலையில் தமிழக அரசும் உள்ளன.

இவர்கள் உண்மையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு எதிராகத் தான் போராட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசுக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்து விடுவார்கள் என்ற பயத்தால் "தானேப் புயல் புகழ்" போன்ற ஜால்ராக் கட்சிகளை விட்டு கர்நாடகாவிற்கு கர்நாடகாவிற்கு எதிராகவும் கூடங்குள அணு உலைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி தமிழக அரசு மக்களை திசை திருப்புவதாகவே அமைகிறது.

தேர்தல் வாக்குறுதியாக சட்டசபையில் ஜெயலலிதா கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் மின்சாரத்திற்கு குழு அமைப்பதும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவதுமாக மக்களை கண் துடைப்பு செய்வதை மக்கள் உணர்ந்துள்ளனர். வழக்கு போட்டு மக்களுக்கு சாதகமாக நடந்த வழக்குகளை பட்டியல் போட்டு காட்ட இயலுமா? ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கு எத்தனை வருடங்களாக இழுத்தடிக்கப்படுகிறது...பாபர் மசூதி நியாயத் தீர்ப்புக்காக அமைக்கப்பட்ட லிபரகுஆன் குழு என்ன ஆனது, அது சம்பந்தமாக போட்ட வழக்கு இன்னும் எத்தனை வருடங்களுக்கு இழுத்தடிப்பார்கள் என்ற நிலை தமிழக மக்களுக்குத் தெரியாதா?

வழக்குப் போட்டு மின்சாரத்தையோ கர்நாடகாவில் இருந்து தண்ணீரையோ பெற்று விட முடியுமா? ஆக, இந்தப் போராட்டங்கள் தங்கள் கட்சிகளை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் முதலாளி போடும் எலும்புத் துண்டு ஈரம் காயும் வரை குரைத்து விட்டு அடங்கிப்போகும் கூட்டமாகத் தான் மக்கள் பார்வைக்கு காட்சியளிக்கிறது.

இவர்களுக்கு ஆதரவளிப்பது போல் விளம்பரம் செய்பவர்கள் சிந்திப்பார்களா?

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons