
நபி (ஸல்) அவர்கள் ஓர் சபையில் இருந்தால், அந்த இடத்திர்கு வரும் (ஊருக்கு)புதியவ ர்
என்ன கேட்பார்
(தெரியுமா?) உங்களில் யார் முஹம்மத் என்று கேட்பார்... ஹதீஸ்... ஆக நபியவர்கள் ஓர்
சபையில் இருந்தால் மக்களோடு மக்களாக கலந்துவிடுவார்க ள் என்பது தெளிவு!!! ஆனால்
இந்த கோமாளியை பாருங்கள்??
ஒரு மனிதருக்கு இதுபோல் மரியாதை செலுத்த வேண்டும் என்று நாம் விருப்பப் பட்டால்
அதற்குத் தகுதியான
முதல் மனிதர் நம் உயிரிலினும் மேலான தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்
அல்லவா?ஒரு நபித்தோழர் வேற்று நாட்டு மன்னருக்கு அவரது சமூக மக்கள் மரியாதைச்
செலுத்துவதைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரிடம்,
இம்மன்னரைக் காட்டிலும் மரியாதைச் செலுத்த தகுதியானவர் தாங்கள் தான் என
நபிகளாரிடம் சொன்ன போது இதுபோன்ற
ஒருவரைத் தாழ்த்தி மற்றவரை உயர்த்தும் வணக்க முறைகளோ வாழ்த்துக்களோ
மரியாதைகளோ இஸ்லாத்தில் இல்லை என்று அந்த நபித் தோழருக்குப் புரிய வைத்தார்கள்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்! நான் அமர்ந்து தொழுதால் என்னைப் பின்பற்றித் தொழும் நீங்களும் அமர்ந்து
தொழுங்கள், நான் அமர்ந்தும் நீங்கள் நின்றும் தொழுவதை பிற மக்கள் பார்த்தால் அவர்களுக்கு
இந்தச் செயல்
என்னை நீங்கள் கவுரவிப்பது போல் காட்டிவிடும் என்று மக்களைப் பக்குவப் படுத்தினார்கள் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்! அல்லாஹ்வின் தூதரின் நிலையே இதுவாக இருக்கும் போது, நாம் செய்வது தவறுதான் எனத்
தெரிந்தும் அதைத் திருத்தாமல் ஆணவம் கொண்டுத் திரியும் இந்தக் கோமாலி எம்மாத்தரம்! அப்படிப்பட்ட
அழகான மார்க்கத்தைப் பெற்ற நாம், இது போன்ற கழிசடைத் தனத்தை, பிறரை தாழ்த்தி மற்றவரை உயர்த்தும்
இந்த அறிவீனச் செயலை ஆதரிக்காலாமா என்று சகோதரர் ஸஹாபா சிந்திக்கட்டும் . மரியாதைக்காக எழுந்து
நிற்பதைக்கூட தடுத்த மார்க்கத்தில் இருந்து கொண்டு, போலிச் சாமியார்களைப் போலத் திரியும் இதுபோன்ற
கோமாலி வர்க்கங்களுக்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டுத் திரியாமல் திருந்தும் வழியைப் பாருங்கள். திருந்த
முன் வருவோரைத்தான் அல்லாஹ் திருத்துவான். அசத்தியம் என தெரிந்த பின்பும் அதற்கு வரிந்து கட்டிக்
கொண்டு திரிந்தால் உள்ளத்திற்கு முத்திரை இட்டுவிடுவான். அழிவை சந்திப்போர் அவர்கள்தானே தவிர நீங்கள்
இம்மார்க்கத்தை வெறுப்பதால் அல்லாஹ்விடம் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை என்பதைப் புரிந்து
கொள்ளவும்!
0 comments:
Post a Comment