Saturday, February 26, 2011

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது MNP உடன் சந்திப்பு.


அஸ்ஸலாமு அலைக்கும்
தவ்ஹீத் : கொடிக்கு எதற்கு சல்யூட் அடிக்கிறீர்கள்?
விடியல்      : அதில் என்ன தவறு இருக்கிறது என்பதை சொல்லுங்கள்.
தவ்ஹீத் : இது கொடிக்கு வணக்கம் செலுத்துவதாகத்தானே                                    இருக்கிறது.
விடியல்       : இதை நாங்கள் வணக்கமாக கருதி செய்யவில்லை. எங்கள் மனதளவில் ஒரு வணக்கமாக கருதி செய்யவில்லை. செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்ததே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவ்ஹீத் : ஒருவர் தொழுவோம் என்று நினைத்துக் கொண்டு வீட்டில் சும்ம இருந்தால் அவர் தொழுதவராக ஏற்றுக் கொள்ளப் படுவாரா?
விடியல்       : அது எப்படி நன்மை கிடைக்கும் ?

தவ்ஹீத் : நீங்கள் சொல்வதும் இதே போன்றுதானே இருக்கிறது.
விடியல்      : அது வேறு இது வேறு. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் கடையநல்லூரை வைத்துக் கொண்டு மட்டும் முஸ்­ம்களுடைய நிலையை பார்க்கக் கூடாது.
தவ்ஹீத் :  நாங்கள் கேட்ட கேள்வி வேறு. நீங்கள் சொல்கின்ற               பதில் வேறு.
விடியல்       : இதே கேள்வியில் தான் நீங்கள் நிற்பீர்கள். டச்ண் பற்றி வேறு கேள்விகள் கேட்கலாமே.
தவ்ஹீத் :  நீங்கள் இசையை ஏன் அடிக்கிறீர்கள்?
விடியல்      : இசையில் தஃப் அடிக்க இஸ்லாத்தில் அனுமதி உள்ளது.
தவ்ஹீத் : ஆனால் நீங்கள் அடிப்பது என்ன தஃபா? இல்லை.
விடியல்      : மனதை மயக்கக் கூடிய இசையைத்தான் அடிக்கக் கூடாது.
தவ்ஹீத் : நீங்கள் போட்டிருப்பது மனதை மயக்கக் கூடிய இசைதானே? சினிமாவில் வரக்கூடிய இசை போன்றுதானே இருக்கிறது.
விடியல்      : இந்த இசை உங்கள் மனதை மயக்கியதா?
தவ்ஹீத் : என்னுடைய நண்பர்  டச்ண் ஆதரவாளர். அவர் தான் எனக்கு அந்த இசையை போட்டுக் காண்பித்து இது எவ்வளவு இனிமையாக உள்ளது என்பதை சுட்டிக் காண்பித்தார்.
விடியல்       : இதை தடுப்பதற்கு நாங்கள் மறு பரிசீ­னை செய்து வருகிறோம்.

தவ்ஹீத் : நீங்கள் ஏன்  தநந அழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
விடியல்     : நாங்கள் எங்களது இரு கண்களாகக் கருதப்படுவது ஜிஹாதும் தாவாவும் தான்
தவ்ஹீத் : ஜிஹாத் என்றால் என்ன?

விடியல்      : என்னுடைய பேனா பறிக்கப் பட்டாலும் அதை மீட்பதும் ஜிஹாதுதான். என்னுடைய மகளை ஒருவன்  கையை பிடித்து இழுக்கிறான் என்றால் இங்கு நான் செத்துக்கிடக்க வேண்டும்.இதுவும் ஜிஹாதுதான். . குஜராத்தில் எத்தனை அப்பாவி முஸ்­ம்கள் தநந ஆல் தாக்கப்பட்டார்கள். கொல்கத்தாவில் இன்று ஏராளமான முஸ்­ம்கள் பசி பட்டினியோடு வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் சோற்றை நாய் பன்றிகளுக்கு தட்டச் சொல்கிறீர்கள். நாம் கடையநல்லூரை வைத்துக் கொண்டு மட்டும் முஸ்­ம்களுடைய நிலையை பார்க்கக் கூடாது.
தவ்ஹீத் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பிலால் (ர­) எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். யாசிர்(ர­) சுமையா (ர­) அவர்களுடைய மகன் ஆகியோர்களை நிர்வானமாக விட்டு மர்மஸ்தானத்தில் அம்பு எய்தார்கள்.இப்படி நிறைய நபித்தோழர்கள் இஸ்லாத்திற்காக கஷ்டப்பட்டார்கள். ஆனால்   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் செய்வது நபி வழிக்கு மாற்றமில்லையா?
விடியல்      : முஸ்­ம்களை அடிக்க அடிக்க சும்ம இருக்கவா சொல்கிறீர்கள்?
தவ்ஹீத் :  நாங்கள் அப்படி சொல்லவில்லை. குஜராத்தில் முஸ்­ம்களுக்கு அவர்களுடைய மார்க்கத்தை ஒழுங்காகப் போதிக்கவில்லை. அவர்கள் தொழாதவர்களாக இருந்தனர்.

விடியல்      : அது காரணமல்ல அவர்கள் தறகாப்புகலை ஒழுங்காகப் பேணவில்லை.
தவ்ஹீத் :  அவர்கள் மார்கக் கல்வியை ஒழுங்காகப் படிக்கவில்லை.

தர்காவுக்கு போவது சரியா தவறா?
விடியல்       : தவறு
தவ்ஹீத் :  அதை எதிர்க்கலாமே?
விடியல்       : அதைத் தான் நீங்கள் செய்கிறீர்களே?
விடியல்       : தவறு
தவ்ஹீத் :  நாங்கள் மட்டும் செய்தால் போதுமா நீங்கள் செய்ய வேண்டாமா? உங்களுக்கு கடமை இல்லையா?
விடியல்      : அல்லாஹ்  கூறுகிறான் : நீங்கள் இணக்கமாக இருங்கள் என்று கூறுகிறான். ஆனால் நீங்கள் சண்டையிடச் சொல்கிறீர்கள்?

தவ்ஹீத் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை சொல்லக் கூடாதா?
விடியல்     : நாங்கள் அப்படி சொல்லவில்லை? வேறு கேள்வி கேளுங்கள்.
தவ்ஹீத் : எதற்கு சல்யூட் அடிக்கிறீர்கள்?

விடியல்      :  இதை நாங்கள் வணக்கமாக கருதி செய்யவில்லை. எங்கள் மனதளவில் ஒரு வணக்கமாக கருதி செய்யவில்லை. செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்ததே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவ்ஹீத் : ஒருவர் தொழுவோம் என்று நினைத்துக் கொண்டு வீட்டில் சும்ம இருந்தால் அவர் தொழுதவராக ஏற்றுக் கொள்ளப் படுவாரா?

விடியல்       : இதுதான் என்னுடைய பதில் இதற்கு மேல் ஒன்றும் எதிர் பார்க்காதே.

யார் இத்த கோமாளி ஜமாலி ?

கொள்கையில்லாத கொள்கை(?) வாதிகள்.


RASMIN M.I.Sc

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு மாத இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை.)

கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் எங்கு பார்த்தாலும் கொள்கைச் பேசுபவர்கள் தாக்கப் பட்டார்கள்,ஊர் நீக்கம் செய்யப் பட்டார்கள்,ஊர் மக்களினால் சமுதாயத்தை விட்டும் பகிஷ்கரிக்கப்பட்டார்கள்,வெட்டப்பட்டார்கள்,கொலை செய்யப்பட்டார்கள்.

இவை அனைத்தும் எதற்காக நடந்தது?

சுய இலாபத்திற்கா? அரசியல் உள்நோக்கத்திற்கா? அல்லது மறுமையின் வெற்றிக்கா?

மறுமையின் வெற்றியை மாத்திரம் இலக்காகக் கொண்டதினாலேதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தலை தூக்கியது.

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களும் மாத்திரம் காட்டித்தந்த பாதையில் பயணிப்பதற்காகத் தான் அத்துனை கஷ்டங்களும் அனுபவிக்க நேர்ந்தது.

ஆனால் இன்றை நிலை என்ன? தவ்ஹீத் என்றால் என்ன என்பதாவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கொள்கை,கொள்கை என்று கூக்குரலிடும் கொள்கை வாதிகளின் நிலை என்ன? சத்தியத்தை தைரியமாக உடைத்துச் சொல்வதற்கு தயாராக இருக்கிறார்களா?

வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் இன்றைய தவ்ஹீத் வாதிகள் அநேகரின் நிலையாக இருக்கிறது. 

கொள்கையை உடைத்துச் சொன்னால் ஊரில் பிரச்சினை வரும், குடும்பத்தில் பிளவு வரும், சமுதாயத்தின் தூரப்பார்வை நம்மீது படும் இதுதான் நிறையப் பேரை தூய்மையான தவ்ஹீதை விட்டும் தடம் மாறச் செய்துள்ளது.

உமக்கு கட்டளையிடப்பட்டதை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (15:94)

உண்மை எதுவென்று தெரிந்து விட்டால் அதை உடைத்துச் சொல்லத் தயங்குவதேன்? சத்தியத்தை பயமின்றி விட்டுக் கொடுப்பின்றி உடைத்துப் பேசும் படி இறைவன் தெளிவாக சொல்லிக் காட்டியிருக்கும் போது நாம் ஏன் பின்வாங்க வேண்டும்?

நாம் கொஞ்சம் பேர் தான் இருக்கிறோம். ஆனால் அவர்களோ ஊரில் முக்கால் பகுதியினராக இருக்கிறார்கள். அவர்களுக்கெதிராக நாம் சத்தியத்தை தெளிவாகப் பேசினால் நமக்கெதிராக அவர்கள் அணைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.அதனால் நாம் சில விட்டுக் கொடுப்புகளை செய்து போனால் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று இன்றைக்கு பலர் கருத்துச் சொல்கிறார்கள்.

இவர்கள் தான் வானொலி அலைவரிசைகளிலும், தொலைகாட்சி நிகழ்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் வேற்றுமையில் ஒற்றுமை வாதம் பாராட்டுபவர்கள்.

மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!" என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்@ அவன் சிறந்த பொறுப்பாளன்" என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். தனது நேசர்களை ஷைத்தான்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!. (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ் வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

“(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது" என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவ த்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்கா கவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத் தும் வேதனை அவர்களுக்கு உண்டு. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கல ந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்தி ருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல் லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு. (திருக்குர் ஆன் 3: 173-179) 

மேற்கண்ட திருமறை வசனம் என்ன சொல்கிறது? நபியவர்களிடமே சிலர் வந்து மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அதற்கு இறைவன் சொன்ன பதில் என்ன? மக்களுக்கு பயந்து அல்லது பிரச்சினைக்கு அஞ்சி சத்தியத்தை மறைக்கும் படி சொன்னானா? அல்லது சத்தியத்தில் நிலைத்திருக்கச் சொன்னானா? 

யார் மக்களுக்கு அஞ்சி சத்தியத்தை மறைக்கிறார்களோ, வேற்றுமையில்; ஒற்றுமை காண விளைகிறார்களோ அவர்களுக்கு இறைவன் சொல்லும் பதில் "தனது நேசர்களை ஷைத்தான்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்"   அல்லாஹ்வுக்கு யார் பயப்படுகிறார்களோ அவர்கள் சத்தியத்தை ஒருக்காலும் மறைக்கமாட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு தவ்ஹீத் வாதிகளாக தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்ளக்கூடிய எத்தனையோ சகோதரர்கள் பேச்சில் தவ்ஹீத் வாதிகளாகவும்,நடத்தையில் கொள்கையற்றவர்களாகவுமோ இருக்கிறார்கள்.

ஜும்மா மேடையென்றால் யார் ஜும்மாவில் உரை நிகழ்த்துகிறாரோ அவரிடத்தில் ஆரம்பத்திலேயே நிர்வாகம் பல கட்டுப்பாடுகளையும், கடப்பாடுகளையும் விதிக்கிறது.'இந்த முறையில் பேசுங்கள்.கொள்கையை பேசிவிடாதீர்கள்.இங்கு பல கொள்கையைச் சார்ந்தவர்களும் வருகிறார்கள்.கொள்கையை உடைத்து சொல்லிவிட்டால் அவர்கள் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டார்கள் அதனால் வரலாறுகள் உபதேசங்களை மாத்திரம் பேசுங்கள்" என்று கொள்கைக்கு ஆப்பு வைக்கிறார்கள் இந்தக் கொள்கைவாதிகள்(?).

இன்று எத்தனை தவ்ஹீத் பள்ளிகளில் பித்அத்துக்கெதிரான பிரச்சாரம் நடக்கிறது? எத்தனை இடங்களில் ஷீர்க்கை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள்? தொப்பி இல்லாமல் பயான் செய்யாதீர்கள்.ஜுப்பா போடாமல் மிம்பரில் ஏராதீர்கள்.பொதுவான தலைப்புகளைப் பேசுங்கள் இதுதான் இன்றைய தவ்ஹீத் பிரச்சாரத்தின் லட்சனமாக இருக்கிறது.

இந்த நிலை என்று மாறும்? 

தூய கொள்கையை தூய எண்ணத்துடன்,விட்டுக் கொடுப்பின்றி நாம் செய்ய தயாரானால் இலங்கை நாட்டில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீறுநடையை நாளடைவில் பார்க்களாம். இல்லாவிடில் சீரழிவுதான் மிஞ்சும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஜின்களிலும்,மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை.அவர்களுக்கு காதுகள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை.அவர்கள் கால்நடைகளைப் போன்றோர்.இல்லை! அதை விடவும் வழிகெட்டவர்கள்.அவர்களே அலட்சியம் செய்தவர்கள். (7:179)



Friday, February 25, 2011

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?





கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் 32 பற்களும் தெரிய சிரிக்கிறார் சமுதாய மானம் காக்க புறப்பட்ட ஒரு சமுதாய தலைவர். கேவலம்3 சீட்டு கொடுத்ததற்கே இந்த சிரிப்பு என்றால் கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருந்தால் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசிவாங்கியதைப் போல ஆசி வாங்கியிருப்பார் போலத் தெரிகிறது. முதலில் 15தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து விட்டு அதிலே 12 சீட்டு கேட்டார்களாம். பிறகு 12ல் இருந்து குறைத்து 7 க்கு வந்தார்களாம். அப்பறம் இன்னும் கொஞ்சம் குறைத்து 5க்கு வந்தார்களாம். அப்புறம் விடாப்புடியாக 5 தொகுதிதான் வேண்டும் என சிறுபிள்ளைகள் அடம்பிடிப்பது போல தரையில் உருண்டு புரண்டு அடம்பிடித்தார்களாம். ஆனால் இவர்களின் அழுகுரல்களைக் கேட்டு கொஞ்சம் கூட மனமிறங்காத கருணைத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தா 3 தான் தருவேன் என ரொம்ப கறாராய் சொல்லி விட்டாராம்.



யார்கிட்ட உட்றீங்கானும் ரீலுஏற்கனவே 2 சீட்டு வாங்குறது தான் சமுதாய மானம் என சொல்லி கலைஞரிடம் உங்கள் மாப்பிள்ளை மிடுக்கை காட்டினீர்கள். அவரும் உங்கள் பலத்தை நினைத்து பயந்து பயந்து ஒரு சீட்டு தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த ஒரு சீட்டில் யார் போட்டிடுவது என கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்,நிரந்தர பொதுச்செயலாளருக்கும் குடுமிபிடி சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக 2 சீட்டாவது தாங்க என மறுபடியும் போய் கதவைத் தட்ட அவர்கள் உங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச்சாத்தி விட்டார்கள். அதற்குபிறகு தான் உங்களின் தனிபலத்தை நிறுபித்தீர்கள். அதாவது உங்கள் இயக்கத்திற்கு எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் நீங்கள் வாங்கிய வாக்கு வங்கியின் மூலம் அம்பலமாக உங்கள் நிலை கண்டு சிரிக்காதவர்கள் யாருமில்லை.
இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் இப்போது கூட்டணி சேர்ந்து கொண்டு இப்போது கொடுத்த 3சீட்டை இப்படி கேவலமாக பல்லிளித்து வாங்கிக் கொண்டு போஸ் கொடுக்கிறீர்கள். இதுல வேற அண்ணன் பன்னீர் செல்வம் கையப் புடிச்சிக்கிட்டு கெஞ்சினாராம். அம்மாவைப்பத்தி தெரியாதவர்களிடம் வேண்டுமானால் உங்களின் கும்மாஞ்சி வேலைகள் பலிக்கும். கருணாநிதி வேண்டுமானால் இழுவை போட்டுப் பார்ப்பார். ஆனால் ஜெயாவைப் பொருத்தவரை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என ஒரே போடாக போடக்கூடியவர் எனபது எல்லாருக்கும் தெரியும். வேனுமினா 3 சீட்ட வாங்கிக்கொள்ளுங்கள்,இல்லாவிட்டால் நடையைக்கட்டுங்கள் என அம்மா சொல்லியிருப்பார். உடனே கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்நிரந்தர பொதுச்செயலாளருக்கும் போட்டியிட2 சீட்டு கிடைத்தால் போதும் என்ற ரீதியில் நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருப்பீர்கள். காரணம் உங்கள் சிரிப்பே ஆயிரம் கதை சொல்கிறது தலைவரே!
மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன் என்று தமுமுகவின் தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு சால்ஜாப்பு சமாளிப்பு பதில்கள் அவர்கள் தளத்தில் இருக்கிறது. ஆனால் உண்மையாக இந்த கேள்விகளுக்கு அவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனையான பதில்கள் இதோ.
கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?
ஏன்! ஏற்கனவே சமுதாய மானம் காக்கப்போறோமுனு சொல்லிக்கிட்டு குப்புற விழுந்து மீசையில் மண்ணு ஒட்டுனது போதாதா! மறுபடியும் இந்த அம்மாகிட்டையும் வம்ப இழுத்துட்டு வரிஞ்சிகட்ட்டிக்கிட்டு நின்னா என்ன ஆகும்னு நல்லா தெரியும். அதனால தான் வந்த வரைகும் லாபம்னு 3வாங்கிக்கிட்டோம். நல்லவேளை இதுவாவது கெடச்ச்தே.
கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது,விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?
ஆமாம்! கூடுதல் தொகுதி வேண்டி அதிமுகவை கண்டித்து தாம்பரத்தில் சாலைமறியல் போராட்டம்மெரினாவிலே சிறை நிரப்பும் போராட்டம்,சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம்,அவ்வைசண்முகம் சாலையில் அமைந்துள்ள‌ அதிமுக தலைமை அலுவலக வாசலில் உக்கார்ந்து கொண்டு யாரும் உள்ளே செல்லக்கூடாது என பாதைமறியல் போராட்டம். விமர்சிப்பவர்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதேபோல மக்களைப் பற்றியும் கவலையில்லை. எங்கள் கவலையெல்லாம் இந்தமுறையாவது கொஞ்சம் அதிகமா ஓட்டு வாங்கமுடியுமான்னு தான்.
கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?
முதலில் எங்களைக் காத்துக் கொள்கிறோம். அப்பறம் பாக்கலாம் சமுதாயம் குறித்து
கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும்புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..
ஆமா..ஆமா..கின்னஸ் சாதனை இல்லையா? சமுதாய அரசியல்வாதிகள்பாராட்டுகிறார்களா? ஆனால் அவர்கள் எங்களுக்குஓட்டுபோடுவார்களா?
கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாகசொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும்முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..
அப்படியா! பரவாயில்லையே! எங்களுக்கே தெரியாத விசயமெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பேஷ்..பேஷ்..!
கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...
நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியை ஒப்பிடும் போது எங்களுக்கு 3என்பது அதிகம் தான்.
கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...
நாங்க எப்பய்யா வேனாமுனு சொன்னோம்! இன்னொரு நாள் போயி பேசலாமுனு நெனைக்கும் போது தான் கலைஞர் கதவ சாத்திட்டாரே! அப்படியிருந்தும் தலைவர் துபாயில்பொதுச்செயலாளர் சவூதியிலும் இருப்பதால் அவர்கள் வந்து பேசுவார்கள் என அறிக்கையெல்லாம் விட்டுப்பார்த்தோம். ஆனால் எதற்குமே மசியவில்லை கலைஞர்
கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும்ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?
அதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டால் காலத்தை ஓட்ட முடியுமா?அரசியல்னு வந்துட்டா இது போன்ற அம்புகளையெல்லாம் தாங்கித்தானே ஆகனும்.அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...,

ஈமானை இழந்த ம.ம.கட்சி



மேற்கண்ட தமுமுக வின் அறிவிப்பு பலகையில் எழுதி இருக்கும் வாசகங்கள் என்னவென்று தெரிகின்றதா?

கடலூர் மாவட்ட ஆயங்குடி தமுமுக அறிவிப்பு பலகையில், மவ்லூது ஓதுவதி தப்ரூக் வழங்கப்படும் வாழைப்பழம் மற்றும் லட்டுஇ பூந்திஇ ஜிலேபி போன்ற பொருட்களுக்கு இந்த ஆண்டு ஒரு தலைக்கட்டிற்கு ரூபாய் 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்இ அதை ம.ம.கட்சி தலைவர் புர்ஹானுதீனிடம் ஒப்படைக்குமாறும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை தான் நீங்கள் மேலே உள்ள அறிவிப்பில் பார்க்கின்றீர்கள்.

இவர்கள் தேர்தலில் சீட்டுகேட்டு 3 தொகுதி பெற்று மானம் இழந்து நிற்பது ஒருபுறமிருக்க, மானத்தை இழந்தது போல, தற்போது ஈமானையும் இழந்து நிற்கின்றனர்.

இறைவனுக்கு இணைகற்பிக்கும் மவ்லூது பாடல்கள் பாடப்பெற்று அதற்கு பிறகு வழங்கப்படும் தப்ரூக்கிற்கு வசூல் செய்து தீமைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து ஈமானை இழக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர்.

இவர்களுக்கு நபிகளாரின் ஒரு எச்சரிக்கையை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப் பார்கள்; அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள். அந்தத் பிறகு சிலர் வருவார்கள். அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள். தமக்குக் கட்டளையிடப்படாத வற்றைச் செய்வார்கள். ஆகவேஇ யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூட கிடையாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) முஸ்லிம் – 80

ஒரு தீமையைக்காணும்போது அதை கையால் தடுக்கமலோ, அல்லது நாவால் தடுக்காமலோ, அல்லது குறைந்தபட்சம் மனதாலாவது வெறுத்து ஒதுக்காமலோ யார் இருக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் ஈமான் என்பது கடுகளவுகூட இல்லை என நபிகளார் எச்சரித்திருக்க, இவர்கள் மவ்லூது என்ற அப்பட்டமான இணைவைத்தலுக்கு ஆதரவாக தப்ரூக் என்னும் சீரணி வாங்கித்தர தங்களது நிர்வாகிகளே களமிறங்கி. தங்களது அறிவிப்பு பலகையிலேயே அறிவிப்பு வெளியிடுகிறார்கள் என்றால் இவர்களுடைய ஈமானின் தரத்தை இந்த நபி மொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த ம.ம.கட்சியின் நிர்வாகியிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது தவ்ஹீத் காரர்கள் இருந்ததால்தான் தங்களது இயக்கம் வளரவில்லை எனவும்இ அவர்களை துரத்தியடித்த பிறகுதான் தங்களது இயக்கம் அசூர வளர்ச்சிகண்டதாகவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மவ்லூது ஓத தப்ரூக் வழங்குவதற்கு பணம் வசூலித்து தருபவருடைய கருத்து இதுவாகவல்லாமல் வேறு என்னவாக இருக்கும்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

Thursday, February 24, 2011

கோவையில் வரம்பு மீறிய *சமுதாய போராளிகள்*???


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் தினமும் எழுதப்படகூடிய கரும்பலகைகள் 10கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் பயன்பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள  கரும்பலகையில் 18.02.2011 அன்று ABCD அமைப்பினர் (PFI, SDPI, CFI, AIIC,..etc) தங்களது மண்டல மா(?)நாடு போஸ்டரை ஒட்டி வரம்பு மீறி உள்ளனர்.

மானம் காக்கப் புறப்பட்டு மானமிழந்த கதை!

சமுதாயத்தின் மானத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு நாங்கள் தான் எடுத்து வைத்துள்ளோம் என பில்டப் கொடுத்த மானம் காக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் அ.தி.மு.க போட்ட 3 தொகுதி பிச்சை சீட்டுக்களை வாங்கிக் கொண்டு மானமிழந்து வேறு வழயின்றி உலக ஆதாயத்திற்காக சில எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவர்கள் மானம் காக்க புறப்பட்ட வரலாற்றையும், இப்போது மானமிழந்து நிற்கும் அசிங்கத்தையும் தற்போது நாம் அசைபோட்டுப் பார்க்கலாம்.
ம.ம. கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்:
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்று தங்களது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிக்கத் தான் ம.ம. கட்சி தொடங்கப்பட்டது என்றால் தற்போது சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 தொகுதிகளைப் பெற்றுள்ளனர்.
அதாவது, ஒரு பாராளுமன்றத் தொகுதி என்பது ஆறு சட்டமன்ற தொகுதிகள். ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்றத் தொகுதி என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளைப் பெற்றாக வேண்டும் என்ற இவர்களது கட்சி துவங்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் 12 தொகுதிகளையாவது பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அரை எம்.பித் தொகுதிக்கு நிகரான 3சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க விடம் வாங்கி கேவலப்பட்டுள்ளனர்.
உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா:
தமிழில் ஒரு பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. ”உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா”
இவர்களை தற்போது நினைத்தால் இந்தப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகின்றது. தி.மு.க அணியில் தந்த ஒரு எம்.பி சீட்டை நாங்கள் வாங்க மாட்டோம். எங்களுக்கு சமுதாய மானம் காப்பது தான் முக்கியமே தவிர, இந்த சீட்டுக்கள் தேவையில்லை என வீராப்பு பேசியவர்கள் தற்போது அதை விடக் குறைவான சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று கேவலப்பட்டுள்ளார்கள் என்றால் உள்ளதையும் இழந்து நிற்கும் இவர்களை என்னவென்பது?

இது தான் பயங்கரமான(?) ராஜ தந்திரமாம்:
“உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா” என்று கேவலப்பட்டு நின்றாலும் பிலடப்புகளுக்கு மட்டும் இவர்களிடத்தில் குறை இருக்காது.
தொகுதி குறைவாகத் தான் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு கண்ணில்லாத கலகக்கார கண்மணிகளுக்கு வாத்தியார் எழுதிய வரிகளைப் பாருங்கள்:
கண்மணிகளே…!
தேர்தலில் நாம் எத்தனைத் தொகுதிகளை பெறப் போகிறோம்? என அனைவரும் கேட்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக தலைமையுடன் பேசி வருகிறோம். தொகுதி எண்ணிக்கைகளில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம். அரசியல் ராஜதந்திரத்துடன் நாம் அணுக வேண்டியுள்ளது.
3தொகுதிகளை வாங்கி கேவலப்படுவது எதற்கென்றால் அது தான் ராஜ(?)தந்திரமாம். உங்க பில்டப்புகளுக்கு ஒரு அளவில்லையா?
நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம்
என்று கூறி தங்களது கேவலத்தனத்திற்குத் தங்களையே சாட்சிகளாக ஆக்கியுள்ளனர். இவர்கள் உண்மையான தைரியசாலிகளாக இருந்தால் எத்தனை தொகுதியை நாங்கள் அதிமுக விடம் கேட்டோம் என்பதை இவர்கள் அறிவிக்கத் தயாரா?
மேற்கண்ட வாசகங்களில்,
நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம் என்று இவர்கள் குறிப்பிட்டதிலிருந்து இவர்கள் அதிமுக தலைமைக்கு பயந்து கொண்டு, எங்களுக்கு மொத்தம் 4தொகுதி, அல்லது 5தொகுதி வேண்டும் என்று வாய் திறந்து கேட்டால் எங்கே அதிமுக தரப்பு தங்களை கூட்டணியிலிருந்து கலைஞர் விரட்டியடித்தது போல விரட்டிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டு நீங்கள் எத்தனை தொகுதி தருகின்றீர்களோ அத்தனை தொகுதியைத் தாருங்கள். நாங்கள் நினைத்த தொகுதியையும் தாருங்கள் அல்லது அதுக்கு மேலேயும் தாருங்கள் அல்லது அதுக்கு கீழேயும் தாருங்கள் என்று கேட்டதற்கு ஆதாரமாக மேற்கண்ட வாசகங்களை வெட்கமில்லாமல் கண்மணிகளுக்கு கடிதமாகவும் எழுதுகின்றார்கள் என்றால் இவர்கள் தான் மானம் காக்க புறப்பட்டவர்களா?

திரும்பவும் கேட்கின்றோம், இவர்களுக்கு உண்மையிலேயே மானம் இருக்குமேயானால், இவர்கள் உண்மையான தைரியசாலிகளாக இருந்தால் எத்தனை தொகுதியை நாங்கள் அதிமுக விடம் கேட்டோம் என்பதை இவர்கள் அறிவிக்கத் தயாரா? தாங்கள் இத்தனை தொகுதிகள் தான் கேட்டோம் என்பதைக் கூட வெளியே சொல்லத் திராணியற்றவர்கள் தான் சமுதாய மானம் காக்கப் போகிறார்களா?
தங்களது மானத்தையே காக்க வக்கில்லாத இவர்கள் சமுதாயத்தின் மானத்தை எப்படிக் காக்கப் போகிறார்கள் என்று மக்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகிறது. இது இந்தத் தேர்தலில் இவர்களுக்கு எதிரான வாக்குகளாக மாற மானமுள்ள ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால் மானம் என்ற ஒரு சொல்லுக்கே எந்த அர்த்தமுமில்லாமல் போய்விடும்

Wednesday, February 23, 2011

மாநாட்டு "புகை"படங்கள் :



மாநாட்டு "புகை"படங்கள் :

புண்பட்ட நெஞ்சமடா SDPIயே தஞ்சமடா!


சேர் டிக்கெட்ட ஃபுல் பண்ணா தர டிக்கெட்டு காலியாகுதுதர டிக்கெட்ட ஃபுல் பண்ணா சேர் டிக்கெட்டு காலியாகுது. என்ன செய்ய?








நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?????










கஷ்டப்பட்டு பஸ்புடிச்சி மாநாடுக்கு கூட்டிக்கிட்டு வந்து அணிவகுத்து வாங்கன்னு கூப்பிட்டா வந்ததுல பாதிபேர் அண்ணா சமாதிய பாக்கப் போயிட்டா இது தான் கதி. வெளக்கு வச்ச பிறகும் யாரையுமே காணோம். பெருமைக்கு எரும ஓட்டுனா இப்டித்தான்









YMCA மைதானத்துக்கு காயிதேமில்லத் திடல்னு பெயர் வச்சது அந்த திடல்காரங்களுக்கு தெரியுமா?



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons